போற போக்கில் ஒரு காதல் 6

Post Reply
Kirthika
Moderators
Posts: 18
Joined: Fri Jul 17, 2020 5:18 pm
Has thanked: 2 times
Been thanked: 4 times

போற போக்கில் ஒரு காதல் 6

Post by Kirthika »

அத்தியாயம் 6

சனிக்கிழமை - பகல் 11.40

நேற்று இரவு வந்து படுக்கையில் விழுந்தவள் தான், இன்னும் எழவில்லை தாக்ஷி.

அது ஒரு 3 பி.ஹச் குடியிருப்பு, ஜெய்மி தாக்ஷி ஒரு அறையை பகிர்ந்துகொள்ள மீதி நால்வரும் முறையே இரண்டு பேராக மற்ற இரண்டு அறையை எடுத்துக் கொண்டனர்.. சமைப்பதற்கு என்று அவர்களின் பெற்றோர்கள் ஜோதி அக்காவை உதவிக்கு அமர்த்தியிருந்தனர், சாப்பாட்டை பெரிதாக காரணம் காட்டியே கல்லூரி விடுதியை விட்டு வெளியே வந்ததால், தோழிகள் யாராலும் மறுக்க முடியவில்லை, இதில் ஜோதி அக்கா சமையல் வெகு அருமையாக இருந்ததே மிக முக்கிய பிரதானமான காரணம்..
அவரும் காலையில் சீக்கிரமே வருபவர் காலை, மதியம் என இருவேளைக்கும் சமைத்துவிட்டு மாலை வந்து இரவு உணவை செய்துவிடுவார். இவ்வாறே தோழிகள் அறுவரின் நலம்பாகம் தடையில்லாமல் நடைபெற்றன.

மற்ற நால்வரும் வார இறுதிநாளான இன்று தத்தம் வேலைகளுக்காக வெளியே சென்றிருக்க, தாக்ஷிக்கு உடம்பு சரியில்லை என இன்னும் ஏழாதவளை காரணம் காட்டி தங்கிவிட்டாள் ஜெய்மி.. தாக்ஷி திருமண பேச்சு தொடர்பான விசயமும் ஜெய்மி தவிர மற்ற தோழிகள் யாருக்கும் தெரியாததால் நேற்று நடந்ததும் அவர்கள் அறியவில்லை.. தாக்ஷிக்காக வெளியே செல்லாமல் இருந்துவிடலாம் என நினைத்த மற்ற தோழிகளிடமும்

“ ஜஸ்ட் ரெஸ்ட் எடுத்தா போதும் சரியாகிடுவா ” என்றும் தான் பார்த்து கொள்வதாகவும் கூறி அனுப்பிவைத்தாள், இருந்தும் இவ்வளவு நேரம் தூங்கும் தாக்ஷியை பார்த்துவிட்டே சென்றனர் மற்ற நால்வரும்.

ஜெய்மிக்கோ தூங்கி எழுந்து வரும் தோழி என்ன மாதிரி நடந்து கொள்வாளோ என்று எண்ணம் மிகுந்திருந்தது.. தாக்ஷி எழும் போது யாரும் இல்லாமல் இருப்பதே நல்லது என்று பட்டது ஜெய்மிக்கு..

வீட்டில் பார்த்த மணாளனையே காதல் கொள்ளலாம் என இனிதாக எண்ணம் கொண்டு, காதலை தொடங்கலாம் என்று அழகாக மலர காத்து கொண்டிருந்த தருணத்தில், ஒரே நொடியில் மலராமலே மொட்டிலே உதிர்ந்து போல் ஆகிவிட்டதே என தோழிக்காக அவளுக்குள் உழன்று கொண்டிருந்தாள் ஜெய்மி.

தாக்ஷி ஒரு நாளும் இவ்வளவு நேரம் தூங்கவும், வெளியே வராமலும் இருந்ததில்லை. அவள் தனியே கொஞ்சம் தெளிவு பெறட்டும் என்று விட்டது தனது தவறோ என பயந்தவள், இனியும் அவளை இப்படியே விடக்கூடாது என முடுவு செய்து உள்ளே செல்லும் முன் தாக்ஷியே வெளியே வந்தாள்..

தானாக அமைதியாய் வெளியே வந்த தாக்ஷியை அடுத்த என்ன என்று பார்த்துக்கொண்டிருந்தாள் ஜெய்மி கொஞ்சம் பயத்தோடு. சமையலறைக்குள் சென்ற தாக்ஷியோ வெளியே நின்ற ஜெய்மியிடம் திரும்ப வந்து

"ஜெய், எல்லாம் ஓவர் எதுவும் இல்லை… ஒன்னு கூட இல்லை,
லவ் பெஃய்லியர் ஆகிருக்கே அத கூட நினைச்சு பக்கமா
இப்படி மொத்தமா எல்லா பொங்கலையும் வடையும் மிச்சம் வைக்காம காலி பண்ணிருக்கற???? ..
அது என்ன ஒரே ஒரு வடை மட்டும் வச்சுருக்க அதுவும் முழுசா இல்லாம கோண மாணலா,
இது நியாமா ஜெய் சொல்லு நியாமா???!! "

அதை கேட்ட ஜெய்மியோ சம்மித்து விட்டாள்,
‘ஓவர் ஷாக்கில் ப்ரைன் எதுவும் டேமேஜ் ஆகிடுச்சோ ‘ என யோசித்தவள்,… அதன் பிறகு நடந்ததில் கொஞ்ச கொஞ்சமாக கோபத்தின் உச்சிக்கு சென்றாள் ஜெய்மி..

“எனக்கே லவ் பெஃய்லியர் காஃபி போட்டு கொடு ஜெய்”

“எனக்கே லவ் பெஃய்லியர் காஃபிக்கு பிஸ்கட் எடுத்துதா ஜெய்”,

“எனக்கே லவ் பெஃய்லியர் கொஞ்சம் பசிக்குது, வேற எதாவது சாப்பிட செய்ஞ்சு தாயேன் ஜெய்”,

“எனக்கே லவ் பெஃய்லியர் சாப்பாடு கொடுத்தியே தண்ணி கொடுத்தியா”,

“எனக்கே லவ் பெஃய்லியர் அந்த பஃன போடு ஜெய்,

“எனக்கே லவ் பெஃய்லியர் கொஞ்சம் இந்த ட்ரெஸ்ச மடிச்சு கொடேன் ஜெய்”, என இன்னும் தொடர்ந்து படுத்தி எடுத்து விட்டாள்.. ஒரு கட்டத்தில் அயர்ந்து நின்ற ஜெய்மிடம்

"என்ன ஜெய் பண்ண சொல்ற எனக்கே லவ் பெஃய்லியர்…..” என திரும்ப ஆரம்பித்தவிளிடம்

"செத்துடு……!!!!"

"ஹான்….. ஜெய்?? ”

“செ-த்-து-டு…”

“பாத்திய… எனக்கே லவ் பெஃய்லியர் அதான இப்படி சொல்ற," என திரும்பவும் ஆரம்பித்தவளை

"அட கொக்கமக்கா, செத்தடி நீ…. மவளே நேத்துல இருந்து நான் பயந்து பயந்து இருக்கேன்…. உன்ன என்ன பண்றேனு பாரு” என அவசரத்திற்கு உருட்டு கட்டை கிடைக்கதலால் பூரி கட்டையை தூக்கி கொண்டு துரத்தினாள்.

“அடிப்பாவி ஒரு லவ் பெஃய்லியர் பொண்ணுனு கூட பாவம் பாக்காம இப்படி கொல்ல துறத்துராலே” என ஓடியவள்

“ஜெய் நோ... நோ வயலன்ஸ்...”

“நீ ஒழுங்கா அங்கேயே நில்லு"

"மாட்டேன்….… நின்னு உன்கிட்ட அடிவாங்கவா போ,"

"சேதாரம் கம்மியா இருக்கணும்னா... நின்னுடு.."

"ம்ஹிம் மாட்டேன்.. நீ அந்த கட்டைய கீழ போடு"

"சான்ஸே இல்ல.. நேத்துல இருந்து சாப்பிடாம தூங்காம இருக்கேன், மவளே மாட்டுனடி "

"தூங்காம இருந்தேனு சொல்லு ஒதுக்கலாம்.. நீ சாப்பிடாம இருந்தனு சொன்ன இந்த உலகமே நின்றும் ஜெய்"

"அடங்குறாளா பாரு, இன்னைக்கு நைட்க்கு நீ தான்டி சட்னி” என அடுத்து அங்கு சில பல ரணகளங்கள் நடைபெற்றன .

சில நிமிடங்கள் பிறகு, ஓடி அடித்து பிடித்து அயர்ந்து அமர்ந்தனர் இருவரும்..

தன் அருகில் அமர்ந்து சிரித்து கொண்டிருந்த தாக்ஷியை அமைதியாக பார்த்த ஜெய்மி , தன் தோழியின் தோலை தொட்டு தன்புறம் திருப்பியவள்

"தாக்ஷி ஆர் யூ ஒகே?....”

தோலை லேசாக குலுக்கிய தாக்ஷியோ "ஐயாம் பெர்ஃபக்ட்லி ஆல் ரைட் மை லார்ட் "

"நான் ரொம்ப பயந்துட்டேன் தாக்ஷி"

"அடிப்பாவி உன் பிரண்ட் என்ன அவ்வளவு வீக்கா…,
நீ பெருசா பயந்தத பார்த்த சுசைட் அளவுக்கு யோசிச்சுட்டியோ "

"போடி குரங்கே அந்த அளவுக்குலாம் நீ போக மாட்டேன்னு தெரியும்,
இருந்தாலும் மனசு உடஞ்சு போய் கல்யாணமே வேணாம்,
நன்'னா போறேன்னு சொல்லிடுவியோனு தான்"

"அட மங்கி, எங்க குடும்ப ஜெனீரேஷன்ன என்னோடையே முடிக்க பாத்துருக்க"

"சேச் சே, அதான் அமுலியா இருக்கானே,
பயபுள்ள டஜன் கணக்கா சின்ன அமுலியாஸ்ச ரெடி பண்ணிடுவான்.."

"அடிங்க, உனக்கு நக்கலா போச்சு, சிக்குன மவளே நீ கைமா தான்" என இம்முறை மாறி துரத்த தொடங்கினர்...

“வேணாம் தாக்ஷி இன்னைக்கு நைட்டுக்கு சட்னி மட்டும் போதும்”
என கூறி தாக்ஷியின் துரத்தும் வேகத்தை மேலும் அதிகப் படுத்தினாள் .

திரும்ப மாற்றி மாற்றி ஓடி அடித்து கொண்டு ஒரு வழியாக ஓய்ந்து அமர்ந்தனர்..

ஒரு பெரிய பாரமே இறங்கியது போல் இருந்தது ஜெய்மிக்கு, எங்கே தன் தோழியை தொலைத்து விடுவோமோ என்று பயந்து அல்லவா இருந்தாள். இதோ இந்த நொடி தன் தோழியை அவளாகவே பார்க்கும் நொடி எவ்வளவு சுமைத்தணிவு என்பது ஜெய்மி மட்டுமே அறிந்தொன்று....
இன்னும் அவள் தெளிவு படுத்தி அறிந்துக்கொள்ள வேண்டிய விஷயம் இருந்தது.

ஜெய்மி அதிசயத்தே பார்த்துக்கொண்டிருந்தாள் அவளின் தாக்ஷியை..

"ஓய் என்ன அப்படி குரு குருனு பாக்குற " என புருவம் தூக்கி கேட்டவளிடம்

“மஹிம்.. “ ஒண்ணுமில்லை என்பதாக இடவலபுரமாக தலையாட்டினால் ஜெய்மி.

“ஒண்ணுமில்லன்னா… ஒகே...” என தலையாட்டி எழுந்தவளை கைபிடித்து திரும்ப உட்கார வைத்தாள் .

"தாக்ஷி…… ஸ்பீக் அவுட், வெளிய கொட்டிடு.. உனக்குளே வச்சுக்காதடி,
நா இல்லையா உனக்கு.., நேத்துல இருந்து நீ என்ன தள்ளி நிறுத்தற மாதிரி இருக்குடி,
நீ எந்த எந்த விஷயங்களுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு உன்ன விட எனக்கு தான் தெரியும் தாக்ஷி, உன்னக்குளே வச்சு மறுகாத தாக்ஷி "

அதை கேட்டு அமைதியாக சிரித்து கொண்டவள்
"இப்ப வேற என்ன ஜெய் பண்ணனும்ற, சோகமா…. ஒரு ஓரமா வானத்தையே இல்ல சீலிங்கயோ வெறிச்சு பார்த்து உட்காரவா முடியும்....
வருத்தம் இல்லைனு சொல்லமாட்டேன் பட் என்னால இத விட்டு வெளியே வரமுடியும், கண்டிப்பா வந்தடுவேன்”
என ஆசுவாசப்பட்டவள் தொடர்ந்தாள்

“யோசிச்சு பாரேன் ஜெய், இங்க நடுவில் போனது நான் தான்..
நல்ல வேல நா வந்தேன்னு கூட அவங்க தெரியாம இருக்கிறது தான் நல்லது..
இதுல நான் ஏமாந்தேனு சொல்லவும் முடியாது ஜெய்,
மதி மாமா என்ன என்னய ஏமாத்தவா செஞ்சாங்க, இல்லவே இல்ல …..

இப்ப யோசிச்சு பாக்கும் போது தான் புரியுது, பொங்கல் அப்போ ஊர்ல மாமாட்ட பேசிட்டு வந்து மின்னல் வந்துச்சு இடி வந்துச்சுன்னு உன்கிட்ட உளறிக்கிட்டு இருந்தேன் பாரு...
அவ்வளவு நேரம் ரோபோட்டிக் மோட்ல இருந்த மாமா நாம பிளேஸ் ஆன கம்பெனி பேர் மத்த டீடெயில்ஸ் சொல்லவும் தான் அப்படி ஒரு ரியாக்ஷன்க்கு மாறி நார்மல் ஆனாங்க,
அத என்னமோ நான் எனக்கானது எடுத்துகிட்டது என் தப்பு..”

ஜெய்மியும் நடுவில் குறுக்கிடாமல் அமைதியாக தன் தோழியையே கவனித்து கொண்டிருந்தாள்.

“ஹா ஹா….. ஜெய்…. அதே பார்வையை நேத்து ரெண்டு பேர் கிட்டயும் பார்த்தோமே..., ஹா ஹா “ என சிரித்தவள் தன்னுடன் சேர்ந்து சிரிக்காமல் அமைதியாக தன்னையே பார்த்த ஜெய்மியிடம்

"உள்ள சோகத்தை வச்சுக்கிட்டு வெளியே சிரிக்கிறியானு கேக்குற மாதிரி இருக்கே" என வினவினாள்.

மேலும் கீழும் இடது வலமுமாக எல்லா பக்கமும் தலையை ஆட்டினாள் ஜெய்மி.

தனக்காக ஜெய்மி மிகவும் வருந்தி குழம்பியுள்ளாள் என உணர்ந்த தாக்ஷி

"ஹே ஜெய், நிஜமாவே ஐம் ஆல் ரைட், அதுக்காக எனக்கு வருத்தமே இல்லனு இல்ல…. இருக்கு….,
தி சேம் டைம் அதுக்குள்ளயே மூழ்கவும் மாட்டேன்
தெரியாம நடுல போன நான் தெரியமையே வந்துட்டேன்,
எனக்கு யார் மேலயும் கோவமோ வருத்தமோ இல்ல “ என கூறி ஜெய்மியிடம் அருகே வந்தவள்.

“அண்ட் மை பெட்டர் சோல் நீ இருக்க,
நீ என் கூட இருக்கும்போது இதையும் தாண்டி நான் வந்திடுவேன் ஜெய்,
இல்லைனாலும் நீ என்ன அப்படியேவா விட்றுவ,
ஐ ஹவ் ஹோப் ஆன் யூ தென் மைசெல்ஃப்..” எனக் கூறி தன் ஜெய்மியை அணைத்து கொண்டாள்.

ஜெய்மிக்கும் அந்த அணைப்பு தேவைப்பட்டது, பல நேரங்களில் வார்த்தைகள் தர முடியாத ஆறுதலை மெண்மையான அணைப்பு அளித்துவிடும்..

நேற்று முதல் தன்னுளே கொண்டு குழப்பமுற்று, தாக்ஷியின் நேற்றைய திடீர் மாற்றம் கொண்ட நடவடிக்கைகளால் வருந்தி இதில் இருந்து தாக்ஷி எவ்வாறு மீண்டு வரப்போகிறாள் என தனக்குளே போட்டு உழன்று கொண்ட அழுத்தத்தில் இருந்த ஜெய்மிக்கு தன் தோழியின் அணைப்பு ஆறுதல் அளித்தது என்பது மிகையே.

இருவருக்குமே அந்த அணைப்பு அப்போது மிகவும் தேவையானதாக இருந்தது…….


இரவு பொழுது நெருங்குகையில் அவளின் அலைபேசியை தேடியவள்,
அது அணைத்து இருந்ததால் மின்விசை சேர்வி சேர்த்து உயிர்பித்தாள்..
வெள்ளி இரவு முதலே அலைபேசி அணைத்து இருந்தது, இப்போது தான் எடுத்து மின்விசை சேர்த்து உயிர்பித்தாள்..

அதில் முறையே 1, 6, 2 என அவளின் சித்தி, மேகனா, பிரபு அழைத்துருந்தார்கள்..
இதில் அவளின் வேணும்மாவிடம் பேசி விட்டாள், அவர் ஒரு முறை ஆகினும் மகள் எடுக்கவில்லையென்றால் அடுத்து ஜெய்மிக்கு அழைத்து மகளுடன் பேசி விடுவார்,
இப்போது கூட அவளது அலைபேசி அணைத்து இருப்பதாக அவர் சொன்ன பிறகே தேடி எடுத்து பார்த்து உயிர்ப்பித்தாள்..

மேகனா இவ்வளவு முறை அழைப்பது புதுமையை, ஆகவே முதலில் மேகனாவிற்கு அழைத்தாள்.

"ஹலோ... தாக்ஷி, ஆர் யூ ஓகே "

"ஹாய் மேக், போன் சுவிட்ச்டு ஆஃப், இப்ப தான் பார்த்தேன், நானும் ஓகே இப்ப போனும் ஓகே "

"ஹோ அப்படியாடா சரி சரி,,” என சிறிது இடைவெளி விட்டு
“தாக்ஷி ஒன் திங்…… உன்னால முடிஞ்சா இங்க வீட்டுக்கு வரியா?" என சிறிது தயக்கத்தோடு வினவினாள்.

"கண்டிப்பா மேக், வானு சொன்ன வரப்போறேன், அதுக்கு ஏன் இவ்வளவு யோசனை… எப்பனாலும் வர ஐயாம் ரெடி, எப்ப வரட்டும்?? " என்றாள், மோகனாவின் தயக்கத்தை உணர்ந்து கொண்டவள்.

"நீ எப்பனாலும் வா, யு ஆர் அல்மோஸ்ட் வெல்கம்"

"இப்படிலாம் சொல்லாதீங்க, அப்புறம் லஃன்ச்க்கு வந்துடுவேன்"

பக்கென சிரித்துவிட்டவள் " நோ பிராப்ளம் நீ வா "

"அதுல பாருங்க மேக் நமக்கு இந்த சண்டேலாம் நார்மல் சாப்பாடு ஒத்துக்காது, பிஃவர் வந்துடும்"

"ஹையோ போதும்டி, அடிக்கிட்டே போகாம நாளைக்கு வந்து சேறு உனக்காக லஃன்ச் ரெடியா இருக்கும்"

"ஆர். ஐ. பி மேக் வினையை லஞ்சக்கு குப்பிடுறீங்க…… அந்த கர்த்தர் உங்களை ரட்சிப்பராக, ஏசுவே காப்பாற்றுமைய்யா இந்த குழந்தையை"

என மேகனாவை இலகுவாக்கி அலைபேசியை அனைத்து வைத்தாள் தாக்ஷி நாளை என்ன வர போகிறதவென்று அறியாமல்……


கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றிகள்

கீர்த்தி:love:



Post Reply

Return to “போற போக்கில் ஒரு காதல்”