"போற போக்கில் ஒரு காதல்" கதை அத்தியாயங்கள் 1 டு 3 பதிந்து விட்டேன் நட்டுபுஸ்,
கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.
அத்தியாயம் 1
நமக்கே நமக்கான எந்த வேலைகளும் இல்லாத ரம்மியமான மாலைபொழுது, ஏழாவது மாடி பால்கனி, சுற்றிலும் குட்டி குட்டி அழகான செடிகள், சில்லுனு குளிர் காத்து, மனதிற்கு இனிய பாட்டு...... கையில் சூடான காபி....
ஒய்யாரமான ஏழாவது மாடிபால்கனியில் நின்று ஊரையே பார்த்து, லயித்து காபியை சிப் பை சிப்பா ரசித்து குடிக்கும் அந்த அழகான தருணம் !!!!!! எ ஹாட் காபி ஆன் எ சில் ஈவினிங் மேக் எ ஸ்பெஷல் மொமெண்ட் இல்லையா…..
ஆனால் இந்த இனிமையை ரசித்து அனுபவிக்கிறாளா இல்லையா வென்றே தனக்கு தெரியாத ஒரு மோன நிலையில் அருந்திக்கொண்டிருந்தாள் பெண்ணவள், அவள் தாட்சாயினி.
காபி கப்பை கீழே வைப்பதற்கும் அலைப்பேசி அழைப்பதற்கும் சரியாக இருந்தது... யாரென்று அழைப்பை பார்த்தவள், மகிழ்ச்சி கொண்டு பேச போகிறாளா இல்லை மகிழ்ச்சியற்றா என்பது அவளுக்கே வெளிச்சம், இல்லை அவளுக்கே புரியவில்லை புரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.. அழைப்பது என்னவோ அவளின் ஆருயிர் சித்தி வேணுவிசாலாட்சி தான்..
"சொல்லு வேணும்மா"
"தாக்ஷி எப்படி கண்ணு இருக்க "
"ம்ம், நேத்து மாதிரியே இன்னைக்கும் நல்லா இருக்கேன் "…… தினமும் மகவுடன் பேசினாலும் அவரின் வழமை மாறாது. எப்போதும் போல் வழக்கமான சம்பாசனைகளை தொடரவும் மறக்கவில்லை
அங்க வெயில் இருக்கா, குளிருதா, இங்க மழை எவ்வளவு சென்டிமீட்டர் பெய்ஞ்சுச்சு, என தொடர்ந்தவருக்கு
இடக்கு மடக்கா பதில் அளித்து போனை அணைத்து உள்ளே சென்றாள். மொபைலை சோபாவில் தூக்கி போட்டுவிட்டு அதிலே அவளும் அமர்ந்து எதிரே சுவரில் பெரிதாய் அலங்காரமாய் இருந்த தனது திருமண புகைப்படத்தை வெறித்தாள், அதில் அவளின் மணாளனின் கண்களில் இருந்த சிரிப்பு அவள் கண்களை எட்டவில்லை, நிலை என்னவோ அதே மோன நிலை தான். தனது திருமண புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தவளின் மனநிலையை அவள் புரிந்து கொள்ள விரும்பவில்லை.
---------------------------------------------------------------------------------------
அதேயல்ல, அடுத்த நாள், ரம்மியமான மாலைப்பொழுது ,அதே பால்கனி ஏழாவது மாடி பால்கனி, சுற்றிலும் குட்டி குட்டி அழகான செடிகள், சில்லுனு குளிர் காத்து மனதிற்கு இனிய பாட்டு...... கையில் சூடான காபி. ஆனால் மோன நிலையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. இம்முறையும் காபி கப்பை கீழே வைக்கவும் அலைப்பேசி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது..
ஒரு வித்தியாசம் இன்று அழைத்து அவளின் சித்தியல்ல தாட்சாயினியின் உயிர் தோழி ஜெய்மி, ஜெய்மி பிரிஸில்லா..
தன் தோழியின் அழைப்பை பார்த்தவள் தன் மோன நிலையை விட்டு வெளியே வந்து, ஹாப்பினஸ் டெசிபல் அதிகரித்தே அழைப்பை எடுத்தாள்.
"ஜெய், எப்படி டி இருக்க, காட்….. எத்தனை நாள் ஆச்சு ஜெய் உன்ன பாத்து, காலும் பண்றதில்ல, அவ்வளவு பிஸியா எரும " என குதிக்காத குறையா அளவளாவினாள்.
"பொறு பொறு, ஓவர் எக்சிஸிட் ஆகாத டியர், மீதி எல்லாத்தையும் நாளைக்கு வச்சுக்கலாம்"
"நாளைக்கா......" குழம்பினாள் தாட்சாயினி
" ம்ம் நாளைக்கே தான், நாளைக்கு இந்நேரம் டீ குடிக்க உன் பக்கத்துல நான் இருப்பேன் " என ஜெய்மி கூறவும் இம்முறை தாட்சாயினி நிஜமாகவே துள்ளி குதித்தாள்.
"ஹே ஜெய் நிஜமாவா ??"" அவளுக்கோ அவ்வளவு ஆனந்தம்.
"நிஜமே நிஜம் தான் தாக்ஷி, இந்த வீக் எண்ட் உன்கூடத்தான் "
"மேக் இட் அஸ் ஒன் வீக் ஜெய், லீவ் போட்டுட்டு வா, நாம நேர்ல பாத்துகாத இந்த இரண்டு மாசம் இருக்கு நாம பேசுறதுக்கு"
"அதான் நெஸ்ட் நீ என்னோட ஒன் வீக் இருக்கபோறியே " என தன் தோழியை மேலும் குழப்பினாள் ஜெய்மி பிரிஸில்லா.
தாட்சாயினியோ "ஹே என்ன உளறுற ஜெய், எனக்காக இப்போ லீவ் போட்டுட்டு வரமாட்டியா நீ" என ஆதங்கபட்டாள்.
"வெயிட் வெயிட் தாக்ஷி முழுசா கேளு குரங்கே, இப்பவே லீவ் எடுத்துட்டா அப்புறம் என் கல்யாணத்துக்கு என்ன பண்றதாம்"|
"வாவ், ஜெய் ... நிஜமாவா... " என அவ்வளவு மகிழ்ச்சி இருந்தது அவளின் குரலில்.
"ஆமா என் செல்ல தோழியே ஜெய்மி பிரிஸில்லா மற்றும் எய்டன் ஜோஷுவாவின் திருமணத்திற்கு தாட்சாயினி மற்றும் மிஸ்டர் தாட்சாயினியை அழைப்பதற்கு ஜெய்மி, எய்டன் இருவரும் சரியாக இருபது மணி நேர கால அவகாசத்தில் அங்கு பெங்களூரில் இருப்பார்கள் என தெரிவித்து கொள்ளப்படுகிறது "
"செம சரப்ரிஸ் ஜெய், நாளைக்கு வர எப்படி வெயிட் பண்ண போறேனே தெரில இப்பவே உன்ன பாக்கணும் போல இருக்கு, வீட்ல என்ன சொல்லி கன்வின்ஸ் பண்ணுன "
"பொறும பேபி பொறும, எல்லாம் நாளைக்கு வந்து கத கதைய பேசுவோம் ஒகே "
"நான் எவ்வளவு ஹாப்பியா இருக்கேன் தெரிமா ஜெய், ப்பா உன் லவ்வாச்சும் சக்சஸ் ஆச்சே " என தாட்சாயினி கூறுவது சாதாரணமாக தெரிந்தாலும் அதன் பின்னே உள்ள தன் தோழியின் வலி ஜெய்மிக்கு தெரியாத என்ன
சில நொடி அமைதிக்கு பின் "தாக்ஷி ...., நீ இன்னும் எதையும் மறக்கலயா " என ஆழ்ந்து வினவியது ஜெய்மியின் குரல்
***********
அந்த பக்கம் பதில் வராத தாட்சாயினி மௌனத்திலே அவள் எதையும் மறக்காமல் இன்னும் தன்னுள் குழப்பிக்கொண்டிருப்பதை இருப்பதை உணர்ந்து கொண்ட ஜெய்மி தனது பெங்களூர் விஜயத்தில் நிச்சயம் தன் தோழியிடம் மாற்றம் ஏற்படுத்திவிட்டு தான் திரும்ப வேண்டும் என தன்னுள் உறுதி கொண்டாள். தன்னை விட்டு வந்த இந்த மாதங்களில் தன் தோழி மகிழ்ச்சியாக இருப்பாள் என நம்பி கொண்டு இருந்தவளுக்கு அவள் இன்னும் சிறிது கூட மாறாமல் இருப்பதை பார்த்து கோபம்கொண்டு
"அத இன்னும் லவ்னு நினைச்சுகிட்டு தத்து பித்துன்னு உளறாம போய் வேலைய பாருடி, நாளைக்கு வந்து வச்சுகிறேன் " என முடித்தாள்.
அத்தியாயம் 2
அன்று……
"லவ் பண்ணுறேனு உளறிக்கிட்டு இவ பண்ணுற அட்டகாசம் இருக்கே, என்னால முடில ஆண்டவா " என ஜெய்மி நொந்து கொண்டிருந்தாள்.
"ஜெய் "
"ம்ம்ம் "
"ஜெய்ய்ய் ... "
"சொல்லித்தொலை பக்கி ", தன் பெயரை வெக்கப்படுகிறேனு ஏலம் விட்டுகிட்டு இருந்த தாட்சாயினி மேல் காண்டு ஆனாள் ஜெய்மி.
இதை எதுவும் கவனிக்காத தாட்சாயினியோ "நான் என்ன கலர் டிரஸ் போடட்டும் ஜெய், க்ரீன் கலர் போட்டுக்கவா” என கேள்வியும் கேட்டு பதிலும் சொன்ன தன் தோழியை பார்த்தாள், ஆனால் அவளின் கவனமோ தன் மேல் இல்லாமல் ஓப்பனா அவள் சைட் அடித்து கொண்டிருந்தவினின் மீதே இருந்தது..
வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து கொண்டு, அவர்கள் வீட்டில் இருந்து தள்ளி நின்று கொண்டிருந்த இளைஞர்கள் பட்டாளம் மீதே கன்னம் வைத்து கொண்டிருந்தாள் அவளின் தோழி, அதாவது அங்கு இருந்த பச்சை சட்டைக்காரனின் மீது, அவளின் திடீர் பச்சை டிரஸ் அணிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் அங்கு இருந்தே வந்தது..
"போன பத்து நாளும் இதே புராணம் தான், அது பத்தாதுன்னு இப்போ பொங்கலுக்கு ஊருக்கும் கையோட கூட்டிட்டு வந்து இன்னும் சோதிக்கிறாளே, ……
ஒட்டு கேக்குறதே தப்பு…… இதுல இந்த டாக்கி ஒட்டு கேட்டுட்டு வந்து லவ் பண்ணறேனு அட்டகாசம் பண்ணிட்டு இருக்கு " என ஜெய்மியை புலம்ப வைத்து கொண்டிருந்த தாட்சாயினியோ அங்கு வெகு தீவிரமாக காதல் செய்வோம் என்ற பெயரில் சைட் அடித்து கொண்டிருந்தாள் அவளின் மாமன் மகன் இளமதியனை..
ஜெய்மி தலையில் அடித்து கொண்டது போல் தாட்சாயினி தன் இருதந்தைகளின் பேச்சை கேட்ட ( ஒட்டு கேட்ட) பிறகு தன் காதல் அத்தியாயத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தது தன் தோழி ஜெய்மியை புலம்ப வைத்து கொண்டிருந்தாள்.
தாட்சாயினின் தந்தை ஞானமூர்த்தி, அவரின் தம்பி சிவசேனப்பெருமாள் இருவரும் சேர்ந்து புதுக்கோட்டையில் ப்ரொவிஸின் ஸ்டோரும், மோட்டர் வாகனங்களின் உதிர் பாகங்கள் விற்கும் கடையும் நடத்திக்கொண்டிருந்தனர், இளம்வயதிலே தொழிலுக்காக புதுக்கோட்டை வந்து உழைப்பை போட்டு நல்ல பலனும் பெற்று நன்றாக வளர்த்து இப்போது நல்ல நிலையில் உள்ளனர். அவர்களின் தாய் நிலபுலன்களை பராமரித்துக்கொண்டு அவர்களின் சொந்த கிராமமான நெய்யூலியில் தங்கிவிட்டார், புதுக்கோட்டையில் இருந்து சுமார் முப்பது நிமிட பயணமே நெய்யூலி, ஆதலால் தாய்யை கவனித்து கொள்வதில் சகோதரர்கள் இருவருக்கும் எந்த சிரமும் இருந்ததில்லை.
அநேக எல்லா விஷேசகங்களுக்கும் அவர்களின் சொந்த கிராமத்தில் இருப்பது போல் பார்த்து கொள்வார்கள். மூத்தவர்க்கு ஒரே ஒரு மகள் - தாட்சாயினி, இளையவர்க்கு ஒரே ஒரு மகன் - பிரபாகரன். அக்கா தம்பி இருவருக்குள் இரண்டு வயது வித்தியாசம்.
சீராக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் பெரிதாக இடறியது தாட்சாயினி தாயின் இறப்பின் போது தான். அதில் தளர்ந்த குடும்பத்தை தேர்த்தி கொண்டுவந்தார்கள் ஞானமூர்த்தியின் தம்பியும் அவரது மனைவி வேணுவிசாலாட்சியும். அதிலும் தாட்சாயினிக்கு முன்னை விட அதிக நேரம் செலவிட்டாள் அவளின் சித்தி. சிவசேனப்பெருமாள் தன் அண்ணனயும் தொழிலையும் கவனித்து கொள்ள, அவர் துணையாள் வீட்டையும் பிள்ளைகளையும் கவனிக்க குடும்பம் ஓர் அளவுக்கு மீண்டு வந்தது.
அன்னையின் இழப்பில் இருந்து மீண்டு வர அவள் குடும்பம் எவ்வாறு உதவியதோ, அதே போல் அந்த சிறுவயதில் தாட்சாயினிக்கு உறுதுணையாக இருந்தது அவளது தோழி ஜெய்மி ப்ரெஸில்லா. தாட்சாயினி குடும்பம் இருந்த தெருவிலே வீடு கட்டி குடிபெயர்ந்தது முதல் இருவர்களும் இணைபிரியா தோழிகளாகி ஒன்றாகவே வளர்ந்தனர். பள்ளி முதற்கொண்டு கல்லூரி வரை இருவரும் ஓரே வகுப்பு .
ஜெய்மியின் தந்தை மருத்துவர், தாய் அரசாங்க அதிகாரி. தன்னை போல் மகளை மருத்துவர் ஆக்க விருப்பம் கொண்டார் ஜெய்மியின் தந்தை, ஜெய்மிக்கோ அதில் விரும்பும் இல்லாததால் முக்கியமா அவளின் தோழி தாட்சாயினிக்கு மருத்துவம் படிக்கும் விருப்பம் இல்லாததால் மறுத்து இருவரும் சென்னையில் ஒன்றாகவே இன்ஜினியரிங் சேர்ந்தனர். பிள்ளைகளின் விருப்பமே முதன்மையாய் கொண்ட ஜெய்மியின் பெற்றோரும் மகளின் விருப்பத்திற்கு இணைந்தனர். ஜெய்மி தந்தையின் விருப்பத்தை பின்பற்றி அவரின் இளைய மகள் இந்த ஆண்டு மருத்துவம் பயில அடி எடுத்து வைத்துள்ளாள்.
தாட்சாயினி, ஜெய்மி இருவரும் ஒருவர் மீது ஒருவர் இன்றியமையாத தோழிகள் ஆவர். அதிலும் தாட்சாயினிக்கு ஜெய்மியை சார்ந்தே மற்ற எல்லாம்.
தொழில் குடும்பம் நெய்யூலி படிப்பு என அவர்களும் அடுத்த கட்டத்தை நோக்கி வளர ஆரம்பித்தனர்.
____________________________________________________________________
நெய்யூலியில் பொங்கல் திருவிழா என்றும் விசேஷமானது, அநேக வெளியூரில் வசிக்கும் நெய்யூலி வாசிகள் அனைவரும் பொங்கலுக்கு தவறாமல் தங்கள் கிராமத்திற்கு வந்துவிடுவார்கள்.
இந்த தடவை பொங்கலுக்கு ஊருக்கு கிளம்பும் முன் நடந்த ஆலோசனையை தான் தாட்சாயினி கேட்டது. இளையவர் சிவசேனப்பெருமாள்க்கு அவர்களின் சொந்த கிராமத்திலே திருமணம் செய்தனர், வேணுவிசாலாட்சி ஒரு வகையில் அவர்களின் சொந்தம் தான். இவருக்கும் பிடித்தே திருமணம் நடந்தது. வேணுவிசாலாட்சிக்கு ஒரே ஒரு அண்ணன் செல்வகணபதி, பேராசிரியர். அவர்க்கு இரண்டு மகன்கள் இளமதியன், அமிழ்திரவியம். இருவரும் இன்ஜினியரிங் முடித்து மேற்படிப்பாக ஒருவன் MBAவும் இளையவன் M.Techம் முடித்து தத்தம் பணிகளில் வளர்ந்து வந்தனர்.
தன் தம்பிக்கு போல் தன் மகளையும் சொந்த கிராமத்தில் தன் நெருங்கிய நண்பனும் சொந்தமான செல்வகணபதியின் மகனுக்கே தாட்சாயினியை திருமணம் நிச்சயித்து விடலாம் என பெரியவர்கள் மூவரும் மகிழ்ந்து பேசி கொண்டிருந்த அவளது கல்யாண பேச்சைதான் கேட்க நேர்ந்தது தாட்சாயினிக்கு.
இங்கு பதிவு பண்ண வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம் உள்ளது. தாட்சாயினிக்கு வெளியில் தெரியாத அவள் தோழி ஜெய்மிக்கு மட்டும் தெரிந்த செயலாக்க பட வேண்டிய ஒரு கொள்கை இருந்தது. அது என்னவென்றால் ஜெய்மியின் காதல் அத்தியாங்களை கேட்டு கேட்டு அதிலும் போக்குவரத்தே இல்லாத இருகுடும்பத்தில், வீட்டினர் யாருக்கும் தெரியாமல் நடந்த காதல் அத்தியாயங்களை சுவாரசியமாக ஒரு அட்வென்ச்சரிங் அளவுக்கு ஜெய்மி சொல்லி சொல்லி தானும் காதலித்தே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு பெரிய கொள்கைக்கு முத்திரையோடு கையொப்பமிட்டு தன் தோழி ஜெய்மியின் சாட்சியோடு பதிந்து விட்டாள் தாட்சாயினி.
பிறகு கொள்கை உடன்படிக்கை மறுபரிசலனை செய்து ஒரு சின்ன திருத்தும் கொண்டு வரப்பட்டது, ஒன்று காதலிப்பது இல்லை வீட்டில் நிச்சயிக்கும் மணவானை காதலித்து திருமணம் செய்வது என்று செய்த உடன்படிக்கையில், முதல் அட்டவணைப்படி ஒரு படிகூட தானாக காதலில் வழுக்கி விழும் வாய்ப்பை பெறாததால் , அதிலும் ஜெய்மியின் " நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட" என்ற கிண்டலில் முதலில் வீறுகொண்டு எழுந்தாலும் கடைசியில் அடங்கி இரண்டாவதை செயல் படுத்துவது என்ற முடிவுக்கு வந்திருந்தாள் தாட்சாயினி.
இப்போது பெரியவர்களின் பேச்சை கேட்டுவந்த பிறகு வெகு தீவிரமாக தன் அறையின் நீளத்தை அளந்து கொண்டிருந்தாள் தாட்சாயினி
"என் மேரேஜ் பத்தி தான பேசுறாங்க??? இந்த வீட்ல இருக்குற ஒரே பொண்ணு நாந்தான், கல்யாண வயசுலயும் நான் தான் இருக்குறேன், சோ அப்போ எனக்கு தான் கல்யாணம்……. மதி மாமாவ தான் எனக்கு ப்க்ஸ் பண்ண மாப்பிள்ளையா “!!!!! என வெகுவாக யோசித்து வந்தவள்,
"எனக்கு மதி மாமா ஓகே வா ?? ஓகே தான் , ஹி ஸ் சோ குட், நல்ல பையன் தான் , சொந்தம் வேற, வேற என்ன ஆப்ஜெக்ஷன் இருக்கு" என யோசித்தவள் எல்லாவற்றிலும் சரியாக பட இளமதியனுக்கு சரி சொன்னது அவளின் மனது. மேலும் மதி வேலையின் பொருட் கனடா சென்றவன் நேரில் பார்த்து சில வருடங்கள் ஆகி விட்டது என்பதால், இப்ப எப்படி இருப்பாங்க என்ற ஆவலில் அவனின் முகப்புத்தகத்திற்கு சென்று பார்த்தவளுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.
" ஹான், மார்க் ப்பேஸ் புக் ஆரம்பிச்சப்ப அக்கௌன்ட் ஓபன் பண்ணி வச்சதோட சரி போலயே, பல வருசமா பேர் மட்டும் எழுதுன புது நோட் மாதிரி அப்படியே புதுசால வச்சுருக்காங்க, இப்படி இருந்த எப்படி நம்ம கொள்கையை செயல் படுத்துறது " என வெகுவாக யோசித்து கொண்டிருந்தவள் பின்னால் கேட்ட சத்தத்தில் திரும்பி பார்த்தாள்.
அங்கே வந்த அவளின் சித்தி மகன் பிரபாகர் சிவசேனப்பெருமாள் விளையாடிட்டு வந்த தன் பேட்டுடன் தொப் என்று மெத்தையில் உட்கார்ந்த சத்தம் தான் அது. அதில் கோபம் கொண்டவள் " டே அமுலியா எத்தனை தடவ சொல்லிருக்கேன் விளையாடிட்டு பேட் பால்னு அப்டியே ரூம்குள்ள கொண்டு வராதனு." என சண்டைக்கு தயாரானாள்.
“பர்ஸ்ட் நீ என்ன அப்படி கூப்பிட்றத நிறுத்து”
“எப்படி,, அமுலியானு உன்ன கூப்பிட்றத நிறுத்தணுமா அமுலியா” என வம்பிழுத்தாள்.
பிரபு பள்ளி வயதில் கொலு கொலுவென இருந்ததால் அமுல் பேபி என கூப்பிட ஆரம்பித்து அமுலியா என்ற பெயரிலே அவனை கூப்பிட ஆரம்பித்தாள். அது இன்று வரை தொடரவும் இருவருக்குள்ளும் அப்ப அப்ப சண்டைகள் வந்தன.
பன்னிரண்டாம் வகுப்பு விடுமுறையில் இருந்தே ஜிம் சென்று உடலை பேணுபவனை அதிலும் அவனின் கல்லூரி நண்பர்கள் குறிப்பாக தோழிகள் வரை அவனின் அக்காவின் அமுலியா என்று அழைக்கும் பெயர் சென்றதால் இருவற்குள்ளும் தகறாரு தான்.
ஆனால் இன்றோ பிரபு மேலும் சண்டையை வளர்க்காமல் " நானே சோகத்தில் இருக்கேன் நீ வேற…….. ,
உன்ன எங்கயாச்சும் தூரமா வெளியூர்க்கு பேக் பண்ணுவாங்கனு பார்த்த கடைசில இங்க நெய்யூலில ப்க்ஸ் பண்றாங்க, உன் மேரேஜ் அப்புறம் நிம்மதியா இந்த பால்கனி ரூம்ல செட்டில் ஆகும்னுற என்னோட கொள்கை என்னவாகுறது" என வருத்தத்தில் இருந்தான். ஆக மொத்தம் அக்கா தம்பி இருவருக்கும் ஒரு ஒரு கொள்கை!!!
அதன் பின்னே யோசித்தான் எங்க அக்கா நம்ம கொள்கை தெரிஞ்சு திட்ட ஆரம்பிக்க போறாளே, அவசரப்பட்டு வெளியே சொல்லி மாட்டிகிட்டாமே என நொந்தவனை எதிர்பார விதமாக கொஞ்சினாள் அவனின் தமக்கை.
தம்பிதான் தன்னுடைய கொள்கை செயலாக்க பட உதவ முடியும் என சற்றென்று முடிவுக்கு வந்தவள் , "மை ஸ்வீட் அமுலியா பேபி ரூம் தான வேணும்……. எடுத்துகோடா தம்பி, உனக்கு இல்லாததா, என் செல்லக்குட்டில நீ " என என்றும் இல்லாமல் கொஞ்சிய தமக்கையை வித்தியாசமாக பார்த்தவனிடம் சரண்டராகி
தன் கொள்கையின் விரிவுரையை தெளிவுரையாய் விவரித்தாள்.. அதிசயத்த பிரபுவோ "வாவ் வளர்க உன் கொள்கை….. சோ செல்வா மாமா வீட்டுக்கே மருமகளா போக ஓகே பண்ணிட்டா, நடத்து, நடத்து ... இனி சந்தானம் அத்தை தான் பாவம் போ ," என கூறிக்கொண்டே சென்றான். அவன் வந்ததே அவனின் அக்காக்கு இந்த சம்மந்தத்தில் விருப்பம் இருக்காவென்று தெரிந்து கொள்ள தானே, அது தான் செவ்வனே தெரிந்து கொண்டானே.
"டே வளர்க்க சொல்லிட்டு சும்மா போற, மாமா நம்பர் கொடுத்துட்டு போடா" என பின்னால் இருந்து கத்தினாள் தாட்சாயினி.
"இவ்வளவு யோசிக்கிற நீ, நம்பர் வாங்க தெரில பாத்தியா, " என கேலி செய்துவிட்டு "அதான் நம்ம ஊர் குரூப்ல இருக்குமே பாக்கல,” என்று விட்டு சென்றான்.
"அட ஆமால, எங்கடா குரூப் ஆக்ட்டிவ் இருந்து அந்த பக்கம் போன தான தெரியும் " என குரூப்பில் தேடி இளமதியன் நம்பர் பதிவு செய்து கொண்டாள்.
இவ்வாறு அவளின் கொள்கை செயலாக்கப்பட துவங்கி இளமதியன் பொங்கலுக்கு இங்கு வருவதை நெய்யூலியின் இளைஞர் பட்டாளம் உள்ள வாட்ஸ் ஆஃப் குருப்பான "நெய்யூலி பட்டர்ஸில் ( நெய்யூலி வெண்ணெய்ஸ் ), பொங்கலுக்கு ஊருக்கு யார் யார் வருகிறார்கள் என்ற அட்டெண்டன்ஸில் இளமதியின் ஒப்புதலை பார்த்தவள் பத்து நாளாக ஜெய்மியை பினாத்தி பினாத்தி அவளையும் தள்ளி கொண்டு எப்பையும் விட உற்சாகமா ஊருக்கு வந்து கடமையை என சைட் அடித்து கொண்டிருந்தாள் இளமதியனை.
அத்தியாயம் 3
இத்தனை வருடங்களாக நெய்யூலிக்கு இவ்வளவு உற்சாகமா சென்றாளா என்றால்?, அது இல்லை காரணம் அவளின் பாட்டி வேங்கடலட்சுமி.
பழமையில் ஊறிய அவர் தன் பேரனுக்கு கொடுக்கும் சுதந்திரம் பேத்திக்கு தருவதில்லை. ஆகவே நெய்யூலியில் தாட்சயினிக்கு எதற்கெடுத்தாலும் தடை.. குளத்தில் குளிக்க தடை, ஆற்றில் மீன் பிடிக்க தடை, கிட்டி விளையாட தடை, அவள் வயது ஒத்த தோழிகளுடன் கூட்டான்சோறு நிலாச்சோறு உண்ண தடை, தனியாக வெளியே செல்லவும் தடை என நிறைய கட்டுப்பாடுகள் நெய்யூலியில்.
அவளது பழக்கவழக்கங்களில் கூட நிறைய கட்டுப்பாடுகள், ஏன் அவளின் பதின் வயதில் அவள் மூக்குத்தியே ஆக வேண்டும் என கட்டளை விதித்த அவளின் பாட்டிக்கு முடியாது எனக்கூறி அவள் பண்ணிய ஆர்ப்பாட்டம் வேங்கடலட்சுமி முன் எடுபடவில்லை. ஆனால் இவளோ தான் குத்திக்கொண்டது இல்லாமல் அவள் தோழி ஜெய்மியையும் மூக்குத்த வைத்துவிட்டாள் என்பது வேற விஷயம்.
புதுக்கோட்டையில் இருவரும் பாகுபாடுயின்றி இருப்பார்கள், சொல்ல போனாள் அதிக சலுகைகள் பெறுவது அவளே, ஆனால் இங்கோ அனைத்திலும் கட்டுப்பாடுகள்.
நெய்யூலியில் வேங்கடலட்சுமி ராஜ்ஜியமே, அவரின் மகன்களே மீறமாட்டார்கள் எனும் போது வேணுவிசாலாட்சிக்கும் ஒன்றும் செய்ய முடியாது, அதிலும் தன் மாமியாரின் வழமையான வார்த்தைகளான " பொம்பள புள்ளைய வளர்க்க கொடுத்த இது தான் வளர்க்கும் லட்சணமா, அவ வயித்தில பிறந்த புள்ளையா இருந்தா பொத்தி பொத்தி வளர்த்துருப்பா, இதுக்கு தான் அன்னைக்கே சொன்னேன் என் பேத்திய நானே வளர்க்கறேன்னு இந்த சின்னவன் கேட்டா தான " என ஆரம்பித்து நிறுத்தாமல் சொல் அம்புகளால் தாக்கி விடுவார்.
தாட்சாயினின் அன்னை இறந்து காரியங்கள் ஆறிய பிறகு பேத்தியை தன்னுடனே வைத்து வளர்க்க போவதாகவும் புதுக்கோட்டைக்கு அனுப்பப்போவதில்லை என்றவரை கண்டு அதிர்ந்து விழித்த மகன்கள் மௌனமாக இருந்தபோது, தாட்சாயினிக்கு தன்னால் மட்டுமே அவள் இழந்த அன்னையின் அன்பை அளிக்க முடியம் என நம்பியவர் மாமியாரின் பேச்சை மீறி தன்னோடு வைத்துக்கொண்டார் வேணுவிசாலாட்சி.
வேணுவிசாலாட்சியின் மீது வேங்கடலெட்சுமிக்கு மிகுந்த நம்பிக்கை இருந்த போதும் அவ்வவ்போது சில சமயம் வார்தைகளால் தாக்கி விடுவார். அதில் எப்போதுமே பயம் வேணுவிசாலாட்சிக்கு. அதனால் நெய்யுலியில் அவரது தாய் வீட்டுக்கு செல்வதை விட தாட்சாயினின் அருகில் மாமியார் வீட்டிலே பெரும்பாலும் இருந்து விடுவார்.
சும்மாவே வேணுவிசாலாட்சிக்கும் ஒரு பயம் உண்டு தான் வளர்த்த மகளை யாராவது ஒரு சொல் சொல்லிவிடுவார்களோ என்று .. இப்போது தன் அண்ணண் வீட்டிற்க்கே தாட்சாயினியை திருமணம் செய்து வைப்பதில் அவருக்கு பெருத்த நிம்மதி, அவரின் அம்மாவிற்கு தான் தன் மாமியாரை போல் வாய் அதிகமே தவிர அவரின் அண்ணியோ மிகவும் அமைதி அன்பானவர். தன் அண்ணன் அண்ணியே தன் மகளின் மாமியார் மாமனாராகவும், ஊர் பேர் தெரியாது விசாரித்து கண்காணாத இடத்தில பெண்ணை கொடுப்பதற்கு, கண்முன் தான் தூக்கி வளர்த்த தன் அருமையான அண்ணன் மகனே அவரின் மகளுக்கு துணைவனாக அமையப்பெறுவதில் வேணுவிசாலாட்சிக்கு அளவில்லா நிம்மதி . அந்த நிம்மதி கொடுத்த பெருமகிழ்வில் அவரும் என்றையும் விட இம்முறை உற்சாகமாகவும் ஆவலோடனும் அவரின் மகளை போல் நெய்யூலிக்கு வந்தார்.
இந்த பொங்கல் திருவிழாவில் பெரிய வித்தியாசகமாக வேங்கடலெட்சுமி தனது பேத்தியை சீராட்டி பாராட்டி தள்ளிவிட்டார். அதிசயமா பார்த்த பிரபுவை இடித்து
"கண்ணு வைக்காதடா புள்ளைய, அக்காக்கு கல்யாணம் ஆக போகுது பொறுப்பான தம்பியா நடந்துகோ" என கண்ணை துடைத்து கொண்டார்.
தன் அப்பத்தாவின் அழும்பலில் வெகுண்ட பிரபு "இப்ப இங்க என்ன நடந்துச்சுன்னு இம்புட்டு சீன் அப்பத்தா "
"வாயில் ரெண்டு போடுவேன் அக்காவ கட்டிக்கொடுக்க போறோமே, கொஞ்சமாச்சும் கவல இருக்காடா உனக்கு" என திரும்பவும் அங்கலாய்த்த அப்பத்தாவிடம்
"உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல, இங்க இருக்குற ரெண்டு தெரு தள்ளி அக்காவ கட்டிக்கொடுக்குறதுக்கு இம்புட்டு சீன்னு இதுல கவல பட என்ன இருக்காம்"
"ஏன் இல்லாம உன் அம்மத்தா ஒருத்தி போதாது, அவ வாய்க்கு முன்னாடி என் தங்கம் எப்படி தாக்குபிடிப்பாளோ "
"ஆமா உனக்கு ரொம்ப கம்மியா இருக்கு பாரு, நீ மத்தவங்கள சொல்றது தான் பெருத்த அதிசியம் … என்னமோ அக்கா இங்கயவா இருக்க போறா, அவபாட்டுக்கு இப்பபோல விசேஷத்துக்கு நெய்யூலிக்கு வந்துட்டு இருக்க போற" என்று முடித்தவனிடம்
"அதான்டா என் பேத்திய பக்கத்துல கூட இருக்க விடாம வெளிநாட்டுக்கு அனுப்புறீங்களே" என அதற்கும் அடுத்த ஒப்பாரி ஆரம்பித்தவரை கண்டு தலையில் அடித்து கொண்டான்.
இவர்களின் சம்பாஷணை ஆர்ம்பிக்கும் போதே ஜெய்மியுடன் நழுவிட்டாள் தாட்சாயிணி
"ஏய் தாக்ஷி எங்கடி இழுத்துட்டு போற "
"மதி மாமாவ பாக்க "
"அடிப்பாவி பயங்கர ஸ்பீட் தான் "
"இங்க நான் ஆரம்பிச்சதான் உண்டு ஜெய், அந்த சைடு எந்த சிக்னல்னும் வராது, வரும்னு வெயிட் பண்ணுன கல்யாண வர வெயிட் பண்ண வேண்டியதுதான்"
"விவரம் தாண்டி நீ, உன்ன போய் பச்ச மண்ணு சொல்றாங்க உன் அப்பத்தா, உன் வாழ்நாள் கொள்கை உடன்படிக்கை பத்திரத்த காட்டியிருக்கனும் அப்புறம் தெரியும் நீ என்ன கலர் பேபினு"
"நோ ப்ரோப்லம், மேரேஜ் வரைக்கும் தான் அப்பத்தாலாம், அப்புறம் எல்லாம் மதி மாமா தான்,…. மச மச பேசாம சீக்கிரம் வாடி"
என அவசரமாக இழுத்து கொண்டு சென்ற தன் தோழியின் விஸ்வரூப மாற்றத்தில் அதிசியத்த ஜெய்மி " அடிப்பாவி நடத்து நடத்து….
சரி என்னனு பேச்சை ஆரம்பிப்ப இந்த மூவிஸ்ல வர மாதிரி துப்பட்டாவ கையால திருகிகிட்டே, கால்ல தூர்வாரி ஒரு கையால வெக்கப்பட்டுக்கிட்டு முகத்தை மூடி "மாமா ஐ லவ் யூ”னா .. ப்ப்பா கற்பனையே பயங்கரமா இருக்குடி, எனக்கு படிக்காதவன் ஆர்த்தி தான் ஞாபகத்துக்கு வருது, நாம வேணும்னா வேற நல்ல சீன் சுடலாமா??!!, இரு கூகிள் பண்ணி பாப்போம் " என்ற ஜெய்மியிடம்
"இப்ப அதுக்குலாம் நேரம் இல்ல பக்கி, யோசிக்காமயா வருவாங்க நாம செலக்ட் ஆகிருக்ற கம்பெனிலயே பைனல் செம் ப்ராஜெக்ட் பண்ண சொல்லிருக்காங்களா, அதுல சேரலாமா இல்ல வேணாமானு ஐடியா கேக்க போறோம் மதி மாமாட்ட " என பதில் அளித்து தன்னை இழுத்து கொண்டு சென்ற தாட்சாயினியை குழப்பத்துடன் பார்த்தாள் ஜெய்மி
"ஹே தாக்ஷி நில்லு நில்லு, ஜாயின் பண்ணுறோம்னு சொல்லி நாம தான் சைன் பண்ணிட்டோம்ல இப்ப போய் என்ன கேக்க போற"
சற்று யோசித்து புரிந்த ஜெய்மியோ " ஹோ ஹோ பேச யூஸ் பண்ணிக்க போற, அப்படித்தானா "
"அதே தான், இந்த படிப்ஸ் மாமாகிட்ட படிப்ப விட்டு வேற என்ன பேசுறது சொல்லு"
இதுல மட்டும் உன் மூளை எப்படி இப்படி பயங்கரமா வேல செய்யுது " என அதிசியத்த ஜெய்மியை கையை பிடித்து நிறுத்தினாள்.
"இப்ப என்னடி"
"அதர் தேக்கோ மாமா ஸ் கமிங்"
"பாருரா என்கிட்ட பேசிட்டே வந்தாலும் கண்ணு பூரா மாமா மேலயே இருக்கோ, சரி இங்கயே வெயிட் பண்ணுவோம் மாமா நம்மள கிராஸ் பண்ணித்தான போவாரு அப்போ ஜாயின் பண்ணிப்போம்" என அவர்கள் இருக்கும் திசையில் வந்துக்கொண்டிருந்த இளமதியனை காட்டி கூறினாள் ஜெய்மி பிரிஸில்லா.
கோபத்துடன் ஜெய்மியை முறைத்த தாட்சாயினி " என்ன மாமாவா ??? " என ஆட்சோபித்தாள்.
தன் தோழியை சீண்டும் எண்ணத்துடன் " ஆமா மாமா தான், மதி மா...மா, நம்ம மதி மா..மா தக்ஷு குட்டி" என மாமாவிற்கு அழுத்தம் கொடுத்து தாட்சாயினியின் ரத்த அழுத்தத்தை எற வைத்தாள் ஜெய்மி.
"ஹோ மேடம் அப்படி வறீங்களா, உனக்கும் மதி மாமானா, அப்ப எய்டன் எனக்கு அண்ணா வராதே, தப்பா இருக்கு பாரு, இனி எனக்கு எய்டன் மச்சான் , இனிமே அப்படித்தான் கூப்பிடனும் முதல்ல என் போன்ல எய்டன் அண்ணன ஈரேஸ் பண்ணிட்டு எய்டன் மச்சான்னு சேவ் பண்ணுறேன் " என தன் கையில் உள்ள போனை எடுத்து குடைய ஆரம்பித்தாள் தாட்சாயினி.
“என்னானாலும் பண்ணிக்கோ, நானா உங்கள பாச பயிர் வளர்க்க சொன்னேன், நீங்க ரெண்டு பேரும் தண்ணி ஊத்தி வளர்த்ததுக்கு நான் என்ன பண்றது தக்ஷு பேபி……. ஆனா நான் மாம்ஸ்னு தான்ப்பா கூப்பிடுவேன்”
“ஜெய்ய்ய்ய்ய்… “ என முறைத்த தாக்ஷியிடம் " இப்ப இது ரொம்ப முக்கியம், அங்க பாரு மதி மாம்ஸ் பக்கத்துல வந்துட்டாங்க" என கூறி திசை திருப்பினாள் ஜெய்மி.
தற்காலிகமாக மாமா பிரச்சனையை ஒத்தி போட்ட தாக்ஷி
“ சரி வா போலாம்"
“இரு தாக்ஷி இங்க தான வராங்க இங்கயே இருப்போம்”
"அதாகப்பட்டது மாமாவே வந்து பேசுவார்னு நினைச்சு நாம வெயிட் பண்ணுனா”, என தாட்சாயினி ஆரம்பிக்கவும் “புரியுது புரியுது உன் கல்யாணம் வர வெயிட் பண்ணுனாலும் அது நடக்காது" என முடித்தாள் ஜெய்மி.
"அதே தான், சரி சரி வா, மாமா பக்கத்துல வந்தாச்சு, நம்மள கிராஸ் பண்ணி போய்ட போறாங்க" என இழுத்து சென்றாள்.
மதியின் அருகே வந்தவர்கள் மாமா என அவனை கூப்பிட்டு நிறுத்திய பிறகே யோசித்தாள் என்னய ஸ்கூல் படிக்கும் போது பாத்தது, இப்போ ஞாபகம் இருக்குமா இல்ல மறந்திருப்பாராவென்று என பயந்தவளின் பயத்தை போக்கினான் இளமதியன். அவளை அதிகம் சோதிக்காமல்
"ஹே தாக்ஷி எப்படி இருக்க, பி.இ தான படிக்கிற, பாக்ளாக்ஸ் இருக்கா இல்ல ஆல் க்ளியரா கேம்பஸ் செலெக்ஷன் பிராசஸ்லாம் ஓவரா" என அடுக்கி கொண்டே போனான்.
"ஹி ஹி மாமா, அதுலாம் ஆல் கிளியர் தான், ஆன் கேம்பஸ்ல கூட சிலெக்ட் ஆகிட்டேன், அதுல தான் ஒரு டவுட் கேக்கனும் மாமா உங்ககிட்ட " என அவளது மாமாவுடன் பேசுவதற்கான முதல் படியை எடுத்து வைத்தாள்.
"டவுட்டா… என்ன தாக்ஷி? " என வினவிய மதியிடம் பேச ஆரம்பிக்கும் முன் அருகில் உள்ள தன் தோழியை பார்த்தவள், ஜெய்மி அங்கு இல்லாமல் தேடி தூரத்தில் பிரபுவிடம் சேர்ந்து நின்று வம்பிழுத்து கொண்டிருந்த தோழியை முறைத்தாள். தன் நண்பி உடன் இருக்கும் தைரியத்தில் பேச போனவள் அவளை காணாது விழித்து பின் தானாக சமாளிப்போம் என பேச ஆரம்பித்தாள். இதை விட்டால் இந்த படிப்ஸ் மாமாகிட்ட பேசுறதுக்கும் வேறு சான்ஸ் கிடைக்காதுவென்று.
"அது வந்து மாமா, நாங்க செலக்ட் ஆகிருக்கிற கம்பெனிலயே பைனல் இயர் ப்ராஜெக்ட் பண்ண சொல்றாங்க, அப்படியே ட்ரைனிங் கண்டினியூ பண்ணுவாங்கலாம்"
" அப்படியா என்ன…., எந்த கம்பெனி" என்று கேட்டவனிடம் பதில் கூறினாள் தாட்சாயினி
கம்பெனி பேர் கூறிக்கொண்டே சரியாக அவன் கண்ணை பார்த்தவள் இன்பமாய் அதிர்ந்தாள், இவ்வளவு நேரம் சாதாரணமாக இருந்த அவனது கண்கள், சில நொடிகள் அவளை நோக்கி ரசனையோடு விரிந்து இயல்பாகின, அவனையே நிறைத்து கொண்டு பார்த்தவளின் கண்கள் அது சில நொடிகள் என்றாலும் தவறவிடாமல் படம் பிடித்து கொண்டன.. அந்நொடி புதிதாக உணர்ந்தவள், கலவையான உணர்வலைகளால் அடித்து செல்லப்பட்டாள்.
"ரொம்ப நல்ல கம்பெனி தாக்ஷி, தைரியமா எந்த குழப்பமும் இல்லாம ஜாயின் பண்ணிடு, நம்மள அவங்களுக்கு ஏத்த மாதிரி பெஸ்ட்டா ட்ரெயின் பண்ணுவாங்க, அவங்க சொல்ற ப்ரொஜெக்டே பண்ணிடு, இல்ல தனியா எதாவது ஓன் ப்ராஜெக்ட் ஐடியா வச்சுருக்கீயா???? " என்று கேட்டவனிடம் “ நல்லா கேட்டிங்க, சொந்தமா ... நானு ..ப்ராஜெக்ட்டு....” என மனதினுள் கூறிக்கொண்டவள்.
"ஹி .. ஹி .. அப்படிலாம் இல்ல மாமா " என தாட்சாயினி கூறவும் " அப்புறம் ஏன் தயங்குற அவங்க ஆஃபர் ஏத்துக்கோ, மாமா வேணாம்னு சொல்றங்களா சொல்லு நான் வேணும்னா ரெண்டு பேர்கிட்டயும் பேசுறேன்" என வேகமாக தன் தந்தைகளிடம் நிறுத்திய மதியை இடைமறித்தாள் தாட்சாயினி.
"ஹையோ அதுலாம் இல்ல மாமா, அப்பா சித்தப்பாலாம் ஒன்னும் சொல்லல, லேசா கொஞ்ச குழப்பம் இப்ப நீங்க க்ளியர் பண்ணிடீங்க, ஊருக்கு போயிட்டு முதல்வேளையா ஜாயின் பண்ணிறேன் மாமா"
"தட்ஸ் குட் டெஸிசன், உனக்கு என்ன டவுட்னாலும் என்கிட்ட கேளு சரியா " என்றவனிடம் " மாமா உங்க காண்டாக்ட் நம்பர்??????" என வைத்து கொண்டே கேட்டாள் தாட்சாயினி.
"உன்கிட்ட இல்லையா என்ன " என்று நம்பர் மாற்றி கொண்டு சென்றனர் இருவரும்..
இவளோ மனதுக்குள் என்கிட்ட உங்க நம்பர் இருக்கு, என் நம்பர் உங்ககிட்ட சேருறதுக்கு தான் இந்த பிட் என்று எண்ணிவிட்டு தன் தம்பியுடன் அளவளாவிக்கொண்டிருந்த ஜெய்மியின் முதுகில் மொத்தி "ஏன் எருமை எஸ் ஆனா " என தனியாக இழுத்து கொண்டு வந்தாள்.
" குரங்கே….. இப்படியா அடிப்ப லவ்வர்ஸ் குள்ள தோவ்ஸண்ட் இருக்கும், நீங்க என்ன என்னமோ பேசுவீங்க, நா இருந்த உங்களுக்கு சங்கோஜமா இருக்குமே பரவாயில்லையா??
"என்ன விட்டுட்டு வந்தனால கொலை விழுமே பரவைல்லையா ???
"கூல் கூல் தாக்ஷி பேபி, இப்ப என்ன தனியா ஜோடி புறாக்களுக்கு நேரம் கிடைச்சுச்சா இல்லையா” என்றவள் தோழியை கூர்ந்து கவனித்து “ ஹே இங்க பாருடா பயங்கரமா பல்பு எரியுதே எனி பாசிட்டிவ் சிக்னல் அந்த பக்கம் இருந்து ம்ம்?? ” எனவும் வெட்க பட்டாள் தாக்ஷி .
வெட்கப்பட்டவளை கலாய்த்தவள் "வெட்கமாக்கும் இன்னும் என்ன என்ன பாக்க வேண்டிருக்கோ ??!!!!" என ஜெனி கூறவும் "சும்மா இரு ஜெய்மி " என்று அதற்கும் அநியாயத்திற்கு வெட்கப்பட்டாள்.
“ ஜெய் “
“ ம்ம்ம்.. “
“ ஜெய் “
“ம்ம்.. சொல்லி தொலை பக்கி “
“ ஜெய் “
“ வேணாம் கடுப்பாகிடுவேன் “
"ஹே இல்ல ஜெய் அவ்வளவு பிரைட்டாவா தெரியுது "
"பார்ரா அப்ப பாசிட்டிவ் சிக்னல் கிடைச்சருக்கு, என்ன சொன்னாங்க , ப்ரொபோஸ் பண்ணிட்டாங்களா இல்ல அதுக்கும் மேலயா " என கற்பனை குதிரைகளை பறக்க விட்ட தன் தோழியை நிறுத்தினாள் தாக்ஷி .
"ஏய் ஜெய் நிறுத்து நிறுத்து , அந்த அளவுக்குளாம் இல்ல, மதி மாமா கண்ணுல எனக்கான ரசனையை பார்த்தேன், சில நொடினாலும் அந்த பார்வை என் உள்ள வர போய்டுச்சு ஜெய், ஒரு பறக்குற மாதிரி பீல் கொடுக்குது." என கூறிய தன் தோழியை ரசித்தாள் ஜெய்மி.
"வாரே வாவ்.. வாங்க மேடம் வெல்கம் டு தி காதலர்கள் உலகம் "
"ஜெய் சும்மா இரு, வெட்கப்பட வைக்காத " என கூறினாலும் இனிமையாக மனம் நிறைந்து புன்னகைத்து கொண்டனர் தோழிகள் இருவரும்.
எந்த வருடமும் அல்லாத புது வருடமாக இந்த வருட பொங்கல் திருவிழா தாட்சாயினிக்கு இனிமையாக அமைந்ததில் ஆச்சிரியம் இல்லை.
நெய்யூலியில் இருந்த ஒவ்வொரு நாளும் இனிமையாக கழிந்தது, அந்த வருட கோவில் பொங்கலை இளமதியனின் அம்மாவான சந்தானலட்சுமி தாட்சாயினியை அழைத்து அவர்கள் வீட்டு சார்பாக வைக்க வைத்ததாகட்டும், அதை இன்முகத்தோடு ஆமோதித்த அவளின் வீட்டாராகட்டும், அதிலும் அவளின் அப்பத்தா வேங்கடலட்சுமி, அவர் வீட்டு பொங்கலை அவளின் சித்தியிடம் விட்டுவிட்டு இங்கே அவரின் சம்பந்தி வீட்டின் வாய் சண்டையை மறந்து அவரின் வீட்டுக்காக தன் பேத்திக்கு பொங்கல் வைக்க உதவ வந்துவிட்டார் வேண்டுதலோடு, தன் பேத்தியின் பானையே முதலில் பொங்க வேண்டுமென்று, அவரின் வேண்டுதலை செவ்வனே என நிறைவேற்றிவிட்டாள் அன்னையவள்..
அதில் கண்கள் ரெண்டும் நிறைந்து விட்டது அவளின் வேணும்மாவிற்கு. எல்லையில்லா ஆனந்தம் அவர்க்கு தங்கள் பேசிய சம்பந்தம் சரியென தான் தினம் வணங்கும் அன்னையே நேரில் அருள் பலித்தது போன்று உவகை அந்த பெறாத அன்னைக்கு. அந்த ஊரின் முதல் பொங்கல் பொங்க வைத்து தன் புகுந்த (புக போற) வீட்டினையும், பிறந்த வீட்டினையும் சந்தோஷக்கடலில் ஆழ்த்தினாள் தாட்சாயினி. மேலும் இளமதியனின் பாட்டி சுந்தராம்பாள், மாமா செல்வகணபதி, அத்தை சந்தானலட்சுமியின் புது உரிமை கலந்த பாசம் அவளை இன்பக்கடலில் மூழ்கவைத்து.
தான் பிறந்த ஊரும் புகுந்த ஊராக மாற போகும் நெய்யூலியை விட்டு மணம் நிறைந்த நினைவுகளோடு இனிமையோடு விடைபெற்றாள் தாக்ஷி.
....................................
கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.
நன்றிகள்
கீர்த்தி :love:
போற போக்கில் ஒரு காதல் 1 to 3
- Madhumathi Bharath
- Site Admin
- Posts: 124
- Joined: Mon May 11, 2020 9:11 am
- Location: Tamilnadu
- Has thanked: 117 times
- Been thanked: 31 times