Page 1 of 1

மீண்டும் எப்போது பார்ப்பேனோ?

Posted: Sun Jul 05, 2020 10:57 am
by Bhanurathy Thurairajasingam
மீண்டும் எப்போது பார்ப்பேனோ...

மரங்கள் குடை பிடித்திடும் கல்லாசனங்கள்

கீழே கொட்டிக் கிடக்கும் மஞ்சள் பூக்கள்

வாசலில் நுழைந்ததும் வரவேற்கும் பரமேஸ்வரன் ஆலயம்

ஆலய வாசலில் வாசத்தினால் இழுக்கும் மல்லிகைப் பூக்கள்

உள்ளே அமைதியைக் கொடுத்திடும் அந்த நேரம்

திருநீறு சந்தனத்துடன், பக்கத்தில் கற்கண்டு போட்டுக் காய்ச்சிய பால்

அதற்காகவே ஆலயத்திற்கு ஓடும் அந்த நொடிகள்

என்னவொரு பக்தி இவளுக்கு எனப் பார்க்கும் தோழிகள்

நான்காவது மாடியில் நின்று எட்டாத மாமரக் கிளையில் உள்ள மாங்காய்

அதைப் பறிக்கப் போடுகின்ற பெரிய திட்டங்கள்

பூரி என்று சொல்லி அப்பளத்தைத் தந்து விட்டார்களோ என்ற சந்தேகம்

நிஜமாகவே அது பூரி தான் என்றதும் பெரிய கண்டுபிடிப்பு என்ற அலப்பறைகள்

எத்தனை அறிக்கைகள் கொடுத்தாலும் கடைசி நாளில் அதைப் பரப்பி வைத்துக் கிறுக்கும் நொடிகள்

தூங்கி விழும் போது தாங்கிக் கொள்ளும் சட்டம் வைத்த கதிரைகள்

எப்போதும் எங்களைச் சிரிக்க வைக்கும் விரிவுரையாளர்

இவையெல்லாம் இனிமேல் எப்போது பார்ப்பேனோ...???

✒பானுரதி✒