காதலே நீ கானலா kindle ebook லிங்க்

Moderator: Madhumathi Bharath

Post Reply
User avatar
Madhumathi Bharath
Site Admin
Posts: 124
Joined: Mon May 11, 2020 9:11 am
Location: Tamilnadu
Has thanked: 117 times
Been thanked: 31 times

காதலே நீ கானலா kindle ebook லிங்க்

Post by Madhumathi Bharath »

“அய்யா வரும் வரை உங்களுக்கு துணையாக இருப்பது மட்டும் தான் என் வேலை.மற்றபடி என்னை எந்த கேள்வியும் கேட்க வேண்டாம்” தெளிவாக சொன்ன பிறகு குரலை குறைத்து தனக்குள் முணுமுணுக்க ஆரம்பித்தாள் வள்ளி.
“சரியான இம்சை.எங்க அய்யாவோட வாழ்க்கை இப்படியா பாழ் ஆகணும்.போயும் போயும் இந்த பைத்தியம் தானா அவருக்கு கிடைச்சுது” குரலை குறைத்து முணுமுணுத்தாலும் அவளுடைய வார்த்தைகள் ஒன்று கூட தவறாமல் அரசியின் காதுகளை வந்து அடைந்தது.
மின்னல் தாக்கியது போல அப்படியே அங்கிருந்த ஒற்றை படுக்கையில் பொத்தென அமர்ந்து விட்டாள் அரசி.
‘பைத்தியம்...யார் பைத்தியம்...நான் பைத்தியமா?இல்லையே நான் நன்றாகத் தானே இருக்கிறேன்.அப்புறம் ஏன் இந்த பெண் இப்படி எல்லாம் பேசுகிறாள்.இரண்டு கைகளாலும் தலையை அழுந்த பிடித்துக் கொண்டவள் அப்படியே யோசிக்க ஆரம்பித்தாள். சிந்தனை எங்கெங்கோ சென்று மீண்டது.பின்னந்தலையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல ஒரு வலி.
*********
“நீ கிளம்பு வள்ளி...கொஞ்ச நேரம் பொறுத்து இவருக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வா...” என்று சொல்லிவிட்டு வள்ளி அங்கிருந்து நகர்ந்ததை உறுதிபடுத்திக் கொண்டு அவளுடைய மாமாவிடம் பேச ஆரம்பிக்கும் தருணம் சரியாக இன்டர்காம் ஒலித்தது.
“ஒரு நிமிஷம் மாமா” என்றவள் போனை எடுத்து காதில் வைக்க எதிர்புறம் வழக்கம் போல அவளது கணவனே தான்.
“என்ன பொழில் உங்க மாமாவை பார்த்ததும் ரொம்ப சந்தோசமா இருக்க போல”
“ஏன் உனக்கு பொறுக்கலையா?”மாமாவின் காதுகளில் விழுந்து விடக் கூடாது என்பதற்காக தாழ்ந்த குரலில் சீறினாள் பொழிலரசி.
“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் அதான்...”
“என்ன விஷயம்.சீக்கிரம் சொல்லித் தொலை”
“இல்லை அந்த ரூம்ல மினி வாய்ஸ் ரெக்கார்டர் இருக்கு.நீ அங்கே என்ன பேசினாலும் இங்கே இருந்தபடியே அதை என்னால் கேட்க முடியும்.அதனால கொஞ்சம் பார்த்து பேசு...இல்லைனா எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல...உன் மாமா தான் உருப்படியா வீடு போய் சேருவாரான்னு தெரியாது”என்று சொல்லி விட்டு போனை வைத்து விட சிலையென மாறிப் போனாள் பொழிலரசி.
*******
“அ...அது வந்து...அவ என்கிட்ட...இல்லை இல்லை...நான் அவகிட்ட கொஞ்சம் நெருங்கி...” என்று வார்த்தைகள் வராமல் தயங்கியவன் மூச்சை ஒருமுறை ஆழந்து சுவாசித்து விட்டு அவரின் கண்களை நேருக்கு நேராக பார்த்து பேசினான்.
“நாங்க எங்க தாம்பத்திய வாழ்க்கையை இன்னைக்கு தான் ஆரம்பிச்சோம்” என்று ஒரு வழியாக சொல்லி முடித்து விட்டான்.
“ஓ...” என்றவர் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் அடுத்த கேள்வியை தொடுத்தார்.
“அது இயல்பா நடந்துச்சா...இல்லை கட்டாயப்படுத்தி...”
“அதெல்லாம் எதுவும் இல்லை டாக்டர்” என்று வாய் சொன்னாலும் தான் அவளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது அவனின் மனக்கண்ணில் வந்து போனது.
“சரி சரி...அவங்க கொஞ்ச நாள் ரெஸ்டில் இருக்கட்டும். அவங்களை எங்காவது வெளியூர் அழைச்சுட்டு போங்க.அவங்க மனசுக்கு ஒரு மாற்றம் தேவை. முடிஞ்சா நீங்க அவங்களை விட்டு கொஞ்சம் தள்ளி இருங்க...நான் சொல்றது புரியுது தானே?”
“ம் புரியுது டாக்டர்” என்றவன் அவரை அனுப்பி வைக்கும்படி வேலையாளிடம் சொல்லி விட்டு,நர்சுக்கும் அங்கேயே தங்க தனி அறை ஏற்பாடு செய்து விட்டு அறையின் கதவை மூடிவிட்டு மனைவியின் அருகில் கட்டிலில் வந்து படுத்துக் கொண்டான்.அவள் முகத்தையே அங்குலம் அங்குலமாக பருகிக் கொண்டு இருந்தான் ஆதித்யன்.
‘சே...எப்பேர்பட்ட முட்டாள்த்தனத்தை செய்து இருக்கிறேன்.அவளுடைய உடல் இருக்கிற நிலையில் நான் அவளை நெருங்கி இருக்கவே கூடாது.அதுவும் இவ்வளவு முரட்டுத்தனமாக அவளிடம் போய் நடந்து கொண்டு விட்டனே’ என்று உள்ளுர மிகவும் வருந்தினான்.
********
“இந்த கருமத்துக்கு நீங்களும் கூடவே வந்து இருக்கலாம்”
“ஹ்ம்ம்..எனக்கும் ஆசை தான் பொழில்...”அவன் குரல் கரகரப்பாக ஆரம்பித்து கிசுகிசுப்பாக மாறி இருந்தது.
உடலெங்கும் மெல்லிய நடுக்கம் தோன்றி மறைய, “அப்புறம் ஏன் வரலையாம்?”சலுகையாக சிணுங்கியபடி கேட்டாள் அரசி.
“வந்தா....”
“ம் ...வந்தா?”
“என்னால சும்மா இருக்க முடியாதே...”பல மைல்களுக்கு அப்பால் இருந்தும் கணவனின் குரலில் இருந்த வேட்கை பெண்ணவளை நாணம் கொள்ளச் செய்ய.
“வேற என்ன செய்வீங்களாம்?”வேண்டுமென்றே அவனை சீண்டினாள்.
“சரி பண்ணிடுவேன்... இதுவரைக்கும் நான் செய்யாம விட்டு வச்சு இருக்கும் தப்பை செஞ்சு கணக்கை சரி பண்ணிடுவேன்”அவன் குரலில் இருந்த தாபத்தின் அளவே சொல்லியது அவன் எதைப் பற்றி பேசுகிறான் என்று.
“...” இதழ் கடித்து தன்னுடைய உணர்வுகளை அடக்கப் போராடி அமைதி காத்தாள் பொழிலரசி.
“பொழில்....”மோகச் சிதறலாய் அவன் குரல்.
“...”
“சொல்லுடி...என்னுடைய தப்பை சரி பண்ணட்டுமா?”போனில் அழுத்தமாக ஒலித்த குரலோடு சேர்த்து அவன் மூச்சுக்காற்று நேரில் அவளின் காதோரம் வீசுவது போல அவளின் காதோரம் மெல்லிய குறுகுறுப்பு.உடலெங்கும் இன்பலகரியில் மூழ்கிப் போனது பெண்ணவளுக்கு.
“...”
“ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லுடி...இப்பவே பறந்து வந்துடுவேன்...”
“...”
“என்னடி வர வேண்டாமா”ஏக்கத்தோடு ஒலித்தது அவன் குரல்.
“நான் ஒண்ணும் அப்படி சொல்லலியே.முடிஞ்சா வாங்களேன்”அவளின் குரலே சொல்லாமல் சொல்லியது அவளின் நெகிழ்வை.
“ஏய்!...வேண்டாம்டி என்னை சீண்டாதே...அப்புறம் உனக்குத்தான் கஷ்டம்”
“சும்மா மிரட்டாதீங்க...என்ன செஞ்சுடுவீங்களாம்”அவனை வம்பிழுக்க அவளுக்கு பிடித்தது.

https://kdp.amazon.com/amazon-dp-action ... B07KT6YFLK



Post Reply

Return to “Kindle EBook links”