சிறகில்லா தேவதை Kindle EBook Link

Moderator: Madhumathi Bharath

Post Reply
User avatar
Madhumathi Bharath
Site Admin
Posts: 124
Joined: Mon May 11, 2020 9:11 am
Location: Tamilnadu
Has thanked: 117 times
Been thanked: 31 times

சிறகில்லா தேவதை Kindle EBook Link

Post by Madhumathi Bharath »

சிறகில்லா தேவதை இன்று முதல் kindle லில் படிக்கலாம்.

நகரத்து இளைஞன் ஹரிஹரன் ,கிராமத்து சுட்டிப் பெண் வெண்ணிலாவிடம் காதலில் மயங்கி வருடங்கள் கடந்த பிறகும் அவளை மறக்க முடியாமல் அவளைத் தேடிப் போகிறான்.ஆனால் அங்கே அவள் குடும்பமே இரவோடு இரவாக ஊரை காலி செய்து விட்டு போய் இருந்தது.

வெண்ணிலா என்ன ஆனாள்/ எங்கே போனாள்? ஹரிஹரனின் காதலை ஏற்றுக் கொண்டாளா?

படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

teaser:

“ஏன்டா இப்படி புளுகுற... உன் ஹாஸ்பிடலுக்கு வர ஒரே ஆளு நான் மட்டும் தான்... இதில என்னமோ உன்கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்துக்க ஏதோ ஆயிரக்கணக்கான பேர் வரிசை கட்டி நிற்கிற மாதிரி இல்ல பேசுற...” நண்பனை வாரியபடியே நிதானமாக எதிரில் இருந்த சேரில் அமர்ந்தான் ஹரிஹரன்.
“சரி சரி... மானத்தை வாங்காதே... என்ன விஷயம் சொல்லு”
ஒரு நிமிடம் கண்களை இறுக மூடியவன் சேரில் சாய்ந்து அமர்ந்தவாறு ஒரே வார்த்தையில் பதில் அளித்தான்.
“வெண்ணிலா”
“இன்னும் அதே கனவு வருதா ஹரி...” வசந்தின் கேள்வியில் கவலை இருந்தது.
“ம் ஆமா வசந்த்... இன்னிக்கு காலையில கூட அதே கனவு வந்துச்சு... கொஞ்சம் கூட மாறாம...” ஹரிஹரனின் குரலில் கொஞ்ச முன்பு இருந்த வேடிக்கைப் பேச்சு இப்பொழுது துளியும் இல்லை.
..............................

“பெரிசு... நினைப்பு எல்லாம் எங்கே இருக்கு... பார்த்து போக மாட்டீங்களா?” என்று மிடுக்காக ஒரு குரல் கேட்டது.
குரல் கேட்ட திசையை நோக்கி திரும்பி பார்த்தான் ஹரிஹரன். பதினேழு அல்லது பதினெட்டு வயதில் களங்கம் இல்லாத நிலவை போல கண்களில் ஒருவித அலட்சிய பாவனையை தேக்கியபடி நின்று கொண்டு இருந்தாள் அவள்.பார்த்த அந்த நொடியே அந்த பெண் அவள் மனதில் பசை போட்டது போல ஒட்டிக் கொண்டாள்.
‘யார்றா இந்த பொண்ணு... இப்படி பேசுது... ஆமா பெருசுன்னு சொன்னுச்சே... யாரை சொல்லிச்சு’ என்று எண்ணியபடியே சுற்றிலும் பார்வையை சுழல விட்டான் ஹரிஹரன்.
“பெருசு... யாரை தேடுற... இப்படித் தான் அடுத்தவங்க தோப்புக்குள்ள திருட்டுத்தனமா வருவியா?” அதட்டலாக ஒலித்தது அவளின் குரல்.
‘இவள் என்னைத்தான் சொல்கிறாளோ’ என்ற சந்தேகம் அப்பொழுது தான் அவனுக்கு சந்தேகம் வந்தது.
“திருட வந்துட்டு முழிக்கிற முழியை பாரு...” மேலும் அதட்டினாள் அவள்.
‘தோப்புக்கு சொந்தகாரனையே திருடன் என்று சொல்லும் இவள் யார்? அப்பொழுது தான் அந்த பெண்ணை கண்களில் தோன்றிய சுவாரசியத்துடன் உற்றுப் பார்க்க ஆரம்பித்தான் ஹரிஹரன். பாவாடை தாவணியில் துருதுருவென இருந்தாள்.
“யோவ்! என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு... கண்ணை நோண்டிடுவேன் ஜாக்கிரதை... நான் யார் தெரியுமா? இங்கே இந்த வேலை எல்லாம் வைத்துக் கொள்ளாதே...” என்று சொன்னவள் சட்டென திரும்பி தன்னுடன் அழைத்து வந்து இருந்த அந்த பொடுசுகளை பார்த்தாள். அவளின் ஒற்றை பார்வை அவர்களுக்கு என்ன சேதி சொல்லியதோ,உடனே அவர்களும் அவளுடன் சேர்ந்து கொண்டு ஹரிஹரனை முறைக்க தொடங்கினர்.
அவர்களின் செயலில் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கி கொண்டு மேலும் அவளை சீண்ட எண்ணினான் ஹரிஹரன்.

..............................
“இயற்கையை அழிக்கக் கூடாது என்று இவ்வளவு ஆர்வமாக இருப்பவள் உனக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை எல்லாம் வந்த விலைக்கு விற்று விட்டு இரவோடு இரவாக தலைமறைவானது ஏன்?” அம்பை விட வேகமாகவும் கூர்மையாகவும் வார்த்தைகள் வந்து விழுந்தன ஹரிஹரனிடம் இருந்து.
‘என்ன பதில் சொல்வது’ என்று புரியாமல் வாயடைத்து போனாள் வெண்ணிலா. ‘இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது? யார் சொல்லி இருப்பார்கள்? ஒருவேளை ஊருக்கு வந்து என்னை பற்றி ஏதேனும் விசாரித்து இருப்பானோ?’ தன் போக்கில் சிந்தித்துக் கொண்டு இருந்தாள் வெண்ணிலா.
அவளின் கண்களில் தோன்றிய உணர்ச்சிகளுக்கு காரணம் என்ன என்று அவளை ஊடுருவும் பார்வை பார்த்தவாறே அசையாமல் நின்றான் ஹரிஹரன். அவனது பார்வை அவளை மெல்ல ஊடுருவி அவள் மனதில் இருப்பதை அறிய துடித்தது. பெண்ணவளோ தன் மனதை சுற்றி கட்டி இருக்கும் அந்த மாயத்திரை அறுந்து விழுவது பிடிக்காமல் பிடிவாதமாக மனதை மீண்டும் கல்லென மாற்றிக் கொண்டாள்.
......................

‘இவன் ஏன் இப்படி நிற்கிறான்?’ என்ற எண்ணத்தோடு மெதுவாக சிவாவின் தோளை தொட ரப்பர் பந்து போல எகிறிக் குதித்தான் சிவா.
“டேய்... நான் தான்டா... சுட்டு கிட்டு தொலையாதே” அலறினான் வசந்த்.
“டேய்... வ... வசந்த்...”
“என்னடா... என்ன ஆச்சு”
“துப்பாக்கிடா... என் கையில் நான் வச்சுக்கிட்டு இருக்கேன் பார்த்தியா. இதை வச்சு தான் நான் எல்லாரையும் காப்பாத்தினேன்” என்னவோ இமயமலையை கையில் வைத்திருப்பது போன்ற பாவனையில் உள்ளம் சிலிர்க்க துப்பாக்கியை கையில் தாங்கியபடி சொன்னான் சிவா.
“ரொம்ப உணர்ச்சி வசப்படாதே... அதில குண்டு இல்லை” அசால்ட்டாக சொன்னான் வசந்த்.
“என்னது?” என்று அதிர்ந்த சிவாவின் முகம் போன போக்கில் வசந்த் சிரிக்கத் தொடங்கினான்.
“அது ஒண்ணும் இல்லை மச்சி... ஊரில் இருந்து கிளம்பிய அன்னைக்கே ஹரிஹரன் சூட்கேசில் இது இருந்ததை நான் பார்த்தேன். ஒருவேளை இந்த மடையன் எசகுபிசகா ஏதாவது ஆத்திரத்தில் தற்கொலை எதுவும் செஞ்சுகிட்டா என்ன செய்றதுன்னு பயந்துக்கிட்டு அதுல இருந்த குண்டை எடுத்து தனியா வச்சிட்டேன்” கூலாக சொன்ன வசந்தை வெட்டவா குத்தவா என்பது போல சிவா பார்த்த பார்வையில் மேலும் சிரிக்க தொடங்கினான் வசந்த்.

https://www.amazon.com/dp/B07KTB6NW9



Post Reply

Return to “Kindle EBook links”