போற போக்கில் ஒரு காதல் 5

Post Reply
Kirthika
Moderators
Posts: 18
Joined: Fri Jul 17, 2020 5:18 pm
Has thanked: 2 times
Been thanked: 4 times

போற போக்கில் ஒரு காதல் 5

Post by Kirthika »

"போற போக்கில் ஒரு காதல்" கதையின் அத்தியாயம் 4 பதிந்து விட்டேன் நட்டுபுஸ்,

கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

அத்தியாயம் 5


ஷம்பக்கின் முன்னாடி நின்று கொண்டிருந்த மேகனாவிடம் சென்ற தாக்ஷி
"வாவ் மேக் எப்பவும் விட இன்னைக்கு ரொம்ப ஸ்பெஷல்லா இருக்கீங்களே,
அப்படியே பார்பி மேட் தான் நீங்க ……
ஷாப்பிங் வந்தீங்களா….. "
என்ற தனது கேள்விக்கு பதில் வராததால் மேகனாவின் தோலை ஆட்டினாள்.

"ம்ம் என்ன கேட்ட .. ஆமா ,, இல்ல " என பதற்றத்தில் இருந்தது அவளின் குரல்
"மேக் என்னாச்சு.. கூல் கூல்,.. எனக்கும் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும் போலாமா"
………………………….
இப்பவும் பதில் வராததால்

‘ என்னடா இது இன்னைக்கு மேக் ப்ஃரோஸன் பார்பி மோட்க்கு அடிக்கடி போய்டுறாங்க ’ என நினைத்து திரும்ப உலுக்கினாள் " மேக்…. "

"ஹான் என்ன தாக்ஷி ... என்ன சொன்ன "

"சரியா போச்சு போங்க… வாங்க போகலாம்” என மேகனாவின் கையை பிடித்து கொண்டு செல்ல திரும்பியவள் அங்கேயே நின்றாள் தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த இளமதியனை பார்த்தும்.

முதலில் அவளுக்கு தோன்றியது 'ஹையோ ப்ராஜெக்ட் பத்தி கேள்வியா கேப்பாங்களே ' என்ற பயம் தான்.
அதற்கு ஏற்றார் போல் இளமதியன் பார்வையும் ஒரு ஆசிரியரின் கூரோடு அவள் மீது படிந்ததில்
'போச்சு இன்னைக்கு வச்சு செய்ய போறாங்க' என்று நொந்துகொண்டவள்
பக்கத்தில் மேகனா இருப்பதால் அவளை வைத்து சமாளித்து கொள்வோம் என்று வேகமாக முடிவு எடுத்து கொஞ்சம் தெளிவாகவே நிமிர்ந்தாள்..

இன்னைக்கு என்ன என்ன கேள்விகள் வருமோ என்று படப்படப்புடன் இருந்த தாக்ஷி
அங்கே மேகனாவும் படபடப்புடன் இருப்பதை அவளின் கையை பிடித்து கொண்டிருந்தது மூலம் அறிந்து தன்னை மறைத்து கொண்டு அவளை பார்த்தாள்.
‘ஏன் இவ்வளவு நெர்வஸா இருக்காங்க’ என அவளை நோக்கியவள் அப்போது தான் ஒரு முக்கிய விஷயத்தை கவனித்தாள், மேகனாவின் பார்வை எதிரில் வந்த மதியன் மீதெ இருந்தது என்றும், இப்போது இளமதியன் பார்வையும் தன் அருகில் உள்ள மேகனாவின் மீதென்றும்.

இருவரின் பார்வைகளும் அவளுக்கு உணர்த்திய பதில் ஒன்றே.

தான் அறிந்து கொண்ட பதிலால் என்ன மாதிரி உணர்ந்தாள் என்பது அவளுக்கே புரியவில்லை, திடிரென மனதில் ஒரு வெற்றிடம் வருமே அது போல் முற்றிலும் எந்த உணர்வு பிழம்புகளும் இல்லாமல் வெறுமையாக உணர்ந்தாள்.
அருகில் நின்ற ஜெய்மிக்கும் புரிந்தும் புரியாத நிலை தான்..

அங்கே வந்த மதியன் " ஹாய் தாக்ஷி……. என்ன இங்க.. ஷாப்பிங்கா" என வினவவும்
‘என்னடா இது நமக்கு மட்டும் தான் ஷாக்கா’ என்று எதிர் விளைவுறு செய்யவும் மறந்து போய் நின்றவளை மீண்டும் அழைத்தான்.

"தாக்ஷி ....."

"ஹான் ... என்ன.. என்ன மாமா "

இம்முறை வியப்பது மேகனாவின் முறையானது..!!!!!!!!

ஜெய்மிக்கு தான் மண்டை காய்ந்தது
‘என்னடா நடக்குது இங்க, இவுக ரெண்டு பேரும் பாத்துகிறத பார்த்த மேகனாவ முன்னாடியே தெரியும் போல இந்த மதி மாமாக்கு…
இங்க தாக்ஷி மேகனா ரெண்டு பேரும் கைய பிடிச்சுட்டு இருக்காங்களே அதுல கொஞ்சம் கூட ஷாக் ரியாக்ஷன் கொடுக்காம எப்படி இவ்வளவு நார்மல்லா நிக்கிறாரு’ என தனக்குள் மொழிந்து கொண்டிருந்தாள்..

அதற்குள் மேகனாவின் அருகே இருந்த தோழியும் மதியனின் உடனிருந்த நண்பனும் சமிக்கை கொடுத்து கொண்டனர்..

" ஒன் மினிட் கைய்ஸ் கால் வருது அட்டெண்ட் பண்ணிட்டு வரேன் " என வராத போனை எடுத்துக் கொண்டு சென்றான்..

இங்கு மேகனாவின் தோழியோ " ஹே கேர்ள்ஸ் பாண்டலூன்ஸ் போகணும்னு சொல்லிட்டு இருந்திங்கள, வாங்க நாம போய்ட்டு வந்தராலாம், கம் " என ஜெய்மியையும் தாக்ஷியையும் இழுத்து கொண்டு சென்றாள்...
ஏதோ ஹட்ச் டாகி போல் அவளின் பின்னே சென்று கொண்டிருந்த தாக்ஷியை ஜெய்மி தான் தடுத்து நிறுத்தியது..

"அக்கா நாங்க பாண்டலூன்ஸ் போகணும்னு இல்லக்கா"

" ஹே சாரி சாரி கேர்ள்ஸ் ,ஒரு சின்ன பழைய லவ் ஸ்டோரி, இப்பவாச்சும் ஏதாவது ஸ்பார்க் வருதானு பாக்க தான் அவங்க ரெண்டு பேரயும் தனியே விட்டுட்டு உங்கள கூட்டிட்டு வர வேண்டியத போயிடுச்சு, சாரியா .... ” மேகனாவின் தோழி உடனிருந்த தோழி கூறவும்

‘நல்லா பத்த வச்சீங்க போங்க’ என தனக்குள் சொல்லி கொண்டாள் ஜெய்மி,
" இட்ஸ் ஓகே கா நாங்க கிளம்பனும், பிரெண்ட்ஸ் வெய்ட் பண்றாங்க” என தன் தோழியின் மன நிலையில் கவலை கொண்டு அவளை முதலில் இவ்விடம் விட்டு இழுத்து செல்லும் பொருட்டு அவளை கூட்டி கொண்டு வெளியேறும் வாயிலை நோக்கி விறைந்தாள்..

நுழைவாயிலை நோக்கி நடக்கும் போது சுயஉணர்வு பெற்ற தாக்ஷி " பிரபுக்கு பெர்ஃப்யூம் வாங்கனும் ஜெய் " என நிறுத்தினாள்..

இப்போது என்ன எதிர் விளைவு கொடுக்க வேண்டும் என தெரியாமல் விழிப்பது ஜெய்மியின் முறை ஆகிற்று..
‘இங்கே நடக்கும் விஷயம் என்ன, இவள் பேசுவது என்ன .....‘

தாக்ஷியின் இந்த அமைதி வேறு அவளுக்கு பயத்தை கொடுத்தது..

"இப்ப ஒன்னும் அவசரமில்ல, அப்புறம் வங்கிங்கலாம்… வா போகலாம்.. "

"ம்ஹிம்... பிரபு எதிர்பாப்பான்ல, இரு இப்பவே வாங்கிடுவோம்"

பெர்ஃப்யூம் எதிர்பார்த்து ஏமாற கூடாது என பினாத்தும் தன் தோழி அவளுக்கு புதியவளே, இது இப்பொழுது நிகழ்ந்த அவளின் ஏமாற்றத்திற்கான தாக்கமா என குழம்பி கொண்டிருந்தாள் ஜெய்மி..

தாக்ஷியோ இப்போது பிரபுவிற்கு பெர்ஃப்யூம் வாங்குவது தான் தன் தலையான கடமை என்று வாங்கி கொண்டு வந்தவள், விழித்தாள்..

அது ஏன் என்று ஜெய்மிக்கும் புரிந்தது.. இதை அவளின் மதி மாமாவிடம் அல்லவா கொடுத்து விட வேண்டும், அதன் பொருட்டே அல்லவா இங்கு சந்தோசகமாக வந்தாள், இப்போது இருக்கும் நிலையில் இன்னொரு முறை மதி மாமாவை பார்த்து எவ்வாறு கொடுப்பாள்..

தாக்ஷியின் அருகே வந்தவள் அவளின் தோலை தொட்டு தன் புறம் திருப்பி "இன்னைக்கே கொடுத்து விடனும்னு ஒன்னுமில்லைடி, நாம ஊருக்கு போகும் போது கொடுத்துக்கலாம்" என்றாள் அமைதியாக.

" இல்ல ஜெய்.. பிரபு எதிர்பார்ப்பான்ல, ஏமாந்துடுவான்"

ஜெய்மிக்கோ அவளின் இயல்ப்புக்கு மாறாக பேசி கொண்டிருக்கும் தோழியை பார்த்து வருத்தமாக இருந்தது.

தனக்குள் யோசித்த தாக்ஷி " ஹிம்.. அமிழ் மாமா... அவங்களும் இங்க வந்திருக்காத பிரபு சொன்னானே.... அவங்கட்ட கொடுத்திடலாம் ஜெய்,.. இரு அவங்களுக்கு கால் பண்ணி எங்க இருக்காங்கன்னு கேப்போம் " என தனக்குள் பேசி கொண்டே தனது கைபேசியை எடுத்து அழைத்தாள்..

இவள் அழைப்பு விடுக்கவும், அமிழனே அவள் முன் வரவும் சரியாக இருந்தது..

"தாக்ஷி….. இங்க என்ன பண்ற…., கால் பண்ணிருக்க??,"

" இது பிரபு கேட்டான் மாமா, அவன்கிட்ட கொடுத்துறிங்களா " என்று அவனிடம் கொடுத்தாள்.
இதோட முடிஞ்சதே என நினைத்த ஜெய்மியும் " ஆமாண்ணா கொடுத்துடுங்க, நாங்க கிளம்புறோம்" என செல்ல எத்தனித்தாள்.

"ஏன் அதுக்குள்ள கிளம்புறிங்க, மதி கூட வந்திருக்கான், வெய்ட் பண்ணுங்க, மதியையும் மீட் பண்ணிட்டு டின்னர் முடிச்சுட்டு போலாம், நாங்களே உங்கள ட்ராப் பண்ணிட்டு போறோம்.."

ஜெய்மிக்கோ ‘ கெடுத்தார்டா காரியத்தை, இவர் திருவாளர் அண்ணன்ன மீட் பண்றத அவாய்ட் பண்ணறதுக்குதான் இந்த பாலா போன பெர்ஃப்யூம் இவர்ட்ட தள்ளிட்டு கிளம்புறோம், அது தெரியாம இவர் வேற’ என தனக்குள் நொந்தாள், அவளுக்கு அல்லவா தெரியும் இன்று இன்னொரு முறை தாக்ஷியால் மதியனை சந்திக்க முடியாது என்பதும் உடைந்துவிடுவாள் என்பதும்,.. ‘ஆள விடுங்கடா சாமிகளா’ என தன் தோழிக்காக அவளே பேசினாள்..

"இல்லண்ணா நாங்க டின்னர் முடிச்சுட்டோம், எங்க பிரண்ட் பிரத்டே ட்ரீட்க்கு தான் வந்தோம், வெளிய அவங்கலாம் எங்களுக்காக வெய்ட் பண்றங்க நாங்க கிளம்புறோம் " என அவன் அடுத்து பேசவே இடம் அளிக்காமல் தன் தோழியை இழுத்து கொண்டு சென்றுவிட்டாள்..


கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றிகள்
கீர்த்தி:love:

[/b][/b][/b][/b][/size]



Post Reply

Return to “போற போக்கில் ஒரு காதல்”