பாவைக் கதை 1

Moderator: Rajalakshmi N

Post Reply
Rajalakshmi N
Moderators
Posts: 4
Joined: Tue May 26, 2020 12:20 pm
Has thanked: 1 time
Been thanked: 2 times

பாவைக் கதை 1

Post by Rajalakshmi N »

பாவைக்கதை 1


Yeah, you got that yummy, yum
That yummy, yum
That yummy, yummy
Yeah, you got that yummy, yum
That yummy, yum
That yummy, yummy

ஜஸ்டின் பைபரின் பாப் இசை அலறியது நேகா, நேசிகா, ஆத்மிகா, ஹத்விகா, ரிஹ்வினா என அனைவரின் செல்பேசியிலும் ஒரே நேரத்தில்.

அவரவர் இல்லத்தில் குப்புறக் கவிழ்ந்து நல்லுறக்கத்தில் இருந்த நங்கைகளெல்லாம் ஒரே நேரத்தில் உறக்கத்தினூடே சட்டென ஒரு உற்சாகத்திற்கு போய் சிறு ஆட்டத்தோடே, அழைப்பை ஏற்றனர்.

அழைத்தவள் அஸ்ட்ரிகா.. எல்லாம் ஒன்றுபோல வீடியோ காலில் ஒன்றிணைய..

"ஹேய்.. வாட் பேப்.. ஏர்லி மோனிங்..?"
என தூங்கி வழிந்தாள் நேகா.

"நின்ன கொன்னு கலயும்., இன்னிக்கு காலைல ஜிம் போகனும்னு சொன்னனே.. சீக்கிரம் எல்லாரும் ரெடி ஆகுங்க. கெட் ரெடி கேர்ள்ஸ்" என படு உற்சாகமாய் அழைத்தாள் அஸ்ட்ரிகா.

"ஏந்துகு ரா?" என மீண்டும் குப்புற கவிழ்ந்தாள் ஆத்மிகா.

"ஹே, தெட் ஜிம் கோச்சர்.. சொன்னாளே. செம ஹேண்ட்சம் யா" என்றாள் ரிஸ்வினா.

அனைவரும் செல்வம் செழித்த நற்குடிப் பெண்கள். கல்லூரி படிக்கும் கவிதைகள். கவலைகளறியா காட்டுப்பூக்கள்.

அவர்கள் பகுதியில் புதிதாய் உடற்பயிற்சிக் கூடம் ஆரம்பித்திருந்தான் முன்னால் ராணுவ மேஜரின் ஒற்றை வாரிசான க்ரித்விக்.

பயிற்சி பெறுபவர்களிடம் கோபப்படும் போது குளிர் நிலவாய் ப்ரகாசித்தான். தட்டிக் கொடுக்கும் போது சுடும் ஆதவனாய் ஜ்வாலித்தான்.

அந்தப் பகுதியின் புத்தம் புது 'சாக்லேட் பாய்' ஐ கண்டு தங்களுக்குள் கேலியும் கிண்டலுமாய் நகைப்பதில் ஓர் அற்ப மகிழ்ச்சி மங்கைகளுக்கு.

அதற்காக அதிகாலை ஜிம் பயிற்சி என்றால், கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கிறது நன்பகல் வரை உறங்கும் நங்கைகளுக்கு.

அஸ்ட்ரியா க்ரித்விக்கின் பால் ஓர்வித ஈர்ப்பால் பீடிக்கப்பட்டுவிட்டதால், அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஜிம்முக்கு கிளம்புவதில் மிகத் தீவிரமாக இருந்தாள்.

"ஹேய் நல்லபடியா எக்ஸர்சைஸ் செஞ்சா பாடி பிட் ஆகும். நெக்ஸ்ட் இயர் நம்ம ஸ்டேட் ப்யூட்டி காண்டஸ்ட்ல பார்டிசிபேட் செய்யலாம். அதுல ஒன் ஆப் தி போர்ட் மெம்பர் நம்ம மாஸ்டரோட டாடி தான்.." என்றாள் மேலும் உற்சாகத்தோடே..

யாருக்குத் தான் ஜீரோ பெல்லியோடு கில்லியாக அழகுப் போட்டியில் கலந்துகொள்ள கசக்கும்.?

அடுத்த நிமிடமே அதிகாலை உறக்கம் கலைந்து அவளோடு கிளம்பிவிட்டார்கள் தோழிகள்.
அஸ்ட்ரியா அகமகிழ்ந்து அப்போதே 5 கிலோ குறைந்துவிட்டதாக மகிழ்ந்து போனாள்.

..
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.


விளக்கம்:

மாதங்களில் சிறந்ததான மார்கழியில், பெளர்ணமி நாளான இன்று நம் விரதத்தை தொடங்குவோம் என ஆண்டாள் நாச்சியார் அழைக்கிறார். யாரை அழைக்கிறார்?

தன்னுடனொத்த பெண் பிள்ளைகளை, தான் ஆயர்பாடியில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு ஆயர்பாடியின் செல்வ வளம் பொருந்திய சிறுமிகளை அழைக்கிறார்.

யாருக்காக விரதம்?

கூர்வேல் கொண்டு காக்கும் தொழில் செய்பவனான நந்தகோபன்(அரசன்), நீண்ட பெரிய விழிகளையுடைய யசோதா ஆகியோரின் இளஞ்சிங்கம் போன்ற குமாரனை, கார்மேகம் போன்ற கரிய தோள்களை உடையவனும், செந்தாமரை போன்ற செந்நிற கண்களை உடையவனும், சூரியனும் நிலவும் சேர்ந்தார் போன்ற முக அழகுடையவனாகிய நாராயணனை சேவிக்க அழைக்கிறாள்.

வாருங்கள் பாவை நோன்பு இருப்போம். இதனால் மனமகிழ்ந்து கண்ணபிரான் நமக்கு பரிசுகள் கொடுப்பான் என அழைக்கிறார்.



User avatar
Madhumathi Bharath
Site Admin
Posts: 124
Joined: Mon May 11, 2020 9:11 am
Location: Tamilnadu
Has thanked: 117 times
Been thanked: 31 times

Re: பாவைக் கதை 1

Post by Madhumathi Bharath »

Different initiative ma. all the best.



Rajalakshmi N
Moderators
Posts: 4
Joined: Tue May 26, 2020 12:20 pm
Has thanked: 1 time
Been thanked: 2 times

Re: பாவைக் கதை 1

Post by Rajalakshmi N »

நன்றிக்கா



User avatar
Madhumathi Bharath
Site Admin
Posts: 124
Joined: Mon May 11, 2020 9:11 am
Location: Tamilnadu
Has thanked: 117 times
Been thanked: 31 times

Re: பாவைக் கதை 1

Post by Madhumathi Bharath »

Rajalakshmi N wrote:
Fri Jul 10, 2020 8:06 pm
நன்றிக்கா
welcome baby :)



Post Reply

Return to “பாவை கதைகள்”