Page 1 of 1

காதல் கருவறை 29

Posted: Thu Jun 11, 2020 3:12 pm
by admin
கரு 29:
மனுபரதன் தன்னை தான் சொல்கிறான் என்று உணரவே நேரம் பிடித்தது தாருண்யாவிற்கு அவளை அங்கிருந்த கல்லில் அமரவைத்தவன் அவள் கீழ் அமர்ந்தான் அவள் கைகளை பிடித்துக் கொண்டு பேச ஆரம்பித்தான் “எவ்வளவோ கேள்விகள் இருக்கும் இல்லையா நிச்சயம் உன் கேள்விகளின் பதில் உனக்கு கிடைக்கும் ஆனால் என்னால் தள்ளி நின்று பதில் அளிக்க முடியாது தன்யா அதுதான் நான் உன்னிடம் உரிமை வேண்டும் என்று நினைத்தேன்”
“உன்னை முதன் முதலில் பார்த்தபிறகு நீ எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை அப்பொழுது நான் மிதிலாவின் அண்ணன் விஜய்யுடன் தொழில் சம்பந்தமாக பேசதான் வந்தேன் எனக்கு இடம் புதிதென்பதால் அவன் தான் கூட்டி செல்வான் , விஜய் எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லை தவிர நான் யார் என்று அவனுக்கு தெரியாது என் மாமாவின் பேரில் இருந்த டீலிங் நான் பார்ப்பதால் அவன் என்னை ஏஜென்ட் ஆக நினைத்தான் நானும் அதை மாற்றவில்லை, அப்படிதான் முதலில் நான் மித்திலாவை பார்த்தேன் நீ தான் என நினைத்து மகிழ்ந்தேன்
முதலில் சாதாரண நட்புடன் பேசிக்கொண்டிருந்தேன் விஜயும் நானும் பார்ட்னர் ஆகமுடிவெடுக்க நினைத்ததும் நான் முதலீடு என்றும் அவன் ஒர்க்கிங் பார்ட்னர் என்றும் முடிவெடுத்தோம் மித்திலாவும் நானும் பழகுவதை விஜய் தடுக்கவில்லை அப்பொழுதே அன்றிருந்த நிலையே நான் பணக்காரன் என்ற நிலை தான் என் உண்மையான செல்வ வளம் பற்றி நான் கூறாத பொழுதே”
“ஆம் நீங்கள் விரைவில் பணக்காரன் ஆகிவிடுவீர்கள்” என்று அவள் என்னிடம் கூறினாள் என்றவளை கனிவாக பார்த்தவன் மேலும் தொடர்ந்தான்
“அவளிடம் அன்று கடற்கரையில் அவளை பார்த்ததாக சொன்னதும் அதிலிருந்து தான் அவளை விரும்பியதாக கூறியதும் சிறிது யோசனையாக இருந்தவள் அடுத்த வாரம் அவள் நெருங்கிய தோழியை சந்திக்க அதே கடற்கரைக்கு வர சொன்னாள்” என்றவன் நிறுத்தி அவள் முகவடிவை அளந்தபடி
“அங்குதான் நான் என் தேவதை என்று தெரியாமலேயே உன்னை அணைத்தேன் அதே வரி வடிவம் தான் என்னை அதை செய்யசொன்னது”
“ஆனால் நீ என்னை அறைந்ததும் தான் அது மித்திலா இல்லை என்றே உணர்ந்தேன் நம் முதல் சந்திப்பே கசப்பில் அமைந்தது , அப்பொழுது எனக்கு உன் மீது ஏதோ ஒரு உணர்வு மட்டும் தோன்றியது ஆனால் நல்ல எண்ணம் இல்லை”
அது அவளுக்கும் தெரியுமே எத்தனையோ நாட்கள் அதை நினைத்திருக்கிறாளே, அவன் தொடர்ந்தான்
“அன்று மித்திலா என்னிடம் உனக்கு காதல், காதலர்கள் இதெல்லாம் பிடிக்காது என்றும் அது தான் அவள் உன்னை விட்டு கடற்கரைக்கு வருவதாகவும் கூறினாள் மற்றும் நீ நிச்சயம் எங்கள் காதலை பிரிக்க செய்வாய் கூறினாள் அதனாலேயே உனக்கு கல்லூரியில் அதிக எதிரிகள் என்றும் மித்திலா தான் உனக்கு எல்லாம் என்றும் கூறினாள்”
“அன்றைய நிலையில் எனக்கு நீ உகந்தவளாக இல்லை அதனால் அவள் கூற்றை நான் அப்படியே நம்பினேன், ஆனால் மித்திலா அதை வேண்டும் என்றே தோற்றுவிதிருக்கிறாள், முதல் கோணல் முற்றும் கோணலாக்க” ஓரளவு தாருண்யாவுக்கும் அது அவளாக ஏற்படுத்தியது என்று இப்பொழுது தோன்றியது இல்லை என்றால் அவனை சந்திக்க எதற்கு ஒரே மாதிரி உடை அணிய செய்தாள்.
‘அதன் பிறகு தான் நான் உன் செயின் திருட்டு போனப்பொழுது சந்தித்தேன் , அப்பொழுது தான் நான் மறுபடியும் மித்திலாவையே சந்தித்தேன் ஏதோ என்னை அவளுடன் பழகமுடியாத படி செய்து கொண்டு இருந்தது யோசித்தால் அது உன் நினைவுதான் என்று கண்டுகொண்டிருப்பேன் ஆனால் உன் மேல் உள்ள கோபம் எதையும் யோசிக்க முடியவில்லை அன்று மித்திலாவின் வீட்டிற்கு சென்றபொழுது அவள் உள்ளே இருந்தாள் போனில் உன் முகம் பார்த்ததும் என்னால் உன் அழைப்பை ஏற்காமல் இருக்கமுடியவில்லை அடுத்த நொடி நான் உன்னை தேடி வந்துவிட்டேன்,ஆனால் முன்பை விட அதிகமாக நம் இருவர் கோபத்தையம் அந்த சந்திப்பு தூண்டும் என்று நான் நினைக்கவில்லை”
“அது.. அதற்கு முன் தான் நான் கோபியை பார்த்தேன் மித்திலா அவனிடம் ஆசையை வளர்த்ததாகவும் நீங்கள் வந்ததும் அவனை அவள் விலக்கி விட்டதாகவும் சொன்னதும் நீங்கள் தான் அவளை கலைத்து விட்டீர்கள் என்று நினைத்தேன் அன்றிருந்த நிலையில் என்னாலும் உங்களை சரியாக நினைக்க முடியவில்லை அன்று நீங்கள் பேசிய பிறகு அது மேலும் அதிகமானது”
“மித்திலா அதை என்னிடம் வேறுவிதமாக கூறினாள் அவளையும் என்னையும் பிரிக்க நீ கோபியை தூண்டிவிடுவதாக கூறினாள், ஒரு சிலநாளில் அவளின் பழக்கத்திலேயே நான் சாதரணாமாகவே மித்திலாவை விலக்கியிருப்பேன் ஆனால் அது நடந்துவிடக்கூடாது என்பதற்க்காகவே உனக்கெதிராக அவள் என்னை தூண்டிவிட்டு கொண்டிருந்தாள்”
“நான் பிசினஸ் விஷயமாக செல்லும் முன்தான் விஜய் என் பெயர் மீது சில கையாடல் செய்ததை நான் அவனிடம் அன்று விளக்கம் கேட்டிருந்தேன் அத்துடன் அவன் பார்ட்னர்ஷிப்பையும் கான்சல் செய்வதாக கூறி இருந்தேன்”
“நீ எனக்கு போன் செய்து மித்திலா என்னை விட்டு விலக போவதாக கூறியபொழுது நிஜமாக நான் நிம்மதியை தான் உணர்ந்தேன் தன்யா ஆனால் அதை விட உன்னிடம் தோற்கப்போவது தான் என்னை வெறியாக்கியது அதை விட நீ என்னை பெண் பித்தனாக கூறியது என்னை உன் மீது ஆத்திரத்தை கண்மூடி தனமாக வளர்த்துவிட்டது அந்த நிலைதான் என்னை என் ஒழுக்கங்களையும் மீறி உன்னை மிரட்டி பணய கைதியாக இருக்க வைத்தது”
யிருந்தேன்” சொல்லும்பொழுதே அன்றைய நிலையில் அவள் உடல் விறைக்க அவள் பாதம் பற்றியவன் சலங்கையாடும் அவள் மெட்டியில் முத்தமிட்டு தன் கன்னங்களில் வைத்துக்கொண்டான்,
“அன்றைய நிலையில் நான் என்னை மட்டுமே யோசித்தேன் தவிர உன்னை பற்றி யோசிக்கவில்லை அதன் பிறகு என் மனம் நிலைகொள்ளாது தவித்தது மீண்டும் நான் உன்னை தேடி வந்தேன்” என்றதும் அதிர்ந்து பார்த்தாள்
அவளின் கண்களில் முத்தமிட்டவன் “ஆமாம் உன் தாய் சொந்த ஊருக்கு செல்வதாக சொன்னார்களே தவிர வேறெதுவும் யாரிடமும் சொல்லவில்லை, நீ என்னை விட்டு போனப்பொழுது தான் நான் மித்திலா சென்றதை விட அதிக வேதனையை உணர்ந்தேன் அதையும் என் தன்மானம் கேலி செய்ய உன் மீதி கோபமாகவே இருந்தேன்”
“இது அனைத்தும் என் நிலைதான் அதற்காக என்னை மன்னித்துவிடு தேனு” என்றதும் அவன் தலை கோதியவளின் கைகளை பற்றி முத்தம் இட்டவன்
“மீண்டும் உன்னை நான் பார்த்த பொழுது நான் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை, உடனே உன்னை பற்றி அனைத்து விஷயங்களையும் நான் சேகரித்தேன் அப்பொழுதுதான் நீ உன் தந்தையின் சொத்திற்காக மறைந்து வாழ்வதைக் கண்டு பிடித்து அதை வைத்து உன்னை மிரட்டினேன் ,ஏன் என்ற என் மனதின் கேள்விக்கு மீண்டும் உன்னை பழி வாங்கலாம் என்பதற்காக என்று சமாதானம்செய்தது என் முட்டாள்தனம், அதுதான் என்னை மீண்டும் மீண்டும் உன்னை வார்த்தைகளாலும் செயலாலும் காயப்படுத்திக் கொண்டே இருக்க சொன்னது”
“அன்று கோவிலில் உன்னை பார்த்ததும் என்னால் வேறெதுவும் யோசிக்கவே முடியவில்லை ஆனால் அப்பொழுது சரணின் அழைப்பு என்னை இன்னும் உன் மீது கோபம் கொள்ள வைத்தது மித்திலாவிடம் எனக்கு வராத உரிமை உணர்வு உன் மீது வந்த பொழுது நான் யோசித்திருக்க வேண்டும்”
“ ஆனால் உன்னை முழுதாக நான் உணர செய்தது நீ என்னிடம் சந்தோஷியை பற்றி கூறிய உண்மைகள் தான், அது என்னையும் உன்னை வேறு கோணத்தில் பார்க்க வைத்தது அதுதான் பல உண்மைகளையும் கண்டறிய வைத்தது, சந்தோஷியின் விஷயங்களை எந்த ஆட்களை வைத்து கண்டறிந்தேனோ அதே ஆட்களை வைத்து மித்திலாவை பற்றியும் ஆராய்ந்தேன்”
“அப்பொழுது எனக்கு கிடைத்த விஷயங்கள் அதிர்ச்சியானவை அதை உனக்கும் சொல்லி உன்னையும் அதிர்ச்சி கொள்ள செய்ய வேண்டாமென்று நான் அதை தவிர்த்தேன், உன் மீது நான் கொண்ட ஆசை போலவே நீயும் இருக்கிறாய் என்று எனக்கு நம் சந்திப்புகள் உணர்த்தின இருந்தாலும் உனக்கு என்மீது ஏதாவது அபிப்ராயம் இருக்கிறதா என்பதை ஆராய்வது உன் ரூமுக்கு நான் வந்தேன் அப்பொழுது தான் என் சிகப்பு சட்டை உன் பெட்டியில் இருப்பதையும் கண்டேன், அஞ்சான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை தன்யா” என்றதும் அதுதான் அதை நான் வைத்திருப்பதை பார்த்து அன்று சிதம்பரம் அங்கிள் வீட்டிற்கு செல்வதற்கு முன் ஒன்றுமே சொல்லாமல் நான் இருக்க என் சட்டை எதற்கு என்று கேட்டானோ என்ற நினைப்பிலேயே அழையா விருந்தாளியாக ஒட்டிக்கொண்டது வெட்கம்
“அது நான் எதற்காக எடுத்து வைத்தேன் என்று எனக்கு தெரியவில்லை மதன் ஆனால் ரொம்ப துயரமாக இருக்கும் பொழுது அதுதான் எனக்கு ஆறுதல் தரும் அதற்கு மேல் அதை ஆராய்ந்து அந்த உண்மைகளில் மாட்டிக்கொள்ள நான் இஷ்டப்படவில்லை” என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டவன்
“அன்றே நீ உன் துணைக்கு என்னைத்தான் தேடி இருக்கிறாய் ‘
“அன்று நீ என்னை விட்டு போனப்பொழுது இரண்டாவது முறையாக என் உலகம் இருண்டது” என்றதும் அவளுக்கும் அன்றைய நிலையில் கண்ணீர் வந்தது அதை துடைத்தவன்
“.அன்று நான் உன்னிடம் சொல்லியதுபோல் நம் திருமணம் முடிந்த பிறகு உன்னுடன் இருப்பதற்காக என் வேலைகள் எல்லவற்றையும் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று தான் நான் உன்னை அழைக்கவில்லை ஆனால் மித்திலாவை எதிர்பார்த்தேன் அவள் மீண்டும் வருவதாக என் ஆட்கள் எனக்கு தெரிவித்தார்கள்”
“அவள் எனக்கு பயந்து ஊரை விட்டு போகவில்லை உன்னை வைத்து என்னை விலக்கி அன்றிருந்த மனுபரதனை விட பணக்காரன் என்று நினைத்து ஒருவனுடன் துபாய்க்கு சென்றுவிட்டாள் அதற்கு தான் அவள் அந்த கலா என்ற பெண்னை செட் செய்து பேச வைத்து எல்லாமே நடிப்பு தன்யா “