ஒளியைத் தேடி Kindle Ebook link

Moderator: Madhumathi Bharath

Post Reply
User avatar
Madhumathi Bharath
Site Admin
Posts: 124
Joined: Mon May 11, 2020 9:11 am
Location: Tamilnadu
Has thanked: 117 times
Been thanked: 31 times

ஒளியைத் தேடி Kindle Ebook link

Post by Madhumathi Bharath »

"ஜோதி... நீ"

"ஆமா மாமா... எனக்கு உன்னைய பிடிச்சு இருக்கு... கட்டிக்கிற அளவுக்கு..."

"ஜோதி... நான் வளர்த்த பிள்ளைடா நீ... உன்னைப் போய்..."

"அது உன் எண்ணம் மாமா... என் மனசுல இருக்கிறதை நான் சொல்லிட்டேன். நீயும் யோசிச்சு சொல்லு"

"எனக்கு என்ன வயசுன்னு தெரியுமா உனக்கு?"என்றான் சற்றே குரலை உயர்த்தி.

"அம்மாச்சிக்கும் , தாத்தாவுக்கும் பதினைஞ்சு வயசு வித்தியாசம் இருந்ததாம்"என்றாள் பதிலுக்கு.

"இது நடக்காது ஜோதி... கண்டதையும் யோசிச்சு மனசை குழப்பிக்காதே... முதல்ல உன் படிப்பு முடியட்டும்... அப்புறம் நானே நல்ல மாப்பிள்ளையா பார்த்து..." என்று பேசிக் கொண்டே போக ஆத்திரத்துடன் இடைமறித்தாள் ஜோதி.
*****

"உன்னை மனசுல வச்சுக்கிட்டு அவனோட வாழ பிடிக்காம நான் நாண்டுகிட்டு செத்து போ..."பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மணிகண்டனின் கரம் இடியென அவள் கன்னத்தில் இறங்கியது.

கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தாலும் மேற்கொண்டு ஒரு வார்த்தை அவளும் பேசவில்லை... அவளை அந்த கோலத்தில் பார்க்க முடியாமல் அவனும் நிற்கவில்லை.

சிறுவயதில் இருந்தே ஒருமுறை கூட அவளை அவன் அடித்தது இல்லை.அவனுக்கு மனது தாளவில்லை.வேகமாக அவளைத் தேடிப்போய் பார்த்தான். அவளது கன்னத்தில் அவனது விரல் தடம் ஆழமாக பதிந்து இருந்தது. உள்ளம் பதறியது அவனுக்கு.

'நானா இப்படி அடித்தேன்!'அவன் பார்வை அவள் கன்னத்திலேயே இருக்க...ஜோதி தானாகவே முன்வந்து பேசினாள்.

"எனக்கு கொஞ்சம் கூட வலிக்கலை மாமா..."சிரிக்க முயன்று தோற்றாள்.அவனை முந்திக்கொண்டு அவள் சமாதானம் செய்ய முன்வந்தது அவனை குற்றவுணர்வுக்கு உள்ளாக்கியது.

'அக்கா... என் தங்கத்தை நானே அடிச்சுட்டுட்டேனே... என்னை மன்னிப்பியாக்கா?'
****

https://www.amazon.in/dp/B08XZRPV48



Post Reply

Return to “Kindle EBook links”