காதல் கருவறை 26

Post Reply
User avatar
admin
Site Admin
Posts: 131
Joined: Sun May 10, 2020 12:45 pm
Has thanked: 3 times
Been thanked: 1 time

காதல் கருவறை 26

Post by admin »

கரு 26:
ஏதேதோ யோசித்து கொண்டிருந்தவள் மௌனமாக அவள் அறையை அடைந்தாள் மனம் பரபரக்க அவனின் சிகப்பு சட்டையை பார்திருந்தவளின் பின் குரல் கேட்டது
“என்னை விட என் சட்டை அவ்வளவு உயர்ந்ததா தன்யா , பொறமைப்பட வைக்கிறது நான் இருக்கும் இடத்தில் இருக்கிறது” என்றவனை அதிர்ந்து பார்த்தவள் அதை அவசரமாக மறைத்தவள் திரும்பி நின்று கண்களை துடைத்துக் கொண்டாள்
அவளை நெருங்கியவன் அவள் இடுப்பில் கைகளை கொண்டுவந்து தன் புறமாக இழுத்துக் கொண்டான் “எனக்கு தெரியும் உன் மனதில் நிறைய குழப்பங்கள், நான் நிச்சயம் எல்லாவற்றையும் தீர்த்து வைப்பேன் ஆனால் மறுபடி உன்னை இழக்க என்னால் முடியாது , நம் திருமணம் வரை பொறுத்திரு” என்றவன் அவளை தன் புறமாக திருப்பி அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டான் “நிச்சயம் எல்லாவற்றிற்கும் நான் விடையளிப்பேன் நீ என் சொந்தமாய் இருக்கும் பொழுது,என்னை நம்புகிறாய் அல்லவா” என்றவனை நிமிர்ந்து பார்த்த பொழுது
யாருமில்லை துணையாக என்று நினைத்தவளுக்கு எல்லாமாக நிற்கிறான் அவனின்றி யார் துணை அவளுக்கு என்று நினைத்தவளின் கண்கள் கண்ணீருடன் தலை அசைக்க “ஷ் பைத்தியம் இந்த கண்ணில் கண்ணீர் வருவதற்கு நான் எதற்கு வேண்டுமானால் என்னால் வெட்கம் வேண்டுமானால் வரலாம் “ என்று குறும்புடன் கண் சிமிட்டியவனை பார்த்ததும் அழையா விருந்தாளியாய் ஒட்டிக்கொண்டது வெட்கம்
“முட்டக்கன்னி இந்த கண்களை வைத்து என்னை இழுப்பது உன் வேலை அதன் பிறகு வரும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை என்று அவள் இதழை சிறை செய்தவன்” கதவு தட்டும் சத்தம் கேட்டு அவளை விடுவித்தான் அவளின் நிலைகண்டு குறும்புடன் கண் சிமிட்டியவனை கண்டு மேலும் வெட்கினாள்
“அக்கா எங்க போனீங்க பெரியம்மா …” எனறு உள்ளே வந்த குணா அவர்களின் கோலம் கண்டு வாயை பொத்தி கொண்டு சிரிப்புடன் ஓட , தன் நிலையை கண்டு வெட்கியவள் “எல்லாம் உங்களால் தான் போச்சு இப்பொழுது குணா போய் எல்லாரிடமும் சொல்லி விடுவாள் நான் எப்படி எல்லோர் முகத்தில் முழிப்பது” என்றவளை காதலோடு நெருங்கியவன்
“என் மனைவியிடம் நான் உறவாட யாரிடம் கேட்க வேண்டும்” என்றவனின் பார்வையில் வெட்கியவள்
“அதெல்லாம் உரிமை வந்த பிறகு “ என்று முணுமுணுக்க
“என் உரிமையை உனக்கு நான் நிறைய புரியவைத்திருக்கிறேன் , வேண்டுமானால் மறுபடியும் சொல்லட்டுமா “ என்று நெருங்கியவனை தள்ளிவிட்டவள் வாயிலை நோக்கி ஓடி அவனை பார்த்து பழுப்பு காட்டிவிட்டு கீழே ஓடினாள்
குணா உபயத்தில் எல்லாருக்கும் விஷயம் போயிருக்க அனைவரையும் பார்க்க சங்கடபட்டவளை வேலைகள் கொடுத்து திசை திருப்பிவிட நன்றியோடு நகர்ந்துவிட்டாள்
அப்பொழுதுதான் சிதம்பரம் பெண் சார்பாக தான் எல்லாம் செயவதாகவும் இந்த இரு வாரம் தாருண்யாவை தன் வீட்டிற்கு கூட்டி செல்வதாக சொல்லவும் அனைவரையும் பிரியவேண்டும் என்று மனம் வலித்தாலும் கொஞ்ச நாட்கள் தான் என்று அவருடன் வந்துவிட்டாள் (,மனுபரதனும் சம்மதித்தான் அன்றே நின்றிருந்தால் பின்னாளில் அவளை பிரிந்து உயிர்வலி அனுபவிதிருக்க மாட்டான் ஆனால் இறைவனின் திட்டம் வேறல்லவோ)
நடுவில் ஒருவர் மாற்றி ஒருவர் என்று அவளிடம் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள்
மனுபரதன் மட்டும் அவள் வந்த அன்றே சொல்லிவிட்டான் “எல்லா வேலைகளையும் விரைவாக முடிக்கிறேன் தன்யா அப்பொழுது தான் நம் திருமணத்திற்கு பிறகு எனக்கு நேரம் கிடைக்கும் என்று அவளை சிவக்க வைத்தவன் ஏதோ தயங்கியது போல் தோன்றியது அவள் என்னவென்று கேட்பதற்கு முன் அவன் சாதாரணமாக பேச ஆரமித்தான் “அதுவரை உன்னுடன் பேசவில்லையென்று நினைக்க கூடாது, தன்யா என்னை நம்புகிறாய் அல்லவா என்ன நடந்தாலும் நம் வாழ்வில் நம்பிக்கை வை, கல்யாணத்தில் சந்திக்கலாம் “ என்று வைத்துவிட்டான்
ஏதோ எல்லாம் ரொம்ப அவசரமாக நடப்பது போல் தோன்றினாலும் தனக்கும் நன்மைக்கும் ரொம்ப தூரம் என்று பயம் இருந்து கொண்டே தான் இருந்தது இருப்பினும் அவன் வார்த்தைகளை யோசித்து தன் பயத்தை பகிர்ந்து அவனை தொந்திரவு செய்ய விரும்பாமல் அவளாக அழைக்கவில்லை அப்படி செய்திருந்தால் எவ்வளவோ துயரங்களை தடுத்திருக்கலாம் ஆனால் விதி வலிமை உள்ளது என்பது உண்மைதானே அதை மீறிய மதி பெரிய வெற்றிகள் அடைந்ததில்லையே
பழைய நினைவுகளில் இருந்தவள் வீட்டின் மணியோசை கேட்டு நடப்பிற்கு வந்தாள் இதோ இப்பொழுது கூட அவளின் கல்யாண பத்திரிகை எடுத்து கொண்டு தெரிந்தவரை அழைக்க போய் இருந்தார்கள் சிதம்பரமும் அவர் மனைவியும் வர தாமதமாகும் என்று சொல்லி இருந்தார்கள் ஒரு வேளை போன வேலை சீக்கிரம் முடிந்து விட்டது போலும் என்று நினைத்துக் கொண்டு சிரித்துக்கொண்டே “என்ன அங்கிள் இவ்வளவு சீக்கிரம் வந்து…….” என்றவளின் பேச்சு நின்றுவிட்டது பேச்சு மட்டுமா அவளின் மூச்சே நின்றுவிட்டது
ஏதோ ஒன்று அவளை பயமுறுத்திக்கொண்டே இருந்ததே அதை எப்படி சட்டை செய்யாமல் விட்டாள், அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம் என்ற திடம் அவளை விட்டு இவ்வளவு சீக்கிரம் கரையுமா, இதோ நடந்து விட்டதே சிலையாக நிற்கும் கால்களை ஒரு அடி நகர்த்த முடியவில்லை மூளை மரத்து விட்டது தன் உடலில் உயிர் இருக்கிறதா என்று சந்தேகம் வந்தது தாருண்யாவிற்கு
எவளை நினைத்தால் அதன் விளைவுகளால் தன் திருமணம் நின்று விடும் அபாயம் இருப்பதால் அவள் நினைவை ஒதுக்கினாளோ அவளின் உயிர் கொல்ல நின்றிருந்தாள் அவளின் உயோர் தோழி மித்திலா நிச்சயம் அவள் அவளை தோழியாக நினைக்கவில்லை என்பதை கண்களில் காட்டினாள் மித்திலா


Madhumathi Bharath :)

Post Reply

Return to “காதல் கருவறை”