Page 1 of 1

மாலை சூடும் வேளை 50

Posted: Sat Jun 26, 2021 12:57 pm
by laxmidevi
மாலை- 50

பாடல் வரிகள்.
கோகுலத்து ராதை வந்தாளோ
இந்த கல்யாண தேரிலே
கல்யாண தேரிலே
மிதிலை நகர் சீதை வந்தாளோ
எங்கள் வீட்டோடு வாழவே
வீட்டோடு வாழவே
அந்த தென்மதுரை மீனாள்
விளக்கேற்ற வந்தாள்
சீதனமாய் கையில்
தாய்ப்பாசம் கொண்டு வந்தாள்....

கோவையில் உள்ள அந்த பிரபல திருமண மண்டபம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. முகூர்த்த நேரத்திற்கு கொஞ்ச நேரம் முன்னதாக ஒரு பெரிய ஸ்கிரீனை கொண்டுவந்து மாட்டினான் விஜய்.

அஞ ஸ்கிரீனில் ஒரு வீடியோ ஒளிபரப்பாகியது. அதில் சம்முவின் அம்மா லாவண்யாவும் அவளுடைய அப்பா விக்னேஷும் பேசினார்கள்.

வணக்கம் என் பெயர் லாவண்யா இவர் என் கணவர் விக்னேஷ் .நாங்கள் இருவரும் யார் என்று உங்களில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று சுருக்கமாக தங்கள் குழந்தை காணாமல் போனதைப் பற்றிக் கூறிய லாவண்யா
அந்தக் குழந்தைதான் சம்மு அவளை கனிதான் இத்தனை நாட்களாக தன் மகளைப் போல் வளர்த்து வந்தார்கள். அவளைப் பற்றி ஊரில் பல பேர் பல விதமாக கூறியும் சம்முவை தன்னுடைய மகளாகவே வளர்த்து வந்தாள் . இங்கிருக்கும் பலபேர் அவளைப் பற்றி என்னவெல்லாம் பேசினீர்கள்.   தான் பெற்ற பிள்ளையையே ஹாஸ்டலில் விட்டு வளர்க்க நினைப்பவர்களின் மத்தியில் யாரென்றே தெரியாத ஒரு குழந்தைக்காக தன்னுடைய வாழ்க்கையையே மாற்றிக் கொண்டாள். அப்படிப்பட்ட உயர்ந்த கனியைப் பற்றி பார்த்துக்கொண்டிருக்கும்  பற்றி நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் இப்போது இதை சொல்கிறோம்.இப்படிப்பட்ட அருமையான பெண்ணாக நல்ல முறையில் வளர்த்த ராகவன் அப்பாவிற்கும் பூரணி அம்மாவிற்கும் நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். கனி மட்டும் இல்லையென்றால்  குழந்தை என்னவாயிருக்குமோ என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. சம்மு  எப்போதும் கனி சுந்தரின்  குழந்தையாகவே எங்கள் வீட்டில் வளர்வாள். சம்முவைப் பற்றிய முழு உரிமையும் கடமையும் கனிக்கும் சுந்தருக்கும் தான் . அவளை வளர்க்கும் பொறுப்பை மட்டும் தான் நாங்கள் பார்த்துக் கொள்ளப் போகிறோம்.

மறுபடியும் கனி மற்றும் சுந்தரிடம் நன்றி என்ற ஒரு வார்த்தையை கூறமுடியாது ஆனால் அதை தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை மிக்க நன்றி. என்று அந்த வீடியோ முடிந்தது.

எதற்கு விஜய் அதெல்லாம் என்று கேட்ட சுந்தரிடம் இல்லை சுந்தர் இதைப் பற்றி நாம் அனைவருக்கும் முறைப்படி தெரியப்படுத்தி விடுவதுதான் நல்லது . இல்லை அவர்களுக்கு தோன்றியதை எல்லாம் பேசுவார்கள் என்றான் விஜய்.

முகூர்த்த நேரம் நெருங்கியது. எளிமையான மணப்பெண் அலங்காரத்தில் தேவதைபோல் இருந்தவளை  திருமாங்கல்யம் அணிவித்து தன் மனைவியாக்கிக் கொண்டான் சுந்தர்.

பல்வேறு இன்னல்களையும் தடைகளையும் தாண்டி தான் தன்னவனின் கரம் சேர்ந்ததை எண்ணி கனியின் இமையோரம் ஆனந்த கண்ணீர் துளிர்த்தது.

சுந்தரின் விழியசைவிலே கனி தன் கண்ணீர் மறைந்து கண்களில் மலர்ச்சியும் இதழ்களில் புன்னகையும் வந்து அமர்ந்து கொண்டது.

இதைக்கண்ட பெரியவர்களின் மனம் நிறைந்து போனது.

கோவை நகரமே வியக்கும்படி திருமணம் நல்லபடியாக நடந்தது.

சுந்தர் விக்ரம் மற்றும் கார்த்திக்கின் கம்பெனியை பார்த்துக் கொள்வதற்காக கோவையிலேயே தங்கி கொள்வதாக முடிவு செய்து இருந்தான். கனியும் தன்னுடைய  வேலையை கோவைக்கே மாற்றிக் கொண்டாள்.

இரவு சடங்குக்கு கனிக்கு உதவியாக மலரும் ஜானுவும் மட்டும் இருந்தனர்.

குனிந்த தலையுடன் கைகளில் பால் சொம்புடன் வந்தவளை பின்னிருந்து அணைத்து பாலை வாங்கி டேபிளில் வைத்தான்.

தன்னருகில் அமர வைத்து  அவளை கண்கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தான்.

ஏன் அப்படி பார்க்கிறாய் என்றால் கனி வார்த்தைகளில் தடுமாற்றத்துடன்.

அவளின் தடுமாற்றத்தை ரசித்தவன் உன் கண்ணின் கருவிழியில் தொலைந்து போக ஆசை கொண்டேனடி கண்மணி என்றான்.

அவள் நாணத்தோடு  தன்னவன் தோள் சாய்ந்தாள்.

இருவரும் சம்சார சாகரத்தில் மூழ்கி முத்தெடுத்தனர்.

மாலை தொடுக்கப்படும்...

வணக்கம் நண்பர்களே,


இந்த கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்கள்,நிறை குறைகளை தெரிவிக்க வேண்டுகிறேன்.

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் தோழி
லக்ஷ்மி தேவி.