Page 1 of 1

போற போக்கில் ஒரு காதல் 9

Posted: Tue Aug 18, 2020 5:57 pm
by Kirthika
போற போக்கில் ஒரு காதல்" கதையின் அத்தியாயம் 9 பதிந்து விட்டேன் நட்டுபுஸ்,

கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

அத்தியாயம் 9

ஒட்டு கேட்பதே தவறு, அதிலும் சரியாக முழுமையாக கேட்காதது மிகப்பெரிய தவறு.
அன்றே அவளின் தந்தைகளின் பேச்சை தெளிவாக கேட்ருந்தாள் என்றால் தெரிந்திருக்கும்,
அவளுக்கென அவர்கள் வீட்டில் நிச்சயம் செய்தது மூத்தவன் இளமதியன் அல்ல
இளையவன் அமிழ்திரவியம் என்று.

தவறாக கேட்டு தப்பாக தானாக ஒரு எண்ணம் கொண்டு,
தான் மட்டும் குழம்பி கொண்டது மட்டுமில்லாமல் ஜெய்மியையும் குழப்பி
இடியாப்பம் சிக்கலாக்கி கொண்டவளை என்னவென்று சொல்வது.
( ஒன்னு மட்டும் சொல்லாம் யாரும் ஒட்டு கேக்காதீங்கோ )...

இளமதியன் திரும்ப கனடா செல்லவிருப்பதால் அண்ணன், தம்பி இருவரின் திருமணமும்
ஒன்றாக நடத்தி விடலாம் என அவர்களின் திருமண பேச்சு ஆரம்பிக்கும் போதே தாக்ஷிக்கு தெரிய வந்தது அமிழன் தான் அவளுக்கேன நிச்சியக்கப்பட்ட மாப்பிள்ளை என்று..

பெரிதாக தான் செய்த மடத்தனத்தை எண்ணி மருகியவள்
திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் மறுத்தாள்.

தன் சுயகுற்ற உணர்ச்சியில் தவித்து தான் போக்கில் பிதற்றி கொண்டிருந்த தாக்ஷி சடாரென நிறுத்தியவள், கைகளை அவளின் கண்ணத்திற்கு முட்டு கொடுத்தாள், ஜெய்மி கொடுத்த அறையினால்.

"இதுக்கு மேல நீ எதுவும் பேசகூடாது ,
நான் சொல்றத கேப்பியா மாட்டியா "

...

" நான் சொன்ன கேப்பியா மாட்டியா, எனக்கு தேவ உன்கிட்டயிருந்து பதில் மட்டும் தான் தாக்ஷி "
என்ற ஜெய்மியின் கூற்றில் முகத்தில் உறுதி கொண்டு நிமிர்ந்த தாக்ஷியிடம் இருந்து ஒற்றை சொல் பதிலாக வந்தது..

" கேப்பேன் "..

தான் அவளிடம் என்ன கேக்க போகிறேன் என நன்கு அறிந்திருந்தும்
அது அவளால் இயலாத காரியம் என அறிந்தும் தான் கேட்பதற்க்காக மட்டுமே சரியென்று தன் முன் நிக்கும் தோழியை கண்டு உள்ளே நெகிழ்ந்தாலும், அவளிடம் காட்டி கொள்ளாமல் நின்றாள் ஜெய்மி ,

"உன்னை ஏன் இதை செய்ய சொல்றேன்னு கேக்க மாட்டியா தாக்ஷி "

"தேவையில்லை ஜெய்"

என தன் மேல் அன்பால் கொண்ட நம்பிக்கையில் பேசும் தாக்ஷியை கண்டு உறுகினாலும்
தனது உறுதியே அவளின் தோழிக்கு நன்மை பயக்கும் என நம்பினாள் ஜெய்மி..,

திருமணத்திற்கு ஒத்துக்கொண்டவள்,
தனக்கு இதில் இருந்து மீண்டு வர சிறிது காலம் தேவை என்ற தாக்ஷியின் கூற்று,
ஜெய்மிக்கும் சரியெனவே பட்டது. அதை நிறைவேர்த்த அவர்கள் சென்று நின்றது
தாக்ஷியின் சித்தப்பா சிவிசேனப்பெருமாளிடம்,
வேலை ஒப்பந்தம் என ஏதேதோ காரணம் காட்டி இவர்கள் சொன்ன காரணத்தை கேட்டுக்கொண்டவர்,
தாக்ஷி அமிழனின் திருமணத்தை மட்டும் தள்ளி வைத்துக்கொள்ளலாம் என அவர் முடிவு செய்து
மற்றவர்களிடம் தெரிவிக்கும் முன், திடிரென பாதித்த தாக்ஷியின் தந்தை உடல்நலம் அதனால் விளைந்த பாட்டி வெங்கடலட்சுமியின் தூண்டுதலால் இருகல்யாணமும் குறித்த நேரத்தில் ஒன்றாகவே நடந்து தாட்சாயினி,
தாட்சாயினி அமிழ்திரவியம் ஆகினாள்..

இளமதியனுக்காக அவன் வீட்டில் பார்த்த பெண் தான் மகா, மகாலட்சுமி.
மதியன், அமிழன் அப்பவான செல்வகணபதியின் சித்தப்பா வழி பேத்தி .

அவளது திருமண நடக்க இருந்த சமயத்தில் நடந்த விபத்தில் தவறிவிட்ட தன் அண்ணன் அண்ணி
குழந்தையை அரவணைத்து வளர்த்து வருகிறவள்.

பிறந்து எட்டே மாதத்தில் தாய் தந்தையை ஒன்றாக இழந்த நதியா என்ற அந்த இளஞ்சிட்டுக்கு தாயுமானவளாகினாள்..
அதன் பொருட்டு இரண்டு வருடங்களாக திருமணத்தையே மறுத்து வந்தாள்.

அவளது மணமேடை வரை வந்த திருமணமே நதியவை காரணம் காட்டி,
நதியாவா அவனா என அவளை தேர்வு செய்யும் படி நிர்ப்பதிந்த அவனிடமும் அவன் வீட்டாரிடமும்
அவளின் அண்ணன் மகளே இனி தன் மகள் என உறுதி பட கூறி
அவளின் திருமணத்தை அவளாகவே நிறுத்தி அண்ணன் மகளுக்காக வாழ்ந்து வந்தாள்.

அவளை பொருத்த மட்டில் அவளது அண்ணன் மகள் நதியா மட்டுமே அவளின் எதிர்காலம்.

தன் ஒன்று விட்ட சகோதிரியின் மகளான மகாலட்சமியின் திடத்தில் ஈர்க்கப்பட்டு,
அவளுக்கு பொறுமையும் அமைதியும் கொண்ட தன் மூத்த மகன்
இளமதியனே பொருத்தமான துணையாய் இருப்பான் என முடிவு செய்து,
மகாலட்சுமியின் பெற்றோரிடம் அவரின் எண்ணத்தை தெரிவித்தும் விட்டார்,
இளமதியனின் அப்பாவான செல்வகணபதி.

விஷயம் அறிந்த மகா பெரிதாக மறுக்கவே, அவளின் மற்ற முடிவுகளுக்கு துணையாய் இருந்த
அவளின் பெற்றோர் இப்போது அவளின் மறுப்பை சட்டை செய்யவில்லை,
அவர்கள் இத்திருமணத்தை உறுதி செய்து அவர்கள் முடிவில் நின்றனர்.

அதனால் உறுதி செய்த திருமணத்தை நிறுத்தும் பொருட்டு
இளமதியனையே தேடி வந்தாள் மகா.

" இந்த கல்யாணம் சரியா வராது மாமா, நிறுத்திடுங்க "
என கூறியவளை கையை கட்டி அவளையே பார்த்து கொண்டிருந்த இளமதியன்
பதிலாக ஒற்றை கேள்வியை கேட்டான்.

" ஏன் ? "

"ஏன்னா,.....

நான் மட்டும் தனி ஆள் இல்ல, அம்மா அப்பா சொல்ற மாதிரி நீத்துவ அவங்க கிட்ட விட்டுட்டு
என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது,.
நீத்து என் பொண்ணு, நீங்க கல்யாணம் பண்ணிக்க கேக்குறது ஓரு அம்மாவ,
அத தெரிஞ்சுகோங்க "

" தெரியும் "

" என்ன….. "

" நான் கல்யாணம் பண்ணிக்க கேக்குறது நீத்துவோட அம்மாவனு நல்லாவே தெரியும்..
நீத்துவோட அம்மாவ கல்யாணம் பண்ணி நான் நீத்துக்கு அப்பாவா ஆகலாம் இல்லையா"...

மகாவோ வியந்தாலும் குழப்பமாக " அப்படி என்ன ரெடிமேட் குடும்பம் தான் வேணும்னு .... "

அவள் கூற்றில் லேசாக சிரித்தவன் " ஆமா பாரு.. கல்யாணம் பண்ணினதும் உடனே அப்பா போஸ்ட் கிடைச்சுறுதுல, இட்ஸ் ஈசி ஃபார் மீ ன்னா ".

அவன் பதிலில் அவனை முறைத்தவள், அவனின் ஆழ்ந்த பார்வையில் தடுமாறி
அவளின் பார்வையை அவனிடம் இருந்து பிரித்து வேறு பக்கம் திருப்பி கொண்டாள்.

" இப்ப பேசுறதுக்கு எல்லாம் நல்லா அழகா இருக்கும் மாமா, ஆனா சரி வராது ஏன்னா.. "
என கூறியவளை இடை மறித்தான் இளமதியன் .

" ஏன்னா நீ ஃபரஸ்ட் நீதுக்கு தான் அம்மா, மத்ததுயெல்லாம் அப்புறம் தான்.... அப்படி தான "

உறுதியோடு நிமிர்ந்தவள் "ஆமா, என் பொண்ணுக்கு அம்மாவா தான் நான் இருப்பேன்..
இப்ப மட்டுமில்ல எப்பவும்.. என்னால வேற எதுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முடியாது.
உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்..
அதுமாதிரி நீத்து'க்கு நான் அம்மா ஆகுறது ஈஸி, உங்களுக்கு என்ன வந்துச்சு,
சும்மா ரெடிமேட் வாழக்கைதான் வேணும் உளராம வேற பொண்ண கல்யாணம் பண்ணிகோங்க.. "

"ஏன் இல்ல உனக்கு அண்ணன்னா, எனக்கு மாரிஸ்வரன்.....,
எனக்கும் மாரிஸ் பொண்ணுக்கு அப்பா ஆகுறது ஈஸி தான் மகா "
என்ற தன் தமயனின் பெயரில் ஒரு நொடி நின்றாள்.

"நீ உன் அண்ணன் மகளுக்கு அம்மா ஆனா மாதிரி என் நண்பன் மகளுக்கு என்னால அப்பா ஆக முடியும்,
இரு இரு நான் முடிச்சுடறேன்..
உனக்கு முன்னாடி பேசின கல்யாணத்தை நதியாக்காக நீயே நிறுத்தினது,
தனியா நின்னு நதியாவ வளர்க்கறதுன்னு அப்பா உன்னை பத்தி சொல்லும் போது
உன் மேல மதிப்பும் மரியாதையும் வந்தது...
அதுலாம் இப்போ அப்பா நம்ம கல்யாணத்துக்கு கேட்டபோ எனக்கு சரினு சொல்ல வச்சது, என்கிட்ட மறுப்பு சொல்லவும் எந்த காரணமும் இல்ல"
என அவளை நோக்கி இரண்டு அடி முன்னே வந்தவன்..

"மகா, இப்போ நமக்குள்ள காதல் இருக்கா, இல்லையான்னு கேள்விக்கு நான் வரல,
பட் ஒரு விஷயம் மட்டும் உறுதி..
என் வாழ்க்கையில் என் மனைவிக்கு மட்டுமே என் முழு காதல் இருக்கும்..
அது நீயா இருந்தா சந்தோஷப்படுவேன்... "

இன்னும் அமைதியாக நின்றவளிடம் " ஏன் மகா இன்னும் என் மேல நம்பிக்கை இல்லையா,
நீத்து'க்கு நான் நல்ல அப்பாவா இருக்க மாட்டேன்னு நினைக்கிறியா "

தன் முன் குழப்பத்துடன் நின்றவளை கண்டு
"இங்க யாரும் உன்னை ஃபோர்ஸ் பண்ணல, நல்லா யோசிச்சு சொல்லு சரியா,
என் மேல நம்பிக்கை இருந்த மட்டும் சரினு உன் முடிவ சொல்லலாம்... இப்போ போ"

" உங்க மேல நம்பிக்கை இல்லாமலாம் இல்ல மாமா, எனக்கு என்ன சொல்லறதுனே தெரில "

அவள் பதில் உரைத்ததிலிலே அவள் இங்கு வந்த போது இருந்த மனநிலையில் இல்லை என உணர்ந்தவன்... அவளுடைய தற்போதிய தேவை யோசிக்க சிறிது கால அவகாசமே என நினைத்து
அதை அவளுக்கும் தெளிவு பெற செய்து செல்ல எத்தனித்தான்..
கிடைத்த அவகாசத்தில் யோசித்த மகாவின் மனதும் இளமதியனை
நதியாவிற்கு அப்பாவாக மாற சம்மதம் சொன்னது...

பெரியவர்களின் ஆசைப்படி இரு திருமணமும் ஒன்றாகவே நடந்து
மகாலட்சுமி தாட்சாயினி இருவரும் செல்வகணபதியின் வீட்டு மருமகளாக ஆகினர்.

இருதம்பதியனரும் அவர்களின் இல்லறவாழ்வு தொடக்கத்தை தள்ளிப்போட்டனர்,
முதல் தம்பதியினர் புரிந்து கொள்ளளோடு,
பின்னவர்கள் புரிந்து கொள்ள முயற்ச்சிக்காமல் சூழ்நிலையை காரணம் கொண்டு தள்ளி தனித்து நின்றனர்(நின்றாள்)..

பிறகு வந்த காலத்திலும் தன் வேலையின் ஒப்பந்த காலத்தை காரணம் காட்டி
சென்னையில் தங்கி விட்டாள் தாக்ஷி. அதில் திருப்தி இல்லாமல் இருந்த
இரு வீட்டு பாட்டிகளிடம் எதிர்ப்பு வந்த போது அவளுக்கு துணையாக நின்றவன் அமிழன்.
சென்னை பெங்களூரு இடையே தூர இடைவெளி பெரிதாக இல்லை என அவர்களை சமாளித்து
அவள் வேலைக்காக சென்னையில் நிற்க உறுதுணையாக இருந்தான் அவளின் உடையவன்.

ஆனால் தாக்ஷியோ சென்னையிலே நின்று விட்டாள்.
இவளும் பெங்களூரு சென்றாள் இல்லை,
அவனாக சென்னை வந்தவனிடமும் அதிக நேரம் செலவழிப்பதை
வேலைகளை தானே உருவாக்கி தவிர்த்தாள்.

முறைத்த ஜெய்மியிடமும் " ஐ நீட் டைம் ஜெய் " என முடித்து விட்டாள்.

ஜெய்மிக்கும் தோழியின் நிலை நன்கு புரிந்த்து.
நிர்மலான மனநிலையில் தாக்ஷி அமிழனின் மனைவியாய் ஆகினாலும்,
மனதளவில் தயாராகவில்லை..
இளமதியனிடம் தான் கொண்டது காதல் இல்லை என எளிதாக கடந்து வர முடிந்தவளுக்கு,
இதில் இருந்து தன்னை எளிதாக மீட்டு கொள்ள முடியவில்லை.
ஒரு வேலை சிறிது காலம் அவகாசம் கிடைத்திருந்தால் அவள் இதை விட்டு மீண்டு வந்திருப்பளோ ' டைம் ஹீல்ஸ் எவிரி திங் ' என நினைத்து கொண்ட ஜெய்மியும் தாக்ஷியை அவள் போக்கிலே விட்டாள்.

மேகனா விஷயத்தினால் இளமதியன் மேல் தாக்ஷி கொண்டிருந்த வருத்தமும்
அவனது திருமணத்தில் மறைந்து விட்டது. அதிலும் இளமதியன் அவர்கள் திருமணத்தை ஒட்டி நீத்து வை சட்டபூர்வமாக சுவீகரிகம் செய்து கொள்ளவும் அனைவரையும் போல் இவளின் மனதும் இருவரையும் வியந்து பாராட்டவே செய்தது.

முன்தம்பதிகளின் வாழ்க்கை ஒன்றாக கனடாவிலும், பின்னவர்களின் வாழ்க்கை சென்னை பெங்களூரில் தனித்தனியாக ஆரம்பமானதும்...