காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்_27,,28
Posted: Sun Sep 19, 2021 12:40 pm
27
ஓரளவுக்கு சரியானதும் தன்னுடைய கணவரிடம் நச்சரிக்க ஆரம்பித்து இருந்தார் லட்சுமி.
"அந்த ராத்திரி நேரத்துல நம்ம பொண்ணுக்கு நியாயமா உங்களோட ஞாபகம் தானே வரனும். உடனே உங்களை கூப்பிட்டு சொல்லி இருக்கலாம் ஆனால் அப்படிப் செய்யலை..
அந்தப் பையன் கிட்ட தான் போன்ல பிரச்சினையை சொன்னா... அப்படின்னா என்ன அர்த்தம் அந்த பையன் நம்ம பொண்ணு மனசுல இருக்குறான் அப்படிங்கறது தானே அர்த்தம்…"
"லஷ்மி உன் இஷ்டத்துக்கு எதையும் சொல்லிக்கிட்டு இருக்காத.. அப்படியெல்லாம் இருக்காது அப்படி இருந்திருந்தால் நம்ம பொண்ணுக்கு நம்ம கிட்ட சொல்றதுல என்ன பிரச்சனை இத்தனை நாள் எதற்காக சொல்லாமல் இருக்கணும்.."
"எனக்கு என்ன தெரியும் ஏன் சொல்லலைன்னா நீங்கதான் கேட்டு தெரிஞ்சுக்கணும் .எனக்கு என்னவோ அந்தப் பையனை நம்ம பொண்ணு விரும்பற மாதிரி தோணுது."
"நீங்க எனக்காக ஒரே ஒரு வேலை செய்யுங்க எனக்கு நல்லா ஞாபகம் இருக்குது அரை மயக்க நிலையில் அந்தப் பையன் நம்ம பொண்ணு கிட்ட பேசினது எல்லாமே கேட்டுக்கிட்டு இருந்தேன் நிச்சயமா சொல்லறேன். ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கும்னு தான் தோணுது நீங்கள் தயவு செய்து அந்த பையனீ வீட்ல போய் பேசுறீங்களா.."
"லட்சுமி என்ன சொல்லுற பொண்ணு வீட்டுக்காரங்க பையன் வீட்டைத் தேடிப் போயி சொல்லணுமா இது நல்லாவா இருக்கும் இது முறை கூட கிடையாது தெரியுமா.."
"நம்ம பொண்ணு கேட்டா கடைசி வரைக்கும் கல்யாணமே வேண்டாம்னு தான் சொல்லுவா தயவு செய்து எனக்காக…. இந்த டாக்டர் என்ன சொன்னாங்க என்ன டென்சன் பண்ண கூடாதுன்னு சொன்னாங்க இல்லையா நான் இவ பத்தி யோசிச்சாலேடென்சன் ஆகறேன். இவளுக்கு ஒரு நல்லது நடந்தால் மட்டும் தான் நான் நிம்மதியா இருக்க முடியும்."
"நீங்க அந்தப் பையன் கிட்ட பேசி பார்த்தீங்களா இல்லையா எப்படி பேசினான் உங்க கிட்ட.."
"அவன ரெண்டு தடவை பார்த்திருக்கிறான் லட்சுமி நல்ல பையன் நல்லா தான் பேசினேன் இப்போ இதையெல்லாம் ஏன் கேட்டுகிட்டு இருக்கிற."
"இப்ப நீங்களா போய் அவங்க வீட்ல பேசுவீங்களா இல்ல நான் போகட்டுமா எனக்கு பொறுமை எல்லாம் கிடையாது ".
"நீ ...நீ டென்ஷனாகாத லட்சுமி நானே போய் பார்த்து பேசிட்டு வரேன். ஹாஸ்பிடல்ல கடைசியா அந்த பையன பார்த்ததுதான் அதற்கு பிறகு இன்னும் பார்க்கல.. முதல்ல உன்ன அந்த நேரத்துல ஹாஸ்பிடலுக்கு அட்மிட் பண்ணினதுக்கு நன்றி சொல்லணும் இல்லையா அதை சொல்லிட்டு அப்படியே பேசிட்டு வரேன் சரியா…"
"ஹப்பா இப்பவாவது நான் சொல்ல வந்தது புரிஞ்சுதே.. மொதல்ல இன்றைக்கு பேசிட்டு வந்துடுங்க அதற்குப் பிறகு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்."
சொன்னது போலவே பத்து மணி தாண்டிய போது குருவின் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அங்கே சென்று பார்த்த போது இவருக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது இந்த காலத்தில் கூட கூட்டு குடும்பமாக வசிக்கிறார்களா என்ன என்று மனதில் தோன்றியது.
இவரை வரவேற்று அமர வைத்து காபி கொடுத்த பிறகு என்ன என்று விசாரித்தனர்.
விவரங்களை சுருக்கமாக குமார் கூறியிருந்தார். இவர் அங்கு சென்ற நேரத்தில் குரு மட்டும் தான் இல்லை. அவனுடைய டிப்பாட்மெண்டல் ஸ்டோரை திறப்பதற்காக சென்றிருந்தான்.
வீட்டில் மிச்ச உறுப்பினர்கள் எல்லோருமே அங்கேயே தான் இருந்தனர் அபிநயா கூட தன்னுடைய கணவனோடு வந்திருந்தாள்.
ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிக்கொண்டிருக்கும்போது போனில் அழைத்து வர வேகமாக கிளம்பி சென்றவன் அடுத்த நாள் காலையில் தான் வீட்டுக்கு வந்து இருந்தான். என்ன ஏது என்று விசாரிக்க …
"ப்ரெண்டோட அம்மாவுக்கு உடம்பு முடியல போயிட்டு வந்தேன்" என்று ஒரே வார்த்தையில் முடித்து இருந்தான்.
இவர் வந்து சொன்ன உடனேயே புரிந்திருந்தது. சற்று நேரம் தயங்கி விட்டு மெல்ல இவர் குருவின் தந்தையிடம் கூறினார்.
எனக்கு எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல ஆனா நான் இன்றைக்கு இதைக் கேட்டு ஆகணும்னு இங்க வந்திருக்கிறேன்.
"நான் என்னோட மருமகளோட குழந்தைக்கு உடம்பு சரியில்ல அப்படிங்கிற காரணத்துக்காக அந்த நேரத்தில் உங்க மகனை கூப்பிட்டு இருக்கறா…"
"என்னோட பொண்ணு நினைச்சிருந்தா எனக்கு கூப்பிடு சொல்லி இருக்கலாம் ஆனா அந்த நேரத்துல உங்க பையன் தான் ஞாபகம் வநது இருக்கு…"
"ஒரு வேளை என் பொண்ணுக்கு உங்க பையன பிடிக்கேமோங்கற அப்படிங்கிற ஒரு சின்ன சந்தேகம் இருக்கு.."
"உங்க பையனுக்கும் இன்னும் கல்யாணம் ஆகல என்று எனக்கு தெரியும் . வேற பொண்ணு பார்த்து இருக்கறீங்களா...அப்படி இல்லைங்க பட்சத்தில் உங்களுக்கு என்னோட பொண்ண பிடிச்சிருந்தா வந்து பார்த்து பேச முடியுமா.."
"நீங்க சொல்றத கேக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குது. எங்க பையனுக்கும் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணனும் தான் ஆனால் ஏனோ தெரியல.. இந்த நிமிஷம் வரைக்கும் கல்யாணத்துக்கு சம்மதிக்கலை…
"தள்ளிப் போய்க் கொண்டே இருக்குது ஒருவேளை அவனுக்கு சம்மதம்னா எங்களுக்கு சந்தோஷம் தான் எங்களுக்கு வேற என்ன வேணும். பையனுக்கு பொண்ண பிடிச்சு இருந்தா போதும்."
"நீங்க உங்க மகன் கிட்ட கேட்டுட்டு சொல்லுங்க. ஒருவேளை பிடிக்கலைனாலும் ஒன்னும் பிரச்சனை இல்ல கூப்பிட்டு சொல்லிடுங்க நான் வருத்தம் எல்லாம் பட மாட்டேன் "என்று சொல்லிவிட்டு தன்னுடைய போன் நம்பரை கொடுத்து விட்டு வந்திருந்தார்.
அபிநயா கூட இவர்கள் பேசி விட்டு நகர்ந்த பிறகு வந்து கூறியிருந்தாள். "ஆமாம் மாமா குருவுக்கு அந்த பொண்ண நல்லா தெரியும் சின்ன வயசிலிருந்தே சேர்ந்து படிச்சவங்க .நான் கூட நிறைய டைம் குரு கிட்ட கேட்டு இருக்கிறேன். அந்த பொண்ண நீ லவ் பண்ணறையா..அப்படின்னு குரு ஆமாம்னு சொன்னதெல்லாம் கிடையாது ஆனால் ஒருவேளை குரு ஓகே சொன்னாலும் சொல்லலாம் கேட்டு பாருங்க மாமா" என்று கூறினாள்.
பேசி விட்டு சென்ற உடனேயே குருவுக்கு திருமணமே முடிந்துவிட்டது என்பது போல அந்த குடும்பமே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அன்று இரவு குரு வந்த உடனேயே இதைப் பற்றிதான் கூறினர். "அந்த பொண்ண உனக்கு பிடிக்குமா அந்த பொண்ணு வீட்ல போய் பெண் கேட்கலாமா" என்று…
" காலையில அவங்க அப்பா வந்துட்டு போனாங்க அவங்க அப்பாவும் இத பத்தி தான் பேசிட்டு போனாங்க உனக்கு பிடிச்சிருக்குனா அங்க போய் பேசலாம்.."
"அப்பா இதுல கொஞ்சம் பிரச்சனை இருக்கு பா. முக்கியமான காரணம் என்னன்னா..அந்த பொண்ணு பிசினஸ் பாத்துக்கிட்டு இருக்குற பொண்ணு சட்டுன்னு அத விட்டுட்டு வருவாளா அப்படிங்கிறது எனக்கு தெரியாது.
மற்றபடி நீங்க கேட்கும் போது எனக்கு மறைக்க எதுவும் கிடையாது எனக்கு அந்த பொண்ணு ரொம்ப பிடிக்கும் அவளுக்கும் என்னை பிடிக்கும் பா"
"அப்புறம் என்னதான் பிரச்சனை வரப் போகுது நாங்கள் பேசறோம் டா இப்பவாவது வாயை திறத்து சொன்னயே.. எத்தனை நாள் எத்தனை முறை உன்ன கேட்டிருப்போம் கல்யாணம் பண்ணிக்கோ அப்படின்னு…
அம்மா எனக்கு இந்த பொண்ண தான் பிடித்திருக்கிறது பார்த்து பேசி முடிங்க என சொல்லி இருந்தால் எப்பவோ கல்யாணம் முடிஞ்சு இருக்கும் என் கைலியை பேரனோ பேத்தியோ கையில வச்சிகிட்டு இருந்திருப்பேன்.."
"அத்தை அதுதான் இப்போ சொல்லிட்டாங்க இல்லையா இனிமே நம்ம பேசி முடிவெடுக்கலாம் நீங்கள் குரு கிட்ட எதுவும் கேட்காதீங்க "என்று அபிநயா கூறினாள்.
அடுத்த நாளே நித்யஸ்ரீயின் தந்தை குமாரிடம் போனில் அழைத்து சொல்லியிருந்தனர் .நீங்க உங்க வீட்ல சொல்லிடுங்க... எங்களுக்கு உங்க பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு நேரடியாக வந்து பார்த்து பேசிக்கலாம்."
"நீங்க சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது சம்பந்தி .ஆனா ஒரு சின்ன பிரச்சனை என் பொண்ணு கிட்ட நான் இத பத்தி பேசிட்டு முதல்ல எதாவது ஒரு ஹோட்டல்ல வச்சு நம்ம பார்மாலிட்டியா பார்த்து பேசிக்கலாம் அவங்க ரெண்டு பேரும் பேசட்டும் பேசின பிறகு முடிவு எடுக்கலாம்.."
"நிச்சயமா சம்பந்தி அவங்க ரெண்டு பேரும் பேசி முடிவெடுத்த பிறகு நம்ம மேற்கொண்டு மற்றதை பார்த்துக்கலாம் "என்று கூறி முடிவெடுத்து இருந்தனர்.
அன்றே நித்யஸ்ரீயின் தந்தை அவளிடம் பேசியிருந்தார்" உன் அம்மா ஏற்கனவே நிறைய டென்ஷனில் இருக்கிறா..இதுக்கு மேலயும் அவளை டென்ஷனாகி பார்க்க எனக்கு இஷ்டம் கிடையாது. உனக்கு நான் ஒரு மாப்பிள்ளையை பார்த்து இருக்கிறேன் அந்த மாப்பிள்ளையை பார்த்து பேசணும் நாளைக்கு சாயங்காலம் விஜய் பேரடைஸ் ஹோட்டல்ல டேபிள் புக் பண்ணியிருக்கிறேன்".
"அப்பா.."
"போதுமா நிறைய நாள் உனக்காக உன்னோட ஆசைக்காக விட்டு கொடுத்தாச்சு.. அம்மாவையும் இழந்துவிடக் கூடாது இல்லையா அதனால தான் இந்த முடிவு நீ மறுப்பு எதுவும் சொல்லக்கூடாது நாளைக்கு எங்களோட புறப்ட்டு வரணும்."
"அப்பா...ஏன் இவ்வளவு அவசரமா…"
"உனக்கு 29 வயசு ஆகுது நித்யஸ்ரீ இதுக்கு மேல லேட் பண்ண வேண்டாம்னு தோணுது நிச்சயமா உனக்கு பிடிக்கும்."
மாப்பிள்ளயை பார்த்து எப்படியும் பேசி புரிய வைத்துவிடலாம் என்று நினைத்தபடி ஹோட்டலுக்கு புறப்பட்டாள்.
கடைசி நிமிடம் வரைக்கும் குருவை பார்க்கப்போவது அவளுக்கு தெரியாது ஏனோதானோவென்று ஏதோ ஒரு உடை அணிந்து சற்றே குழப்பத்தோடு அங்கே சென்று இருந்தாள்.
இவர்கள் சென்ற ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே அவர்களது குடும்பம் மொத்தமும் வந்திருந்தது அபிநயாவை பார்க்கும் போது புரிந்து விட்டது யார் வரப்போகிறார்கள் என்று…
இவளுக்கு எத்தனை குழப்பம் இருந்ததோ... அதே குழப்பத்தோடு தான் குருவும் அங்கு வந்திருந்தான்.
இருவரும் அறிமுக புன்னகை புரிந்த பிறகு இருவரையும் தனியாக ஒரு டேபிளில் அமரவைத்து விட்டு இந்தப் பக்கமாக வந்திருந்தார்.
எவ்வளவு நேரம் வேணும்னாலும் ரெண்டுபேரும் பேசுங்க. ஆனால் முடிவு நல்ல முடிவா இருக்கணும் இதுதான் எங்களோட ஆசை நாங்க அந்தப்பக்கம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறோம். பேசி முடித்ததும் சொல்லுங்க என்று கதிர் கூறி விட்டு நகர்ந்து இருந்தான்.
28
எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது நித்து... இங்க வர்ற வரைக்கும் நான் உன்னை பார்க்க வரேன்னு நினைக்கவே இல்ல..
என்கிட்டயும் சொல்லாம தான் அழைச்சிட்டு வந்தாங்க என்று சொன்னபடி முதலில் பேச்சைத் துவங்கினான் குரு.
"உன் முகத்தை பார்க்கும் போதே தெரிஞ்சது குரு என்ன மாதிரியே உனக்கும் தெரியாது என்று.. இவங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியல..
ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு வர்றதா இருந்தா முழுக்க முழுக்க உனக்காக மட்டும் தான் வாழனும். இதுதான் என்னோட ஆசை இதற்கு ஏற்றது மாதிரி ஏதாவது சொல்யூசன் இருந்தா சொல்லு.."
"ஆக பிரச்சினையை என்கிட்ட மெதுவா தள்ளிவிட்டாச்சு இல்லையா இப்ப நான்தான் சொல்லனுமா பதில்.."
"பொண்ணு பாக்க வந்தது நீங்க தான சார் அப்போ நீங்க தான் பதில் சொல்லணும் "என்று லேசாக புன்னகைத்தாள் நித்யஸ்ரீ.
"இதுவும் நல்லாத்தான் இருக்குது..எதிர்காலத்தைப் பற்றி பேச சொல்லிட்டு போனா நாம பிரச்சனையை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.
சொல்லு நித்தியஸ்ரீ அம்மாவுக்கு எப்படி இருக்குது இப்ப நல்லா இருக்கிறார்களா.."
இப்படி கேட்கவும் திரும்பி தன் தாயார் அமர்ந்து இருந்த டேபிளை பார்த்தாள்..நிறைய நிம்மதி மகிழ்ச்சியோடு இவளது தந்தையிடம் எதையோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார் அவர்.
"அம்மாவால தான் இன்னைக்கு இங்க வந்து உட்கார்ந்து இருக்கிறேன் குரு.கல்யாணம் பண்ணினா ஃபேக்டரி அதோட பிரச்சினைகள் எல்லாமே அப்படித்தான் இருக்கும் அம்மாவுக்காக கல்யாணம் பண்ணிக்கலாம் ஆனா அதுக்கு பிறகு இருக்கிற இந்த பிரச்சனை எல்லாம் எப்படி சமாளிக்கிறது.."
"வேற யாராவதா இருந்திருந்தா நிச்சயமா கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன். பிடிவாதமாக ஏதாவது சொல்லி அந்த மாப்பிள்ளையை துறத்தி இருப்பேன்..இப்போ அதுவும் முடியாது அதனால உன்கிட்ட கேக்குறேன் என்ன பண்ணலாம் ஏதாவது ஐடியா சொல்லு.."
இவனுக்குமே சட்டென இப்படி கேட்கவும் என்ன சொல்வது என்று தெரியவில்லை யோசனையோடு சுற்றி அங்கிருந்த ஒவ்வொருவரையும் பார்த்தான்
அப்போதுதான் பூர்ணிமா தன்னுடைய மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டு இருந்ததை பார்த்தான் பார்க்கவும் சட்டென அவன் மனதில் தோன்றியதை இவளிடம் திரும்பி கேட்டான்.
"உன்னோட அண்ணி கடைசி வரைக்கும் உங்க வீட்ல தான் இருப்பாங்க இல்லையா.."
"இதென்ன கேள்வி குரு அவங்க தான் அண்ணனோட ஞாபகத்தோட இங்கதான் இருப்பேன்... இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு தெளிவா சொல்லிட்டாங்களே.."
"அப்படின்னா உன்னோட அண்ணனோட ஃபேக்டரியை உங்க அண்ணியை எடுத்து நடக்க சொல்லு பிரச்சனை முடிந்தது.."
"என்னது" என்று கொஞ்சம் ஆச்சரியமாக அவனை திரும்பிப் பார்த்தாள்.
"ஏன் ஐடியா நல்லா இல்லையா..உனக்கு என்ன உங்க அண்ணனோட ஃபேக்டரி சிறப்பாக நடத்தனும்... எந்த காலத்திலேயும் இழுத்து மூடிக் கூடாது அவ்வளவு தானே.. அண்ணியும் என்ஜினியரிங் தானே முடித்திருக்கிறார்கள் .அவங்களுக்கும் அந்த பில்ட் பத்தி எல்லாம் தெரியும் தானே கொஞ்சம் சொல்லிக் கொடுத்தா பத்தாதா... நாளைக்கு அவங்களுக்கு ஏதாவது ஒரு பிடிமானம் வேணும் தானே... அது இந்த ஃபேக்டரியா இருந்திட்டு போகுது.. எனக்கு நீ மட்டும் போதும் நித்யஸ்ரீ.வேற எதுவும் தேவை இல்லை."
"நீ சொல்றது சரியா வரும்னு தோணுது குரு நான் இன்னைக்கு பேசுறேன் ஒருவேளை அவங்க இதுக்கு சம்மதம் சொல்லிவிட்டா எனக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்கிறதில் எந்த பிரச்சினையும் கிடையாது."
"ஆனா உடனே எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது ஆறு மாதம் வரைக்கும் கூட இருந்து ஃபேக்டரி பற்றி அண்ணிக்கு எல்லாத்தையும் சொல்லி கொடுத்த பிறகுதான் அங்கிருந்து வெளியே வர முடியும்."
"எனக்கு தெரிஞ்சு ரொம்ப வருஷமா காத்திருக்கிறேன் நித்யஸ்ரீ உனக்காக இன்னும் ஆறு மாசம் காத்து இருக்க மாட்டேனா.. ஏன்ன நீ எல்லாம் புதையல் மாதிரி என் கிட்ட வந்தாலே போதும்."
"ஓகே குரு கட்டாயமா அண்ணி கிட்ட பேசிட்டு மேற்கொண்டு நம்ம பேசலாம் ஒருவேளை அண்ணி சரின்னு சொல்லிட்டா எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கறதில் எந்த பிரச்சினையும் கிடையாது."
திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்ற முடிவில் தாய் தந்தை இருக்க இதற்குமேல் மறுக்க முடியாமல் இவன் சொன்ன ஐடியா சற்று ஓகே என்று என்பது போல தோன்ற சரி என்று தலையாட்டிவிட்டு வீட்டிற்கு வந்திருந்தாள்.
பூர்ணிமா கூட வீட்டிற்கு வந்த உடனே இவளை வந்து பார்த்து பேசி இருந்தாள்.
"குருவை பார்க்க ரொம்ப நல்ல பையனா இருக்குது நித்யஸ்ரீ தயங்கமா ஓகே சொல்லிடு. வயது ஏறிக்கிட்டே இருக்கு இல்லையா நீ என்ன பத்தி எல்லாம் யோசிக்கவே வேண்டாம். நான் என் குழந்தையோட அத்தை மாமா ரெண்டு பேரையும் ரொம்ப நல்லா பார்த்துக்குவேன்."
"நீங்க நல்லா பார்த்துக்குவீங்க அண்ணி எனக்கு அதில் சந்தேகம் எதுவும் கிடையாது.. இப்போ எனக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.அண்ணா ஆசை பட்டு தொடங்கின பிசினஸ் அது... அந்த பாக்டரிய அப்படியே விட்டு விட கூடாது அதற்கு நிச்சயம் நீங்க அங்கே வரணும்."
"நித்யஸ்ரீ என்ன சொல்லுற.."
பிசினஸ் ஆரம்பிக்கும் போது நீங்களும் அண்ணாவுக்கு உதவியா இருப்பீங்கன்னு சொல்லிதான் எஞ்சினியரிங் படிச்ச உங்களை பெண் பார்த்தாங்க... பரத் அண்ணா இப்ப அண்ணா இல்ல ஆனா அண்ணாவோட பிசினசை விடக் கூடாது இல்லையா அதனால தான் இத்தனை நாளா கல்யாணத்தை தள்ளிப் போட்டு விட்டு வந்தேன்."
"நீங்க பேக்ட்டரி வேலைய பழகிக்க ஒகே சொன்னீங்கன்னா நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன் இல்லாட்டி இல்ல அண்ணி.. இந்த கல்யாணம் எப்பவுமே நடக்காது.."
"அத்தையோட உடம்ப பத்தி யோசிச்சு பார்த்தியா நித்யஸ்ரீ. எத்தனை நாள் இப்படியே அவங்கள டென்ஷன் பண்ணிக்கிட்டு இருக்க போற உனக்கு என்ன ஆபீஸை நான் பார்த்துக்கணும் அவ்வளவுதான நான் பார்த்துக்கறேன் போதுமா."
"ஆனால் முழுக்க முழுக்க என் கையில் ஒப்படைத்து விட்டு விலகக்கூடாது எனக்கு உதவியாக அப்ப அப்ப நீயும் அங்க வரணும்.இப்படியாக பேச்சு வளர்ந்து கொண்டே சென்றது
இறுதியாக தெளிவாக முடிவு எடுத்திருந்தாள். நித்யஸ்ரீ தன்னுடைய அண்ணியை அழைத்து கொண்டு ஆபீசுக்கு சென்று அங்கிருக்கும் அனைத்து வேலைகளையும் அவளுக்குச் சொல்லித்தர வேண்டும் என்று…
சரி என்று சொன்னதாலோ என்னவோ சீக்கிரமாக நிச்சயம் மட்டும் முடித்துவிடலாம் என்று குருவின் பக்கத்திலும் நித்யஸ்ரீயின் தாய் தந்தையரும் மிகவும் விரும்பினர்.
அதன் விளைவாக அடுத்த ஒரு வாரத்தில் இவர்களது நிச்சயம் இரு வீட்டார் உறவினர்களோடும் பெரிய அளவில் நடத்த முடிவு செய்து அங்கிருந்த மண்டபத்தை புக் செய்து இருந்தனர்.
மாடியில் மாப்பிள்ளை ,பெண் தயாராவதற்கு தனித் தனியாக அறை இருந்தது. குரு தன்னுடைய அறையில் மகிழ்ச்சியாக தயாராகிக் கொண்டிருந்தான்.
நிச்சயத்திற்கு முன்பு நித்யஸ்ரீயிடம் பேச வேண்டும் போல தோன்றியது. யோசிக்காமல் அவளுடைய நம்பருக்கு அழைப்பு விடுத்தான்.
இவனுடைய நம்பரை பார்க்கவும் உடனே அட்டென்ட் செய்து இருந்தாள் நித்யஸ்ரீ."நித்து பக்கத்துல உங்க அண்ணி இருந்தா அவங்க கிட்ட போனை கொடு.."
போனை பார்த்தபடியே" இதெல்லாம் ஓவர் டா "என்று சொல்லி விட்டு அருகில் இருந்த பூர்ணிமாவிடம் போனை நீட்டினாள்.
"உங்க மாப்பிள்ளை தம்பி உங்க கிட்ட பேசணுமாம் பேசுங்க அண்ணி.."
"என்ன குரு சொல்லுங்க என்று இவள் கேட்க... அக்கா ப்ளீஸ் நிச்சயத்துக்கு முன்னாடி ரெண்டு நிமிஷம் நித்து கிட்ட பேசணும் எனக்கு ஏற்பாடு பண்ணி தாங்க.."
"குரு இங்க நிறைய பேர் இருக்கிறார்கள் எப்படி அவளை தனியா அழைச்சிட்டு வர முடியும் .இன்னும் பத்து நிமிஷம் தானே ஸ்டேஜுக்கு ரெண்டு பேரும் போயிடுவீங்க அங்க வச்சு பேசக்கூடாதா.."
"ப்ளீஸ் அக்கா ப்ளீஸ் ப்ளீஸ்"..
"பிழைச்சுக்குவ... குரு இரு நான் ஏற்பாடு பண்ணறேன் என்று சொன்னவள்..நித்யஸ்ரீயிடம் இரண்டு நிமிஷம் பேசணுமாம்.. இவர்களை எல்லாம் அழைச்சுட்டு அந்த பக்கம் போயிடறேன்.. குருவை வர சொல்லுகிறேன் ஓகேவா."
"அண்ணி..'
ஓரளவிற்கு நிறைய பேர் அந்த ரூமில் இருந்து வெளியேறி இருந்தனர் .கடைசியாக இருந்தது மேக்கப்பிற்காக அழைத்து வந்த இரண்டு பெண்களும் சில உறவுக்காரப் பெண்கள் மட்டுமே..
"பொண்ணு ஸ்டேஜுக்கு போறதுக்கு முன்னாடி மாப்பிள்ளை சார் தனியா அலங்காரம் நல்லா இருக்கான்னு பாக்கணும்னு ஆசைப்படறார் .ரெண்டு நிமிஷம் நம்ம வெளியே போய் நிற்கலாமா "என்று பூர்ணிமா சொல்ல கூடியிருந்த பெண்கள் எல்லோருமே சின்ன சிரிப்போடு நகர்ந்தனர்.
அண்ணி.. என்று நித்யஸ்ரீயால் சினுங்க மட்டுமே முடிந்தது.
அடுத்த சில நொடிகளில் குரு வேகமாக உள்ளே வந்து இருந்தான்.
"ஏண்டா இப்படி எல்லாம் என்ன படுத்தற என்று சினுங்கலாக ஒலித்தது நித்துவின் குரல்.. நல்ல வேளை நம்ம ஃப்ரெண்ட்ஸ் பட்டாளம் யாரும் வரல.. அவங்க வந்து இருந்தா கிண்டல் பண்ணி ஒரு வழி பண்ணி இருப்பாங்க.."
இவள் சொல்லச்சொல்ல இவளுடைய முகம் முதல் பாதம் வரை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்தவன்.. இவளுக்கு வெகு அருகில் வந்திருந்தான்.
ஏய்...நீ என்ன? என்று கேட்கும் போது அருகில் நெருங்கியவன் அவளை இழுத்து தன்னோடு அணைத்துக்கொண்டான்."இந்த நிமிஷம் இது நிஜமான்னு எனக்கு தெரியல இது நிஜம்தானான்னு தெரிஞ்சுக்க.. ப்ளீஸ் ரெண்டு நிமிஷம் அசையாமல் நில்லு..நித்து.."
அவன் சொன்னது இவளையும் என்னவோ செய்ய அப்படியே நின்றிருந்தாள்.
"இப்படியே இருக்கணும்னு அவசியம் இல்ல. நீ கூட என்னோட தோளில்ல உன்னோட கைய போட்டுக்கலாம்".
பட்டென்று அவளது தோளில் அடித்தவள் "போடா வெளியே கிளம்பு எல்லாரும் வெளியில காத்து இருக்கிறார்கள்" என்று நகர்ந்து நின்றாள்.
கடைசி நொடி அவளுக்கு அருகே வந்தவள் அவளது கன்னத்தில் லேசாக முத்தமிட்டபடி" சீக்கிரமா ஸ்டேஜுக்கு வந்துவிடு" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
கதவைத் திறக்க அங்கே இவர்களது நண்பர்கள் பட்டாளம் மொத்த பேரும் அங்கே நின்றிருந்தனர்.
ஒரே நேரத்தில் கைதட்டி ஆரவாரமாக கூச்சலிட நித்யஸ்ரீயின் முகம் செவ்வானமாக சிவந்தது.வேகமாக குருவின் பின்னால் ஒன்றினாள்.
நடக்கவே நடக்காது என நினைத்திருந்த இவர்களது திருமணத்திற்கு.. அஸ்திவாரமாக இவர்களது நிச்சயம் இனிதாக நிறைவேறி முடிந்திருந்தது.
அடுத்த ஆறு மாத காலம் எப்படி நகர்ந்தது என்று இரண்டு பேருக்குமே தெரியாது அவ்வளவு பரபரப்பாக சுறுசுறுப்பாக நிறைய காதலோடும் நிறைய பேச்சுக்கலொடும் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.
பூர்ணிமா ஆபீஸில் இருந்த அத்தனை நெளிவு சுளிவுகளையும் தெளிவாக கற்றுக் கொண்டாள்.
அதன் பிறகு முழுக்க முழுக்க ஃபேக்டரியில் அனைத்து உரிமைகளையும் பூர்ணிமாவிற்கே எழுதிக் கொடுத்துவிட்டு நித்யஸ்ரீ முழுக்க முழுக்க அங்கிருந்து வெளியேறினாள்.
முன்பே குரு இவளிடம் சொல்லியிருந்தான்... "நீ மட்டும் வந்தா போதும் பேக்டரி நமக்கு தேவை இல்லை. அத உங்க அண்ணி பெயருக்கு எழுதிக் கொடுத்திடு... ஃபேக்டரிக்கு எந்த உதவி தேவைனாலும் நீ போய் செய்யலாம்.. நான் அதில் தலையிட மாட்டேன்" என்று உறுதியாக கூறி இருந்தான்.
ஃபேக்டரியை தன் பெயருக்கு வாங்கிக் கொள்வதில் பூர்ணிமாவிற்கு துளிகூட விருப்பம் கிடையாது. நிறைய முறை மறுத்து பார்த்தாள். குருவும் நித்யஸ்ரீயும் ஏதேதோ பேசி அவளை சம்மதிக்க வைத்து இருந்தனர்.
அடுத்த ஒரு வாரத்தில் திருமணம் என்று முடிவு செய்திருக்க கோலாகலமாக நேரம் நகர ஆரம்பித்தது. உடை எடுக்க நகை வாங்க என்று பரபரப்பாக நேரம் நகர ஆரம்பித்தது.
நடக்கவே நடக்காது என முடிவு செய்திருந்த திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்தோடு இருந்த பிரச்சினைகள் எல்லாமே ஓரளவுக்கு முடிந்திருக்க நிம்மதியாக குருவின் கையிலிருந்து திருமாங்கல்யத்தை தன்னுடைய கழுத்தில் வாங்கிக்கொண்டாள் நித்யஸ்ரீ.
மனம் முழுக்க காதல் வழிந்தோட முகத்தில் புன்னகை பூசியபடி மகிழ்ச்சியோடு மாலையை அவளது கழுத்தில் அணிவித்தான்.
நண்பர்கள் பட்டாளம் பலரும் இந்த திருமணத்திற்கு வந்து இருந்தனர்.
குருவின் முகம் எந்த அளவிற்கு மகிழ்ச்சியில் இருந்ததோ அதே அளவிற்கு நித்யஸ்ரீயின் முகமும் மகிழ்ச்சியில் பூரித்து இருந்தது.
நடக்கவேண்டிய ஒவ்வொரு சம்பிரதாயங்களும் குறைவில்லாமல் நடந்துகொண்டிருக்க அனைத்து சம்பிரதாயங்களையும் மகிழ்வோடு ஐய்யர் கூறியபடி நித்யஸ்ரீயிடம் சிறு சிறு சீண்டலோடு செய்து கொண்டிருந்தான் குரு.
சிறுசிறு சடங்குகள் விளையாட்டுகள் என்று நேரம் வேகமாக ரெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது.
திருமணம் கோலாகலமாக நிறைவேற அடுத்த நாளே குரு இவளை அழைத்து கொண்டு ஹனிமூனுக்காக குலுமனாலிக்கு அழைத்து சென்று இருந்தான்.
குளுகுளு சீசன் அப்போதுதான் தொடங்கி இருக்க தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இதமான குளிருக்கு ஏதுவாக நித்யஸ்ரீயை தன் தோளோடு அணைத்து இருந்தவன்..
"என்ன என்னோட மகாராணி ரொம்ப அமைதியா இருக்கிற ஏதாவது பேசு நித்து" .
"சாரி குரு ரொம்ப காக்க வச்சிட்டேன் இல்லையா..அண்ணிய பேக்கரியை பாத்துக்க சொல்லற இந்த ஐடியா ஏன் நமக்கு முதலில் தோணலை.."
"காக்க வச்சதுக்கு வட்டியும் முதலுமா என்னால வசூல் பண்ண முடியும்.. என்று சொன்னவன் அவளது நெற்றியில் லேசாக முத்தமிட்டு விட்டு..உங்க அண்ணா இறந்த நேரம் எல்லோரும் அழுது கிட்டு இருந்தாங்க நித்யஸ்ரீ.. அந்த நேரம் நானா இருந்தாலும் இந்த முடிவை தான் எடுத்திருப்பேன்.என்ன பெரியவங்க கிட்ட முதலிலேயே சொல்லி இருந்தாங்கன்னா அவங்க நல்ல சொல்யூஷன் இதுக்கு கொடுத்திருப்பாங்க...நாம தான் பெரிய ஆள் ஆகிட்டோம் அப்படின்னு எதுவும் சொல்லல அதுதான் பிரச்சனை ஆயிடுச்சு.."
"உண்மைதான் குரு ஒருவேளை அவங்க கிட்ட சொல்லி இருந்தா இதற்கு வேற ஒரு சொல்யூஷன் கொடுத்து இருப்பார்கள்.. சாரி உன்கிட்ட நிறைய தடவை கோபமா நடந்துகிட்டேன்."
"எனக்கு எந்த நேரமும் உன் மேல கோவம் எல்லாம் வந்தது இல்ல.. புரிஞ்சுக்காம இருக்கிறாளே அப்படிங்கிற ஆதங்கம் தான் இருந்தது.."
"ஆனா அது கூட இப்போ இல்லை...இதோ என் பக்கத்துல நீ இருக்கறியே காத்திருந்த இத்தனை நாளைக்கு சேர்த்து இனிமே வாழ போறேன்" என்று சொன்னபடியே அவளை நோக்கி சரிந்தான் குரு.
நிலவு கூட வெட்கம் தாளாமல் மேகக் கூட்டத்திற்குள் ஒளிந்து கொண்டது. குலுமணாலியில் குளிர்ந்த காற்று ஜன்னல் வழியே இவர்களை மகிழ்ச்சியாக வாழ்த்து கூறியது.
இனி இவர்களது வாழ்வில் என்றும் வசந்தமே...
நிறைவுற்றது.