Page 1 of 1

பாவைக்கதை 3

Posted: Wed Jul 01, 2020 11:18 am
by Rajalakshmi N
பாவைக்கதைகள் 3

நினைத்ததெல்லாம் நடப்பது அனைவருக்கும் சாத்தியம் இல்லை ஆனால் அவளுக்கு அது சாத்தியமாக இருந்தது. சிறு வயதில் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு கண்களில் விரியும் அப்பால்வெளியின் நட்சத்திரங்களின் எண்ணிக் கொண்டு இருந்தாள்.. ஒருநாள் பறந்து சென்று நட்சத்திர மண்டலங்களை பால்வெளியின் அடர் இருட்டை, ஓசையில்லா ஏகாந்தத்தை கண்டு உணர வேண்டும் என்று தன் மனதிற்குள்கவே கனவுகளில் வைத்தாள்


இதோ கனவு மெய்ப்படும் நேரம் விண்வெளி ஓடத்தில் ஏறி நிலவில் கால் பதிக்க அல்ல காய்கறி விளைவிக்க போகிறாள்.

ஆம், விவசாயம் படித்த விண்வெளி வீராங்கனையாய் அவள்.

நிலவில் இறங்கி ஓர் மகத்தான சாதனைக்கு வித்திடப் போகிறாள்.



பாவை 3

……..

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
…..

பொருள்:

பாவை நோன்பின்
ஓங்கி உலகளந்த உத்தமனாம்..

பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன்.



அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.

நன்றி