காதல் கருவறை 27

Post Reply
User avatar
admin
Site Admin
Posts: 131
Joined: Sun May 10, 2020 12:45 pm
Has thanked: 3 times
Been thanked: 1 time

காதல் கருவறை 27

Post by admin »

கரூ 27:
“ என்னம்மா என் வாழ்வை பிடிங்கி சந்தோஷமாக இருக்கிறாய் போல”
“காத்திருந்தவன் புருஷனை நேற்று வந்தவள் கொண்டு போவதை பார்ப்பதற்கு நான் என்ன பைத்தியமா”
“உனக்கு வெட்கமாயில்லை தோழியின் வாழ்வை பிடிங்கி வாழ நினைக்கிறோம் என்று தோன்றவில்லை”
திகைப்பில் இருந்து வெளி வந்தவள் “யார் வாழ்க்கையையும் நான் பிடுங்கவில்லை அந்த வாழ்வு நல்லதல்ல என்று விட்டு சென்றவள் நீ தான் மித்திலா”
“அதற்கு நீயும் ஒரு வகையில் வழி செய்தாய் மறந்துவிட்டாயா”
“அபாண்டமாக பொய் கூறாதே., உனக்கு செய்த உதவியால் நான் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்தேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்”
“என்னம்மா அப்படி ஒரு கஷ்டத்தை அனுபவித்தாய் எவனால் துன்பப்பட்டாயோ அவனை கல்யாணம் செய்து கொள்ள கஷ்டப்பட்டாயா?, பணம் அது உன்னையும் மாற்றி விட்டது போல”
எதை நினைக்க கூடாது என்று நினைத்தாளோ தோழியின் வடிவில் அந்த உண்மைகள் அவளை சுட்டது இல்லை அவள் மதன் ஏதோ சொல்லப்போவதாக சொன்னானே முதலில் இவளுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்றவளை அவளின் வார்த்தை சீண்டியது “ச்சீ பணம், அது யாருக்கு வேண்டும், நான் ஒன்றும் உன்னை போல பணப்பித்து பிடித்து அலயவில்லை என்னுள் இருப்பது காதல் அதன் அர்த்தம் தெரியுமா உனக்கு ”
பேய் சிரிப்பு சிரித்தாள் மித்திலா “எப்படிப்பட்ட காதல் தோழியின் காதலனை களவாடும் தூய்மையான காதல் , ஆமாம் எனக்கு பணத்தின் மீது ஆசை உண்டு ஆனால் என் காதல் அடுத்தவளின் உரிமை மீது அல்ல நீ செய்வது காதல் அல்ல வேசித்தனம்” என்று நெருப்பை உமிழ
“ச்சீ இப்படி பேச உனக்கு நா கூசாவில்லை என் மதன் வரட்டும் பிறகு உன்னுடன் பேசுகிறேன்” என்று போன் அருகில் சென்றவளை
“உன் செயல் உனக்கு கூசாவில்லை என் நாவினை பற்றி பேசுகிறாயா, நீ என்னம்மா அவருக்கு போன் செய்வது நானே செய்கிறேன், உனக்கு ஒன்று தெறியாதல்லவா அவரிடம் போய் விட்டு தான் உன்னிடம் வருகிறேன் , என்னை பார்த்ததும் கோபம் கொண்டவர் உன்னால்தான் நான் அவரை விட்டு பிரிந்தேன் என்றதும் அப்படியே விழுந்து விட்டார் , இப்பொழுது அவர் பிரச்சனையே ஓட்டுப்புல் போல் இருக்கும் உன்னை விரட்டுவது தான்”
“பொய் என் மதன் அப்படிப்பட்டவர் இல்லை”
“உன் மதனா, அடுத்தவளின் காதலன் மீது எவ்வளவு உரிமை உனக்கு இப்போது உன்னை ஒன்று கேட்கிறேன் மனோ அவர் வாயால் உன்னை பற்றி கூறினால் என்ன செய்வாய் என்று சொல் அதன்பிறகு நான் உனக்கு நிரூபிக்கிறேன்
“நிச்சயமாக நான் வேண்டாம் என்று அவர் சொல்லமாட்டார் அப்படி இருந்தால் நீ என்ன சொல்கிறாயோ செய்கிறேன்”
“நடக்கும் அப்படி நடந்ததும் சொல்லாமல் இங்கிருந்து சென்றுவிடவேண்டும் அதன்பிறகு நீ மனோவை சந்திக்க கூடாது , கண்காணாமல் போய்விடவேண்டும்
ஒரு நொடி தாமதிக்வில்லை தாருண்யா அவள் சொல்படி சம்மதித்தாள் , அவளை ஏளனமாக பார்த்தவாறு அவளிடம் ஒரு வீடியோ வை காண்பித்தாள்” அதில் அவளை உயிரோடு கொன்றுகொண்டு இருந்தான் அவளின் மதன்
‘” உன் இடத்தில்தான் அவளை யோசித்தேன் ஒரு வகையில் உங்கள் உருவ ஒற்றுமை தான் காரணம், என் வாழ்வை நாசமாக்கியவளுடன் பொய் வாழ்வு வாழ்ந்து அவளை பழி வாங்க நினைத்தேன் ,இப்பொழுது அது எனக்கு தேவையில்லை இனி உண்மை வாழ்க்கை தான் உள்ளது அது எனக்கு கிடைத்து விட்டது மித்திலா” என்று அந்த வீடியோ முடிந்துவிட்டது
அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது, எவ்வளவு நம்பிக்கை எல்லாம் போய் விட்டது அவன் வாயிலேயே வந்துவிட்டது இந்த உருவ ஒற்றுமை தானே அவளை அணைக்க வைத்து அவனை அறைய வைத்தது , அதற்காக தான் இவ்வளவு வேகமாக ஏற்பாடு செய்தானா என் வாழ்வில் அதிக சந்தோஷம் தந்தவனே அதை பிடிங்கி எரிந்துவிட்டான் அம்மா ஏம்மா என்னை விட்டு போனாய் பார் எல்லாரும் உன் மகள் வாழ்வை பந்தாடுகிறார்கள், எவ்வளவு கனவுகள் வைத்தேன் இதோ மரண அடி இனி ஒன்றுமே இல்லை” என்று கழிவிரக்கத்தில் மனதில் புலம்பியவளை மித்திலா வின் குரல் கலைத்தது
‘என்னம்மா ஆசை தீர் பார்த்தாயா, இப்பொழுது தெரிந்துகொள் அவர் மனதில் என்றுமே நீ இருந்ததில்லை நான் மட்டுமே , உண்மை நான் இருக்கையில் போலி நீ எதற்கு , கேள் இன்னும் இரண்டு வாரத்தில் நடக்கும் திருமணம் எனக்கும் மனோவுக்கும் தான் உனக்கில்லை ரோஷமானவள் என்றால் போய்விடு” என்றவளை வெறுமையாய் பார்த்தவள்
“போகிறேன் இனி உங்களை என் வாழ்நாள் முழுமைக்கும் பார்க்காமல் இருக்கும் இடத்திற்கு போகிறேன் , என்றும் உங்களை காணும் தண்டனையை அந்த இறைவன் எனக்கு தரவேண்டாம் ”என்றவளை ஏளனமாக பார்த்துவிட்டு வந்த வேலை முடிந்தது போல் சென்றாள்
பிறமையுற்றவள் போல் அங்கிருந்தவள் ஒரு முடிவுடன் தன் அறைக்கு சென்று கடிதம் எழுதினாள் “வாழ்வை இழந்து ஒரு பெண்ணை ஓட ஓட அடிக்க தான் இவ்வளவு செய்தீர்களா, நான் என்றுமே உங்கள் வாழ்வை அழிக்க எண்ணவில்லை, நீங்கள் முன்பு என்னை விரட்டி அடித்த பொழுது கூட வாழவேண்டும் என்ற எண்ணம் இருந்தது இப்பொழுது என் உயிரை மாய்த்து கொள்ள தைரியம் இல்லாமல் போனதால் என் காலம் முடியும் வரை வாழ்ந்து முடிக்க வேண்டும் போகிறேன் முன்பாவது என் அம்மா இருந்தாள் இப்பொழுது ஒருவரும் துணையில்லாமல் உடலின் உணர்வுகளை உயிரோடு கொன்று பிணமாக செல்கிறேன் இனி என் காலம் முடியும் வரை உங்கள் நிழல் கூட படாமல் இருக்கும் திசை தேடி போகிறேன்
காலம் முழுதும் என் துன்பத்தின் ஆதியும் அந்தமுமாய் உங்களால் மட்டுமே இருக்கமுடியும் நல்லவேளை மித்திலா வந்துவிட்டாள் இல்லையெனில் பொய் வாழ்வுவாழும் அவல நிலையையும் பார்திருப்பேன், கடவுளுக்கு கொஞ்சமாவது என் மீது கருணை இருக்கிறது போலும்”
கடிதத்தை உரையில் போடவும் சிதம்பரம் அவள் அறை கதவை திறக்கவும் சரியாக இருந்தது “என்னம்மா ஏன் வாசல் கதவை திறந்து போட்டிருக்கிறாய் பத்திரிக்கை எல்லாருக்கும் வைத்துவிட்டோம்”
“இல்லாத கல்யாணத்திற்கு இனி அது எதற்கு அங்கிள் ? எல்லாம் முடிந்து விட்டது” என்று அழுதவளை அதிர்ந்து பார்த்தனர் அவரும் அவர்மனைவியும்
“ஆமாம் அங்கிள் இனி எங்ககுக்குள் ஒன்றும் இல்லை அவரே அனைத்தையும் பார்த்துக்கொள்வார்” என்றவளை இடைமரித்தவரை தடுத்தவள் “நான் எல்லாம் அறிந்துவிட்டேன் இனி இது தொடர்பாக பேச எதுவுமே இல்லை அது என்னை கொன்றதற்கு சமம்” என்றதும் அவர் எதுவும் தடுக்கவில்லை
“ அங்கிள் எனக்கு நீங்கள் எவ்வளவோ நன்மை செய்தீர்கள் என் பாதுகாப்பிற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டீருக்கிறீர்கள் இன்னும் ஒரே ஒரு கஷ்டமாய் என்னை இங்கிருந்து எங்காவது யார் கண்களிலும் படாத இடமாக அனுப்பி வையுங்கள் ப்ளீஸ்” என்று கெஞ்சியவளை என்றும் போல் ஆதூரமாக பார்த்தவர் ஒரு பெருமூச்சுடன்
“உன் தந்தை எனக்கு எவ்வளவோ செய்திருக்கிறான் அதை யோசிக்கையில் இது ஒன்றுமே இல்லை நீ என்றும் எனக்கு கஷ்டம் இல்லை தரு, உன் தந்தை சொத்துக்கள் உனக்கு கிடைக்க வேண்டும் என்ற உன் தாயின் கடைசி நொடி ஆசைக்காக தான் அதன் மீது ஆசை கொண்ட உன் தந்தையின் சொந்தங்களால் உனக்கு ஆபத்து வரும் என்றுதான் நான் உன்னை மனோ வீட்டிற்கு அனுப்பினேன் நீ அங்கே வாழப்போகிறாய் என்றும் நிம்மதி கொண்டேன் அதற்கு ஆயுள் இவ்வளவு கம்மி என்று எனக்கு தெரியாது , இனி நீ ஓடி ஒளியவேண்டாம் கேஸ் உன் பக்கம் சாதகமாக அமைந்து அனைத்தும் கிடைத்துவிட்டது நான்தான் உனக்கு அதை கல்யாண பரிசாக தர நினைத்து இருந்தேன்” என்றவரின் வார்த்தை திரும்பவும் அவனிடமே கொண்டு சென்றது முதல் முறை அவள் அந்த வீட்டில் இருந்து வெளியேறுவதை கூட இதை கூறிதானே தடுத்தான் அவன் அப்பொழுதே சென்றிருந்தால் இந்த மனவேதனை இல்லாமல் இருந்திருக்கலாம் இனி வாழ்வு முழுமைக்கும் இந்த வேதனை ஒன்றே போதுமே” என்று மறுகியவளை
“அந்த விஷயம், அதுகூட மனோ “ என்றவரின் பேச்சை இடைமரித்தவள்
“அவர் பேச்சு அவர் சம்மந்தப்பட்ட எதுவும்வேண்டாம் அங்கிள்,” என்றவளை வேதனையுடன் பார்த்தவர்” நீ உன் தந்தையின் கிராம வீட்டுக்கு போ தாருண்யா அது உனக்கு நிச்சயம் நிம்மதி தரும் நான் எல்லா ஏற்பாடும் செய்கிறேன்” என்றவரை நன்றியுடன் பார்த்தவள்
“நிம்மதி அது எனக்கு ஒருவன் மட்டுமே அளிக்க கூடியது, அதை அழித்தவனும் அவன் ஒருவன்தான், எனக்கு இனி வாழ்நாள் முழுமைக்கும் இல்லாமல் செய்தவனும் அவன்தான்” என்று மனதில் நினைத்துக்கொண்டாள்
“ காதல் உயிர் கொடுக்கும் என நினைத்தேன் - இல்லை
அது உணர்வறுத்து, உயிர் குடித்தது,
கூட்டுக்குள் உயிரை விட்டு உணர்வுகளை கொன்றுவிட்டாய்
வெறும் உடலோடு வாழும் பிணமாய் நான்
என்னை கொல்லும் எமனாய் நீ…
உன் கையில் வைத்திருப்பது பாசக்கையிரல்ல
நான் வேர் விட்டு வளர்த்த என் காதல்!!!


Madhumathi Bharath :)

Post Reply

Return to “காதல் கருவறை”