காதல் கருவறை 30

Post Reply
User avatar
admin
Site Admin
Posts: 131
Joined: Sun May 10, 2020 12:45 pm
Has thanked: 3 times
Been thanked: 1 time

காதல் கருவறை 30

Post by admin »

கரு30:
லேசாக தூரல் ஆரமித்ததும் மீண்டும் அவர்கள் அறையை அடைய அவள் அதிர்ச்சி தீர சிறிது தண்ணீர் கொடுத்தான் எவ்வளவு நடிப்பு எல்லாமே அவள் சுயநலத்திற்காகவா அவளால் எதையுமே நம்ப முடியவில்லை
கலங்கிய விழிகளுடன் அவனை பார்க்க “ அன்றிருந்த நிலையில் நான் ஓரளவு வசதியானவன் முன்னேறுவேன் என்று கணித்தாளே தவிர உண்மையில் அவளுக்கு என்னை பற்றி எதுவும் தெரியாது அதுவும் நல்லது தான், ஆனால் என்னால் அவளுக்கு எந்த தொந்திரவும் இருக்க கூடாது என்பதற்காக உன்னால் பிரிவது போலவும் உன்னை நான் மீண்டும் அடைய கூடாது என்கிற பொறாமை உணர்வும் தான் அவளை இதை செய்ய வைத்தது” என்றவன் தன் மொபைலில் இருந்த ஒரு விடியோவை ஓடவிட்டான் அதில் விஜய் முகமெல்லாம் வீங்கி உண்மையை ஒப்புவித்துக்கொண்டிருந்தான்
“ மனு பரதன் முதலில் பார்த்தது தாருண்யாவை தான் என்பதை மித்திலா முதலே உணர்ந்து கொண்டாள் ஆனால் என்னிடம் இதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம் என்று கூறினாள் காரணம் அவர்களின் மீது ஆசை கொண்டதாகவும் அவனை வைத்தே வாழ்வில் செட்டில் ஆகலாம் என்று நினைத்ததாகவும் கூறினாள் நானும் அவன் உதவி தேவை என்று நினைத்தேன் அவன் பெயர் வைத்து நிறைய பணம் கடன் வாங்கியருந்தேன், அதனால் மித்திலா கூறியதற்கு ஒப்புக்கொண்டேன்”
“ எல்லாம் நாங்கள் நினைத்தபடி போய்க்கொண்டிருந்தது ஆனால் இடையில் மனு பரதன் என் கைகளை கண்டுபிடித்துவிட்டால் இதை நான் உன்னிடம் கூறினேன் அவளும் அப்பொழுது தன்னிடமும் மனு பரதன் முன்பைப் போல் பேசுவதில்லை என்று கூறினாள் இதற்கு என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் எங்களுக்கு ஜாக்பாட் அடித்தது போல் என் நட்பு வட்டத்தில் பெரிய இடத்துப் பையன் ஒருவன் சிக்கினான் அவனை மடக்கி வாழ்ந்து கொள்ளலாம் என்று நாங்கள் துபாய்க்கு புறப்பட திட்டமிட்டோம்”
“ அப்பொழுதுதான் மித்திலா நாங்கள் வெளியேறுவதை மனுபரதனுக்கு தெரியாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் இதில் தாருண்யாவை மாட்டிவிடலாம் என்று யோசித்தாள் தனக்கு வேண்டாம் என்று நினைத்த மனுபரதன் தாருண்யாவிற்கும் கிடைக்கக்கூடாது என்று அவள் யோசித்தாள், அதனால் கலா என்று ஒரு பெண்ணை நாங்களே செட்டப் செய்து தாருண்யா விடம் பேச வைத்தோம், இதில் நாங்கள் செய்த பெரிய முட்டாள்தனம் உண்மையில் மனுபரதனின் செல்வ நிலையை அறிந்து கொள்ளாமல் இருந்தது தான், பிறகு நாங்கள் துபாய்க்கு சென்ற உடன் தான் அவன் எங்களை விட மிகவும் மோசக்காரன் என்பதை உணரந்துமூன்று வருடம் அவனிடம் படாதபாடுபட்டு எப்படியோ தப்பித்து வந்தோம் அவனை எங்கும் மாட்டி விட முடியாமல் எங்களுடைய அனைத்து ரகசியங்களும் அவனிடம் சிக்கி இருந்தன”
“ திரும்பி வந்த பிறகு எங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் தாருண்யாவின் திருமண விஷயம் கேள்விப்பட்டு அங்கு சென்றபிறகுதான் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது மனுபரதன் நாங்கள் நினைத்தால் அதைவிட பல கோடி மதிப்புள்ள சொத்துக்கு சொந்தக்காரன் என்பதும் ராஜவம்சம் என்பதும் நாங்கள் அறிந்தோம்”
“ அப்பொழுதுதான் மித்திலா என்னிடம் தான் மனுபரதனை சந்தித்து தாருண்யா வினால் ஏமாற்றப்பட்டதாக நடிப்பதாகவும் பிறகு.அவளையும் மிரட்டி மனு பரதனை விட்டு வெளியேற்ற வைப்பதாகவும் கூறினார் அதன்படி அவள் அவனை சந்தித்ததும் முன்பு போல் அவளிடம் ஏமாறவில்லை அவளை யார் என்பதை கண்டு கொண்டதாகவும் கூறினான் இதனால் நிச்சயம் அவன் தன்னை ஏற்கப் போவதில்லை என்று தெரிந்ததும் மறுபடி அவனிடம் பேச்சு கொடுத்து அவன் பேசியதை ரகசியமாக வீடியோ எடுத்து தனக்கு வேண்டியதை மட்டும் கட் செய்து கொண்டு தாருண்யாவை பார்க்கப் புறப்பட்டாள்”
“ இதில் அவளுக்கு நான் எல்லா விதத்திலும் உதவினேன் ஆனால் எங்களையும் மனு பரதன் கவனிப்பதை நாங்கள் உணரவில்லை, எங்கள் அவசர திட்டமே எங்களைக் காட்டிக் கொடுத்தது தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் இனிமேல் உங்கள் வழிக்கு வரவே மாட்டோம்“ என்று மித்திலா வின் அண்ணன் விஜய் கதறிக் கொண்டிருந்தான்
அதை பார்த்தவளின் விழிகள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டது சில நேரம் கலவையான உணர்வுகள் கோபம் கவலை சந்தோஷம் நிம்மதி என்று அவள் முகம் காட்டிய பாவங்களை பார்திருந்தவன் “நான் உன்னிடம் இதையெல்லாம் சொல்லும் பொழுது நான் இருக்கிறேன் உனக்கு உரிமை உள்ளவனாக என்று கூறும்படி இருக்க வேண்டும் என்பதற்காக தான் தன்யா நம் திருமணத்தில் குறியாக இருந்தேன் மேலும் நீ கடிதம் எழுதி விட்டு சென்றதும் நான் சிதம்பரம்அங்கிளிடம் உன்னை உன் தந்தையின் வீட்டில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னேன் , அவர் என்னிடம் பேசியபிறகுதான் உன்னிடம் பேசினார்”
“ உன் தந்தையின் சொத்தை உனக்கு சேரும்படி ஏற்பாடுகள் செய்துவிட்டு அதை உன் திருமணத்தின் பரிசாக அவரிடம் கொடுக்க சொல்லி சொல்லி இருந்தேன், என் பேச்சை ஏற்று அவரும் என் சொல்படி உன்னை அங்கு இருக்க வைத்தார் , அதுமட்டுமில்லாமல் உன்னைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் உன் வீட்டு வேலையாள் மூலமாக எனக்கு சொல்லிக் கொண்டே இருந்தார் உன்னை உடனே அழைத்து இருந்தால் நீ வந்திருக்க மாட்டாய் அதனால்தான் உனனால் என்னை பிரியமுடியாது என்பதை உனக்கு உணர்த்தவே இந்த இரண்டு வார பிரிவை நானும் சகித்துக்கொண்டேன், இனி மித்திலா மறந்தும் கூட உன் பக்கம் வரமாட்டாள் தன்யா” என்றவன் அவள் யோசிக்க நேரம் கொடுத்து அவளை விட்டு விலகி நின்று கொண்டான்
அருகில் இருந்தவனை மெய் மறந்து பார்த்திருந்தாள் “எவ்வளவு போராட்டம் இவ்வளவு நாள் மித்திலா கூறியது போல் அவன் அவளுக்கு சொந்தமானவனோ என்று ஒரு குற்ற உணர்ச்சியுடன் அல்லவா போராடியிருந்தாள் அவன் அவளவன் என்பதை விட வேறென்ன வேண்டும் அவளுக்காக எவ்வளவு யோசித்திருக்கிறான் , தான்தான் எல்லா இடத்திலேயும் அவனை தவறாக யோசித்திருக்கிறோம் , இல்லையே அன்று மித்திலா அவனை பற்றி தவறாக சொல்லும்பொழுது கூட அவளுக்கு ஏதோ அடைத்ததே அப்பொழுதே அவன் அவளுள் இருக்கத்தான் செய்திருக்கிறான் தான்தான் அதை உணரவில்லை விதியின் படி அவனை திரும்ப பார்த்திரா விட்டால் அவளால் அதற்கு மேல் யோசிகமுடியவில்லை ஓடி சென்று பின்புறமாக அவனை அணைத்துக்கொண்டாள்
“என்னை மன்னித்து விடுங்கள் மதன் நான்தான் உங்களை ரொம்ப காயப்படுத்திவிட்டேன் உங்களை நான் நம்பவே இல்லை இதற்கெல்லாம் நான் எப்படி கைமாறு செய்வேன் இவ்வளவு காதலுக்கு நான் தகுதியானவளா மதன்” என்று அழுதவளை முன்பக்கம் திருப்பியவன்
அவள் கழுத்தில் ஒரு செயினை அணிவித்தான் அது அன்று திருட்டு போன அவளுடைய செயின் “இது நீ தருட்டுக்கொடுத்த இரண்டாம் நாளே எனக்கு கிடைத்துவிட்டது ஆனாலும் ஏதோ நான் தரவில்லை என் சட்டை போல உன் செயின் எனக்கு உன் ஞாபகமாக என்னை ஆதரிக்கும் காதலாக இருந்தது “இது அனைத்திற்கும் நீ மட்டுமே தகுதியானவள் செந்தூ” என்றழைத்தவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள், அவளை பார்த்து சிரித்தவன்
“நான் என் காதலியின் அறையை சோதனை போட்ட பொழுது தான் அவள் டைரி என்னிடம் சிக்கியது அவள் முழு பெயர் செந்தாருண்யா, ஆனால் அது அவளுக்கு பிடிக்கவில்லை என்று தாருண்யா என்று மாற்றிவிட்டாள், அவள் அம்மா அவளை செந்தூ என்று அழைக்கும் பொழுது கோபம் கொள்பவள் அதன் காரணத்தையும் எழுதி இருந்தாள் அனைவரும் அழைக்கும் பெயர் அல்ல ஒருவன் மட்டுமே ஏனெனில் அது”என்று அவளை பார்த்தவனின் பார்வையை தாங்கமுடியாமல் அவன் கண்மூடியவள்
“சூரியன் அழைத்தால் மட்டுமே செந்தாமரை மலரும்
அதே போல் என் தலைவன் மட்டுமே அழைப்பான் அவ்வார்தைகளை
ஏனெனில் நான் அவளின் செந்தூரமானவள்” என்று முடித்தாள்
அவன் கண்கள் மீதிருந்த கை அகற்றியவள் அவன் நெஞ்சில் சாய்ந்து “என் வாழ்நாள் முழுக்க அது நடக்காது என்று நினைத்தேன் மதன்” ஆனால் என்று சொல்ல வெட்கியவளின் முகம் நிமிர்த்தியவன்
“ இப்பொழுது ?”
“இப்பொழுது மட்டும் அல்ல எப்பொழுதும் நான் உங்கள் சொந்தமாய்” என்றவள் அவன் பார்வையில் கண் மூடினாள்
அவளை மேலும் நெருங்கி முத்தமிட்டவன் “ஆம் சொந்தமாய் ,செந்தூரமாய், செந்தேனாய், செந்தாமரையாய், செவ்விதழாய்” என்று ஒவ்வொரு வர்ணனைக்கும் அவள் கண் காது மூக்கு கன்னம் என முத்தமிட்டவன் அவளுடன் கலக்க ஏங்கியிருந்த இதழ்களை சிறைபிடித்தான்
காத்திருந்த அவர்களின் காதல் சங்கமம் அரங்கேறப்போவதை அறிந்து நிலவும் மேகத்தினுள் வெட்கி மறைய, மரங்களும் மலர்கள் தூவி ஆசிர்வதித்தது எப்படி சூரியனின் சொந்தம் தாமரை போல் என்றும் அவன் செந்தாருண்யாவின் மனுபரதன்

சுபம்


Madhumathi Bharath :)

Post Reply

Return to “காதல் கருவறை”