போற போக்கில் ஒரு காதல் 14

Post Reply
Kirthika
Moderators
Posts: 18
Joined: Fri Jul 17, 2020 5:18 pm
Has thanked: 2 times
Been thanked: 4 times

போற போக்கில் ஒரு காதல் 14

Post by Kirthika »

"போற போக்கில் ஒரு காதல்" கதையின் அத்தியாயம் 14 பதிந்து விட்டேன் பிரெண்ட்ஸ் ,

அத்தியாயம் 14

"டுக்கு... ஆறாக போகுது.. இப்பவே கிளம்பின தான் வீயூஸ் நல்லா இருக்கும்.. எந்திரிச்சுக்கோடா.... குவிக்... "

மூணாறின் குளிரால் தலை வரை இழுத்து போர்த்திக்கொண்டிருந்த தாக்ஷியை எழுப்பி கொண்டிருந்தான் அமிழன்.
அவளோ திரும்பி படுத்துக்கொண்டு,

"மாமா அங்க பெங்களூர்லயே ஆறு மணிக்கு விடியாது.. இங்க மூணாறு வந்து ஏன் மாமா இப்படி படுத்திறீங்க "

என கைகளில் துழாவி அருகில் இருந்த தலையணையை எடுத்து காதில் பொத்திவைத்து கொண்டு திரும்ப தூங்க ஆரம்பித்தவளை கெஞ்சி கொஞ்சி ஒரு வழியாக எழுப்பி குளியரைக்குள் அனுப்பி வைத்தான்.

உள்ளே எழும்பிய டொம் டொம் என்ற சத்தத்தில்
'அவ வெளிய வரும் போது இங்க இருந்தோம் சேதாரம் உனக்கு தான்டா அமிழா'
என எண்ணியவன் வேகமாக அறையை விட்டு வெளியேறிவிட்டான்.

தன்னை சுத்தப்படுத்தி குளியரைவிட்டு வந்தவளின் கண்களில் நேர் எதிரே பட்டது,
அமிழன் அவளுக்காக எடுத்து வைத்து சென்ற ட்ரெக்கிங் ஷூ தான்.

அதனை கண்டு கால்களை தரையில் உதைத்து
" மாமா....... " என கத்தியவள் பிறகு வேறு வழியில்லாமல் அதனை அணிந்து கொண்டு
அவள் அணிந்திருந்த மேல் சட்டையின் ஹூடி'யில் தலையை சேர்த்து நன்றாக உள்ளிழுத்து கொண்டு
அறையை சாற்றி வெளியே வந்தவளை மூணாறின் குளிர் காற்று அவளின் மீது முட்டி மோதி ஊடுருவ
அதில் இன்னும் கைகளை கட்டி ஹுடியில் தன்னை உள்ளிழுத்து குறிகியவள்,
சோம்பித்திரி'யில் (lounge ) தன்னை போல் ஹூடியில் மறைத்து கொண்டு உறங்கும் உருவத்தை இனம் கண்டு
" ஜெய் ... " என ஓடி சென்று அனைத்து கொள்ளவும் திடுக்கிட்டு விழித்த ஜெய்மியும் அரவணைத்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆறுதல் அளித்து கொண்டனர்.

இந்நாள் தம்பதியர், முன்னாள் தம்பதியர் என இரு ஜோடிகளும் தேன்நிலவு என்று மூணாறுக்கு கிளம்பி வந்து
அதை மலையேறும் செயல்படாக மாற்றி அவர்கள் இருவரையும் மலையேற்றி கொண்டிருந்த தன்னவர்களின் செயல் கண்டு உள்ளுக்குள் கருவி கொண்டிருந்தனர் தோழிகள் இருவரும்.

மலையேற்றம் மட்டுமில்லாமல் ரிசார்டில் ( பொழுதுபோக்கிடம் ) உள்ள இதர பல செயற்பாடுகளிலும் (activities) பங்கு கொண்டார்கள்.

சைட் சீயிங், சைக்கிளிங், பேர்ட் வாட்சிங் என்பது மாறி இப்போது ட்ரெக்கிங், அதுவும் விடிய காலை ட்ரெக்கிங்'க்கு ஆயுத்தமாகி கொண்டிருந்தார்கள்.

அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட் மூணாறின் நகரை விட்டு தொலைவில் இருந்த எஸ்டேட்'டின் இயற்கையின் சூழல் நடுவில் உள்ளமைந்திருந்தது.
மாசுகள் அல்லாத சுற்றிலும் மரங்களால் சுழ பட்டதாகும்.
Bsnl தவிர வேறு எந்த அலைப்பேசி சமிக்ஞை இல்லாத முற்றிலும் இயற்கையோடு ஒன்றிய உலகம்.

வெளியுலக சத்தம் முற்றிலும் தடைபட்டு நீரோடையின் சலசலப்பும் பறவைகளின் கீச்சு காணமே எங்கும் ஒளித்தது.

மிளகு மரங்கள் முதற்கொண்டு எண்ணற்ற மூலிகை ஆயுர்வேத மரங்களால் நிரம்பியிருந்தத நடைபாதை இருபுறமும் அக்காலை வேளையில் மூலிகைளால் நிறைந்த காற்றை நுரைப்பையில் நிறைப்பித்து இயற்கையை அனுபவித்து நடந்தனர்.

செங்குத்தாக அமைந்த பாதையில் தோழிகள் இருவரும் அங்கங்கே நின்று தற்சுட்டி (selfie) எடுத்து கொண்டு சென்றனர்.

அவர்களை முன்னே விட்டு பின்னே ஆண்கள் இருவரும் அவர்களுக்கு துணையாக வந்த ரிசார்ட் ஊழியரிடம் பேச்சை வளர்த்து கொண்டு பின் தொடர்ந்தனர்.

ரிசார்டில் தங்கியிருந்த மற்ற நபர்களும் அங்கங்கே நின்று புகைப்படம் எடுத்து கொள்வதில் முனைப்பாக இருந்ததால், தான் பேசுவதை ஆர்வமாக கவனித்து அதில் கேள்விகளும் கேட்டு தெளிவு பெற்று கொண்டு வந்த எய்டன் அமிழனுடன் ரிசார்ட் ஊழியரும் பின்தங்கி அவர்களோடு இணைந்து அவர்களுக்கு விளக்கி கொண்டு வந்தான்.

தன் கையோடு கைகள் கோர்த்துக்கொண்டு முன்னே பின்னே கைகளை ஆட்டிய படி தன்னோடு நடந்து வந்த தாக்ஷியை பார்த்த ஜெய்மிக்கு அவர்களின் பள்ளி பருவம் ஞாபகம் வந்தன. பள்ளி காலம் தொட்டு இவ்வாறு நடப்பது தாக்ஷியின் பழக்கமாகும்.

வளர்ந்த பின் இடையில் விட்டு விட்டாலும் அவ்வப்போது அவளை மறந்து சிறு வயது தாக்ஷி வெளிவந்து விடும் இப்போது போல்.. தன் தோழியை கண்டு 'எவ்வளவு காலம் ஆகினும் சில விஷயங்கள் மாறாது' என்பதை நெஞ்சோடு இனிமைகள் உணர்ந்து புன்னகைத்து கொண்டாள் ஜெய்மி.

தன்னோடு புன்னகைத்து கொண்டவளை பார்த்து என்னவென்று தலையுயர்தி வினவிய தாக்ஷியிடம்,

" எந்த சேன்ஜ்'ம் இல்லாம நம்ம லைஃப் ஃபுல்லா நாம இப்படியே இருக்கப்போறோம்ங்கிற ஹாப்பினஸ் கொடுத்த ஹார்ட் ஃபுல் ஸ்மைல் தாக்ஷி "

தோழியை உள்வாங்கிய தாக்ஷியும் இனிமைகள் கொண்டு " ஆமா இல்லயா ஜெய், அதுலயும் நீ பெங்களூர்க்கே வந்தத விட வேற என்ன வேணும் "...

***************

இரு வாரங்களுக்கு முன்..

காரில் அவனது தோழன் வீட்டுக்கு என தாக்ஷியை அழைத்து சென்று கொண்டிருந்தான் அமிழன்,

"மாமா, உங்க பிரெண்ட் வீட்டுக்கு போறோம், பேசுறோம், அப்புறம் நம்ம வீட்டுக்கு வந்துடனும், அங்க ஸ்டே எல்லாம் பண்ண முடியாது ஓகே தான, "

"அதான் கிளம்புறதுக்கு முன்னாடியே டீல் போட்டுட்டு தான வந்துருக்க தாக்ஷி," என பெருமூச்சு விட்டு கொண்டு
"என் பிரெண்ட் இந்த வீக் எண்ட் என்கூட ஸ்பெண்ட் பண்ணனும்னு நினைச்சான் " என அமிழன் கூறவும்

"இப்படி ஏதாவது திரும்ப ஆரம்பிப்பீங்கனு தான் இப்ப சொல்றேன், நோ ஸ்டே ஓகே.. "

"சரி ஓகே ஓகே " என்று முடித்தார்கள்.

அமிழனின் தோழன் வீடு சென்று காலிங் பெல் அடித்தவளை வரவேற்றது ஜெய்மியாக இருந்ததில் ஆச்சிரியமாகி இன்பம் கொண்டாள்.

எய்டனுக்கு கிடைத்த பதவி உயர்வுடன் கொண்ட வேலை இடம் மாற்றத்தில் அவன் தேர்ந்தெடுத்த இடம் பெங்களூராக இருந்ததில் தோழிகள் இருவருகுள்ளும் எழும்பிய இடைவெளி முற்றிலும் தகர்ந்தது.

"ஜெய் அப்போ இனிமே நீ இங்க தான " என மகிழ்ந்தவள் முன்னமே அவளிடம் கூறாததுக்கு சண்டையிட்ட தாக்ஷியிடம்,

"உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் தாக்ஷி பேபி, மாம்ஸ் கிட்டயும் சொல்ல வேணாம்னு சொன்னோம்.. இங்க வீடு பார்த்து எல்லாம் செட் பண்ண ஃபுல் ஹெல்ப் மாம்ஸ் தான் "
என்று சண்டையிட்டு சமாதானம் ஆனவர்களை இடையிட்டான் அமிழன்,

" ஓகே ஜெய்மிம்மா நாங்க கிளம்புறோம் "

" ப்ரோ என்னயிது.. வந்ததும் கிளம்பறேன்னு சொல்றீங்க " என எய்டனும்

" மாம்ஸ் இந்த வீக் எண்ட் இங்க தங்கனும்னு பிளான் பண்ணினத மறந்தாச்சா " என ஜெய்மியும் வினவும்

" நான் என்னப்பா பண்ணுறது.. இட்ஸ் ஆல் மை வைஃப் ஆர்டர்.. " என அமிழன் கையை விரித்து தாக்ஷியை கை காட்டி கோர்த்து விடவும்,

" வீக் எண்ட் மட்டுமில்ல வீக் டேஸும் நான் இங்க தான் மாமா நீங்க வேணும்னா கிளம்புங்க "

" பிரெண்ட் பாரத்ததும் என்னை கழட்டி விட்டுட்டா " என அதிசயத்தை அமிழனிடம்

" இனி இதான் ப்ரோ நிரந்தரம்... வாங்க நாம இவங்கள விட பெருசா நட்பு வளர்த்து ஸ்ட்ராங் பாண்ட் உருவாக்குவோம் " என்று 'நண்பேன்டா' என்பது போல் அமிழனை தோழனைத்து கொண்டான் எய்டன்.

******
"இட்ஸ் ஆல் ஹப்பெனிங் பிகாஸ் ஆஃப் தேம் இல்லயா " என இருவரையும் சுட்டிக்காட்டிய தாக்ஷியிடம் தலையாட்டி ஓப்புக்கொண்டாள் ஜெய்மி.

தத்தம் மனைவியின் மூலம் நட்பு பாராட்டிய அமிழன் எய்டன் இருவரின் எண்ண போக்கும் ஒரே மாதிரி அமைந்ததில் ஒருவரை மற்றவருக்கு உள்ளார்ந்து பிடித்து இருவருக்குமிடையே பிணைப்பு இறுகியது.

பேசி கொண்டு மரங்கள் அற்ற சமவெளிக்கு வந்தவர்கள் எதிர் பட்ட பள்ளத்தாக்கில் சாய்வாக ஒங்கி வளர்ந்த மலையில், செதுக்கிய வண்ணமாக பயிரிட்டிருந்த தேயிலை பாத்திகள் மீது பட்டு தெறித்த சூரிய கதிர்களின் ஒளி அவ்'எஸ்டேட் முழுவதும் பரவி இளமஞ்சள் கலந்த சிவப்பாக காட்சி அளித்து கண்ணுக்கு விருந்தளித்து.

பேச்சற்று மெய்மறந்து ரசித்து கொண்டிருந்த தோழிகள் இருவரின் அருகே வந்த நின்றனர் அவர்களின் துனைவர்கள்.

" வாவ்......என்ன ஒரு சீனரி..!
இத தூங்கி மிஸ் பண்ண பாத்துருக்கீங்க ரெண்டு பேரும்..
இங்க தூங்குறத அங்க வீட்டிலயே தூங்கிருக்கலாம்..." என வம்பிலுத்த எய்டனிடம் சண்டையிட தயாரான ஜெய்மி
அந்நாள் இரவை கூடாரம் ( tent ) அமைத்து செலவிடும் செயற்பாட்டிற்க்கு வந்த பிறகும் முடியவில்லை.

ரிசார்ட்டின் செயற்பாட்டில் ஒரு பகுதியான டெண்ட் கேம்ப்ங்'கில் இரவில் மலை முகட்டில் கூடாரம் அமைத்து
அனைவரும் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு அன்றிரவை வெட்டவெளியில் நிலவொளியில் களித்து கொண்டிருந்தனர்.

ஜெய்மி, தாக்ஷி இருவரும் உடலை இறுக்கி கம்பிலியால் சுற்றி தங்களை குளிரில் இருந்து மறைத்து கொண்டிருந்தனர்.

சைட் சீனிங், சைக்கிளிங், ட்ரெக்கிங் என்ற பெயரில் பிளான்டேஷன் வாக் என கடந்து வந்தவர்கள் இப்போது 'குடிசை மொமெண்ட்டா' என்பது போல் நடுங்கும் குளிரில் கூடாரத்தில் இரவை களிக்க வைத்த ஆண்கள் இருவரின் மீது கோபம் கொண்டிருந்தவர்கள், சற்று தள்ளிருந்த அமிழன் எய்டனின் உரையாடலை கேட்டு பீதியாகினர்.

" என்ன ஒரு வியூ.. வாவ்... செம ப்ரோ.. லவ்லி ப்ளேஸ்.. இந்த ரிசார்ட் ரெக்கமெண்ட் பண்ண உங்க பிரெண்ட் கிட்ட தான்க்ஸ் சொல்லனும் ப்ரோ " என்ற எய்டனிடம்,

" அவன் சொன்னதை விட நாம ஃபீல் பண்ணும் போது தான் தெரியுது இவ்வளவு அழகுனு,
ஏன் ப்ரோ நாம நெக்ஸ்ட் ட்ரிப் கூர்க் ( coorg ) போன என்ன, என் பிரெண்ட் சொன்னான்
அங்க ட்ரீ ஹௌஸ் செம த்ரில்லா இருக்குமாம்"

" வாவ் சூப்பர் ப்ரோ.. நெக்ஸ்ட் நாம கூர்க் ட்ரிப் பிளான் பண்ணுறோம்,
ட்ரீ ஹௌஸ் போறோம், என்ஜாய் பண்ணுறோம்" என இருவரும் கை தட்டி கொண்டனர்.

இதனை கண்டு பீதியான ஜெய்மி
"தாக்ஷி உன்னை நான் டிவோர்ஸ் பண்ணுறேன்டி "

"தேவா........ ! நீயா பேசுற... "

"நானே தான் சூர்யா, இன்னும் இவங்கள ஒன்னு சேர விட்ட , நமக்கு தான் சேதாரம் அதிகமாகும்... அதுக்கு முதல நாம பிரியனும் சூர்யா.... "

" அதுவும் சரி தான் தேவா.. எதையும் பிளான் பண்ணி பண்ணறது தான் நமக்கும் நல்லது.... "

என தங்களுக்குள் தளபதி ரஜினி, மம்மூட்டி போல் சூளுரைத்து கொண்டிருந்தவர்களிடம் வந்த அமிழன்

" தாக்ஷி..... ஒரு வாக் போயிட்டு வரலாமா "
என கேட்கவும் அதிர்ச்சியுற்றாள் தாக்ஷி.

" வாக்'கா.... இப்பவா மாமா.. " என தனக்குள் விழுங்கினாள்.

" ஆமா தாக்ஷி செம க்ளைமேட் பாரு.. ஒரு மூன் வாக் போகலாம் வா... "
என கை நீட்டிய அமிழனிடம் கை கொடுத்து எழுந்தவள் தன்னை பார்த்து முகத்தை மறைத்து சிரித்து கொண்டிருந்த ஜெய்மியை முறைத்து விட்டு சென்றாள்.


இரவின் அழகான நிசப்தத்தில் நீரோடையின் சலசலப்பு சத்தத்தை தவிர சுற்றி எங்கும் நிசப்தமே..

குளிர் காற்று அவர்கள் இருவரையும் தழுவி ஊடுருவி சென்றன..

வேண்டாம் வெறுப்பாக முதலில் வந்தவள் இயற்கையின் அழகில் தன்னை மறந்து கால்களை எட்டி போட்டு லயித்து நடை பயின்றவளை திரும்ப மலையேத்தவென அமைந்தது அமிழனின் பேச்சு,

" தாக்ஷி, பாரேன் இவ்வளவு நாள் நாம டீ தப்பா போட்டுக்கிட்டு இருந்தருக்கோம்.."

சைட் சீனிங் என்ற பெயரில் நேற்று பாதி நாள் முழுவதும் மூணாறில் பிரிசித்து பெற்ற பழமையான தேயிலை தொழிற்சாலையான கண்ணன் தேவன் ஹில்ஸ்'லில் களித்தனர், ஆண்கள் பெருப்பான்மையான நேரம் தொழிற்சாலைக்குள்ளும் பெண்கள் இருவரும் தோட்டத்திலுமாக.

அவர்களுக்கு சுற்றி காட்டவென வந்தவரே தேனீர் தயாரிக்கும் முறைமையை விளக்கினார்.

தேயிலை'யை அதிகம் கொதிக்க வைக்க கூடாது என்றும், கொதித்த வெந்நீரில் தேயிலை போட்டு மூடி வைத்து விட வேண்டும். அதனை சிறிது நேரம் கழித்து வடிகட்டி அப்படியே பிளாக் டீ'யாக அருந்தலாம்... இல்லையென்றால் சூடான பாலில் தேயிலை தண்ணீரை கலந்து அருந்தலாம் என்றும், பாலையும் தேயிலையும் சேர்த்து கொதிக்க விட கூடாது என்றும் தெளிவாக விளக்கினார்.. அதை சிரமேற்றி தெளிவாக கவனித்து கொண்டார்கள் ஆணவர்கள்.

அதனையே இன்று திரும்ப அமிழன் வியந்து விளக்கவும் கோபம் கொண்டு கால்களை அழுத்தம் கொடுத்து தரையில் பதித்து நடந்தாள் தாக்ஷி..

நீரோடையின் சலசலப்பை மீறி தாக்ஷியின் கால்கள் கொடுத்த சத்தத்தில் அவளின் மேல் கண்களை பதித்த அமிழன் அவள் கால்களுக்கு அழுத்தம் கொடுத்து நடந்து சென்ற முறையில் ரசித்து
' இன்னும் நீ மாறவே இல்ல டுக்கு ' என தனக்குள் புன்னகைத்து கொண்ட அமிழனுக்கு
சற்றுமுன் எய்டனுடன் நடந்த உரையாடல் ஞாபகம் வந்தன..

"ஓகே ப்ரோ.. நான் தாக்ஷிய கூட்டிட்டு ஒரு வாக் போயிட்டு வரேன்.."

"இங்க நியூலி மேரீட் கபில் யாருன்னு தெரில ப்ரோ... அப்பப்ப மறந்துடுது" என கேலி செய்து சிரித்த எய்டனிடம்,

"நியூலி மேரீட் கபில்'க்கு ப்ரைவஸி கொடுக்கலாம்னு தான் வாக் போலாம்னு தாக்ஷிய கூட்டிட்டு போறேன், வேணும்னா நீங்க ஜெய்மிய கூட்டிட்டு போங்க நான் இங்க இருக்கேன்..."

" ஏது இவளயா... தாக்ஷிம்மா'வாச்சும் நீங்க கூப்பிட்டதும் வருவா..
இவள நான் ஏற்கனவே மலை இறக்க கஷ்டப்படனும்..
இதுல வாக் போலாமனு கேட்டேன், இப்ப இருக்கிற மலையை விட்டு வேற மலைக்கு தாவிடுவா..
நீங்க கிளம்புங்க ப்ரோ "

அவனின் கூற்றில் சிரித்தவன் " எங்கள கிளப்ப வேகமா தான் இருக்கீங்க போங்க " என்ற அமிழனிடம்,

"ஆனாலும் ப்ரோ நீங்க எங்களுக்காக தான் தாக்ஷிம்மாவ வாக் கூட்டிட்டு போறீங்க சொல்றத நான் நம்பிட்டேன் "
என இதழ்களில் சிரிப்பை அடக்கினான் எய்டன்.

"ப்ரோ.... " என ஆரம்பித்த அமிழனிடம்

"அதான் நான் நம்பிட்டேனு சொல்றேனே ப்ரோ.. ஹாவ் அ சில் வாக்.. என்ஜாய்.... "
என கையசைத்து சிரித்தவனை கண்டு தானும் சிரித்ததை நினைவில் நிறுத்தி இப்போதும் தலைகோதி புன்னகைத்து கொண்டவன்..

தாக்ஷியின் கைகளை பிடித்து தன்னருகே நிறுத்தி,
" என்னவாம் டுக்கு'க்கு... கோபம் வந்தா தான இப்படி நடப்பீங்க.. சின்ன வயசுல
நீ இப்படி நடக்கிறத வச்சு தான உன்னை டக்……. " என கூற வந்தவனின் இதழ்களை தன் விரல்கள் கொண்டு மூடியவள்,

" போதும்.. அந்த பேர் சொல்ல வேணாம்.. சொன்னிங்க அவ்வளவு தான் பாத்துகோங்க "
என கூறிவயள் தன் விரல்களில் உணர்ந்த அவனின் வெப்பத்தினால் கைகளை விலக்கி
தள்ளி செல்ல முயன்றவளை இழுத்து பிடித்து தன் கைவலைகளுக்குள் நிறுத்தியவன்..

" எனக்கு வேற ஒரு டௌபட் இருக்கு அத கிளீயர் பண்ணிட்டு போ"

வெளியே ஊடுருவிய குளிர் காற்றுக்கு எதிர் வினையாய்
அவளிடம் அவன் கடத்திய வெப்பத்தில் லயித்தவளின் கண்கள் மேலெழுங்கி என்னவென்று வினவின.

" பட்டர்ஃபிளை கிஸ்'னா என்னது..."
என மிக தீவிரமாக முக்கியமான கேள்வியை போன்று கேட்ட அவனின் கேள்வியில் நாணம் கொண்டவள்,

"அய்யே மாமா போங்க.. இது தான் உங்க டௌபட்'டா"
என விலகி செல்ல முயன்றவளை தடுத்து தன் கைகளுக்குள்ளே நிறுத்தியவன்,

"நீயும் நீத்து குட்டியும் பேசுறத கேட்ருக்கேன்.. அது என்ன எனக்கு இல்லாம நீத்துக்கு மட்டும் பட்டர்ஃபிளை கிஸ் "
என புருவம் உயர்த்தி உரிமை பாராட்டும் சிறுகுழந்தையாக தன் முன் முகம் சுருக்கி நின்ற அமிழனை கண்டு உவகை கொண்டவள்.

"அது சின்ன பேபிஸ் கூட விளையாடுறது மாமா, நீத்துகுட்டி இங்க இருந்தப்ப அவளுக்கு அது பிடிச்சு போய் இப்போ வீடியோ கால்'ல கேக்குற.. சின்ன பிள்ளை கூட போட்டி போடுறீங்க நீங்க "

என கூறியவளை கண்டு இன்னும் முகம் சுருக்கங்களோடு நின்றவனின் மேல்சட்டையின் காலரை பிடித்து தன்னருகே நிறுத்தி அவர்களுக்குள் மிச்சம் இருந்த இடைவெளியயும் குறைத்தவள்,

" இப்ப என்ன உங்களுக்கும் பட்டர் ஃப்ளை கிஸ் வேணும் அவ்வளவு தான "
என அவளின் இடது கண்களை அவளின் எதிர்புறம் நின்ற அவனின் இடது கண்கள் அருகே கொண்டு சென்றவள் அவளின் இமைகளை அவனின் இமைகளோடு சேர்த்து சிமிட்டி பட்டர்ஃபிளை கிஸ் என்ன என்பதனை செயல்முறையில் விலக்கினாள்.

படபடத்த இருவரின் இமைகளையும் பிரித்தவள்,
"இப்ப புரிஞ்சுடுச்சா.. இதுக்கு போய் நீத்து குட்டியோட போட்டி போட்டுகிட்டு...
நீத்து விட ரொம்ப அடம் பிடிக்கிறீங்க நீங்க" என விலக்கியவளை தடுத்தவன்,

"உனக்கு தெரிஞ்சத நீ சொல்லிட்ட டுக்கு , இனி என் டர்ன் எனக்கு தெரிஞ்சத நான் சொல்ல வேணாமா .. " என அவனவளை இதழோடு அனைத்து கொண்டான்.

மண நிறைவோடு முடிந்த மூணாறு நாட்கள் இனி பெங்களூரில் தொடரும்!! (மா??)...

....................................

அப்புறம் மக்களே இதில் புதியதாக இரண்டு விஷயங்கள் சொல்லிருக்கேன்.
எல்லாரும் கத்துருப்பீங்க'னு நினைக்கிறேன.
கற்று கொடுத்த நிறைவோடு விடை பெறுகிறேன்..
நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்... :D :D :D

.................................



Post Reply

Return to “போற போக்கில் ஒரு காதல்”