நானும் மான்குட்டியும்...
-
- Moderators
- Posts: 13
- Joined: Sat May 16, 2020 9:19 am
நானும் மான்குட்டியும்...
அலைந்து கொண்டிருந்த மான்குட்டி ஒன்று,
எவ்வளவு தேடியும் நீர் கிடைக்காமல்
ஒரு கட்டத்தில் சோர்ந்து போய்
தனது தேடலை முற்றிலுமாய் தொலைத்த நேரத்தில்,
அக்குட்டியின் கண்களுக்கு தூரத்தில் தென்பட்டது நீர்...
புது உற்சாகத்தோடு துள்ளிக் குதித்தோடியது நீரை நோக்கி...
ஆனால், அது நீரல்ல வெறும் கானலென்று அறியக் கூடுமோ அக்குட்டி?
அல்லது அறியாமல் கானல் நீரைத் துரத்தியபடி சென்று மடியுமோ?
நானும் அம்மான்குட்டி தானோ?...
நீரைத் தேடிய மான்குட்டியாய்,
காதலைத் தேடிய என் நெஞ்சம்...
தேடிச் சோர்ந்த மான்குட்டியாய்,
சலிப்புற்று தேடலைக் கை விட்ட என் நெஞ்சம்...
நீரைக் கண்டு கொண்ட அதன் கண்களைப் போலவே,
சற்றும் எதிர்பாரா நொடியில், எதிர்பாரா வகையில்
என்னை முற்று முழுதாய் புரட்டிப் போட்ட காதலை உணர்ந்து நெகிழ்ந்த என் நெஞ்சம்...
நீரை நோக்கி ஓடத் துவங்கிய மான்குட்டியாய்,
குதூகலத்தோடு அவன் பின்னே ரெக்கைக் கட்டி பறக்கத் துவங்கிய என் மனம்...
எனக்கும் அக்குட்டிக்கும் அனைத்திலும் ஒத்துப் போக,
இருவரின் முடிவென்பதும் ஒன்றாகி விடுமோ?
நீர் என்றெண்ணி கானலைத் துரத்தும் மான்குட்டியா நான்?
ஒரு வகையில் மான்குட்டியின் முடிவென்பது தீர்மானிக்கப்பட்டது தான்...
தான் துரத்துவது கானலென்பதை அது இறுதி வரை அறியப் போவதில்லை...
ஆனால் என் நிலை?
என் முடிவு என்ன என்பதை கண்டு கொள்ளுமா என் மனம்?
கானலாகிப் போனது மான்குட்டி கண்ட நீர் மட்டும் தானா?
அல்லது நான் கொண்ட காதலுமா?
You do not have the required permissions to view the files attached to this post.