அத்தியாயம் 15
நிலகண்ணாடியில் முன் நின்று தலையை உளர்த்திவிட்டு மேஜை மேல் கழற்றி வைத்திருந்த அமிழன் அவளுக்கு அணிவித்த செயினை அணிய முற்பட்டவள் கண்ணாடி பின்பத்தில் அவளோடு சேர்ந்து பிரிதிபலித்த செயினயே சிறிது நேரம் யோசனையோடு பார்த்தாள். பிறகு ஒரு முடிவு பெற்றவளாக, ஹாலில் அலுவலகத்திற்க்கேன கிளம்பி அதற்கு முன் முடிக்க பட வேண்டிய அலுவல் வேலைய மடிக்கணினி முன் அமர்ந்து சரி பார்த்துக்கொண்டிருந்த அமிழனின் அருகில் சென்றாள் தாக்ஷி.
" மாமா இந்த ரிங் எங்க வாங்குனீங்க ..."
தன் கணினியில் வைத்திருந்த அவனின் கண்ணை விலக்காமல்
"இங்க தான் தாக்ஷி.. "
" இது வாங்குன பில் இருக்கா மாமா, இந்த ரிங் செயின்ல ஃபிட்'டா இல்லாம சுத்திட்டே இருக்கு, செயின்'ல ஒரு நாட் போட்ட சரியா இருக்கும்ல.."
என ஏன் என்பதாய் தெளிவாகவே அவன் கேட்கும் முன்னரே பதில் அளித்தாள்.
"அங்க செகண்ட் ஷெல்ஃப்'ல தான் தாக்ஷி எல்லா பேப்பர்ஸ்ம் இருக்கும், கொஞ்ச நீயே பாரேன்டா அங்க இருக்கானு " என இன்னமும் அவனது அலுவல் வேலையில் கவனமாக இருந்தவனை பார்த்தவள் அவளாகவே உள்ளே சென்று தேடலில் சில நிமிடங்களை தனியாக செலவிட்டவளாக திரும்ப அமிழனிடம் வந்தாள்.
" செயின் வாங்குன பில் அங்க இல்லையே மாமா "
என்றாள் கணினியில் கவனமாக இருந்த அமிழனின் அருகில் அமர்ந்துக்கொண்டு...
"மாமா ...," என அவனை அழைத்து அவளின் வாக்கியம் முற்று பெரும் முன்னரே,
"அங்க தான் இருக்கும் தாக்ஷி " என கூறியவன் அவளிடம் இருந்து எந்த பதிலும் வராததை உணர்ந்து அவளை திரும்பி பார்த்தான். அங்கு முகத்தை சுருக்கி தன் அருகே அமர்ந்திருந்தவளை கண்டவன் தலையாட்டி புன்னகைத்துக்கொண்டு ஒரு கையால் மடிக்கணினியை அணைத்து மறுகையால் அவளை தோளோடு சேர்த்து அனைத்து கொண்டான்.
"என்ன வேணுமாம் டுக்கு'க்கு "
"மாமா... " வேலையின் பொருட்டே தன் மீது கவனமாக இல்லாதவனை கண்டு கொண்டவள்,
" ஒன்னும் இல்ல உங்களுக்கு டைம் ஆகிடுச்சுல நீங்க ஆஃபீஸ் போய்ட்டு வாங்க அப்புறம் பேசிக்கலாம் "
"இல்ல இப்பவே சொல்லுவியாம்... அப்புறம் எனக்கு டே ஃபுல் இந்த முகம் சுருங்குன டுக்கு தான் ஞாபகத்துக்கு வருவா "
அவன் கூற்றலில் மென்மையாக முறைத்தவள் " இந்த செயின்ல ரிங் ஃபிட் ஆகல மாமா அப்புறம் இந்த செயின் மாடலும் கழுத்துல அழுத்தம் கொடுக்குது அதான் கொஞ்சம் மாத்திகலாம்னு கேட்டேன்.. ஆனா செயின் வாங்குன பில் இங்க இல்லையே.. "
" நீ செயின கேட்டியா..
செயின் புதுகோட்டைல ஜெய்மி மேரேஜ் அப்போ வாங்குனது தாக்ஷி, பில் அங்க தான் இருக்கும், பிரபு கிட்ட கேட்டு பாரு... நான் வரட்டா...
பை டா டைம் ஆகிடுச்சு.. ஈவினிங் வந்ததும் டிஸ்கஸ் பண்ணலாம்" என அவளை அணைத்து நெற்றியில் இதழ் ஒற்றி விலகி தலையசைத்து விரைந்து விட்டான்.
' என்னடா இது ' என அவனின் கூற்றை சில நிமிடங்கள் யோசித்தவள் பின் பில் ஊரில் இருப்பதால் அங்கு செல்லும்போது மாற்றி கொள்ளலாம் என முடிவு செய்து அப்போதைக்கு யோசனையை ஒதுக்கி மற்ற வேலைகளில் கவனம் செலுத்தியவளை களைத்தன பிரபுவின் அலைபேசியிலான அழைப்பு.
பிரபுவிடம் உரைடயாடிவள் தன் யோசனையை அவனிடம் தெரிவிக்கவும் மறக்கவில்லை.
தமக்கையை உள்வாங்கியவன் " ஆமா பில் இங்க தான் இருக்கும், இப்ப ஏன் அத மாத்த போறியா என்ன.. "
" ஹே அதில்லைடா, ரிங் கோர்த்து செயின் போற்றுக்கனால சரியா செட்டா நிக்க மாட்டேங்குதுடா, பேசாம ரிங்'க கையலயே போட்டுக்கலாம், மாமா கொடுத்துன்னு தான் செயினவே இருக்கட்டும்னு நினைக்கிறேன்... "
" உன்கிட்ட ரிங்'கா கொடுக்க ரெண்டு தடவை ட்ரை பண்ணி அது முடியாம போனதுனால தான், சென்டி'யா ஃபீல் பண்ணி அத செயின மாத்தி உன்கிட்ட சேர்த்துட்டாங்க, நீ அதை மாத்தாதக்கா "
இது அவளுக்கு புது செய்தி, புருவம் சுருக்கி வியந்த தாக்ஷியோ
" என்கிட்ட கொடுக்க வந்தாங்களா எப்போ... "
தமக்கையின் வினாவில் பெருமூச்சு விட்டவனாக
"ம்ம், மேரேஜ் முன்னாடி ஃபினிக்ஸ்ல மீட் பண்ணுனீங்கள அப்பவும், அப்புறம் ..... "
"அப்புறம் ... "
" உங்க மேரேஜ் பிஃக்ஸ் பண்ணுறதுக்கு முன்னாடி இங்க நம்ம ஊர்லனு ஒரு தடவை.. "
" நீ என்ன சொல்ற பிரபு.. எங்க மேரேஜ் பேசுறதுக்கு முன்னாடியா.. "
" ஹையோ என்னக்கா நீ உன்கிட்ட மாமா அந்த ரிங் எப்போ வாங்குங்கனு சொல்லலயா... "
" ம்ம்ம்ம் சொன்னாங்க அவங்க ஃபர்ஸ்ட் மன்த் சலாரில வாங்குனதுனு..... " என கூறிக்கொண்டே வந்தவள் ஏதோ பிடிப்பட்டவளாக " பிரபு..... "
" இப்பவாவது புரிஞ்சதா ..... "
" பிரபு.... நீ ... " என உண்மையை உணர்ந்து கொண்டவளாக அவளின் வார்த்தைகளில் தயக்கங்கள் நிறைந்திருந்தது.
" ஆமா...சொல்ல போன ரொம்ப வருசமாவே .... " என ஆரம்பித்தவன் நிறுத்தினான்...
" சரி விடு இதுக்கு மேல நான் இது பத்தி பேசுறது சரியா வராது....
அப்புறம் நீ ரொம்ப யோசிக்காத என்ன.. " என தமக்கையை அறிந்த தம்பியாய் அறிவுறுத்தி விட்டு வைத்து விட்டான்.
இங்கு தாக்ஷியோ அவனின் அறிவுரையை மீறி யோசித்து குழம்பி கலங்கி மேலும் சிந்திக்க முடியாமல் நின்றாள்.
இத்தனை நாள் அவளுள் ஒதுக்கி மறைத்து வைத்திருந்த அவளின் குற்றவுணர்ச்சி மேலேந்து அவளை சுயப்பச்சாபத்தில் தள்ளியது.
தன் விருப்பத்தை மட்டும் முன் நிறுத்தி அவளுக்காகவே அனைத்தும் செய்து மகிழ்ந்துகொள்பவனாக இருக்கும் அவளவனை கண்டு கொண்டிருந்தவள், இது அவர்களது திருமணம் தொட்டு வந்த உறவாய் தன்னை போன்றே அவனுக்கும் என நினைத்தவள் அஃது அவ்வாறில்லை என உணர்ந்ததும் இவ்வளவு நாள் அவளுள் மறைந்து ஒதுக்கி வைத்தவை குற்றஉணர்வாக தலைதூக்கியது.
ஒவ்வொன்றாக யோசித்து தெளிவு பெற்றவள் அவளின் மீது அவன் கொண்ட நேசத்தை புரிந்து கொள்ளாமல் இருந்தது மட்டுமில்லாமல் தான் செய்த மடத்தனத்தையும் யோசித்து குழம்பி கொண்டவளுக்கு குற்றஉணர்ச்சியே ஒங்கிருந்தது.
மதியன் மேல் தான் கொண்டது காதல் இல்லை என சுலபமாக கடந்து வந்தவளுக்கு அமிழனின் காதலை அறிந்து கொண்ட நொடிகள் முதல் உண்டான கணத்தை தாங்க இயலவில்லை.
இதில் தான் அவனுக்கும், அவன் தன் மேல் கொண்ட காதலுக்கு உண்மையாக இல்லையோ என்ற உணர்வும், தான் அவனின் மனைவியாய் இருக்கிறோம், காதலோடு இருக்கிறோமா என்ற பதில் விளங்கா கேள்விகளும் அவளை அலைகளித்தன.
அதில் தன்னுள் மூழ்கியவள் தனித்து கொள்ளளாகினாள்.
அலுவல் விட்டு வந்த அமிழனுக்கு கிடைத்ததோ அவளிடம் கண்ட அந்நிய பார்வைகள் தான்.
தன்னை தள்ளி நிறுத்திய அவளின் பார்வைகளை கண்டவன் தனக்குள் இறுகினான்.
அவள் பேசாமல் தள்ளி நிறுத்திய ஒவ்வொரு நொடியும் அவனுள் ரணமாய் அறுந்தன.
நெடுஞ்சாலை போல் அவர்களுள் நீண்ட இடைவெளி முற்று பெற்ற நிலையில் மீண்டும் அவனை விட்டு அவள் செல்லும் பாதையின் திசை மாறினாலும் முடிவில் அவனிடம் வந்து சேர்ந்து அவனிடமே முற்று பெரும் என தன்னவளை நன்கு உணர்ந்து அறிந்தாலும், தனக்குள் சிந்தனையில் மூழ்கி இறுகியவளை கண்டே வருத்தம் முற்றான்.
' தோல் சாய்ந்து அவளின் எண்ணங்களை இரக்க நான் இல்லையா, பகிர்ந்து கொள்ள அணைத்துமாய் நான் இருக்க ஏன் தனக்குள் மறுகி அவளை வருத்திக்கொள்கிறாள்' என்ற கோபம் கொண்ட வருத்தமே அவனுக்கு ஓங்கி நின்றது.
ஒவ்வொரு முறையும் அவன் முன் வருத்திக்கொள்வதுமட்டுமில்லாமல் அவனை தள்ளி நிறுத்தும் அவளின் செய்கை கண்டு செயலறியா அவளுக்காக வருந்தினான்.
மௌனமாகவே பிறகு கழிந்த நாட்களில் இருவருமே மௌனத்தை உடைக்க முயலவில்லை.
********************
அன்றைய விடியல் இருவருக்கும் வேறு விதமாக அமைந்தன.
அவனின் தொலைந்த தன்னை மீட்க அவனாளே முடியும் என பலவாறு யோசித்து உணர்ந்து கொண்டவள், தெளிவுடன் மாலை வீடு திரும்பும் அவனுக்காக காத்து கொண்டிருந்தாள்.
எல்லாவற்றையும் அவனுடன் பகிர்ந்து அவனுக்கும் மட்டுமில்லாமல் அவளுக்கும் புரிய வைக்க வேண்டிய பதில்களை அவனிடம் வேண்டி, கேள்விகளோடு காத்துக்கொண்டிருந்தாள்.
அவன் வருகைக்கு முன் அவன் என்னை தாங்கி வந்தது அலைபேசி அழைப்பு.
அமிழனின் என்னை கண்டு அவள் மனம் கொண்ட ஆறுதலே உரைத்தது அவனுக்கான தேடலை., அந்த இனிமையோடே அலைபேசியை காதிற்க்கு கொடுத்தாள்.
" ஹலோ மாமா " என்று அலைபேசியை விரைந்து எடுத்த அவளின் கூற்றில் உள்ள மகிழ்ச்சியின் அளவுகோலை உணர்ந்தவன் நிச்சயம் இதை எதிர் பார்க்கவில்லை.
அலைபேசி எடுப்பாலோ மாட்டாலோ என்று எண்ணிக்கொண்டிருந்தவனுக்கு அவள் குரலில் உள்ள இனிமையை கண்டு ஒரு நொடி தடுமாறினாலும் அதை ஒதுக்கி அலைப்பேசி அழைத்திற்க்கான காரணியை சொல்லிவிட்டான்.
" டுக்.... தாக்ஷி, இளங்கோ அண்ணா அவங்க பாப்பாக்கு ஸ்கூல் லீவ்'னால பாப்பாவையும் அத்தாச்சியயும் ஊருல விட்டுட்டு வர இன்னைக்கு கிளம்புறாங்க , நீயும் அவங்களோடவே கிளப்பிடு ....
எல்லாம் பேக் பண்ணி ரெடியா வச்சுக்கோ...
ஈவினிங் சீக்கிரமவே கிளம்பனும்.." என அவனின் கூற்றில் இப்போது செய்கை அறியா நிற்பது தாக்ஷியின் முறை ஆகிற்று..
அவர்கள் சொந்த ஊரான நெய்யூலியில் நடைபெறவிற்கும் திருவிழாவிற்கவே இப்பயணம்,
பெங்களூரில் வசிக்கும் அவரகள் உறவான இளங்கோ குடும்பத்துடன் தாக்ஷி முன்னரே செல்வதாகவும், பின்னர் ஜெய்மி எய்டனை அழைத்து கொண்டு அமிழன் வருவதாகவும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பயணம் தான் என்றாலும் இப்போது இவ்வளவு விரைவாகவே அவனை விட்டு செல்ல போவதை அறிந்து அதிலும் அவளவனிடம் பேசி தெளிவு பெறாமல் செல்ல போவதை கண்டு உள்ளுக்குள் உழன்றாள்.
மாலையில் விரைவாக வீடு திரும்பிய அமிழன் அதே அவசரத்தோடு அவளை கிளப்பினான்.
அவனிடம் தனித்து பேசும் நேரம் அவளுக்கு கிடைக்க பெறவில்லை, அவனும் கொடுக்க வில்லை.
அவன் முகத்தை திரும்பி திரும்பி பார்த்தவாறே நடந்துவந்தவள் தடுமாறி விழப்போனத்தில் அவள் கையை பிடித்துக்கொண்டவன், பிறகு விடும் எண்ணமே இல்லாது மறந்து போக கோர்த்த கரங்களை பிரிக்கவில்லை. அவர்கள் குடியிருப்பு வாயில் வரை வந்தும்கூட சேர்த்த கைகளை விலக்கவில்லை.
தன் முகத்தையே அடிக்கடி திரும்பி திரும்பி தாக்ஷி பார்ப்பதை உணர்ந்தவன், அவள் கண்ணோடு கண் நோக்கி முகம் பார்ப்பதை தவிர்த்தான், எங்கே பார்த்தாள் தாமே அவளை அனுப்ப மாட்டாமல் இருந்துவிடுவோம் என்று நேராக பார்ப்பதை தவிர்த்தான்.
தாக்ஷியை இங்கிருந்தே ஏற்றிக்கொண்டு செல்லவதாக ஏற்பாடு... இளங்கோ குடும்பம் வந்துவிட்டதற்கான அடையாளமாக அவர்கள் குடியுருப்பின் முன் நெருங்கி வந்த அவர்கள் மகிழுந்தை கண்டவள் அவன் கைக்குள் இருந்த அவளின் கைகளை இப்போது அழுந்த பதித்து இம்முறை அவள் கோர்த்துக் கொண்டாள்.
விடைபெறும் நேரத்தில்
" மாமா... " என உள்ளிருந்து ஆழமாக அழைத்த அவனவளின் குரலில் தன்னை தொலைத்தவன் அவளை பார்த்து தோளோடு லேசாக அனைத்து விலகி
" பத்திரம் ஓகே.. நான் லீவ் கிடைச்ததும் சீக்கிரம் வந்துறேன் "
" எப்போ ... "
என அவள் அவனை பார்த்த பார்வை அவனுக்கு புதிது.
ஏக்கம் எதிர்பார்ப்பு என அணைத்துமாய் ஒற்றை பார்வையில் ஒற்றை கேள்வியில் பிரிவுக்கான அவளின் ஏக்கங்களை அவனுக்கு பறைசாற்றின.
அவளின் பார்வையின் கனத்தை உள்வாங்கியன்,
" சீக்கிரமே "
என அவளின் கையோடு அழுத்தம் கொடுத்து அனுப்பி வைத்தான்.
........................................
தாமததிற்கு மன்னுச்சு தோழமைகளே.... லிட்டில் வேலை அண்ட் லிட்டில் லெஸி...
இன்னும் 3 எபி தான். வித் இன் 4 டு 5 டேஸ்'ல கதை பினிஷ் பண்ணிடலாம்....
கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.
நன்றிகள்
கீர்த்தி