யாசிக்காதே போ_2

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

யாசிக்காதே போ_2

Post by Rajeswari.d »

யாசிக்காதே போ_2


மதுரயாழினி வயது இருபத்தி மூன்று எம்ஏ தமிழ் முதலாம் ஆண்டு படித்து கொண்டு இருப்பவள். இயற்கையின் காதலி...என்ன பிடிக்கும் என்று கேட்டாள் அனைத்தும் என... ஒரே வரியில் பதில் சொல்லுவாள்...பிடிக்காதது அப்படி கூட ஒன்று இருக்கிறதா என்ன? தைரியசாலி...தவறு என தோன்றினால் யாராக இருந்தாலும் எதிர்த்து கேள்வி கேட்கும் நல்லவள்… அதனாலேயே அடிக்கடி ஏதாவது பிரச்சினையில் சிக்கிக்கொள்பவள். இது வரைக்கும் பெரியதாக ஆனது எல்லாம் கிடையாது ஆனாலும் இவளது தாய் தந்தை இருவருக்கும் எப்போதும் இவளை பற்றிய மெளிதான பயம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.


தாயார் தந்தையிடம் அடிக்கடி சொல்வது "இவ எந்த நேரம் என்ன பிரச்சினையை இழுத்திட்டு வருவாலோ தெரியவில்லை...பயந்திட்டே இருக்க வேண்டியதாக இருக்கு...நம்ம குடும்பத்தில் யாருமே இப்படி இல்லை இவள் மட்டும் இப்படி இருக்கறா என்பது தான்."


இரட்டு முறை தவறாக பேசியதாக சொல்லிஅடித்து விட்டு வந்து இருந்தாள் அவர்கள் வீடு வரைக்கும் பிரச்சினையை கொண்டு வர அருகில் இருந்தவர்கள் பேசி அனுப்பி வைத்து இருந்தனர். அதன் பிறகு அந்த ஏரியாவிற்கு கூட இவள் தான் டான். தேவை இல்லாமல் இவளை பேசுவதோ கிண்டல் செய்வதோ கிடையாது.


அருகில் இருக்கும் வயது பசங்க கூட "அடிச்சிட்டா நமக்கு தான்யா அசிங்கம் ஊருக்குள்ளே கேவலப்படுத்திடுவாங்க… என்ன இருந்தாலும் நம்ம ஊர் பொண்ணுல்ல…"இப்படிபட்ட பேச்சும் இருந்தது. இன்னும் சிலர் "மது போல தைரியமாக இருக்கும் வேண்டாமா அதென்ன எப்பப்பாரு பயந்திட்டே இருக்கிறது இந்த பேச்சும் ஒரு பக்கம் இருக்கிறது."


வீட்டுக்கு பெரிய பெண் இவளுக்கு கீழே இன்னும் இரண்டு பேர். திவ்யதர்ஷினி இவளுக்கு அடுத்தவள் கொஞ்சம் அமைதி...காலேஜ் இரண்டாவது வருடம் படிப்பவள் பிகாம்...நல்ல திறமை சாலி...படிப்பில் படு சுட்டி...அடுத்தது நந்தினி பிளஸ்ஒன் மாணவி...கொஞ்சம் வாயாடி...நிறைய பேசுவால் பேச யாரிடமும் தயக்கம் கிடையாது.


மூவரும் கேசவன், சுதா தம்பதியரின் தவபுதல்வி..இவர்களது தொழிலே விவசாயம் தான் பேரூரை தாண்டி இருந்தது இவர்களது வீடு கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் நடுவில் இருந்தது இவர்களது பகுதி...டவுன்ஹால் செல்ல நிமிடத்திற்கு ஒரு பஸ் என பரபரப்பாக இருக்கும் பகுதி இவர்களது.


அருகிலேயே சிறுவாணி அணை இருக்க...வருடம் முழுவதும் நிலத்தடி நீருக்கு பஞ்சம் இருந்தது இல்லை. இரண்டு ஏக்கர் போல இடம் இருந்தது. தோப்பு ஒரம் எல்லாம் தென்னை மரம் நட்டு இருக்க...நடுவில் சீசனுக்கு தகுந்தாற்போல் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய்...இன்னோரு ஒரத்தில் தீராட்சை தோட்டம் இருந்தது.


அன்று முதல் இன்று வரைக்கும் விவசாயத்தில் நஷ்டமோ...பணத்துக்கு பிரச்சனையோ இது வரைக்கும் வந்தது இல்லை. வாழ்க்கை தெளிந்த நீரோடை போல அழகாக நகர்ந்து கொண்டு இருந்தது. ஏற்கனவே பாட்டியின் நகை என கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது பவுன் நகை என...அனைத்தும் இவர்களுக்கு வர...பெண்களின் எதிர்காலத்திற்கும் கவலை எதுவும் கிடையாது. தற்போதைய தேவைக்கு பணம் இருந்தால் போதும் மூன்று பெண்களின் படிப்பு செலவிற்கு...கூடவே வீட்டின் தேவைக்கு என… இது போக ஒரளவிற்கு சேமிக்கவும் முடிந்தது.


அழகான ஞாயிற்றுக்கிழமை அன்று...காலை எட்டு மணியை தொட்டுக்கொண்டு இருக்க… இன்னமும் கூட மதுரயாழினி நல்ல தூக்கத்தில் இருந்தாள். விடுமுறை அன்று மட்டும் விருப்பம் போல எழுந்து கொள்ளலாம் மற்ற நாளாக இருந்து இருந்தால் சுதாவின் சத்தத்தில் ஆறு மணிக்கு எல்லாம் எழுந்து விடுவர். விடுமுறை நாள் என்பதால் எதுவும் சொல்லாமல் விட்டு இருந்தார்.


இவர்களது வீடு கொஞ்சம் பழைய காலத்து வீடு கேசவனின் தாயார் காலத்தில் கட்டியது கேசவன் ஒரே மகன் இவனது தாயாருக்கு… எல்லாமே தாயார் காலத்தில் சம்பாதித்தது. புதிதாக இவர் எதையும் வாங்கவில்லை. அதே நேரத்தில் தாயாரின் எந்த சொத்தையும் இதுவரைக்கும் கஷ்டம் என்று விற்றதும் மொத்தத்தில் இருப்பதை இழந்து விடாமல் கட்டிக்காத்து மட்டுமே வந்து கொண்டு இருந்தார்.


பெரிய முற்றம் அதை தொடர்ந்து பெரிய வராண்டா நான்கு பெட்ரூம்...சமையல் அறை நல்ல பெரியது அதை தொடர்ந்து பின்புறத்தோட்டம். இவர்கள் இருக்கும் பகுதியில் இவர்களது வீடு தான் பெரியது.அடுத்ததாக இருக்கும் பகுதி நிறைய நடுத்தரவர்க்கம் இருக்கும் பகுதி...அந்த பகுதியில் இவர்களே தெரியாதவர்கள் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.


சுகமாக புரண்டு படுக்க அருகில் திவ்யாவின் குரல் இவளை களைத்தது. "மதுக்கா இன்றைக்கு தானே உன்கூட படிச்ச பழைய ஃப்ரெண்டுங்களை பார்க்க ப்ரூக்ஸ் பில்ட் போகணும்ன்னு சொன்ன ஞாபகம் இருக்கா என்று தட்டி எழுப்ப...சட்டென எழுந்து அமர்ந்தாள்."


"மைகாட் எப்படி மறந்தேன்..பத்து மணிக்கு அங்கே வர்றதா சொல்லி இருக்கிறேனே இப்பவே லேட்...கொஞ்சம் முன்னாடி எழுப்பி இருக்கலாம்ல்ல திவ்யா...அந்த சின்ன கழுதை எங்க போச்சு அவகிட்ட நைட்டே சொன்னேன் என்ன கரெக்டா எழுப்பி விடணும்ன்னு இப்படி சொதப்பிட்டா பாரேன்."


"அவள் காலையிலேயே அப்பா பின்னாடி கிளம்பிட்டா...நீ தான் எழுந்திருக்கலையே...கூப்பிட்டு பார்த்தா...ஆனாலும் இப்படி தூங்கக்கடாது மது…"


"ஏன்மா பேசமாட்டே...பயமாக இருக்கு போகாதேன்னு இரண்டு மணி வரைக்கும் பேய் படம் பார்க்க வச்சிட்டு இப்ப இப்படி சொல்லறையா...போடி குளிச்சிட்டு வந்து உன்கிட்ட பேசிக்கறேன் என்றபடி வேகமாக பாத்ரூம்பிற்குள் நுழைந்து பேஸ்ட் பிரஸோடு மறுபடியும் குரல் கொடுத்தாள்.திவ்யா அப்பா காசு கொடுத்தாங்களா என்று...கேட்ட திவ்யாவிற்கு தான் சுத்தமாக புரியவில்லை. "


"ஏய் முதல்ல குளிச்சிட்டு வெளியே வா நல்ல காலத்திலேயே பேசறது புரியாது இதுல பிரஸை வேற வாயில் வச்சிக்கிட்டு...என்றபடி நகர்ந்து சென்றிருந்தாள். "


"அடுத்த கால் மணி நேரத்தில் மது புறப்பட்டு வந்து இருந்தாள். தோள் வரைக்கும் ஓரே சீராக வெட்டப்பட்ட தலைமுடி எடுத்து போனில் போட்டு இருக்க நெற்றியில் சிறியதாக கண்ணுக்கு தெரியாத அளவில் சிறு புள்ளியாய் ஒரு ஃஸ்டிக்கர்...நல்ல நிறம் திருத்தமான புருவம் லிப்டிஸ்க் தீற்ற தேவையில்லாத இயல்பான சிவந்த உதடு...தற்சமயம் ஒரு கருநீல ஜூன்ஸ் வெண்மை நிறந்தில் ஒரு டாப்ஸ் கழுத்தை சுற்றியபடி ஸ்டோல் போட்டபடி முன் அறைக்குள் வந்தாள்."


கையில் எதையோ படித்து கொண்டுஇருந்தது திவ்யா இவளை பார்க்கவும் இவளது தோற்றம் கண்டு கண்களால் மெச்சியபடி…"சூப்பர் கா...அதெப்படி உன்னோட முகம் மட்டும் குளிச்சிட்டு வரவும் இப்படி பளிச்சின்னு வெள்ளையாக மாறிருது. ஒரு வேளை அங்கே பாத்ரூம் சுவற்றில் முகத்தை தேய்ப்பாயா என்ன…"


"அடிச்சேன்னா பாரு எப்ப பாரு கிண்டல் பண்ணிட்டு நல்லாபாரு முகத்துக்கு சோப் கூட அதிகம் போடறது இல்லை. ஒகே தானே கிளம்பவா…"


"டன் டன் கிளம்புக்கா…"


"ஏய் என்ன காசு வேண்டுமே... எங்கே அப்பா கொடுத்தாங்களா இல்லையா...அப்பா எங்கே கேட்டபடியே ஃபோன் செய்து இருந்தாள். அப்பா எங்க இருக்கறிங்க...கிளம்பிட்டேன் பா பணம் வேணும் செலவுக்கு…"


"அங்கே அம்மா கிட்ட கொடுத்தேன்டா திவ்யா கிட்ட கேளு என்று சொல்ல...திவ்யதர்ஷினியை திரும்பி பார்த்தவள்...உன்கிட்ட கேட்க சொல்லறாங்க என்று கேட்க...அவளுக்கு முகம் முழுக்க அப்படி ஒரு சிரிப்பு.. அங்கே பூஜை ரூம்பில் செல்ப்ல இருக்கு என்று சொல்ல...வேகமாக பூஜை அறையை நோக்கி நகர்ந்தாள்."


"இருநூறு ரூபாய் நோட்டு இருக்க...திவ்யா இது பத்தாது வண்டிக்கு பெட்ரோல் போட நூறு ரூபாய் வேணும் அப்புறம் அங்கே செலவு இருக்கு ஏன் இந்த அப்பா இப்படி செய்யறாங்க…"


"மது பாக்கெட் மணி கொடுத்து ஒரு வாரம் இன்னும் முடியவில்லை அப்பா கொடுத்த ஜநூறு ரூபாயை என்ன பண்ணின"...திவ்யா எப்போதும் இப்படி தான் வீட்டில் எப்போது அக்கா என்று அழைப்பாலோ அது போல மது என்ற அழைப்பும் இயல்பாக வரும். இதில் நந்தினி வேறு ரகம் அவளுக்கு இருவரையுமே அழைப்பது பெயர் சொல்லி மட்டும் தான். அக்கா என்ற வார்த்தை எப்போதும் வராது அதற்காக அடிக்கடி அவளுடைய தாயாரிடம் திட்டும் அவ்வப்போது வாங்கிக்கொள்வாள். அதெல்லாம் அந்த நேரத்தில் மட்டும் தான். மறுபடியும் அழைப்பது வழக்கம் போல தான் மொத்தத்தில் மூவருமே பாசத்தில் எந்த குறையும் சொல்ல முடியாது. அது போல தான் ஒற்றுமையிலும்... மூவரும் ஒருவரைஒருவர் எப்போதும் எங்கேயும் விட்டுக்கொடுத்தது கிடையாது.


"காலியாகிடுச்சு திவ்யா உன்கிட்ட ஏதாவது இருக்கா...காலேஜ் கேன்டின்ல அன்றைக்கு வாங்கி சாப்பிட்டாச்சு…"


"அதென்னகா… அப்பா தர்ற காசு எல்லாம் காலேஜ் கேன்டின்ல முடிச்சிடுவ போல இருக்கு...அதிகபட்சம் ஓரு ஃகாபி பப்ஸ் இதுக்கு மேல சாப்பிட மாட்டியே உன்மையை சொல்லு என்ன பண்ணின…"


"திவ்யா மீனு இருக்கறால்ல அவளோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லை ஹாஸ்ப்பிடல் போகணும்ன்னு கேட்டா அதுதான் கொடுத்திட்டேன்...சம்பளம் வாங்கவும் தந்திடறேன்னு சொல்லி இருக்கறா…அப்பாகிட்ட இன்னும் சொல்லலை…"


"அதுதானே பார்த்தேன் மதுவாவது செலவு பண்ணறதாவது அப்பா எல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க… என்னோட ஃபேக்ல பணம் இருக்கும் எடுத்துக்கோ...இருநூறு தான் இருக்கும்.மறந்திடாதே

எனக்கு திரும்ப தரணும்."


"ம்...ம்...தரலாம் தரலாம் என நகர...திரும்ப எல்லாம் கிடைக்காது என்பது எப்போதும் தெரிந்த ஒன்று தான் ஆனாலும் வழக்கம்போல எடுத்து கொடுத்தாள்."


"என்னக்கா தனியாகவா போகப்போற…"


"ஐய்ய நான் எப்போது தனியாக போனேன் அந்த மீனாவை அழைச்சிட்டு போகணும் அவள்கிட்ட சொல்லி இருக்கிறேன். "


"எப்படி வேலையில் இருக்கும் போது விடுவாங்கலா என்ன? திவ்யா சந்தேகமாக கேட்க…"


"விடுவாங்க தினமுமா கேட்கப்போறா... வேலைக்கு சேர்ந்த பிறகு இதுதான் முதல் தடவை...யூனிபார்ம் மாற்ற சொல்லி அழைச்சிட்டு போகணும்."இவள் சொன்ன மீனாவின் வீடும் இவர்களின் வீட்டிற்கு சற்று தொலைவில் இருந்தது. அதிகபட்சம் வசதி கிடையாது தாய் மட்டுமே உண்டு. படிக்க வைக்க முடியாததால் பிளல்டூவிலேயே நின்று விட்டாள். அப்போது முதலே வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறாள்.


"மது எதுக்கும் ஃபோன் பண்ணி கேட்டுக்கோ...வர்றேன் கிளம்பி வருவாயா என்று...அப்புறம் அங்கே போய் அவள் வரலைன்னா கஷ்டம். "


"ம்...இதுவும் சரிதான் இரு கேட்டுடறேன்" என்றவள் அவளின் நம்பருக்கு கால் செய்ய…எடுத்தவளிடம் "ஏய் மீனா வர்ற தானே அங்கே வேலை செய்யற இடத்தில் பர்மிஷன் கேளு...என்று வேகமாக கேட்க…"


"மது இப்போது யூனிபார்ம் தான் போட்டு இருக்கிறேன் போட்டுவிட்டு வந்த டிரஸ் கொஞ்சம் பழசு...நீ வரும் போது அம்மா கிட்ட சொல்லி டிரஸ் ஒன்று எடுத்துவிட்டு வருகிறாயா இங்கே மாற்றிவிட்டு வர்றேன். வந்ததும் போகலாம்...அம்மாகிட்ட சொல்லி இருக்கறேன் எடுத்து வச்சி இருப்பாங்க...நான பர்மிஷன் கேட்டு வைக்கிறேன் நீ வரவும் புறப்படலாம் சரியா."


"ஒகே...ஒகே...வாங்கிட்டு வரேன்...புறப்பட்டாச்சு மீனா நான் இங்கேயிருந்து இன்னும் கால்மணி நேரத்தில் அங்கே இருப்பேன்..என்றபடி ஃபோனை கட் செய்தாள்."


ஃபோனை கட் செய்யவும் திவ்யா மதுவிடம் "நீ லக்கி கா...உன்னோட ஃப்ரெண்டுங்க எல்லாம் இன்னும் கான்டெக்டில இருக்கறாங்க...என்ன பாரு...எந்த ஃப்ரெண்டும் தற்சமயம் இல்லை ஃபோர் தெரியுமா…"


"அதுக்கு எல்லாம் குடுப்பனை வேணும்அடுத்த வாரம் பாரு டென்த் ஃப்ரெண்டுங்க எல்லாம் மீட்டிங் போட்டு இருக்கிறோம்...ஜாலியாக நாலுமணிநேரம் போறதே தெரியாது தெரியுமா…"


தெரிந்த நாளில் இருந்து வழக்கத்தில் இருக்கும் பழக்கம் இது...பெரிதாக யாரும் செலவு எல்லாம் செய்வது கிடையாது. மொத்தமாக பார்த்து நலம் விசாரித்து விட்டு ஃகாபியோ,நூடூல்ஸோ சாப்பிட்டு விட்டு ஃபில் தொகையை மொத்தமாக பிரித்து கொடுத்து விட்டு...ஒருவரை ஒருவர் கிண்டல் கேளி என செய்து அடுத்த வருடம் வரைக்கும் நினைவுகளை சேகரித்து வைத்து கொண்டு புறப்படுவார்.


அங்கே பாகுபாடு எதுவுமே இருக்காது. சிலர் படித்து கொண்டு இருக்க...சிலர் நல்ல வேளையில் செட்டில் ஆகி இருந்தனர். மீனா போல படிக்க முடியாமல் போனவர்களும் உண்டு.அங்கே சென்று விட்டால் அது ஒரு பொருட்டே அல்ல...


"திவ்யா புறப்படறேன் அப்பா வந்தா சொல்லிடு அந்த சின்ன வாயாடிக்கிட்டேயும் சொல்லிடு என்றபடி புறப்பட்டாள். "வாசலுக்கு வந்து தனது ஸ்கூட்டி பெப்பை எடுத்து கொண்டு புறப்பட்டவளுக்கு அப்போது தெரியவில்லை புதிதாக ஒரு பிரச்சினைக்கு அஸ்திவாரம் அந்த பயணத்தில் போட போவதை…


அதன் தொடர்ச்சியாக இனி வரும் காலங்களில் பிரச்சினை மட்டுமே தன்னை சுழற்றி அடிக்கப்போவது தெரியாமல் மகிழ்ச்சியாக புறப்பட்டாள் மது!!!


தொடரும்.



Post Reply

Return to “Kavi Sowmi”