போற போக்கில் ஒரு காதல் 8

Post Reply
Kirthika
Moderators
Posts: 18
Joined: Fri Jul 17, 2020 5:18 pm
Has thanked: 2 times
Been thanked: 4 times

போற போக்கில் ஒரு காதல் 8

Post by Kirthika »

"போற போக்கில் ஒரு காதல்" கதையின் அத்தியாயம் 8 பதிந்து விட்டேன் நட்டுபுஸ்,

கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

ட்விஸ்ட் ரீவியல்ட், யாரு யாரு இந்த ட்விஸ்ட்ட கெஸ் பண்ணுனீங்க, ஒரு ஆள் மட்டும் தான் கெஸ் பண்ணுனாங்க, அதுவும் ஸ்டார்டிங்க்ல மட்டும் தான்....

அத்தியாயம் 8

தன் வீட்டின் அழைப்பு மணி ஒலித்த சத்ததிலயே, ஜெய்மி தான் என அறிந்து கொண்ட தாக்ஷி ஓடி சென்று அணைத்துக்கொண்டாள், இருவருமே தங்கள் உலகில் மூழ்கினர்.
சிறு வயது முதல் ஒன்றாகவே வளர்ந்த நட்பில் இதுவே அவர்களின் முதன் முதலான நீண்ட பிரிவு.

அளவளாவி கொண்டே உள்ளே சென்றவர்கள் வசதியாக எய்டன் ஜோஷுவவை மறந்து விட்டனர்.
இதை எதிர்பார்த்த எய்டனும் வரவேற்பை எதிர்பாக்கமல் அவனாகவே உள்ளே வந்தமர்ந்தான். இப்பொழுதும் அவனை கவனிக்காமல் தங்களுள் மூழ்கியிருந்தனர்.

சில நிமிடங்கள் பிறகு எய்டன் எங்கே என தாக்ஷி வினவவும், தோழிகள் இருவரும் தங்கள் கண்களை அவர்களை விட்டு பிரித்து வாசல் பக்கம் பதித்தனர்.
எய்டனை காணாமல் ஒரு நொடி இருவரும் விழிக்கவே செய்தனர்.

"எவ்வளவு நேரம் நீங்க அங்க பார்த்தாலும் நான் அங்க இருக்க மாட்டேன்"
என எய்டன் கூறவும் தான் திரும்பி அவன் உள்ளே அமர்ந்திருப்பதை பார்த்தனர்.

சற்றே அசடு வழிந்த தாக்ஷி " ஹையோ சாரிண்ணா, உங்கள சரியா கூட வெல்கம் பண்ணல "

"எப்பா இப்ப்வாச்சும் என்னை தேடுனிங்களே, நானும் நீங்க என்ன திரும்பி பாப்பீங்கன்னு எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது, நின்னு நின்னு என் கை கால் எல்லாம் மரத்து போச்சு "
என சில நொடிகளை பல மணிநேரங்கள் போல் சொன்னவனை இடையிட்டாள் ஜெய்மி,

"போதும், இன்னைக்கு சீன் ஓவரா இருக்கு, எப்ப பாரு ஓவர் பில்ட் அப் பண்ணியே காலத்தை ஓட்டுறது"

"யாரு நானு ஓவர் பில்ட் அப் பண்ணுறேனா, நான் உள்ள வந்தது கூட தெரியாம என்னை தேடி வாசல வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருக்கீங்க, வேற யாராவது உள்ள வந்திருந்தா கூட தெரியாது போலேயே உங்களுக்கு”
என இவன் கூறவும் பதிலுக்கு ஜெய்மி வேறு கூறவும், மாறி மாறி அவர்கள் கூறிய குற்றச்சாட்டிற்கு ஒரு தற்காலிக தடை கொண்டுவந்தாள் தாக்ஷி.

"பஸ் பஸ் போதும், இப்ப போய் ஃப்ரஷ் ஆகிட்டு வாங்க சாப்பிடலாம், அண்ணா நீங்களும் தான்,… பசிக்குதுய்யா"

“உனக்காக போறோம்” என இருவருமே சிலிர்த்து கொண்டு சென்றனர்..

உணவருந்தும் மேசையில் உள்ள உணவு வகைகளை பார்த்த ஜெய்மி
" ஹையோ …. தாக்ஷி… என்னடி இவ்ளோ ஐட்டம்ஸ்,
இந்த ஐட்டம் பேருனாச்சும் உனக்கு தெரியுமா,
என்னை விட்டு வந்த இந்த ரெண்டு மாசத்துல இவ்வளவு சமைக்க தெரிஞ்சுகிட்டியா நீ,
இட்ஸ் மெடிக்கல் மீராக்கள்" என நிஜமாகவே வியந்தாள்...

அவளின் தலையில் கொட்டிய தாக்ஷி " ஹே அடங்கு பிசாசு, எல்லாம் மாமா சமைச்சு வச்சுட்டு போனது, ஈவினிங் சீக்கிரம் வந்து உங்கள மீட் பண்றேனு சொல்லிருக்காங்க"

"என்னது மாம்ஸ்குள்ள இவ்வளவு திறமையா,
இன்னைக்கு மட்டும் தான் மாம்ஸ் சமையலா……. , இல்ல எப்பவுமேவா "
என சந்தேகத்துடன் கேட்டவள் அவளே தொடர்ந்தாள்,

“ விடு விடு நீ பதில் சொல்லவேணாம், உன்னை பார்த்தாலே தெரியுது யார் சமைப்பானு”

" இப்ப இது ரொம்ப முக்கியமா…. வந்து சாப்பிடு, சும்மா கேள்வியா கேட்டுட்டு இருக்க,”

ஆனால் ஜெய்மியின் பார்வையோ எய்டன் பக்கம் சென்றன..
அதில் தினுக்குற்று சுதாரித்த எய்டன் ‘ஆத்தி என்னை டார்கெட் பண்ணப்போறாலே அதுக்குள்ள நாமலே சரண்டர் ஆகிடுவோம்’ என முடிவு செய்து
“எம்மா தாயே இப்படிலாம் என்னை பார்க்க கூடாது, உன் அத்தான் இந்த அளவுக்குலாம் ஒர்த் இல்லைனு உனக்கே தெரியும், என்கிட்ட இதுலாம் எதிர் பாக்கலாமா செல்லம்" என கூறியவனை முறைத்த ஜெய்மி

"எல்லாம் மேல் சாவனிஸ்ட், அது என்ன சமையல் பொண்ணுங்க மட்டும் தான் பண்ணனும்,
விருப்பம் இருந்த எல்லாரும் பண்ணலாம்… ஆனா நாம தான் சமயலறை பெண்கள் டிபார்ட்மெண்ட்னு ஒதிக்கிருக்கோமே, அதுலயும் அது சரியில்ல இது சரியில்லனு நல்லா குறை மட்டும் சொல்ல தெரியும்,
சரியான மேல் சாவனிஸ்ட் உலகம் இது "
என திரும்ப பொரிய ஆரம்பித்தவளை சாப்பாடு பக்கம் திசை திருப்பி எய்டனின் புண்ணியத்தை பெற்றுக்கொண்டாள் தாக்ஷி.

சாப்பாடு முடிந்து கிளம்ப எத்தனித்த எய்டனிடம்" ஏண்ணா நீங்களும் இங்கேயே ஸ்டே பண்ணலாம்ல "

"இல்ல தாக்ஷிம்மா பிரெண்ட் ரூமல் தங்கினாதா மத்த பிரிண்ட்ஸ்க்கும் இன்விடேஷன் கொடுக்க வசதியா இருக்கும், ஓவ்வொருத்தனும் ஒவ்வொரு ஏரியால இருக்கான், ” என கூறி தாக்ஷியை அருகே அழைத்தவன்
"அத விட உன் பிரெண்ட் என்னை சட்னி ஆக்க அப்ப இருந்து ரெடியா இருக்கா… என்னை சிக்க வச்சுறாதமா,
ப்ரோ’ட்ட சொல்லிடு அவர பார்க்க சாட்டர்டே வருறேன்னு, முக்கியமா சாப்பாடு பிரமாதம்னு சொல்லிடு”
சாப்பாடு பற்றி கூறும் போதே தன்னவளை பார்த்தவன் அவளின் முக மாறுதலை கண்டு உஷாராகி
“ஆத்தாடி ஜூட் " என இருவரிடமும் விடை பெற்று வேகமாக சென்று விட்டான்.

அதன் பின்னர் தோழிகள் இருவருக்கும் பேச்சு, பேச்சு பேச்சுதான் இன்றோடு எல்லாம் முடிந்து விடுவது போல் பேசி பேசி ஒரு கட்டத்தில் களைத்து தூங்கியவர்கள் தாக்ஷியின் கணவன் வந்து அழைப்பு மணியை அழுத்தவும் தான் எழுந்தனர்..
சுற்றிலும் உள்ள இருட்டு தாங்கள் தூங்க ஆரம்பித்து வெகு நேரம் ஆனதை உணர்த்திட வேகமாக சென்று கதவை திறந்தாள்..

கதவை திறந்ததும் அவளே எதிர்பாராத விதமாக அவளின் கணவன் அருகே வந்து அவளின் நெற்றியில் கை வைத்து பார்த்து
" தாக்ஷி என்னாச்சு, ஆர் யூ ஆள்ரைட் காய்ச்சல் மாதிரி இருக்கு "
என லேசாக பதறியவனின் என்றுமில்லாத திடீர் செய்யகையில் நெளிந்தாள் அவனின் நங்கை.

என்றும் முதல் அழைப்பிலேயே கதவை திறப்பவள், இன்றோ ஐந்தாறு முறை அழைப்புமணி அடித்தும் திறக்காததால் சற்றே குழம்பினான் அவன். தூங்கி எழுந்த வேகத்தில் வேகமாக சென்று கதவை திறந்தவளின் கோலத்திலும், அவள் பின் இருட்டாக இருந்த வீட்டின் நிலையிலும் அனைத்தும் மறந்து தாக்ஷியே முன் நின்றாள் அவனுக்கு. அவளை ஒரு நாளும் இவ்வாறு கண்டதில்லை அவன்.

தன்னவனின் திடீர் செய்கையால் சற்றே நெளிந்தவள்
" அ.. அது கொஞ்சம் நேரம் தூங்கிட்டோம்… நானும் ஜெய்மியும்"
என்று அவனுக்கு தன் தோழியின் வருகையை ஞாபகம் படுத்தினாள்.

அதன் பிறகே அங்கு நின்ற ஜெய்மியை இனம் கண்டு அவளுக்கு திருமண வாழ்த்து சொல்லி ஆரம்பநிலை விருந்தோம்பலை முடித்தவன், அவனின் அலுவலக அலைபேசி அழைப்பில் கவனம் செலுத்தி,
தன்னை சுத்தப்படுத்தி வரும் போது இரவு உணவு தயாராகி இருந்தது.
அவ்வீட்டில் சமையல் என்பது அவனுடையதே, ஆகையால் இன்றைய இரவு உணவு தயாராகி இருப்பது அவன் எதிர்பார்க்காதது.

ஜெய்மியோ " மாம்ஸ் நீங்க வியந்து பாக்குறீங்களா இல்ல பயந்து பாக்குறீங்களா "

"யார் சமைச்சதுனு சொன்ன முதலாவதா இல்ல இரண்டவதானு சொல்லுவேன் "

"நானுனு சொன்னா "

"இப்பவும் கஷ்டம் தான்… பொய் சொல்றதா இல்ல உண்மை சொல்றதானு"

அதில் சிரித்து விட்ட ஜெய்மியும் " ப்பா செம ஷார்ப்பு நீங்க… பொலச்சுப்பீங்க, சரி சரி சாப்பிடலாம், அண்ட் சாப்பாடு எப்படி இருக்குனு தாரலமா உண்மை சொல்லலாம் உங்க வைஃப் ஒன்னும் சொல்ல மாட்ட " என சாப்பிட ஆரம்பித்தனர்..

சாப்பிடும்போதும் சரி, அதன் பிறகு மூவருமாக பேசி கொண்டிருக்கும் போதும் சரி அவனின் கண்கள் தன்னவளின் மேல் சொந்ததுடன் உண்டான தேடலுடன் அடிக்கடி படிந்து மீண்டது.
இதை உற்றவள் உணர்தலோ இல்லையோ அவளின் தோழி நன்றாகவே கவனித்தாள்..

அடுத்த நாள் தோழிகள் இருவரும் கல்யாண பர்சேஸ் என்ற பெயரில் வெளியில் ஒரு சுற்று சுற்றி கைநிறைய பொருட்களோடு வீடு திரும்பினர்..

மாலை இறங்கிய வேலையில் தோழிகள் இருவரும் வாங்கிய பொருட்களை பிரித்து வைத்து கொண்டிருந்தனர்.
தாக்ஷியை நிமிர்ந்து பார்த்த ஜெய்மி
" தாக்ஷி… நீ இன்னும் தாட்சாயினி ஞானமூர்த்தியாதான் இருக்க இல்லையா”... என ஆழ்ந்து வினவும்

பொருட்களை பிரித்து வைத்து கொண்டிருந்தவளின் கைகள் அப்படியே நின்றன.,
சில நொடி அமைதிக்கு பின்,
"இல்லைனு உனக்கு தெரியும் ஜெய்,
நான் சென்னைல இருந்து இங்க வரும் போதே உன் தாக்ஷி, தாட்சாயினி ஞானமூர்த்தில இருந்து வெளிய வந்துட்டா..
அது உனக்குமே நல்லா தெரியும்னு நினைக்கிறேன் "
என பதில் உரைத்தாள் மென்மையை சொந்தமாக அந்நிமிடம் தன் கையில் எடுத்து கொண்டவளாக தாக்ஷி.

"தாட்சாயினி ஞானமூர்த்தில இருந்து வெளிவந்துட்ட சரி.. ,
ஆனா நீ தாட்சாயினியா மட்டும் தான இருக்க,
எப்ப உன் மாமா பேர உன் பின்னாடி சேர்த்துக்க போற"

இப்போது தாக்ஷியோ மௌனத்தை சொந்தமாக்கி கொண்டாள்.

"இத உன்கிட்ட நான் எதிர்பார்க்கல தாக்ஷி.."

"ஜெய்..... நான்... "

"போதும் நிறுத்து தாக்ஷி... உன் ஸ்டுபிட் ரீசன்ச,"

"......"

" இன்னும் எவ்வளவு நாள் தாக்ஷி….,
நீ இங்க வருரதுக்கே ரொம்ப அதிகமாவே டைம் எடுத்துகிட்ட..
ரியாலிட்டி, பிராடிக்கல்னு பேசுற நீ, உன்னை சுத்தி உள்ள ரியாலிட்டிய கொஞ்சம் உன் கண்ணை திறந்து பாரு..
இங்க வந்த ரெண்டு நாள்ல நான் தெரிஞ்சுகிட்டத நீ இங்க வந்து இரண்டு மாசம் ஆகியும் எதையும் ஃபீல் பண்ணாம அதுக்கு கொஞ்சம் கூட ட்ரை பண்ணாம இருக்குற உன்னை என்ன சொல்லி திட்றதுனே தெரில எனக்கு……
கொஞ்சம் உன்னை சுத்தி பாரு தாக்ஷி,
அப்பவாச்சும் உன் மாமா உன் மேல வச்சுருக்கிற லவ்'வ புரிஞ்சுகிறியானு பார்ப்போம்..”

அவ்வாக்கியத்தில் நிமிர்ந்து பார்த்தவளிடம்..

"இனி மாம்ஸ் கண்ண பார்த்து பேச ஆரம்பி, உனக்கே எல்லாம் புரியும் ….
மத்த இடத்துல வாய் கிழிய பேசீட்டு…. இப்ப உன் விஷயத்தில கூறே இல்லாம திரியுறா,
உன்னை வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணணு தெரில.."

"எனக்காக வருத்தப்பட்டு உன் கல்யாணத்த எதுவும் ஸ்டாப் பண்ணிடாத ஜெய்" என சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு கேட்டாள் தாக்ஷி .

அதை உணர்ந்து கொண்ட ஜெய்மியும்
" எதுக்கு…. நீ உன் லைஃப் வேஸ்ட் ஆக்குறது பத்தாதுன்னு நானும் ஆக்கனுமா,
நானே மாம்ஸ் லைஃப் வேஸ்ட் ஆகுதே பேசாம அவர்க்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறேன்"

"ஹே அதுலாம் மாமா ஒத்துக்க மாட்டாங்க" என தாக்ஷி வேகமாக மறுக்கவும்

"அந்த திமிர்ல தானடி சுத்திகிட்டு இருக்குற "

ஜெய்மி கூறவுமே அவளுக்கும் அந்த உண்மை உரைத்தது, இந்நாள் வரை தன்னை விட்டு வெளிய பார்க்க முயலாமல் தன்னுள் இறுகியவள், ஜெய்மி வந்தது முதல் இலகுவாகி தன்னை சுற்றியும் பார்க்க தொடங்கிற்ந்தாள் .

*************

இரவு விருந்திற்காக பெண்கள் இருவரின் துணைவர்களின் கைவண்ணத்தில் விருந்து தயாராகி கொண்டிருந்தது. தாங்களும் உதவி புறிகிறோம் என வந்த பெண்ணவர்களை,
பால்கனியில் டின்னர் செட்டிங் தயார் செய்யுமாறு திருப்பி விட்டார்கள் ஆண்கள் இருவரும்.

பால்கனியை இரவு விருந்திற்காக மிக அழகான தயார் செய்தவர்கள்,
தாங்களும் அழகாக தயாராகி வந்தனர்.

ஆண்கள் இருவருமே முதல் சந்திப்பிலேயே ஒருவர் மற்றவரோடு அழகாக நட்பு பாராட்டினர்.
இருவருக்கும் ஓரே அலைவரிசையில் மணம் ஒப்பினாலும்,
மற்றவரை தத்தம் பெண்ணவள் கொண்டு முன்பே நன்கு அறிந்திருந்ததால் எவ்வித தயக்கமின்றி நட்பு பாராட்டினர்.

நால்வருக்கும் அந்த விருந்து இனிமையாய் சென்றது என்பதில் ஐயமில்லை.

ஜெய்மியின் பேச்சுக்கு பின் உணர்ந்தாளோ, இல்லை அவளாக உணர்கிறாளோ
தன்னவனின் தன் மீதான பார்வையை உணர ஆரம்பித்திருந்தாள் தாக்ஷி.
மற்றவர்களோடு உரையாடி கொண்டிருந்தாலும் அவனின் பார்வை அடிக்கடி அவள் மீது படிந்து மீண்டதில் தடுமாறினாள்..

நேற்று ஜெய்மியோடு சேர்ந்து ஒன்றாக ஒரே மாதிரியான வடிவமைப்பில் நிறம் மட்டும் மாறுதல் கொண்டு வாங்கிய, முட்டிக்கு கீழ் சிறிதளவு வரை நீண்ட, 3/4 நீள கவுனையே பெண்கள் இருவரும் இன்று அணிந்திருந்தனர்...

என்றும் இல்லாமல் இன்றைய விருந்திற்காக கொஞ்சம் விஷேசமாக தயாராகிய தாக்ஷி வெளியே வருவதற்கும், தானும் தயாராகி வருவதற்காக அறைக்குள் அவன் நுழைவதற்கும் சரியாக இருந்தது.
திடிரென அறைக்குள் வந்தவனின் மீது மோதி கொள்ள பார்த்து கடைசி நொடியில் சுதாரித்து நின்றாள் தாக்ஷி.

தன்னவளை இன்று விசேஷ ஒப்பனையில் பார்த்தவன் சில நொடிகளேனும் அப்படியே நின்று விட்டான்..
அவனின் அசையாமின்மையில், என்னவென்று மேல் நோக்கி அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
முதன் முதலாக கண்டு கொண்டாள் அவனிடம் அவளுக்கான தேடலை…
அந்நிமிடம் தொட்டு இந்நிமிடம் வரை தன் மீது படிந்து மீண்ட அவன் பார்வையினை உணர்ந்து கொண்டே இருந்தாள்.

நாளையன்று ஜெய்மி, எய்டன் கிளம்புவதால் விருந்து நேரம் முடிவு இல்லாமால் நீண்டு கொண்டேயிருந்தது....

விளையாட்டாக "ட்ருத் ஆர் டேர்" விளையாட ஆரம்பித்தனர்..
அதில் ஜெய்மி எய்டன் ஜோடி போட்டி கொண்டு ஒருவரை மற்றவர் வாரி கொண்டேயிருந்தது,
அங்கு இருந்த மற்ற ஜோடி அவர்கள் அளவுக்கு தங்களுக்குள் நெருக்கமாக கலாய்த்து கொள்ளவில்லை என்றாலும் அவர்களை மணம் கொண்டு ரசித்து கொண்டேயிருந்தனர்.

விளையாட்டில் தாக்ஷியின் கணவனுக்கு வந்த கேள்வி -
" ஜெய்மி உங்களை கோபம் கொள்ளும் படியாக நடந்த விஷயம் " ( இது எய்டன் தனக்காக கோர்த்து கொண்ட கேள்வி, அது மாறி அவனுக்கு வந்து விட்டது ) ...

அதை நன்கு உணர்ந்த ஜெய்மி
"மாம்ஸ் க்கு என் மேல கோபம் என்ன இருக்க போகுது" என அவனிடம் கூறி
" இந்த கொஸ்டின் எழுதுனவங்க ஏதோ பெருசா பிளான் பண்ணிருக்காங்க, அப்புறம் வச்சுக்கிறேன் அவங்கள "
என எய்டனிடம் முடித்தாள்..

" இல்லையே இருக்கே " என அவன் கூறவும், அவனை கேள்வியாக ஆச்சரியத்தோடு பார்த்தவர்களிடம்

" ஆமா ஜெய்மிம்மா, ஒரே ஒரு தடவை.."

'அப்படி என்னடா அது' என அவனை கேள்வியோடு பார்த்தவர்களுக்கு அவர்கள் பீனிக்ஸில் சந்தித்து கொண்ட சம்பவத்தை ஞாபகம் படுத்தி, அவர்கள் விரைவாக அவ்விடம் இருவரும் சென்று விட்டதை கூறி அதுனால் வருத்தம் என கூறியவனின் பதிலில் மனதிர்க்குள் நொந்தாள் ஜெய்மி..

' யோவ் மாம்ஸ் நீ கடைசி வரைக்கும் சிங்கிள் தான்யா..
உன் வைஃப் இப்ப தான் எல்லாத்தையும் மறந்துட்டு வரா,
நீயே மறக்க விட மாட்ட போல இருக்கே..' என தனக்குள் நொந்து வெளியே சிரித்து வைத்து மற்ற அனைவரின் கவனத்தை திரும்ப விளையாட்டில் கொண்டு சென்றாள்.

*********
பெங்களூர் வந்த இரு மாதங்களாக தன்னிலையை முழுதாக அறியாமல் தனக்குள் ஒரு மோன நிலையில் மூழ்கியவள், ஜெய்மியின் வருகைக்கு பின் தன்னவனிடம் பார்வையை நிறுத்தி அவன் கண்கள் தனக்காக பிரிதிபலித்த தேடலை உணர்ந்து கொண்டேயிருந்தாள்..

அந்த யோசனையில் மூழ்கியவளை கலைத்தது அவளவனின் குரல்
" தாக்ஷி நீது குட்டி இஸ் ஆன்லைன், உன்னை கூப்பிடுறா " ..
அதில் சுயம் பெற்றவளுக்கு நீது'வின் குரல் ஒன்றே போதுமானதாக இருந்தது அவள் மகிழ்ச்சியின் அளவு கோலை கூட்டுவதற்கு.

விரைவாக வந்து அவன் அருகில் அமர்ந்து அந்த செல்ல சிட்டுடன் ஐக்கியமாகிவிட்டாள்.

நீதுவின் அன்னை மகாவும் அவர்களோடு கலந்து கொள்ள,

"மகாக்கா, என்ன இன்னைக்கு லேட்டா அட்டெண்டென்ஸ் கொடுக்குறீங்க ,
டல்லா வேற தெரியுறீங்க. உடம்பு சரியில்லையா, ஆர் யு ஓகே "

"கொஞ்சம் டையர்ட்டா இருக்கு தாக்ஷி…. வேற ஒண்ணுமில்ல "

"கொஞ்சம் இல்ல ரொம்பவே டையர்ட்டா தெரியுறீங்க, என்னாச்சுக்கா ? "

தனக்கு ஒன்றுமில்லை என மறுத்த மகாவோ இவர்களை நேராக பார்ப்பதை தவிர்த்தாள்..
மகா பதில் அளிக்கும் முன் அவளை முந்தி கொண்டு பதில் அளித்தாள் அவளின் மகள்..

" சித்து நான் பிக் கேர்ள் ஆகிட்டேன் " ..

" என் பேபி எப்பவும் பிக் ஸ்வீட் கேர்ள் தான"

"ஹையோ சித்து அந்த பிக் கேர்ள் இல்ல.. இது வேற பிக் கேர்ள்.. "

என்னடா சொல்றா என குழம்பிய இருவருக்கும் தெளிவாக உரைக்கவென அங்கு அவர்களோடு இணைந்தான் மகாவின் கணவன்..

" நீது பேபி, அது பிக் கேர்ள் இல்லடா பிக் சிஸ்டர்” என மகளிடம் திருத்தியவன்..
இவர்களிடமும் அதையே உரைத்து மனைவி மகளை லேசாக அணைத்தவாறு அமர்ந்தான் இளமதியன்!!!!!!!.."

தந்தை திருத்தியதும் " ஆமா, ஆமா.. நான் பிக் சிஸ்டர், இங்க குட்டி தம்பி பாப்பா வர போறான் சித்து ".

மெய் உணர்ந்து அகமகிழ்ந்து தங்கள் மகிழ்ச்சியை பெரியவர்கள் நால்வரும் பகிர்ந்து கொண்டிருக்கும் போது இடையுறாக வந்தது வாயிலின் அழைப்பு..

எழப்போன தன்னவனை அமர்த்தியவள் அவளே சென்று பார்த்தாள்..
வெளியே தங்கள் வீட்டுக்காக வந்த அவர்கள் குடியிருப்பின் மாதாந்திர சுற்றறிக்கையில் கையொப்பமிட்டு வந்தாள் தாக்ஷி, - தாட்சாயினி அமிழ்திரவியம் என்று.......

Dis - இது தாட்சாயினி இளமதியன் கதை அல்ல
அமிழ்திரவியமின் தாட்சாயினிக்கான காதல் கதை :love::love::love:....



Post Reply

Return to “போற போக்கில் ஒரு காதல்”