அமைதியான மாலை நேரம் அழகாக அலங்கரிக்க பட்ட மண்டபத்தில்
வரவேற்பு( reception ) என்றோ, சங்கீதத் என்றோ, ப்ரீ வெட்டிங் என்றோ, கெட் டூ கேதேர் என்றோ, பிரெண்ட்ஸ் பார்ட்டி என்றோ என எல்லா வகையிலும் சேர்த்தியான கொண்டாட்டம் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது.
விழாவின் நாயகன் நாயகியான எய்டன் ஜோஷுவா மற்றும் ஜெய்மி ப்ரஸில்லா'வுக்காக அனைவரும் காத்து கொண்டிருக்க அமிழனோ அவனின் தாக்ஷிக்காக...
இங்கு கூட்டத்தில் இருந்த பிரபுவோ ஜெய்மியின் தங்கையுடன்,
"ஹே ப்ரின்ஸி.. இப்ப நான் சொன்னத செய்வீயா மாட்டியா... "
"டே அமுலியா படுத்தாதட "
"ஹே ஒழுங்கா அண்ணனு கூப்பிடு... கல்யாணம் முடிஞ்சு உன் பிரெண்ட்ஸ் கிளம்புற வர அமுலியா வந்துச்சு அவ்வளவு தான்..
உன் சின்ன வயசு ரகளை எல்லாம் போட்டு கொடுத்துடுவேன் "
"சரிடா அண்ணா ...
இப்ப என்ன பண்ணனும்ங்கிற "
"நீ பெருசா ஒன்னும் பண்ண வேணாம் ....
இதோ உன் பிரெண்ட்ஸ் வராங்க பாரு, அவங்ககிட்ட இன்ட்ரோ கொடு "
அவனை முறைத்து விட்டே அருகில் வந்த தன்னுடன் மருத்துவம் படிக்கும் தோழிகளிடம் வேண்டாம் வெறுப்பாக அறிமுகபடித்தினாள்..
"ஹாய் கேர்ள்ஸ் மீட் மை அண்ணா பிரபு.. ஆனா அவன் பெரு அமுலியானு மட்டும் நான் சொல்லமாட்டேன்ப்பா " என அவள் எண்ட் கார்ட் போடவும்,
"ப்ரின்ஸி ..... " என பல்லை கடித்தவன், வெளியே இவர்களை பார்த்து சிரித்து வைத்தான்.
அவன் மட்டும் இல்லாமல் அவர்களும் சிரித்து விட்டு செல்லவும் நொந்தான்..
ப்ரின்ஸி தோழிகளின் ஒருத்தி மட்டும் தேங்கி நின்று " உங்க பேர் சூப்பரா இருக்கு'" என சொல்லி அவனுக்கு “ஹாய்” சொல்லி சென்றவளை பார்த்து சிரித்து வியந்து கொண்டிருந்தவனை தலையை தட்டி அமிழன் இழுத்து சென்றான்.
"மாமா எனக்கு என்னவோ உன் தங்கச்சி டாக்டரா தான் இருப்பானு நினைக்கிறேன், நீங்க என்ன நினைக்கிறீங்க "
"நாம நினைக்கிறத விட அங்க நிக்குற அப்பத்தா என்ன நினைக்கிறாங்கனு தெரிஞ்சா நல்லா இருக்கும்.. போய் கேப்போமா.."
"கல் நெஞ்சுகாரா... இப்படி ஒரேடியா பழச மறந்திட்ட பாத்தியா ..."
"உனக்கு இன்னும் காலம் இருக்கு அமுலியா பேபி... " என சிரித்து கொண்டே வாசலை பார்த்தவனின் பார்வை அங்கேயே நின்றன மணமக்களோடு நுழைந்த அவனவளை கண்டு..
நீள லாங் கவுனில் தலைமுடியை க்ரல் செய்து படரவிட்டு விசேஷ நாளுக்கென கொஞ்சம் அதிகப்படியான அலங்காரத்தில் அழகாக அவன் முன் வந்தவளை விட்டு வேறு எங்கும் அவனின் கண்கள் நகர மறுத்தன.
இங்கே பெண்ணவளும் உள்ளே நுழைந்த நொடி முதல் அவனை தேடிய அவளின் கண்களுக்கு சிரமம் கொடுக்காமல் அவள் முன்னையே நின்றவனின் பார்வையின் வீச்சை உணர்ந்து கொண்டே இருந்தாள்.
இன்றைய நிகழ்ச்சிக்காக தயாராகி கண்ணாடி முன் நின்றவளை இடித்து கொண்டு முன் வந்த ஜெய்மி
"தள்ளுடி... இன்னைக்கு என் கல்யாணமா இல்ல உன் கல்யாணமானு தெரில.. கிளம்புறா கிளம்புறா கிளம்பிக்கிட்டே இருக்கா.. இப்ப கண்ணாடி முன்னவும் போய் நிக்க ஆரம்பிச்சுட்டா "
"சும்மா இரு ஜெய்... "
"என்ன சும்மா இருக்க, மேடம் கன்னத்த பாரு இன்னைக்கு ஃபுல்லா ரெட்டிஷ்தான் "
"அப்படிலாம் ஒன்னும் இல்ல " என வேகமாக தன் கைகளை கொண்டு தன் கன்னங்களை தாக்ஷி தேய்க்கவும், ஜெய்மி முதற்கொண்டு மற்றவர்களும் சிரிக்கவும் தன்னை உணர்ந்து முறைத்த தாக்ஷி,
"ஜெய்.. உனக்கு விளையாட நான் தான் கிடைச்சேனா... "
" ஹலோ மேடம் யாரு விளையாடுறது " என அவளை கை பிடித்த கண்ணாடி முன் தன் அருகே நிறுத்திய ஜெய்மி
"இங்க பாரு புதுசா என் பிரிண்ட் வெக்கம்லா படுறா, எப்பவும் சீக்கிரம் கிளம்புறவ இன்னைக்கு என்னமோ பாத்து பாத்து கிளம்பி கண்ணாடி முன் நின்னு அடிக்கடி சரி பாத்துகிறா..."
........
"அங்க பாரு உன்னை.. இன்னைக்கு செம ப்ரீட்டி யூ ஆர் ,யாருக்காக பாத்து பாத்து ரெடி ஆகினியோ அவங்க பிளாட் தான் போ"...
" ஹே ஒன்னும் அப்படிலாம் யாருக்காகவும் இல்ல... " என வெளியே கூறினாலும் 'நான் மாமாக்காக தான் பண்ணிருக்கேனா ' என தன்னுள் முதல் கேள்வி எழுப்பியவள் அதற்கு விடை கண்டுபிடிக்கும்முன் இவை தன்னவனுக்கு பிடிக்குமா என அடுத்த கேள்வி கொண்டாள்.
அவளின் இரண்டாவது கேள்விக்கு அவளவனின் பார்வையே மொத்தமாக பதில் தந்தது.
அவளையே அவளை மட்டுமே தொடர்ந்து அவன் கண்கள் சொன்ன பதிலை உணர்ந்த அவளின் அகமும் முகமும் ஒரு சேர உவகை கொண்டது.
ஊடுருவிய அவனின் பார்வையினால் தானாக அவளின் கால்கள் அவனை நோக்கி சென்றன...
இவ்வளவு நாள் அவனை கண்ணோடு சேர்த்து பார்க்காமல் இருந்து வந்தவள் அவன் கண்ணோடு கலந்த நொடி முதல் அவனை விட்டு அகல முடியாமல் அவனை உள்வாங்க தொடங்கினாள்.
அவனின் அருகே வந்து என்னவென்று தலை உயர்த்தி கேட்டவளிடம் ஒன்றுமில்லை என்பதாக தலையசைத்தான் அமிழன் அவளின் மேல் கொண்ட பார்வையை சிறிது கூட விலக்காமள்....
அதில் உவகை கொண்டவள் " அப்போ நான் ஜெய் கிட்ட போகட்ட " என கேட்டவளுக்கு சரியென தலையசைப்பே வந்தது அவனிடம்.
அவள் விலக போகும் நேரம் அவளின் கை பிடித்து நிறுத்தியவன்..,
"டுக்கு.... செல்ஃபி எடுத்துக்கலாமா, நம்மளோட ஃப்ரஸ்ட் செல்ஃபி வித் சேம் கலர் ட்ரெஸ்ல... "
என அவளை தோளோடு சேர்த்து அனைத்து இவரும் ஒன்றாக தற்படம் எடுத்துக்கொண்டனர்.. உடையின் நிறத்தில் மட்டுமில்லாமல் மனதோடும் ஒன்றாக முற்பட்டடு..
அவளுக்குள் லயித்தவனை மீட்க செய்தது பிரபுவின் குரல்,
" மாம்ஸ் உங்க ஃபோன வச்சுட்டு இங்க பாருங்க " என அங்கே வந்த பிரபு அவர்கள் இருவரையும் மாறி மாறி நிற்க வைத்து அவன் திருப்தி பட்ட புகைப்படம் எடுத்து தள்ளிய பிறகே நிறுத்தினான்.
அவன் நிறுத்தவும் தாக்ஷி அவனிடம் தலையசைத்து விட்டு ஜெய்மியிடம் சென்றுவிட்டாள்.
விழாவில் நடைபெற்ற ஒவ்வொரு சின்ன சின்ன விளையாட்டிலும் ( couple gameshow) அவள் அவனிடம் தோர்த்து தொலைந்து போக ஆரம்பித்தாள்.
மொழியில்லை மொழியாய்
உன் பேர் சொல்லாமல்
விழியில்லை விழியாய்
உன் முகம் பார்க்காமல்
உயிரினில் உனையே
நான் புதைத்தே நின்றேன்
புரிந்திடும் முன்னே
உனை பிரிந்தேன் அன்பே
தினமும் கனவில்
உனை தொலைவில் காண்கிறேன்
அதனால் இரவை
நான் நீள கேட்கிறேன்
எழுத்து பிழையால்
என் கவிதை ஆனதே
எனக்கே எதிரி
என் இதயம் ஆனதே
குதூகலமாக ஆரம்பித்த குரூப் அந்தக்ஷனியில் அமிழன் அவளை நோக்கி கண்ணோடு கண்வைத்து அவளுக்காக பாடிய பாடலில் தன்னுள் அவனை காண ஆரம்பித்தாள்.
---------------------------
விழா முடிந்து கிளம்பிய வீட்டாரிடம் விடை கொடுக்கும் பொருட்டு வந்த தாக்ஷியை யோசனையோடு பார்த்தவனை கண்டுகொண்டாளோ என்னவோ,
"மாமா.... நான் இங்கயே ஜெய் கூட ஸ்டே பண்ணனும்... "
அதில் அப்பட்டமாக தன் கண்களில் ஏமாற்றத்தை பிரதிபலித்தான், அதை உணர்ந்து அவனிடம் போய் சேரும் முன் இடையிட்டு மறுத்தது வேங்கடலட்சுமியின் குரல்.
இப்போது பாட்டியை சமாதான படுத்தவென கண்களால் அவள் அவனிடமே இறைஞ்சவும்
நொடியில் தன்னை மீட்டு கொண்டவன், அவனே அவரை சமாதானப்படுத்தி அனைவரையும் கூட்டி செல்லும் பொறுப்பை கையில் எடுத்து கொண்டான்.
அவளிடமும் செல்வதாக விடை பெற்றவனிடம் "மாமா நாளைக்கு க்ரீம் கலர் ஷர்ட் " என கூறியவளை கண்டு சிரிப்புடன் தலையசைத்து சென்றான் அமிழன்..
********************
திருச்சபைக்கு நன்றி...
"எய்டன் ஜோஷுவா ஆகிய நீ ஜெய்மி ப்ரிஸில்லா'வை திருமணம் செய்துகொள்ள சம்மதமா.."
"சம்மதம் "
"ஜெய்மி ப்ரிஸில்லா ஆகிய நீ எய்டன் ஜோஷுவா'வை திருமணம் செய்துகொள்ள சம்மதமா.."
"சம்மதம் "
பால்ய காலம் தொட்டு இன்றளவும் தன் இரட்டையை ( twin) போன்று விளங்கிய அவளது ஜெய்மியின் திருமணத்தில் அவளோடு தாக்ஷியும் மனநிறைவு கொண்டாள்.
திருமண நிகழிச்சிகள் ஒவ்வொன்றிலும் தன்னை லயித்து ரசித்தவள் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த அமிழனை பார்த்தவளுக்கு அவளது திருமண நிகழ்ச்சி மண கண்முன் வந்தன.
அன்று அகம் நிறைந்து மகிழவோடு தான் இருந்தோமா என்று யோசித்த அவளுக்கு கிடைத்த பதிலில் கலங்கி குற்றஉணர்வில் லேசாக தடுமாறியவளை கண்டுகொண்டானோ என்னவோ அவளின் அருகில் வந்து அவள் கைகளோடு கைகள் சேர்த்து அழுத்தம் கொடுத்து விரல்கள் கோர்த்து கொண்டான்.
அதில் உணர்வு பெற்று அவள் முகம் நோக்கியவளுக்கு கண்சிமிட்டு தலையசைத்து புன்னகைத்து, அதை அவளுக்கும் கடத்தினான்.
திருமணம் முடிந்ததும் கிடைத்த சிறு இடைவெளியில் அவளை அழைத்து கொண்டு வெளியே சென்ற அமிழன், தேவாலயத்தில் செயற்கையாக உருவாக்கிய பசுமை ஊற்றில் வீற்றிருந்த மேரி மாத சிலை அருகே வந்தான்.
என்னவென்று கேள்வியாக பார்த்தவளிடம்
"ஒரு சின்ன கிஃப்ட் டுக்கு... "
என அவன் கையில் வைத்திருந்த அழகான சின்ன பெட்டியை திறந்துகொண்டே...,
"என்னோட ஃபரஸ்ட் மன்த் சாலரில உனக்காக வாங்கின ரிங், என்கிட்டயே ரொம்ப நாள இருக்கு… உன்னோடத இனி நீயே வச்சுக்கிறியா.."
'ரிங்க்கா... ஜெய் மேரேஜ் பாத்து ரிங் ஷேர் பண்ணிக்க மாமாக்கு ஐடியா வந்திடுச்சா, ஹையோ இப்போ என்கிட்ட மாமாக்கு கொடுக்க ரிங் இல்லையே' என ஓடிய அவளின் மனவோட்டத்தை நிறுத்தவென இடையிட்டது அவனது குரல்..
அவளுக்கான வாங்கிய மோதிரம் இப்போது செயினில் கோர்க்கப்பட்டு இருந்தது, அதை கையில் எடுத்தவன்,
" டுக்கு... மே ஐ... " என செயினை அவளிடம் சேர்க்க அனுமதி வேண்டியவனுக்கு சரியென இவள் விழிகள் பதில் அளிக்க நெடுநாள் கொண்டு அவளுக்காக காத்து கொண்டிருந்த அவளது பரிசு அவளிடம் அமிழனால் சேர்க்கப்பட்டு அழுத்தமாக பொருந்தி கொண்டது.
பெண்ணவளும் அவனின் வாக்கியத்தை முழுமையாக உள்வாங்காமல் அவர்கள் திருமணம் தொட்டே வந்த நேசம் அவனது என நினைத்துக்கொண்டாள்.
**********
"ஜெய்... அது.. நான் ரிசெப்ஷன்க்கு மாமாவோட வராட்டுமா .."
ஜெய்மி திருமண தினத்தன்று மாலையே எய்டன் ஊரான திருச்சியில் நடைபெறவுள்ள வரவேற்ப்புக்கு கிளம்ப ஆயுத்தமானவளிடம் தயக்கம் கொண்டு கேட்ட தன் தோழியை கைகட்டிக்கொண்டு பார்த்த ஜெய்மி
"சோ மேடம் என்னோட இப்போ வர மாட்டீங்க"
"இல்ல ஜெய்... அது.. வந்து " என தயக்கம் கொண்டவளை பார்த்து புன்னகைத்து அனைத்து கொண்டவள்..
"ஐயாம் ஹாப்பி ஃபார் யூ டி ... இந்த மாதிரி உன்னை பாக்குறதுக்கு, கன்னம்லாம் சிவந்து செம அழகு போ.. இது தான் நான் உன்கிட்ட எதிர் பாத்தேன்...
ஹ்ம்ம் மாம்ஸ விட்டு பிரிஞ்சு வர முடியலேல..."
" ஹே.. அப்படிலாம் ஒன்னும் இல்லை ஜெய்... " என தன்னை மறைக்க முற்பட்டவளிடம்
"பாரா... ஹு இஸ் ப்ளஷிங் நௌ.."
"ஜெய்.... "
சிரித்து கொண்டு தன் தோழியை அனைத்து விலகியவள்,
"மாம்ஸ பாத்துகிட்டே இருந்து என்னை மறந்திடாமா சீக்கிரம் ரிசெப்ஷன்க்கு வந்து சேருங்க மேடம்.. "
என்றவளிடம் விடை பெற்று பிரபு அருகே நின்று கொண்டிருந்த அமிழனிடம் வந்தவள் அவனை பார்க்காமல் பிரபுவிடம்,
"போகலாமா.."
"எங்க போகலாமா.. , உனக்கு பாய் சொல்ல தான் நாங்க வெய்ட் பணறோம் "
"நம்ம வீட்டுக்கு தான்.. "
"நீ ஜெய் அக்காகூட திருச்சி போறதான.."
"இல்ல, ஈவினிங் உங்களோடதான் போகணும்.."
"நிஜமா... இது நீ தான் பேசுறதா ..... , இரு இரு கிள்ளி பாத்துகிறேன்" என அவளை கிள்ள வந்த தன் தம்பியை அடக்கியவள்,
"உனக்கு கிள்ளி பாக்கணும்னா, உன்னை கிள்ளி பாத்துக்கோ.. எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வாங்க நான் வெளில வெய்ட் பன்றேன் " என அவ்வளவு நேரம் அவளயே கண்களை அகற்றாமல் கன்னம் வைத்து கொண்டிருந்தவனின் பக்கம் அவளது பார்வையை திருப்பாமல் பிரபுவிடம் கூறி விட்டு சென்றாள் தாக்ஷி...
கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.
நன்றிகள்
கீர்த்தி