பால்கனியில் நின்ற அமிழனிடம் தண்ணீரை வெதுவெதுப்பாக்கி கொண்டு வந்து கொடுத்தவள் அவன் கழுத்தை இடவலப்புரமாக தளர்வாக்கி கொள்வதை பார்த்ததும்,
"அப்பா சொன்ன மாதிரி டிரைவர் அண்ணாவ கூட்டிட்டு வந்திருக்கலாம்ல மாமா... தனியா இவ்வளவு தூரம் ட்ரைவ் பண்ணி ஏன் கஷ்டப்பட்டுகிட்டு..."
திரும்பி அவளை கூர்ந்து பார்த்தவன் "எனக்கு உன்னோட நான் மட்டுமே ஸ்பெண்ட் பண்ணுற லாங் ட்ராவல் வேணும் டுக்கு... "
அவன் கூறியதன் முதல் வார்த்தையை விடுத்து " மாமா.. நீங்க என்ன புதுசா இப்படி கூப்பிடுறீங்க.."
"எப்படி.. "
"அதான் டுக்கு'னு.. நீங்க இப்படி கூப்பிடுறது சின்ன வயசுல என்னை டக் டக்கு'னு ( dhakshi to duck )..... கூப்புடுவீங்கள அது மாதிரி இருக்கு "
அவளின் கூற்றில் வாய் விட்டு சிரித்தவன் " அதுலாம் இன்னுமா ஞாபகம் வச்சிருக்க... "
" ஆமா.. ஆமா.. மறக்கிற மாதிரி தான் நீங்க கிண்டல் பண்ணி வச்சுருக்கீங்க பாருங்க... எப்ப பாத்தாலும் டக் டக்'னு வம்பு இழுத்துட்டு இருப்பீங்க" அவள் கூற்றில் மேலும் சிரித்தவன்
பேசி கொண்டே அவளின் அருகே வந்து,
" ஏன் தாக்ஷி நான் உன்னை அப்படி கூப்பிட்டு கிண்டல் பண்ணுறத நிறுத்தி ரொம்ப வருசமாச்சே.. உனக்கு தெரிலயா... "
அவளின் அருகே கண்ணோடு கண் கலந்து மென்மையாக கேட்டவன் முன் நிலை தடுமாறி நின்றவளை , அவனவளின் கண்களின் வழியாக அவனை கண்டுகொண்டானோ....
அவளின் கன்னங்களை கைகளில் ஏந்தி விழி விரித்து அவனை பார்த்து படபடத்த இமைகளில் இதழ் ஒற்றி அடுத்தாக இதழ் நோக்கி குனிந்தவனின் செய்கையில் இதுவரை சுயம் இழந்து நின்றவள் கடைசி நொடியில் சுயம் பெற்று அவன் மார்பில் கை வைத்து தள்ளி நிறுத்தினாள்.
அவளின் நடுக்கமும் கண்களில் தெரிவித்த மறுப்பும் அவனை நிற்க வைத்து. மேற்கொண்டு கிடைத்த இடைவெளியில் அவள் உள்ளே சென்று விட்டாள்.
இந்நாள் வரை தனிமையை எளிதாக கடந்து வந்தவனுக்கு அவளின் கண்களில் அவனுக்கான நேசத்தை கண்ட பிறகும் விலகி நிற்க முடியவில்லை, விலகி நிற்பவளையும் கடந்து வர முடியவில்லை.
பின்னர் வந்த நாள்களில் தனிமையை இம்முறை அவன் கையில் எடுத்து கொண்டான்.
இதுவரை ஒரே அறையை உபயோகப்படுத்தியவர்களின் வழக்கம் மாறியது அவன் முகப்பில் உள்ள நீளவிருக்கையில் தஞ்சம் புகுந்ததால்.
இரண்டு நாள்கள் மேலாக நீடித்த அவனின் இறுக்கமான ஒதுக்கத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் இன்றும் நீளவிருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சியில் லயித்தவனிடம் சென்றாள்.
" இப்ப என்னாச்சு மாமா ஏன் இங்க சோஃப'லயே தூங்குறீங்க.. கம்ஃபர்டபிளா இருக்காதுல "
அவளின் பக்கம் பார்வையை திருப்பாமல் தொலைக்காட்சியிலே லயித்தவன் " ஒன்னும் பிரச்சனை இல்ல.. எனக்கு இங்க கம்ஃபர்டபிளா தான் இருக்கு.. நீ தூங்கு போ... "
" இவ்வளவு நாள் இல்லாம இப்ப மட்டும் என்னாச்சாம்.."
" நீ பேசாம போய் தூங்கு தாக்ஷி.. "
" மாமா.... "
என திரும்பவும் ஆரம்பித்தவளை இடைமறித்தான்,
" தாக்ஷி.... என்னால முன்ன மாதிரி கை கால வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியாது.... அது உனக்கு ஓகே'ன்னா சொல்லு உள்ள வந்து படுத்துக்கிறேன் .... "
அவன் கூறியதை உணர்ந்து விழி விரித்து நின்றவளை கண்டு
" என்ன தாக்ஷி.. உள்ள வந்து படுத்துக்கட்டுமா... "
அதில் உணர்வு கொண்டு வேகமாக அவள் செல்வதை பார்த்தவன் தனக்குள் புன்னைகைத்து
' நீ சின்ன வயசுல இருந்த அதே டக்கு தான்'டி'
நினைத்து கொண்டாலும் வெளியே காட்டி கொள்ளாமல் இறுக்கி கொண்டான்.
தொடர்ந்த அவனின் ஒதுக்கத்தை கண்டு தடுமாறியவளுக்கு அவளுள் எழுந்த ஒதுக்கம் குழப்பம் எல்லாம் பின்னுக்கு சென்றன.
' அப்படினா இப்போ என் மனசு ஃபுல்லா இருக்குறது மாமா தான'
'ஏன் பிடிக்காமயா கல்யாணம் பண்ணிகிட்ட'
'இல்ல இல்ல அப்படிலாம் சொல்ல முடியாது... ஆனா.....'
'என்ன ஆனா.. அந்த ஆனா'வ ஃபுல் ஸ்டாப் போட்டு நிறுத்து.. இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லிட்டு இருப்ப.. ஐ க்நோ யூ லைகிங் ஹிம்.. ஆமா தான'
' ஆமா .. .. ஆமா... '
' அப்புறம் என்ன.. அந்த ஆனா'க்கு டாட் போட்டு ஃபுல் ஸ்டாப் வச்சிட்டு....ஜஸ்ட் ஷோ இட் '
என அவளுக்குளே சுய அலசளில் விழுந்தவளுக்கு இறுதியாக கிடைத்த விடையின் நிறைவில் அமிழனை காணவும் அவனிடம் தெரிவிக்கவும் அப்போதிருந்தே அவனுக்காக காத்திருக்க தொடங்கினாள்.
அலமாரியில் உடைகளை அளந்து கொண்டு வந்தவளின் கைகள் ஒரு சேலையில் நின்றன.
அவளது செயலை நிறுத்திய அந்த ஆடை அவளிடம் வந்து சேர்ந்த நாளை நோக்கி அவளின் சிந்தனைகள் பின்னோக்கி சென்றன.
மேகனாவின் திருமணம் முடிந்த சமயம் இவளுக்கு அலைபேசியில் அழைத்த பிரபு ஒரு ஆடையுலகம் பெயர் சொல்லி அங்கு வரசொல்லவும் ஜெய்மியிடன் சென்றிருந்தாள் தாக்ஷி.
வந்தவள் கடையில் பிரபுவை கண்டு,
" டே ...நீ எப்போ சென்னை வந்த... சொல்லாம கொள்ளாம வந்ததும் இல்லாம என்னையும் அவசரமா இங்க வர சொல்லிருக்க.. "
என இடையிட முயன்ற பிரபுவை பேச கூட விடாமல் பேசியவள் நிறுத்தினாள் அங்கு வந்து நின்ற அமிழனை கண்டு..
கிடைத்த இடைவெளியை பிடித்து கொண்ட பிரபு " மாமா வாங்கிருக்கிற புது பிளாட்'க்கு அடுத்த வாரம் கிரஹபிரவேசம் இருக்கு, அதுக்கு எல்லாருக்கும் சாரீ எடுக்கணும்.. நீ செலக்ட் பண்ணி கொடுப்பேணு தான் உன்னை கூப்பிட்டோம்..."
" நானா... "
" வேணு அத்தைக்கும் எடுக்கணும் தாக்ஷி.. அத்தைக்கு என்ன பிடிக்கும்னு உனக்கு தான நல்லா தெரியும் " என அமிழன் இடையிடவும்
சரி என்பதாக தலை அசைத்தவள் ஜெய்மியுடன் சேர்ந்து வேணும்மாவிற்கு மட்டுமில்லாமல் இரு வீட்டு பாட்டி, அமிழனின் அன்னை மற்றும் அமிழனின் அத்தை என அனைவருக்கும் தேர்வு செய்து முடித்து தேர்ந்தெடுத்த அனைத்தையும் சரி பார்த்து நிமிர்ந்தவளிடம்
" உனக்கும் ஒரு சாரீ செலக்ட் பண்ணிடு தாக்ஷி" என கூறி அவர்கள் அருகே வந்தவனிடம் முதலில் வேண்டாம் என மறுத்தவள் அவனின் அமைதியான பார்வையில் அவளுக்காகவும் தேர்வு செய்ய ஆரம்பித்தாள்.
அமிழனின் வீட்டில் இருந்து வேணுவிசாலாட்சிக்கு ஒவ்வொரு பண்டிகை திருவிழாவிற்கு பிறந்த வீட்டு சீராக செய்யும் போது பிரபுவோடு தாக்ஷிக்கும் செய்வது வழமையாதலால் அவளும் முதலில் மறுத்தாலும் பின் அவளுக்கெனவும் தேர்வு செய்ய தொடங்கினாள்.
அவள் தேர்வு செய்த ஆடைகளை மறுத்து வந்தவன், பின்னர் அவனே அவளோடு சேர்ந்து அவளுக்காக தேர்வு செய்ய தொடங்கினான். ஒவ்வொன்றாக தாக்ஷி அவள் மீது வைத்து பார்ப்பதும் அமிழன் மறுப்பதுமாக இருந்தன.
இறுதியாக அவன் தேர்வு செய்த பச்சை வண்ண லாவெண்டர் சேலையை அவள் மீது வைத்து கண்ணாடி முன் நின்று பார்த்தவளை வைத்த கண் விடாமல் பார்த்த அமிழனை கவனிக்க வேண்டியவள் கவனிக்காமல் விட்டாலும் ஜெய்மி கண்டுகொண்டாள்.
அந்நிமிடம் வரை ஜெய்மிக்கும் அமிழனே அவன் தோழிக்கு பார்க்க பட்ட மணவாளன் என தெரியாது... அவளுக்கு மட்டுமில்லாமல் தாக்ஷிக்கும் அதே நிலை தான்.
'என்னடா நடக்குது இங்க ' என குழம்பிய ஜெய்மி அருகில் இருந்த பிரபு மூலம் தெளிவுற்றாள் .
ஜெய்மி பிரபுவின் மூலம் அமிழனின் நேசத்தையும், பிரபு ஜெய்மியின் மூலம் தாக்ஷியின் தவறுதலான குழப்பத்தையும் அறிந்து கொண்ட இருவரும் சுற்றி இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு உணர்வுகளை வெளிக்காட்டாமல் அமைதியாகினர்.
இவர்கள் தங்களுக்குள் அமைதியாகவும் தாக்ஷி அமிழன் தேர்வு செய்த ஆடையோடு வரவும் சரியாக இருந்தது.
இரு வீட்டு உறவினர் மட்டும் கலந்து கொண்ட கிரஹபிரவேசத்தில் தாக்ஷியால் கலந்து கொள்ள முடியவில்லை அதனால் அன்று வாங்கப்பட்ட சேலையும் இன்று வரை பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது.
சற்று நேரம் சேலையை கையில் எடுத்து வருடியவள் சிந்தனை பெற்று அதனை எடுத்து அணிந்து தயாராகி அமிழனின் வரவுக்காக காத்திருக்கலாகினாள்... இந்த சேலையே அவனுக்கு தன் மனதினை சொல்லிவிடாத என மணம் முழுமையும் பேராவளோடு.
அமிழனோ வந்ததிலிருந்து எப்போதும் போல் இறுக்கமாகவே இருந்தான். தேவைக்கு அதிகமாக வார்த்தைகளை விடாது மட்டுமில்லாமலும் அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் இருந்தவனை கண்டு சிறிது சிறிதாக கோபம் கொண்டாள் பெண்ணவள்.
இரவு உணவு முடிந்ததும் வழக்கம் போல் நீளவிருக்கையில் குடி போகி அமேசான் நெட் ஃப்ளிக்ஸ்'ல் திகில், மர்மம், அமானுஷ்யம் என மாற்றிக்கொண்டே வந்தவன் ஒரு அமானுஷ்யம் படத்தில் தேங்கி அதை தீவிரமாக பார்க்க தொடங்கவும் அவனிடம் வந்தவள் தொலைக்காட்சி தொலைநிலையை ( tv remote ) பறித்து தொலைக்காட்சி அமர்த்தினாள்.
அமிழனோ வேகமாக எழுந்து வந்து அவளிடமிருந்து தொலைக்காட்சி தொலைநிலையை வாங்கியவன் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து கொண்டே
" விளையடாத தாக்ஷி, சவுண்ட் டிஸ்டர்ப்'பா இருந்துச்சுனா ரூம் லாக் பண்ணி தூங்கு... சத்தம் கேக்காது "
என இன்னும் அவளை கவனிக்காமல் தொலைக்காட்சியை விட்டு பார்வையை விலக்காமல் நின்று கொண்டே சேனல் மாத்தி கொண்டிருந்தவனை கண்டு கோபம் கொண்டு
தொலைக்காட்சியை மறைத்தவாறு அவன் முன் சென்று நின்றாள்.
திடிரென தன் முன் வந்து நின்றவளை கண்டு அதிர்ந்தவனின் கவனம் பிறகே அவள் ஆடையில் மீது பதிந்தது.
ஒரு நொடி புருவம் சுருக்கி பிறகு இனம் கண்டு கொண்டான்.
அன்று அவளுக்கென முதல் முதலாக வாங்கிய பச்சை வண்ண லாவெண்டர் சேலையில் அழகாக தன் முன் நின்றவளை பார்த்து இன்புற்று கண்களை விரித்தவனின் கண்கள் மேலும் விரிந்தன அவன் கன்னங்களை நோக்கி வந்த அவளின் இதழ்களை கண்டு.
அவளின் செய்கை புரிந்து அவளுக்கு வாகாக கன்னங்களை திருப்பி காட்டி கண்களை மூடிக்கொண்டவன் விழிகள் திறந்து அலறினான் அவனின் கைகளை கண்ணங்களுக்கு கொடுத்து..
" ஆஆ ஆ....... ராட்சசி இப்படியாடி கடிச்சு வைப்ப "
விலகி போக போனவளை கை பிடித்த கேட்டவனிடம் இருந்து கைகளை விடுத்து கொண்டவள்..
" இதோட விட்டேனே...உங்கள....
நீங்க போய் அந்த பேய்ய கட்டிக்கிட்டே அழுங்க.. நான் தூங்க போறேன்.."
என வாய் திறந்து கூறியும் ' ரொம்ப ஓவரா தான் பண்ணுறாரு' என தனக்குள் முணுமுணுத்துக்கொண்டும்
அறைக்குள் நுழைய போனவளை
தடுத்து கதவோடு சேர்த்து தன் கைவலைகளுள் நிறுத்தியவன்.
" எனக்கு அந்த பேய் வேணாம், இந்த ராட்சஸியே போதும்.. கட்டிக்கட்டுமா .... "
அவன் கேள்வியில் சம்மதமே என்பது போல் நாணம் கொண்டு அவனை நோக்காமல் வேறெங்கோ பார்த்தவளை முகவாயில் கை வைத்து அவனை நோக்கி திருப்பியவன் புருவம் உயர்த்தி கேட்கவும்
படபடத்து தாழ்த்தி கொண்ட அவளின் இமைகளில் அவனது இதழ்களை பதித்து எடுத்து அவளின் கன்னங்களை நோக்கி நகர்ந்து அவளின் இதழ்கள் அருகே வந்தவன் சற்றென்று நிறுத்தினான்.
" ஹே.... அன்னைக்கு மாதிரி தள்ளி விற்ற மாட்டில்ல'டி "
என கேட்கவும் சட்டென்று அவளுள் எழுந்த உணர்வலைகள் வடிந்து கடுமை கொண்டு அவனை முறைத்தவள்.. அவனின் மார்பில் கை வைத்து தள்ளி,
" உங்களுக்குலாம் அந்த பேய் தான் செட் ஆகும்.. போங்க மாமா போய் அதோடையே டூயட் பாடுங்க... "
என கோபம் கொண்டு கூறி அறைக்குள் சென்று கதவை சாற்றும் முன்
' ரொம்ப சொதப்புறடா அமிழா.. முழிச்சுக்கோ' என தனக்குள் வசைப்பாடிய அமிழன் அவளின் பின் சென்று அவனவளை கைகளில் அள்ளி கொண்டான்...
நன்றிகள்
கீர்த்தி