காதல் கருவறை 25

Post Reply
User avatar
admin
Site Admin
Posts: 131
Joined: Sun May 10, 2020 12:45 pm
Has thanked: 3 times
Been thanked: 1 time

காதல் கருவறை 25

Post by admin »

கரூ:25

காலையில் எழுந்ததில் இருந்து வலது கண் துடித்துக் கொண்டிருந்தது தாருண்யாவிற்கு, வலது கண் துடித்தால் ஏதோ தவறு நடக்கும் என்று அம்மா கூறுவது நினைவு வந்தது, மனதில் ஒரு ஓரத்தில் பயம் இருந்துக் கொண்டே இருந்தது இருப்பினும் அவன் இருக்கும் வரை நிச்சயம் பயமில்லை என்றும் தோன்றியது,
ஆயிற்று அவள் சிதம்பரம் அங்கிள் வீட்டிற்கு வந்து இரண்டு வாரம் ஆயிற்று அவள் வாழ்வில் இவ்வளவு வசந்தங்கள் வரும் என்று சொல்லி இருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டாள் அதுவும் அவளின் மதன் அவள் வாழ்வையே ஒளிமயமாக்கிவிட்டான் , ஆம் அவளின் மதன் தான் இதோ கைகள் அவர்களின் திருமணபத்திரிக்கையை வருடிக்கொண்டு இருந்தது , சொன்னது போல் எல்லாவற்றையும் செய்துவிட்டான் அதுவும் இப்பொழுது அவர்கள் திருமணம் வரை மனது அதன்பிறகு நடந்ததை நினைத்தது
அன்று இருவரும் கிளம்பியதும் நேரே அவன் அத்தையிடம் சென்றான்
“நான் வேண்டாம் மதன், ஏனக்கு அவர்களை காண பயமாக இருக்கிறது”
“இனி என் வாழ்வில் உனக்கு தெரியாமல் எதுவும் இல்லை தன்யா, அதுவும் இதில் உன் பெரியம்மா உன்னை தான் மிகவும் நம்பினார்கள்”
“அடடே, இரு துருவமும் ஒண்ணா வந்துருக்கே இது கனவில்லையே “ என்று சிரித்தவர் அவர்களின் மௌனம் ஏதோ விஷயம் என்று எடுத்து கூற அமர செய்தார்
“அத்தை நாம் சந்தோஷிக்கு என்றும் நல்லது செய்யத்தான் நினைத்தோம் அல்லவா அவள் வாழ்வு இப்பொழுது அவளுக்கு கிடைக்கும் ஒருவரின் சம்மதம் கிடைத்தால் “ என்று அவரை பார்த்தவன் அவர்களிடம் வேறு கதை புனைந்தான் கிட்டத்தட்ட உண்மை விஷயம்,
அதாவது சந்தோஷிக்கும் சரணுக்கும் பெரியவர்கள் நிச்சயித்ததும் அவர்கள் எல்லை மீறிவிட்டார்கள் அது சரணுக்கு தெரியாது என்றும் அவள் பெற்றோர்கள் சொத்து விஷயத்திற்காக தற்கொலை செய்ய சரணின் பெற்றோர் தான் காரணம் என்று எண்ணி அவள் குழந்தை விஷயத்தை மறைத்து விட்டாள் என்றும் இப்பொழுது உண்மை தெரிந்து சரண் அவளை தேடி வந்துவிட்டதாகவும் அவன் ஆசிரமத்தில் சந்தோஷிக்கு தாலி கட்டியதையும் தெரிவித்தவன் இதற்கு முழு காரணமும் தாருண்யா என்று விட்டான் மறந்தும் குழந்தை பற்றியும் அதன் காரணமானவர்களுக்கு அவன் அளித்த தண்டனை பற்றியும் மூச்சு விடவில்லை
அனைத்தையும் கேட்டு அமைதியானவர் கண்மூடி அமர்ந்து விட்டார் அவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது, திடீர் என்று அவர் காலில் நீர் படுவதை உணர்ந்து பார்த்தவர் அங்கு சரணும் சந்தோஷியும் விழுந்துருப்பதையும் கண்டவர் அவர்களை தொட்டு எழுந்திருமாறு சைகை செய்தவர் சந்தோஷியை ஒரு அறை விட்டார்
“என்னிடம் ஒரு வார்த்தை கூறவில்லை நீ , வீட்டின் குழந்தையை ஆசிரமத்தில் அனாதை போல் வளர்க்க விட்டுவிட்டாய் உன் தாய் இருந்திருந்தால் இப்படி செய்திருப்பாயா நான் உனக்கு பெரியம்மா தானே பெற்றவள் இல்லையே” என்று அவர் கதற
“இல்லை பெரியம்மா எல்லாம் என் தவறு தான் சாரி பெரியம்மா இல்லை அம்மா “ என்று அவரை கட்டிக்கொண்டு கதறியவளை பார்த்த பொழுது எல்லாருக்கும் அழுகை வந்தது
குழந்தையை உச்சி முகர்ந்தவரை பார்த்து மனம் நிறைந்தது தாருண்யாவிற்கு மெதுவாக அவளை அழைத்தவர் “நீ செய்ததற்கு நான் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன் தரு , என் மகிழ்ச்சியை மீட்டு கொடுத்திருக்கிறாய் சொல் உனக்கு என்ன வேண்டும் “ என்றவரிடம்
குழந்தையின் தலையை தடவியவள் “இந்த மகிழ்ச்சியின் மகிழ்ச்சி மட்டும் போதும் அம்மா” என்றவளை என்றும் போல் அன்பாய் பார்த்தவர் அருகில் மனுபரதனை கூப்பிட்டு “இப்பொழுது என்ன சொல்கிறாய் தரு எவ்வளவு நல்லவள் என்று பார் என்றவனின் பார்வையை அவளால் சந்திக்கமுடியவில்லை
“ஆமாம் பெரியம்மா எனக்கு நல்லது நடக்க தாருண்யா எவ்வளவு போராடினார் அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது” என்று சந்தோஷி சொன்னதை சரணும் குணாவும் அமோதித்தனர்
“ஆமாம் அத்தை அவள் இல்லை என்றால் சந்தோஷியின் விஷயம் எனக்கு தெரியாமலே போயிருக்கும், இங்கு எல்லாருக்கும் மகிழ்ச்சி அளித்தவள் என் மகிழ்ச்சியை அவள் மனதோடு திருடிவிட்டாள் “ என்றவனை எல்லோரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியும் சந்தோஷமும் நிரம்ப பார்திருந்தனர்
முதலில் சுதாரித்து குணா “யாஹூ “என்று கத்த செங்கொழுந்தாகி போனாள் தாருண்யா, பெரியம்மா உணர்ச்சி வசப்பட்டு அவளை அணைத்து உச்சி முகர்ந்தார் “ரொம்ப சந்தோஷம் டா தரு இனி என் பரத்தை பற்றிய கவலை இல்லாமல் இருப்பேன் உன்னால் என்றும் நம் மாளிகை சந்தோஷத்துடன் இருக்கும்”
“தரு அக்கா கண்டுபிடிக்கறேன்னு சொல்லி என் மனோ மாமா மனசை பிடிச்சிடீங்களா “ என்று ஓட்ட “சந்தோஷி அவள் கன்னத்தில் முத்தம் வைக்க” அதை பார்த்த மனுபரதன் ஏக்க பெருமூச்சு விட அங்கு ஒரு சிரிப்பலை எழுந்தது
அதன் பிறகு துரிதமாக வேலைகள் நடக்க குழந்தைக்கு அடுத்த நான்கு நாட்களில் பெயர் சூட்டு விழா ஏற்பாடு செய்து அதற்கு இரண்டு வாரத்திற்கு பிறகு அவர்கள் திருமணமும் நிச்சயித்தார்கள் மனுபரதனின் அப்பா அம்மா அவனின் தம்பி எல்லோரும் அங்கேயே தங்கிவிட்டனர் அனைவரும் அவளிடம் ஆசையாக பழகினர், அவன் தாய் கூட” அவன் முடிவு அவன்தான் எடுப்பான் மா ஆனால் அது அவ்வளவு தெளிவாக இருக்கும், எல்லாம் என் நாத்தனாரின் வளர்ப்பு எனக்கு கூட அவர்தான் வழிகாட்டி, அவருக்கு பின் தான் எனக்கு அவன் முன்னுரிமை தரவேண்டும் என்றுதான் நினைப்பேன் அதுதான் உன்னை பற்றி நான் தனியே விசாரிக்கவில்லை என் மகன் தேர்வு எல்லாமே சொக்கதங்கம் தான் மா “ என்றார்
மனுபரதன் என்ன செய்தான் என்று தெரியவில்லை சரணின் பெற்றோர்கள் கூட நல்லவிதமாக கலந்து கொண்டனர் அவர்களுக்கும் அது சரணின் குழந்தையாகவே அறிமுகப்படுத்தப்பட்டது, அவன் அங்கிருந்தே வேலைகளை கவனித்து கொள்வதாகவும் சந்தோஷியுடன் சொந்தமாக ஃபிளாட் வாங்கி இங்கே இருப்பதாகவும் சொல்லிவிட்டான் இனி அவளை எக்காரணத்தை கொண்டு வருந்தவிட அவன் விரும்பவில்லை மேலும் அவள் மும்பையில் அனுபவித்த கஷ்டங்களை அவன் மீண்டும் நினைவு படுத்த விரும்பவில்லை அன்றும் போல் அவர்கள் காதலை பார்த்து வியந்த தாருண்யா வின் கண்கள் தன்னையும் அறியாமல் மனுபரதனை நோக்க அவனும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான்
அன்று எல்லோரிடமும் சொல்லி ஏற்பாடுகள் செய்தாலும் அவளுக்கு ஒரு ஓரத்தில் பழைய விஷயங்கள் அறித்துக்கொண்டே தான் இருந்தன அதை அவனிடம் கேட்கவும் அவளுக்கு மனம் வரவிகளை எக்காரணத்தை கொண்டும் அவர்கள் திருமணம் தடைபட கூடாது என்று அவள் மனம் நினைத்த நிமிடம் தான் அவள் மனம் புரிந்து கொண்டது அவன் மீது அவள் கொண்ட ஈர்ப்பு எப்பொழுது என்று மனம் பரபரப்புடன் யோசிக்கும் பொழுது அது இப்பொழுதில்லை என்றோ அந்த முகம் அவளின் மனதில் பதிந்துதான் இருந்தது அதற்கு மேல் அதைப்பற்றி அவள் யோசிக்கவில்லை, இன்று அவளின் மனதை அவன் அறிந்துகொண்டானோ என்று அவளுக்கு பயமாக இருந்தது


Madhumathi Bharath :)

Post Reply

Return to “காதல் கருவறை”