போற போக்கில் ஒரு காதல் 10

Post Reply
Kirthika
Moderators
Posts: 18
Joined: Fri Jul 17, 2020 5:18 pm
Has thanked: 2 times
Been thanked: 4 times

போற போக்கில் ஒரு காதல் 10

Post by Kirthika »

அத்தியாயம் 10

மொத்தென்று தன்மேல் விழுந்த தலையணையால் எழுந்தவள்
அதை தன் மேல் போட்டவனை துரத்தி கொண்டு ஓடி திரும்ப அவனை மொத்திய பிறகே வேணும்மாவிடம் சென்றார்கள், மொத்திய தாக்ஷியும் மொத்து வாங்கிய பிரபுவும்.
ஜெய்மியின் திருமணத்திற்காக முன்னதாக அவள் மட்டும் புதுக்கோட்டைக்கு வந்திருந்தாள்.

" ஏம்மா, இன்னைக்கும் பால் பணியாரமா... பால் கொழுக்கட்டை பண்ணக்கூடாதா...
இதையே இவ வந்ததுலிருந்து மூணாவது தடவ பண்ணறீங்க...
இதுலாம் நல்லாயில்ல சொல்லிப்புட்டேன்.. " என்றான் பிரபு.

" ஏன்டா அக்காவோட போட்டிக்கு போற,
ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் அவளே வந்திருக்கா, பாவம் புள்ள "...

"யாரு இவ பாவமா.....
நீ பாவம்னு மாமாவை வேணும்னா சொல்லலாம்.
இவளுக்கு நல்லா சமைச்சு போட்டு சமைச்சு போட்டு அவர் தான் களைச்சு போயிருப்பாரு,
இவ நல்லா வெயிட் ஏறி தான் வந்திருக்கா"

"என்ன அமிழு தான் சமைப்பான" என அதிசியத்த அவர்களின் அப்பத்தா வெங்கடலட்சுமியின் அடுத்த கேள்வி தன்னை நோக்கி தான் வரும் என உணர்ந்த தாக்ஷி வேகமாக பிரபுவை துறத்துகிறேன் என்ற போர்வையில் அங்கிருந்து ஓடிவிட்டாள்.

"டேய் அமுலியா மாட்டியா விடுற,..
உனக்கு எப்படிடா தெரியும்" என அவனை கூர்ந்து பார்த்தாள்.

"ஆமா சொல்றாங்க பிபிசி'ல ஹெட் லைன்ஸா...
நீ ஏன் இவ்வளவு சீக்கிரமா வந்துருக்க, கல்யாணம் பண்ண போற ஜெய்மி அக்காகூட இன்னும் வரல..
உனக்கு என்ன அவசரம் , ஒழுங்கா மாமா கூடவே வந்திருக்கலாம்ல..."

அவன் வார்த்தையில் நின்றவள்
" நம்ம வீட்டுக்கு நான் மாமாவோட வந்தாதான் வரனுமாடா,
அப்போ இனி இது என்னோட வீடு இல்லையா பிரபு "
என சோர்ந்து அமர்ந்த தன் அக்காவை பார்த்தவனின் மனதும் சோர்ந்தது.
ஜெய்மிக்கு அடுத்து தாக்ஷியின் குழப்பத்தை அறிந்தவன் பிரபு மட்டுமே.

முதலில் அவளது திருமணத்திற்கான சம்மதமும் பின்னர் அவளின் மறுப்பும் மட்டுமே வீட்டினர் அறிந்தது,
அதற்கு பின்னே உள்ள காரணம் ஜெய்மியோடு பிரபு மட்டுமே அறிவான்.
அதேபோல் தாக்ஷியின் அமிழனோடு திருமணத்திற்கு ஜெய்மியோடு பிரபுவும் காரணம்.

தன் அக்கா அமிழன் மாமவிற்கு பதிலாக மதி மாமாவை தான் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை என்று தவறுதலாக புரிந்துள்ளாள் என விளக்கியவன் பிரபுவே.
அதன் பிறகும் திருமணதிற்கு மறுத்தவளை
வேணும்மா, பெரியப்பாவின் உடல்நிலை, அப்பத்தாவின் பேச்சு என திசை திருப்பி சம்மதிக்க வைத்தான்.
ஒரு பக்கம் ஜெய்மி என்றால், மறுபக்கம் பிரபு என்று அவளின் திருமணத்திற்கு தாக்ஷியை சம்மதம் சொல்ல வைத்தது.

இப்போதும் இன்னும் குழம்பி கொண்டிருப்பவளின் அருகே அமர்ந்தவன்
" நிச்சயமா இல்லக்கா, இது உன்னோட வீடு இப்ப மட்டுமில்ல எப்பவும்...
இது உனக்கே நல்லா தெரியும்... இத நான் சொல்லியா உனக்கு தெரியனும்....
இப்படி நீ கேக்குறதே அபத்தமா தெரிலயா ....
அண்ட் நீ தான் இப்படி யோசிச்சு சோர்ந்து போய் உட்காருற ஆளா,
நீ நீயாவேயில்லக்கா"

"நானும் என்னய தான் பிரபு தேடிட்டு இருக்கேன் " என தனக்குள் மூழ்கினாள்.

"ஸ்லோ.." என பிரபு கூறவும் என்னவென்று புரியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"ஆமா... ரொம்ப ஸ்லோக்கா, இதுவே லேட்டு... இதுல பாத்து பதமா தேடுறாங்களாம்...
வெரசாக்க வெரசா... " என தாக்ஷியின் தோலை போட்டு ஆட்டினான் பிரபு.

அதில் புன்னகைத்து உணர்வு பெற்றவள்,

"இப்பலாம் நா அக்கா மாதிரி இல்ல.. நீ தான் அண்ணன் மாதிரி இருக்க " என்றாள் ஆழமாக..

அவளின் அருகே குனிந்து " இதுல அண்ணன் தம்பினு என்ன இருக்கு, யாராயிருந்தாலும் அவங்க பர்ஸட் ப்ரயாரிட்டி அவங்கங்க சிஸ்டர்ஸ்க்கு தான். எனக்கு மட்டுமில்ல நம்ம வீட்டுக்கே நீ தான் எப்பவும் ஸ்பெஷல்..
இப்படி உனக்குள்ளே சோர்ந்து உட்காராத....”

..........

“கைலயே வச்சிகிட்டு வெளில தேடிட்டு இருக்கக்கா நீ…..
நம்ம வீட்டு பொண்ணா தேடாம மாமாவோட தாக்ஷியா தேடு... "
என ஆழ்ந்து கூறி தன் தமக்கையை தோளோடு அணைத்து கொண்டான்.
பெண்ணவளும் தன் தம்பியிடம் தங்கையாக மாறி அவன் கைவளைகளின் தலை சாய்த்துக்கொண்டாள்.

"தேங்க்ஸ் டா... "

"இது எதுக்கு... "

"தெரில " என தோலைகுழுக்கிக்கொண்டு திரும்ப அவன் தோல்வலைகளில் அமைதியாக சாய்ந்துகொண்டாள். அந்த அமைதி இருவர்க்கும் ஒரு நிறைவை கொடுத்தது.

இவர்களை தேடி மாடி ஏறி வந்த வெங்கடலட்சுமி
"ஏட்டிகளா கீழ அம்புட்டு கலவரம் பண்ணிட்டு இங்க வந்து கொஞ்சிகிட்டு இருக்குதுங்க,
இந்த சிறுசுகளுக்கு லொள்ள பாரு"

"என் அக்கா! என் தம்பி ! நாங்க அப்படித்தான் " என திரும்பவும் செல்லம் கொஞ்சி கொண்டனர்.

'ரெண்டையும் சமாதானம் பண்ணி சாப்பிட கூட்டிட்டு போகலாமான்னு பாத்த, இந்த சிறிசுகளுக்கு ரொம்ப தான் எகத்தாலாம்' என முகவாயில் கை வைத்து அதிசியத்த அவர்களின் அப்பத்தா வெங்கடலட்சுமி

"ஏட்டிகளா ஒழுங்கா கீழ வந்து கால பலகாரம் சாப்பிடுங்க,
நாங்க சமையல்கட்ட ஒழிச்சு மதியத்துக்கு ஆக்க வேணாம்,
உங்க அப்பாமாருங்க வெரசா போனாதான் நல்ல நண்டு கிடைக்கும்"

"என்ன நண்டா??? ஏ அப்பத்தா முந்தாநாள் தான நண்டு வச்சீங்க,
ஒழுங்கா இன்னைக்கு மட்டன் வாங்குங்க " என பிரபு வெகுண்டவும்

" டே மட்டன் எனக்கு பிடிக்காதுடா " என தாக்ஷி இந்த பக்கம் சிலிர்த்து கொண்டு வந்தாள்.

" எனக்கு நண்டு ஒத்துக்காது "

"பெரியப்பா உனக்கு மீனு வாங்கியாறேன்னு சொல்லிருக்காரு கண்ணு" என இடையிட்டு கூறிய வேங்கடலட்சுமியை கவனித்தார்கள் இல்லை..

" அது என்ன ஸீ புஃட் ஒத்துக்காதாம் ஆனா மீனு மட்டும் சாப்பிடுவாராம்,
மீன் மட்டும் நிலத்துல வாழுதோ " என தொடர்ந்து சண்டை போட்டு கொள்ள ஆரம்பித்தனர்.

பொறுத்து பார்த்த வெங்கடலட்சுமி " எப்படியோ போங்க, இனி என்னால மாடி ஏறி வரமுடியாது,
உங்க அம்மாளுக்கு கீழ வேலையிருக்கு ஒழுங்கா வந்து சாப்பிட்டுட்டு அப்புறம் அடிச்சுகோங்க "
என புலம்பி கொன்டே கீழே சென்றார்.

எதிர்ப்பட்ட தன் மகன்களிடமும் புலம்ப மறக்கவில்லை அவர்
"ஏன்டா இப்ப செத்த நேரம் முன்னாடி தான் நல்லா பாசமா கொஞ்சிகிட்டு இருந்துச்சுங்க ,
அட நம்ம புள்ளைகளா இது கண்ணு நிறைஞ்சு அதிசயமா பாத்துகிட்டு இருந்தேன்
அடுத்த நிமிஷமே திரும்ப அடிச்சுக்கிதுங்க " என அதிசியப்பட்டார்.

"நீங்க ஏன்ம்மா மாடி ஏறி ரெண்டு பேர் நடுல தலையை கொடுக்கீறீங்க,
அதுலாம் அடிச்சு பிடிச்சு சோர்ந்து போய் தானா சாப்பிட வருவாங்க..
இப்ப மாடி ஏறிட்டு அப்புறம் கால் வலிக்குது ஊசி போட கூட்டிட்டு போங்கடானு சொல்றது,
இதுக்கு மேல ஊசி போட போன டாக்டரே வெளிய போக சொல்லிடுவாரு"

"அட போட இவன் கிடைக்கான்..
ஆனா சிவசு, மூர்த்தி பிரபு கையில அவன் அக்கா தலைய சாஞ்சுகிட்டு பேசிட்டிருந்ததா பாக்கணுமே!,
கொள்ள அழகுடா! அந்த மாதிரி ஒரு போட்டா பிடிச்சு இங்க பெருசா மாட்டனும்.
அப்படியே ஊருக்கும் ஒன்னு கொண்டு போகனும்,
ஆண்டவா என் பிள்ளைகள இப்படியே ஒத்துமைய்யா சந்தோசமா வச்சுருப்பா "
என உடனடி ஒரு வேண்டுதலையும் வைத்தார்.

"ஏன்மா இதுக்கு போய் வெசனப்படுறீங்க, அதுலாம் ரெண்டும் சும்மா அடிச்சுக்குங்க
ஆனா ரெண்டும் ஒருத்தர ஒருத்தர் விட்டு கொடுக்காதுங்க"

"எனக்கும் அந்த நம்பிக்கை இருக்குப்பா.. உங்க ரெண்டு பேர் மாதிரி அதுங்களும் ஒத்துமையா இருக்கனும்.
நம்ம அமிழ்க்கே தாக்ஷிய கட்டி கொடுத்தது ஒரு நிம்மதினா,.
அடுத்து நம்ம பிரபு அவன் அக்காவ அண்ணன் மாதிரி பாத்துக்குவாங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு, அந்த சந்தோசம் போதும்.
இதுங்க ரெண்டும் அடிச்சுக்கிறத பாத்து முன்னாடிலாம் நான் ரொம்ப பயந்துருக்கேன்"

"ம்ஹிம் என் பிள்ளைங்க அதுலாம் உங்க பிள்ளைகள விட நல்லா ஒத்துமையா பாசமா தான் இருக்காங்க,
இனியும் இருப்பாங்க யாரும் கண்ணு வைக்காம இருந்தா சரி"
என அங்கிருந்து நொடித்து கொண்டு சென்றார் வேணுவிசாலாட்சி.

"இவ இப்ப என்னத்துக்கு சிலிர்த்துக்கிட்டு போற " என்ற தன் இளைய மகனிடம்,

"அத வேற ஒன்னும் இல்லடா என்னய விட அவ பிள்ளைகள நல்லா வளர்த்துருக்காலாம், அதான் என்னையவே கண்ணு வைக்காதீங்கன்னு ஏட்டிட்டு போற" என்றுவிட்டு வீட்டின் உள்நோக்கி " வேணும்னா உன் பிள்ளைகளா உட்கார வச்சு நல்லா சுத்தி போட்டுக்கோடி" என கூறினாலும் அங்கு இருந்த மூவர்க்கும் உள்ளே சென்ற வேணுவிசாலாட்சிக்கும் மகிழ்ச்சியே...

*************

அமிழ்திரவியனோ வீட்டிற்கு செல்லும் வழியை மறந்து போல இலக்கில்லாமல் மகிழுந்தை செலுத்தி கொண்டிருந்தான்.

அவன் ஆசையாக வாங்கி செதுக்கி இவ்வளவு நாள் அவன் மட்டுமே வசித்த வீடுதான்,
ஏன் திருமணம் முடிந்தும் சில மாதங்கள் தனியேதான் இருந்தான்.
இந்த இரண்டு மாதங்களாகதான் தாக்ஷியின் இருப்பிடமாகவும் மாறியது.
இவ்வளவு மாதங்கள் தனியாக இருக்க முடிந்தவனுக்கு அவள் சென்ற இந்த சில நாள்கள் இருக்க முடியவில்லை.

வீட்டின் அமைதியும் நிசப்தமும் அவனை பித்தனாக்கியது.
இருவரும் மனமுவந்து பேசி சிரித்து கணவன் மனைவியாக வாழவில்லை என்றாலும் அவனவளின் இருப்பே அவனுக்கும் அவன் வீட்டுக்கும் உயரிப்பை தந்தது.
அவள் இல்லாத வீடும் அவனும் வெறுமையாக உணர்ந்தனர்.

திருமண ஆரம்ப காலத்தில் தாக்ஷியின் பனியின் பொருட்டு அவர்களுள் வந்த இடைவெளி அதிகரித்தது.
அந்த இடைவெளி அவனை தன்னவளிடம் மனதால் நெருங்க முடியாமல் தடுத்தது.
அவளாகவும் அந்த இடைப்பட்ட நாள்களில் பெங்களூர் வரவில்லை,
அவளை காண சென்னை சென்றாலும் அவனோடு நேரம் ஒதுக்குவதை குறைத்தவளிடம் அவனால் நெருங்க முடியவில்லை. அதில் கடமை உணர்வை மட்டுமே அவனால் கண்டுகொள்ளமுடிந்தது.

அவனுக்கோ அவளின் ஒப்பந்த காலம் எப்போது முடியும்...
அது முடிந்ததும் அவள் எங்கே வேளையில் அமர்வாள்,
இல்லை தான் வேறு வேலை மாறிக்கொண்டு சென்னை போய்விடலாமா என யோசித்து ஒரு பக்கம் சென்னையில் தனக்கு ஏற்றார் போல் வேலையை அலச தொடங்கிருந்தான்.

இவ்வாறு தன்னுள் உழன்று கொண்டிருந்தவனை எழுப்பியது ஒரு விடியற்காலை அழைப்பு.
அவனின் மனைவி அவனிடம் வந்து சேர்ந்த நாள்.

அந்த அதிகாலை பொழுதில் உறங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பிய தாக்ஷியின் அலைபேசி அழைப்பு அவனுக்கு முதல் ஆச்சிரியம் என்றால், அலைபேசியில் அவள் அளித்த செய்த அடுத்த ஆச்சிரியம்.

"ஹலோ,.. மாமா இங்க KJP, பெங்களூரு கண்டாய்ன்மெண்ட், பெங்களூரு சென்ட்ரல்னு நிறைய பிளேஸ் சொல்றாங்க, எங்க இறங்குறது "

என்னவென்று புரியாமலும், அவளின் விடியற் காலை அழைப்பிலும் விழித்தவன்.

"டுக்.... தாக்ஷி என்ன சொல்ற, எதுக்கு அதுலாம்"

" மைசூர் எக்ஸ்பிரஸ்ல பெங்களூர் வந்துட்டு இருக்கேன் மாமா... எங்க இறங்கனும்"
என அவள் கூறியதும் தான் தாமதம் அவள் கொடுத்த செய்தியில் இன்பமாய் உணர்ந்து வேகமாக எழுந்து விட்டான்.

அவளின் இந்த திடீர் வருகை, அதுவும் அவளாகவே அவனிடம் வந்தது அவன் முற்றிலும் எதிர்பாக்காதது .

பதிலே வராததால் இந்த பக்கமிருந்து தாக்ஷி,

"ஹலோ ... மாமா ...."என கூறியதும் உணர்வு வந்தான்.

"கண்டாய்ன்மென்ட்ல இறங்கிடு தாக்ஷி " என பதில் உரைத்தவன் ரயில்பெட்டியின் வகுப்பு மற்றும் எண், அவள் இப்போது எந்த இடத்தில் வந்துகொண்டிருக்கிறாள் என அறிந்து கொண்டு இன்னும் இருபது நிமிடங்களில் வந்துவிடுவாள் என்பதால் விரைந்து சென்று அவள் இறங்கும் முன் அவள் வந்த ரயில் பெட்டியின் முன் நின்றான் தன்னவளை வரவேற்க மனம் முழுதும் பேரானந்தத்தோடு.

************

மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த மகிழுந்தில் அமைதியே நிலவியது, வரும் போது அடித்து பிடித்து விரைந்து வந்தவன் திரும்பும் போது மெதுவாக மிக மெதுவாக பொறுமையாக சென்றான் அவளுடனான பயணத்தின் இனிமையை ரசித்துகொண்டு.

தன் அருகே இருந்தவளை திரும்பி பார்த்தவன் எதுவும் கேட்டானில்லை, அவனை பொருத்த மட்டில் அவளாகவே அவனை தேடி வந்ததில் உவகை கொண்டான்.

எதுவாக இருந்தாலும் அவளிடம் இருந்தே வரட்டும் என்றிருந்தான்.

காரில் நிலவிய அமைதியை உடைத்தது தக்ஷியின் குரல்,

" நான் பேப்பர் போட்டுட்டேன் "

" பாண்ட் இருந்தது "

"முடிஞ்சுடுச்சு "

"ஆனா ஏன்... " என இழுத்தவன்.. அமைதியாக இருந்தான்.

" எப்படியும் பெங்களூர்ல பிளேஸ்மெண்ட் இருக்காது... அதான்.."

"ஆனா அதுக்காக கிடைச்ச வேலைய விடுறதா……" என்று அமிழன் கூறவும்
தாக்ஷி அவனை திரும்பி பார்த்துவிட்டு அமைதியாக ஜன்னல் பக்கம் திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

இங்கு இவனின் மனசாட்சியோ
'இப்ப அவ வேலைக்கு போகலங்கிறது தான் உன் பிரச்சினையா டா,
இவ்வளவு நாள் பிரிஞ்சு இருக்கோம் புலம்புன.. இப்ப அவளா வந்தவளையும் திரும்ப அனுப்பிடாத..
வாய மூடிட்டு இரு ' என இடித்து உரைக்கவும் அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை..

வெளியே வண்டியில் ஒழித்த இசையின் இனிமையை விட தன்னுள் பரவிய இனிமையை ரசித்து உணர்ந்து கொண்டிருந்தான்.

வீடும், அவனும் தாக்ஷியை மிகுந்த ஆரவாரத்துடன் உள் அழைத்து கொண்டனர்..

பின் வந்த நாள்களில் என்ன தான் அவனிடம் சகஜமாக பேசினாலும் அவளுக்குள் ஒரு வட்டம் போட்டு கொண்டு அதன்னுள்ளே இருந்தாள். அதனை நன்றாக உணர்ந்தவனும் அவ்வட்டத்தை தாண்டி அவளிடம் நெருங்க முயலவில்லை..
அவளின் அருகமையே அவனுக்கும் அவன் வீட்டுக்கும் போதுமானதாக இருந்தது..

இதோ இன்றோ அவளில்லாமல் வீட்டிற்கு செல்ல பிடிக்காமல் மனம் போன போக்கில் டிரைவ் செய்து கொண்டிருந்த அமிழனை தன் உணர்விலிருந்து மீள செய்தது அலைபேசி அழைப்பு..

" சொல்லு மதி "

" எவ்வளவு நேரம்டா கால் பண்ணுறது, ஃபர்ஸ்ட் வீடியோ கால் வா நீ " என அலைபேசியை அனைத்து விட்டு வீடியோ காலில் வந்தான் இளமதியன்.

" ம்ம் சொல்லு "

" என்னத்த சொல்றது, இப்போ எங்கடா இருக்க "

"ம்ம்ம் நடு ரோட்டில இருக்கேன்" என கடுப்பாக அமிழன் பதில் அளிக்கவும், அது எதனால் என்று தன் இளையவனை அறிந்த தமயனோ சிரித்தான்.

" ஹா ஹா... ஏன்டா தாக்ஷி ஊருக்கு போன இந்த நாலு நாளைக்கா இந்த அழம்பல் பண்ணிட்டு இருக்க "
என மேலும் சிரித்து தன் இளையவனின் கடுப்பை அதிகரித்தான் இளமதியன்.

"ஹோ அப்படிங்களா சார், அம்மாவும் அப்பதாவும் அண்ணிக்கு பெர்க்னன்சி சிக்னஸ் அதிகமா இருக்குன்னு தெரிஞ்சதுல இருந்து அண்ணிய இங்க கூட்டிட்டு வர பறந்துட்டு இருக்காங்க
நான் தான் ரெண்டு பேரையும் அமுக்கி ஆஃப் பண்ணி வச்சிருக்கேன்..
இருடா நாளைக்கே அப்பத்தாக்கு டிக்கெட் போட்டு ஃபிளைட் ஏத்தி விடுறேன்..
அப்பத்தா ஒரு ஆளே போதும் தனியாவே வந்து அண்ணிய நெய்யூலிக்கு கூட்டிட்டு வந்திடும்..
எப்படி வசதி, நாளைக்கு டிக்கெட் போற்றவா "

" அடேய் அடேய் நா என்னடா பண்ணுனேன் உனக்கு..
இந்த யோசனையை அப்படியே கிடப்பில் போடு"

"இல்லடா, அப்பதாக்கு டிக்கெட் போட்டதான் நீ சரி வருவ'

"அடேய், போதும்… யோசனையயோட நிறுதிக்க, அத இம்ப்ளிமெண்ட் பண்ற ஐடியாலாம் வச்சுக்காத...
சரி விடு, வீட்டுக்கு தான் போகாம சுத்திட்டு திரியுற சாப்பிட வாச்சும் செய்ஞ்சியா "

"பச் ... இல்ல டா "

"இப்பவே பத்து மணி மேல இருக்குமேடா,
அதான் நீயும் இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு கிளம்ப போறேல... ஜஸ்ட் டு டேஸ் தான"

"பசிக்கல விடேன்"

"அது என்ன பசிக்கல… பிடிக்கலனு..,
ஆனாலும் நீ இருக்கியே டா... எல்லாத்துக்கும் பிடிவாதம் அவசரம் உனக்கு....
நான் கனடா ரீடர்ன் ஆகுறதுக்கு நாலு மாசம் இருந்ததா ஒரு மாசமா என்னை கேன்சல் பண்ணி குறைக்க வச்சு, என்னமோ நான் திரும்பி இந்தியா வர நாலு அஞ்சு வருஷம் ஆகும்கிற மாதிரியும் அதுனால நான் உன் கல்யாணத்தை பாத்துட்டு தான் போவேணு அடம் பிடிச்ச மாதிரி என்னை எல்லார்கிட்டையும் சொல்ல வச்சு என்கூடவே மேரேஜ் பண்ணிகிட்டா அவசர குடுக்க தானடா நீ. அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்"

"டேய் கடுப்பை கிளப்பாம போன வச்சிட்டு வேலைய பார்த்து பிள்ளை குட்டிகள படிக்க வைக்கிற வழிய பாரு"

"ஆமாம்ல எனக்கு தான் இப்போ ரெஸ்பான்சிபிலிட்டி டபுள் ஆகிடுச்சே, உனக்கு என்ன பிள்ளையா குட்டியா... நீ ரோட்டை காவல் காத்துட்டு இருக்காம சீக்கிரம் வீட்டுக்கு போய் சேருற வழிய பாரு " என போனை வைத்தான்.

தன் தமயனிடம் பேசி வைத்ததும் தான் எங்குயிருக்கிறோம் என சுற்றும் முற்றும் பார்த்து,
தான் பெங்களூர் விட்டு தொலைவில் வந்து விட்டதை உணர்ந்தான் அமிழன்.
"ஷீட்.." என வண்டியை நிறுத்தியவன், சீட்டில் தலைக்கு கை கொடுத்து கண் மூடி சாய்ந்து விட்டான்..

சில நிமிடங்கள் மௌனத்தை எடுத்து கொண்டவன் எழுந்து பெரு மூச்சுவிட்டு ஒரு முடிவுடன் வண்டியை இயக்கி கிளம்பினான்...



Post Reply

Return to “போற போக்கில் ஒரு காதல்”