போற போக்கில் ஒரு காதல் 18
Posted: Wed Oct 07, 2020 9:56 pm
போற போக்கில் ஒரு காதல்" கதையின் இறுதி அத்தியாயம் பதிந்து விட்டேன் பிரெண்ட்ஸ்
அத்தியாயம் 18
கடும் பணி ஊடுருவும் ஞாயிறு கிழமை அதிகாலை வேலையில் ஊரும் வீடும் ஆழ்ந்த நித்திரையில் இருக்க சத்தமில்லாமல் எழுந்து கிளம்பி கொண்டிருந்தாள் தாக்ஷி.
இவள் கிளம்பி அறையை விட்டு வெளியே வர அங்கு அவளுக்கு முன்பே ஜெய்மி தயாராகியிருந்தாள்.
அறையை விட்டு வெளியே வந்த தாக்ஷி கதவை சாற்றிம் போது எழுப்பிய சத்தத்தில் திரும்பினாள் ஜெய்மி.
"பாத்துடி... மொத்த வீடே எழுந்துட போகுது "
"ஓகே .. ஓகே... போலாமா.. ரெடியா.." என்ற தாக்ஷி தொடர்ந்தாள்
"நேத்து கரோக்கி'னு ( karoke ) பெருல ஆடுன ஆட்டத்துக்கு நாம திரும்பி வருற வர முழிச்சுக்க மாட்டாங்க "
"அதுவும் கரெக்ட் தான்...
இன்னைக்கு ஆர்டர்லாம் அப்லோடு பண்ணிட்டியா... கீழ் ப்ளாட் சேச்சி அவங்க வீட்டுக்கு கெஸ்ட் வந்துருக்காங்கன்னு எஸ்ட்ரா இரண்டு கேட்டுருக்காங்க.."
"ம்ம்ம்... கொடுத்துடலாம்... சரி வா டைம் ஆகிடுச்சு கிளம்பலாம்... "
என அவர்களிடம் உள்ள சாவியால் வீட்டை பூட்டி பேசி கொண்டே கீழே வந்தவர்கள் வாகனத்தை எடுத்து கொண்டு கிளம்பி அந்த அதிகாலை குளிருக்கு பழகியவர்களாய் அவர்கள் குடியிருந்த பகுதியிலிருந்து சற்று தள்ளிருந்த இடத்திற்கு சென்று அந்த சின்ன கட்டிடத்தின் முன் நிறுத்தினர்.
வண்டியை பூட்டி விட்டு நிமிர்ந்த ஜெய்மி தன் முன் விரிந்திருந்த கட்டிடத்தை பார்த்து சில நொடிகள் அப்படியே நின்றாள்.
முன்னே சென்ற தாக்ஷி தோழியின் ஆரவம் இல்லாததால் அவளை திரும்பி பார்த்து அவளிடம் சென்று அவளை உலுக்கி என்னவென்று வினவவும்,
" ஒரு வருஷம் ஆகிடுச்சு தாக்ஷி " என கட்டிடத்தை சுட்டி காட்டினாள் ஜெய்மி.
ஆமாம் என்பது போல் தலையசைத்து தாக்ஷியும் ஜெய்மியோடு சேர்ந்து அவற்றை ஒரு நிமிடங்கள் ரசித்து சிலிர்த்து நின்றாள்.
அடுத்தடுத்து உள்ள வேலைகளை மனதில் நிறுத்தி கட்டிடத்தின் உள்சென்று மடமடவென்று வேலைகளை ஆரம்பித்தனர்.
எக்கோ க்ரீன் என்ற பெயரில் hydroponics ( மண்ணிலா விவசாயம்) முறையில் விவசாயம் பயிரிட ஆரம்பித்திருந்தனர் இருவரும்.
இதன் முழு யோசனை உழைப்புகள் பெண்கள் இருவரதுதான் என்றாலும் ஆரம்ப புள்ளி என்பது இருவரின் கணவர்களே.
பெங்களூருக்கு ஜெய்மி வந்ததில் இருந்து இரு குடும்பத்திற்கும் வார விடுமுறை நாட்கள் என்பது ஒன்றாக ஒரே வீட்டில், அவ்வாறான ஒரு பொழுதில் பெண்களை நோக்கி அமிழன் ஆரம்பித்து வைத்த கேள்வி தான் அவர்களின் இன்றைய நிலைமைக்கு ஒரு ஆரம்பப் புள்ளி.
"உங்க ரெண்டு பேருக்கும் நெக்ஸ்ட் என்ன பிளான் ? " என அமிழன் கேட்கவும்
எய்டனும் அதையே அமோதித்து
"அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்கீங்க " என கேட்டவுடன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பீதியானவர்கள்
பார்வையாலே பேசி கொள்ளவும் செய்தனர்.
'என்ன ஜெய் இது .. திரும்பவும் கம்ப்யூட்டரா...'
'ச்சே ச்சே ... அப்படி இருக்காதுடி.. இரண்டு பேருக்கும் தெரியும் நமக்கு அது பிடிக்காதுனு, அத விட வராதுனு ரொம்ப நல்லாவே தெரியும்'
'அப்போ வேற என்ன.. இவங்க இரண்டு பேர் மாதிரி நம்மையும் டூயல் டீகிரி பண்ண சொல்லுவங்களோ '
'அச்சச்சோ இருக்குமோ ... இப்ப என்ன பண்ணுறது தாக்ஷி'
என தங்களுக்குள் கண்களால் பேசி கொண்டிருந்த தோழிகள் இருவரின் பார்வை பரிமாற்றத்தை நிறுத்தினான் அமிழன்.
"நாங்கலாம் கிடைச்ச வேலைய பிடிச்சு செய்யிறோம்,
ஆனா நீங்க உங்களுக்கு பிடிச்ச வேலைய செய்யலாம்..... எல்லாருக்கும் பிடிச்ச வேலைய செய்யிற சான்ஸ் கிடைக்காது, சோ உங்களுக்கு என்ன பிடிக்குதோ அதை சொல்லுங்க.. "
என்ற அமிழன் கூறிய மறு நொடி இருவரும் ஒரு சேர கூறிய சொல் 'இயற்கை விவசாயம்'.
வியந்து அவர்களை பார்த்த ஆண்கள் இருவரிடம்
"ஆமா மாம்ஸ் எங்க காலேஜ்ல நடந்த எவர்க்ரீன் ப்ரோக்ராம்ல கலந்துகிட்ட நாங்க அதுல ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டோம் " என ஜெய்மி கூறவும் தாக்ஷி,
"அது மட்டுமல்ல, சென்னை அக்ரிகல்சர் டிபார்ட்மெண்ட் நடத்தின மூணு ப்ரோகரம்லயும் நாங்க ரொம்ப ஆர்வமா கலந்துகிட்டோம் "
"எஸ் ... செம எக்ஸ்ப்ரியனஸ், நிறைய கத்துகிட்டோம், ரொம்ப அழகா தெளிவா சொல்லி கொடுத்தாங்க.. ஃபுல் டே ப்ரோக்ராம், அவங்களே லன்ச்'சும் ஸ்பான்சர் பண்ணுனாங்க "
"யம்மி ஃபுட்ல ஜெய்... என்ன ரைத்தா தான் கொஞ்சம் புளிப்பு அதிகம் ஆகிடுச்சு "
"ம்ம்ம் ஆமா தாக்ஷி, அத தவிர மத்த எல்லா டிஸ்ஸும் யம்மில"
என விவசாயத்தில் ஆரம்பித்து பச்சடியில் முடித்த தோழிகள் இருவரையும் கண்டு அமிழன் தனக்குள்ளும் எய்டன் வெளிப்படையாகவும் தலையில் அடித்து கொண்டனர்.
"ஆர்கானிக் அக்ரிகல்சர் ரொம்ப நல்ல விசயம் தான் பட் அத எப்படி செயல்படுத்துவீங்க " என்று வினா எழுப்பிய எய்டன் தன் முன்னிருந்த தண்ணீர் நிரம்பிய குவளையை எடுத்து பருக ஆரம்பித்தான்.
"ஏன் பண்ண முடியாது... நெய்யூலில நமக்கு அக்ரி லாண்ட் இருக்குல... அங்க ஆரம்பிப்போம் "
"அதே தான்... நாங்க நிறைய புது விசயம்லாம் கத்துகிட்டோம், எந்த எந்த சீசன்க்கு எதை பயிர் செய்ஞ்சா ப்ராஃபிட் வரும், அப்புறம் ஊடுபயிர் முறை, தண்ணீர் வளம் இல்லாதப்போ என்ன பண்ணலாம், அவுட்புட் அதிகமா இருக்கும் போது எப்படி சேமிக்கலாம்னு புது புது ஐடியா எல்லாம் கத்திக்கிட்டோம்... "
"நாங்க கத்துகிட்டத வச்சும் ஊருல எல்லார்கிட்டயும் இன்னும் தெளிவா கத்துகிட்டும் விவசாயம் செய்வோம்"
"ஆர்கானிக் வெஜிடபிள் ஷோ ரூம் புதுக்கோட்டைல ஆரம்பிச்சுடலாம் தாக்ஷி, இப்ப அப்பா அவர் கிளினிக் எக்ஸ்டன்ட் பண்ண வாங்கிருக்குற காம்ப்ளக்ஸ்ல நாம கடைய போற்றலாம் "
"ஹே சூப்பர் ஜெய், அப்படியே அப்பா கடைக்கு ப்ரொவிஷனல் வாங்க வர கஸ்டமர்ஸ இங்க திருப்பி விட சொல்லுவோம் "
"அப்புறம் என்ன நாமளே விவசாயம் பண்ணி நாமளே சேல் பண்ணிடலாம்.. ஆனா நாம அக்ரி பண்ற வேலைய இருக்கும் போது கடைய யாரு பாத்துப்பா "
"ஆமால.. அது ஒன்னு இருக்குல, அப்போ நாம கடைய ஈவினிங் மட்டும் போட்டுக்கலாம ஜெய்.. மார்னிங் நெய்யூலில ஒர்க் முடிச்ச்சுட்டு ஈவினிங் புதுக்கோட்டைக்கு வந்துடலாம்"
"இல்ல தாக்ஷி அது சரியா வராது.. மார்னிங் தான் சேல் அதிகம் இருக்கும் அப்போ கடை ஓபன்ல இருக்கனும்.. "
"பட் கடைய பார்த்துக்க ஆளு??..., அப்பா சித்தப்பா இரண்டு பேரும் அவங்க கடைல பிஸியா இருப்பாங்களே... ஸ்டார்டிங் நாம வெளிய இருந்து ஆள் போட்ட நல்லா இருக்காதே ஜெய்.... "
" ஹே ஐடியா.. அப்பா இப்போலாம் ஈவினிங் கன்சல்டன்சி தான் பாக்குறாங்க, பகல்ல ஏதாவது எமெர்ஜென்சி கேஸ் மட்டும் தான்..
சோ அப்பாவ மார்னிங் கல்லால உட்கார வச்சுடுவோம்....
ப்ராப்ளம் சால்வட்...
அப்படியே அவர் பேஷன்ட்ஸ்சும் நமக்கு கஷ்டமர் ஆகிடுவாங்க....
ஹை ஃபை " என இருவரும் மடமடவென முடிவு எடுக்கவும் எய்டன் தண்ணீர் குவலையை கீழே வைக்கவும் சரியாக இருந்தது.
' ஒரு க்ளாஸ் தண்ணி குடிக்குறதுக்குள்ள என்ன வேகமா பிளான் பண்ணுறாங்க...., நட்சத்திர ஜன்னல் சாங்'கே இவங்ககிட்ட தோத்திடுச்சு' என அதிசியத்தவன் அமிழனை பார்த்தான்.
அமிழனும் தன்னை போலவே விழித்து கொண்டிருந்ததை கண்டு அருகில் இருந்த மற்றொரு தண்ணீர் நிறைந்த குவலையை எடுத்து அவனிடம் கொடுத்து அமிழன் ஆசுவாச படுத்த உதவினான்.
இருவரும் சற்று ஒரு சேர ஆசுவாச படுத்தி கொண்டவர்கள்,
"எல்லாம் ஓகே.. பெங்களூர்ல இருந்துட்டு நெய்யூலில எப்படி விவசாயம் பண்ணுவீங்க " என எய்டன் கூறவும் அதை வேகமாக அமோதித்தான் அமிழன்.
"நீங்க சொல்றது ரொம்ப நல்ல விஷயம்..
பட் இட் நீட்ஸ் டைம்.. இப்போ எங்களால வேலைய விட்டுட்டு வர முடியாது இல்லயா...
சோ இங்க இருந்தே பாக்குற மாதிரி ஒரு நல்ல ஐடியா சொல்லுங்க, அத செயல் படுத்திடலாம் "
என்ற அமிழனின் கூற்று பெண்களுக்கும் சரியாக படவே அடுத்த வாரமே தோழிகள் இருவரும் கொண்டு வந்த திட்டம் தான் ஹைட்ரோபோனிக்ஸ் ( hydrophonics) முறையிலான மண்ணில்லா விவசாயம்.
இவர்களின் யோசனையை வியந்து மெச்சிய ஆண்கள் இருவரும் அவற்றை அவர்கள் முறையாக கற்க வைத்து திட்டத்தை செயலாக்கவும் வைத்தனர்.
அவர்கள் பகுதியில் இடம் தேடி அது அவர்கள் பட்ஜெட்டில் வராததால் கொஞ்சம் அருகில் அவர்களுக்கு தேவையான தனி கூரையை தேடியவர்களுக்கு எதிர்பாரத இடத்தில் இருந்து உதவி வந்தது.
அவர்கள் பகுதி கவுன்சலர் அமிழன் தந்தையின் மாணவர், ஆகையால் அமிழனுக்கு இங்கு வந்ததில் இருந்து அவருடன் மரியாதை நிமித்தம் பழக்கம் உண்டு.
இவர்கள் இடம் தேடி அலைவதை கண்டவர் என்னவென்று அழைத்து விசாரித்து அதே பகுதியில் உள்ள அவர்க்கு சொந்தமான காலி மனையை கொடுக்க முன் வந்தார். அவர் ஏற்கனவே மனையின் ஒரு பகுதியை யோகசனங்கள் பயில இலவசமாக வழங்கியிருந்தார். இப்போது அமிழன் தந்தை மேல் கொண்ட மதிப்பில் இவர்களுக்கும் இலவசமாக அளிக்க முன் வந்தவரை மறுத்து இடத்தை ஐந்து ஆண்டு குத்தகைக்கு எடுத்து கொண்டனர்.
அதன் பின்னர் மடமடவென வேலைகள் நடந்தன. ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயத்திற்கு ஏற்ப கட்டிடம் எழுப்பி தேவையான உபயகரங்கள் வாங்கி பயிரிட ஆரம்பித்து விட்டனர்.
ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம் என்பது ஒரு கூரையின் கீழ் முற்றிலும் மண்ணில்லாமல் நீரை கொண்டு பயிரிடப்படுவையாகும். ஒரு தாவிரத்திற்க்கு அது வளர தேவையான அனைத்து விதமான சத்துக்களும் நீரிலே கிடைத்து விடும். எல்லா விதமான நுண் ஊட்டசத்து கலந்த நீரிலே செடியின் வேர்கள் படர்ந்து வளர்கின்றன.
நீரில் செடிகள் செங்குத்தாக நின்று வளர ஆதாரமாக பயிரிட படும்.
இதில் கவனிக்கபட வேண்டிய முக்கிய விஷயம் இந்த முறை விவசாயத்தில் மற்ற முறையை விட என்பது சதவீதம் மேல் தண்ணீர் மிச்சமாகும்.
இயற்கை முறையில் மண்னே எழுபது சதவீத தண்ணீரை இழுத்துக்கொள்ளும்.
இதில் அவ்வாறு இல்லையாதலாலும் மற்றும் அறுவடை செய்யப்பட்ட பயிர்களின் தண்ணீரையும் மறுசுழற்சி செய்து மீண்டும் உபயோகிப்பதாலும் நீர் அதிகமாக சேமிக்க படுகிறது.
ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம் முறையை தேர்ந்தெடுத்த பெண்கள் இருவரும்
அதில் விதவிதமான கீரையை பயிர் செய்யும் முடிவுக்கு வந்தனர்.
செங்குத்தாக வளர்வதால் மற்ற முறையை விட ஐந்து மடங்கு வேகமாகவும் மகசூல் அதிகமாகவும் கொடுத்தது.
மாசு முற்றிலும் இல்லாத சுத்தமான சுற்று புறத்தில் வளர்ந்த, ரசாயன பூச்சிக்கொல்லிகள் முற்றிலும் பூஜ்ஜியமான கீரை வகைகள் சுவைமிக்க இருந்தன. அதுவும் அறுவடை செய்யப்பட்ட கீரைகள் சில நிமிடங்களிலே அழகாக உரையிடப்பட்டு வெகு விரைவிலே அவர் அவர் வீட்டில் சேர்க்க பட்டன.
சிறிதாக ஆரம்பித்த அவர்களின் விற்பனைக்கு வாடிக்கையாளர்கள் வெகு விரைவிலே பெருகினர்.
ஆரம்ப காலத்தில் அவர்கள் பகுதியில் அவர்களே சென்று விநியோகம் செய்ய ஆரம்பித்தவர்கள் பெங்களூர் நகரம் முழுவதும் சிறிது சிறிதாக விரிவடையவும், நகரை பகுதி வாரியாக பிரித்து ஏரியா'க்கு ஒருவராக ஜோமன்ட்டோ ஊழியர்கள் சில பேர்களிடம் ஒப்பந்தம் வைத்துக் கொண்டனர்.
இவை அனைத்தும் காலை வேளையிலே விநியோகம் செய்து முடிந்து விடுவதால், அவர்களுக்கும் அவர்கள் வேலையில் தடங்கள் இல்லாமலும் ஒவ்வொரு வினியோகத்திருக்கு விகிதமாக லாபம் கிடைப்பதால் அவர்களும் ஒரு அங்கமாகி, நேரத்தோடு வாடிக்கையாளர்களின் வீட்டில் விநியோகம் செய்தனர்.
தெளிவான மற்றும் விரிவான திட்டமிடல் தோழிகள் இருவரையும் வேகமாக வளர்த்தது. இணையதளம் ஒன்று ஆரம்பித்து அதில் சந்தா ( subscription ) முறையில் நாள் சந்தா, வாரம் இருமுறை சந்தா, வாரம் மூன்று முறை, நான்கு முறை சந்தா என ஆரம்பித்து அதில் வாடிக்கையாளர்களை சேர்த்தனர்.
அவர்களின் சுவைமிக்க சத்தான கீரைக்கு விளம்பரம் இல்லாமலே பெங்களூர் நகரம் முழுவதும் வாடிக்கையாளர்கள் பெருகியது.
கீரை மட்டுமில்லாது இப்போது இதர சில காய்கறிகளையும் பயிரிட்டு அதன் அறுவடை காலத்திற்க்கு சில நாட்கள் முன்பே இணையதளத்தில் அறிவித்து விடுவார்கள். அதற்கேற்ப விற்பனையும் ஆகிவிடும்.
கீரைகளை போல் மற்றவையும் அறுவடை செய்யப்பட்ட சில நிமிடங்களிலே அதே மலர்ச்சியோடு வாடாமல் உடனே வாடிக்கையாளர்களிடம் சேர்க்கப்பட்டது.
இதோ உள்ளே நுழைந்தது முதல் ஒரு நொடிகள் கூட வீணாக்காமல் விரைவாக வேலையில் இறங்கி செடிகளுக்கு நீரை மாற்றி தரம் பார்த்து அறுவடை செய்து உரையிடப்பட்டு, சரியான
முகவரியோடு விநியோகம் செய்பவர்களிடம் ஒப்படைத்து விட்டே மூச்சு விட்டு அமர்ந்தனர்.
*********************
வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்த ஜெய்மி மற்றும் தாக்ஷி இருவரும், அவர்கள் கண்ட காட்சியில் இதழ்கள் விரித்து புன்னகைத்தனர்.
அமிழனிடம் ஓவியத்திற்க்கு சரியான முறையில் வண்ணம் தீட்ட பயின்று கொண்டிருந்தவர்களை எய்டன் அழைத்து பாடவும் அவனுடன் சேர்ந்து பின் பாட்டு பாடினர் இரு வீட்டின் அடுத்த தலைமுறைகளான சின்ன சிட்டுகள்.
ஜெய்மி எய்டனின் மகவு ஷரோன், அமிழன் தாக்ஷியின் மகவு மைத்திரி. இருவரும் அவர்களின் அன்னைகளை போல் ஒரே வருடத்தில் முன்னர் பின்னர் பிறந்து ஒன்றாக வளரும் தோழிகள்.
வார விடுமுறை எப்பவும் போல் இப்பவும் இரு குடும்பங்களும் ஒன்றாக ஒரே வீட்டில்.
"என்ன திரும்ப ஆரம்பிச்சாச்சா.. இந்த ரைம்ஸ் விட்டுட்டு வேற எதுவும் புதுசா சொல்லி கொடுக்க மாட்டீங்களா.. " என உள்ளே நுழைந்த வாரே எய்டனை பார்த்து ஜெய்மி லேசான முறைப்புடன் கூறினாள்.
எய்டன் பாடி அவர்களின் மகவுகள் பின் பாட்டு பாடிய பாட்டு கீரை விதைப்போம் கீரை விதைப்போம் என்ற மழலை பாட்டாகும்.
"இது என்னடா வம்பா போச்சு, அவங்க அம்மாஸ் வீடு வீடா கீரையை விக்கும் போது பசங்க கீரை ரைம்ஸ் பாட கூடாதா "
"அதுக்காக இந்த ஒத்த ரைம்ஸ் வச்சே ஓட்ட கூடாது.. "
"இப்பவே இந்த ரைம்ஸ் மூலமா பசங்களுக்கு எக்கோ க்ரீன் ஊட்டி வளர்க்குறேன், அதுக்கு நீ என்னை பாராட்டனும்..
என்ன ஒரு அழகான பாட்டு... இந்த பாட்டை நீ குறைச்சு எடை போட்டுட்ட ஜெய்..
நான் என்ன 'கட்டு கட்டு கீரை கட்டுனு' மூவி பாட்டா சொல்லி கொடுக்கிறேன் " என சினிமா பாட்டை எய்டன் பாடி காட்ட, அவர்கள் வீட்டின் சின்ன சீட்டுகளும் எப்பவும் போல் அவனை பின்பற்றி முதல் வரியை பின் பாட்டு பாடவும் நிஜ முறைப்போடு எய்டனிடம் திரும்பினாள் ஜெய்மி,
" அச்சோ.... பாருங்க பசங்க ஃபாலோ பண்ணுறாங்க.. உங்கள... "
என நீளவிருக்கையில் இருந்த குஷனை எடுத்து எய்டனை மொத்த தொடங்கவும் அதனை கண்டு ஷரோனும் மைத்திரியும் குஷியாகி இம்முறை ஜெய்மியை பின்பற்றி எய்டனை மொத்த துரத்தினார்கள்.
இவர்களை கண்டு வாய் விட்டு நகைத்த தாக்ஷியோ நீளவிருக்கையில் கைகளை படர விட்டு அமர்ந்திருந்த அமிழனின் அருகே சென்று அமர்ந்து அவனோடு சேர்ந்து ரசித்தாள்.
மாட்டிருந்த ஹூடியை தலையில் இருந்து விடுதலை கொடுத்தவளிடம்
" இன்னைக்கு பனி அதிகமா... ரொம்ப டயர்டா வேற தெரியுற டுக்கு... "
"சண்டே'ல மாமா... கொஞ்சம் ஆடர்ஸ் அதிகம்" என சோர்வாக தலை சாய்த்தவளின் நெற்றியை நீவி விட்டவன்,
" காஃபி போடட்டும்மா.. சூடா குடிச்சா கொஞ்சம் பெட்டரா இருக்கும் "
இங்கு மாட்டிக்கொண்டு இடைவெளியே இல்லாமல் முன்முனை தாக்குததால் தாக்கப்பட்டுக்கொண்டிருந்த எய்டன் அமிழனை பார்த்து,
"ப்ரோ... இங்க நான் மொத்து வாங்கிற்றுக்கேன், காப்பாத்துவீங்கனு பார்த்த சைட் கேப்'ல ரொமான்ஸ் பண்ணிட்டுருக்கீங்க" என்று கூறியவன் பிள்ளைகளிடம் திரும்பி,
"குட்டிஸ்... அமிழனப்பா கலர் பண்ணினதும் சாக்லேட் பான் கேக் ( Pan Cake) பண்ணி தரேனு சொன்னாங்கள.. ஓடுங்க ஓடுங்க போய் கேளுங்க " என பிள்ளைகளை திசை திருப்பியவன் ஜெய்மியிடம்,
"கொஞ்சம் கேப் விட்டு அடிடி.. டையர்ட் ஆகிருப்ப ஜூஸ் சாப்பிட்டுட்டு வந்து கன்டினியூ பண்ணு " என கூறி அதற்கும் ஜெய்மியிடம் இரண்டு மொத்து வாங்கினான்.
"ஹே ... சாக்கி பான் கேக் " என இரு சிட்டுகளும் அமிழனை உலுக்கவும்
"ஓகே.... ரைட் ரைட்.. பான் கேக்'க்கு முன்னாடி சாக்லேட் கேக் சாப்பிடலாமா " என அமிழன் அவர்களிடம் வினா எழுப்பவும், அதில் அவர்களின் குண்டு கண்கள் விரிந்து குதித்தனர்.
"கேக்கா... இப்போவா... எப்போ வாங்குனீங்க மாமா" என கேட்ட தாக்ஷியிடம்,
" சர்ப்ரைஸ்... " என இருக்கை விட்டு எழுந்தவன் எய்டனை பார்த்து சைகை செய்யவும் இருவரும் உள்ளே சென்று தீபம் ஏற்றப்பட்ட கேக்'கோடு வெளியே வந்து,
" கங்க்ராஸ்ஸ்ஸ்...... இட்ஸ் அ செலிப்ரேஷன் டே.. உங்களோட ஒன் இயர் வெற்றிகரமான கம்பிளிஷனுக்கு வாழ்த்துக்கள்..." என கூறி இருவருக்கும் வாழ்த்து சொல்லவும் பிள்ளைகளும் சேர்ந்து கொண்டு ஆர்ப்பரித்தனர்.
ஜெய்மி, தாக்ஷி இருவரும் ஒன்றாக கேக் வெட்டி தங்களுக்கும், பிள்ளைகளுக்கும், தத்தமவர்களுக்கும் கேக்'குடன் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.
அதே மகிழ்வோடு காலை உணவை முடித்து ஜெய்மி தாக்ஷியின் வீடு, பிரபு, இளமதியன் என அனைவரின் வாழ்த்தை பெற்று மகிழ்வை அனைவருடன் பகிர்ந்து அமர்ந்திருந்தவர்களிடம் அலைபேசியில் தனக்கு வந்த அழைப்பை ஏற்று பேசி முடித்து வந்த எய்டன் மேலும் அந்நாளின் மகிழ்வை அதிகரித்தான்.
" அண்ட் ஒன் மோர் சர்ப்ரைஸ் ஃபார் யூ, உங்களோட ப்ர்ஸ்ட் இன்டெர்வியூ இன்னைக்கு போடுறாங்க... வாங்க வாங்க பாக்கலாம் " என கூறி தொலைக்காட்சியை உயிர்பித்தான்.
" ஃப்ரைடே தான் இன்டெர்வியூ எடுத்தாங்க அதுக்குள்ளவா டெலிகாஸ்ட் " என்ற ஜெய்மியிடம்
"இது என்ன பாகுபலி மூவியா... எடிட்டிங், விஃப்எக்ஸ்'னு டைம் எடுக்க,
இன்னைக்கு உங்க பர்ஸ்ட் ஆனிவெர்சரினு சொன்னோம் ஆதான் எடுத்தத வெட்டி ஒட்டி இன்னைக்கே போடுறாங்க "
"உங்கள..... வாங்குன மொத்துலாம் பத்தாது போலயே.. " என்றவள் ஷரோன் மைத்திரியிடம் திரும்பி ," பசங்களா செகண்ட் ரௌண்ட்க்கு ரெடியா " என கூவவும் வேகமாக சரண்டர் ஆகினான்.
"போதும்... அடுத்த கோட்டாக்கு எனக்கு தெம்பு இல்ல...
இப்ப வாங்க உங்க சக்ஸஸ் ஸ்டோரிய பாப்போம் " என்றவன் பிள்ளைகளிடம் திரும்பி
"ஷரோ, மைத்து வாங்க, வாங்க... அம்மா டிவில வர போறாங்க.... பாப்போமா.... "
என இருவரையும் அள்ளி கொண்டு அவர்களின் பீன் பாக்'கிள் அவர்களை வசதியாக அமர்த்திவிட்டு அவனும் அவர்களின் அருகே உள்ள நீளவிருகையில் அமர்ந்து பார்க்க ஆரம்பித்தான்.
எய்டன் அருகே ஜெய்மி, அடுத்து தாக்ஷி அமிழன் என முறையாக வரிசையாக அமர்ந்து பாரக்க ஆயுத்தமாகினர்.
இரு ஆண்களுக்கும் தன்னுடையவர்களின் இந்த அபரிதமான வளர்ச்சியில் பெருமையே, சிறிதாக என்று ஆரம்பித்து அதில் இந்த ஒரு வருடமாக தெளிவான திட்டமிடலுடன் உழைப்பை போட்டு விரிந்து வளர்ந்து நிற்கும் தன்னவர்களை கண்டு இரு ஆண்களுக்கு என்றும் போல் இன்றும் மனம்கொள்ளா பெருமை.
'அ இயர் ஆஃப் எவர் க்ரீன் ட்வின் கேர்ள்ஸ்' என்ற தலைப்போடு ஆரம்பித்து சின்ன சின்னதாய் அவர்களின் கட்டிடம் முதலில் திரையில் வந்தன, அடுத்தாக பயிர்களை ஜூம்-இன் ஜூம்-அவுட்'டில் அழகாக பிரிதிபலித்து தாக்ஷி ஜெய்மியிடம் வந்து நிறைந்து அவர்களின் ஒரு வருட வெற்றி பயணத்தை சுவாரஸ்யமாக பதிவு செய்த காட்சியை தத்தம் துணைகளோடு கண்டு களித்தனர்.
அமிழனின் கைவலைகளுள் வாகாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு மணம் நிறைந்திருந்தது.
தான் கொண்ட நேசத்தை இன்னது என்று பெயரும் இல்லை ஒரு வட்டத்திற்குள்ளும் இல்லை என்று கூறியவனிடம் பதிலுக்கு திகட்ட திகட்ட அவள் கொண்டுள்ள காதலை அவனுக்கு உணர்த்தினாள் பெண்ணவள்.
தன்னையே தொலைத்து , வேறங்கோ எங்கோ தன்னை தேடி கொண்டிருந்தவள் இறுதியில் அவனிடம் தன்னை கண்டுகொண்டாள்.
முற்றும் ...
அவங்களோட சக்ஸஸ் ஹிஸ்டர்ய அவங்க பார்க்கட்டும்.. வாங்க நாம அங்க இருந்து அப்படியே ஜூம் அவுட் பண்ணி வெளியே வந்துடலாம்.
ஒரு வழியா ஒரு போக்கில போய்ட்டிருந்த கதையா அது போக்கிலயே போய் முடிச்சாச்சு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:...
Hydrophonics பத்தி இதுக்கு மேல விரிவா சொன்னா கட்டுரை மாதிரி ஆகிடும்னு தான் என்னால முடிஞ்ச அளவு ஷார்ட்டா முடிச்சிட்டேன்.
Future farmingல இதுவும் ஒரு மாற்ற'அ இருக்கும்னு நினைக்கிறேன்.
"போற போக்கில் ஒரு காதல்" ஒரு சிம்பிள் லவ் ஸ்டோரியா தான் கொடுக்கனும்னு நினைச்சேன்.
ஹோப்பிங் அப்படிதான் கொடுத்திருக்கேன்னு நினைக்கிறேன் :unsure::rolleyes::ROFLMAO::love:
கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.
நன்றிகள்
கீர்த்தி