Page 1 of 1

டீஸர் 1 & 2

Posted: Tue Mar 14, 2023 6:08 pm
by Madhumathi Bharath
மொத்த வீடும் திருவிழா கோலம் பூண்டிருந்தது. வீட்டின் இளவரசன் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வருகிறானே...

அடுப்படியில் நின்ற மங்களத்தின் குரல் தெருவரை கேட்டது.

"எலேய் சுப்பையா... இன்னிக்கு உன் சமையலை சாப்பிட்டு என் பேரன் மெய் மறந்து போய்டனும்... மறுபடியும் வெளிநாட்டுக்கு பறக்கணும்ங்கிற எண்ணமே அவனுக்கு வரக்கூடாது புரிஞ்சுதா?" வேலையாட்கள் எல்லாரையும் பம்பரமாய் சுற்ற வைத்துக் கொண்டிருந்தார்.

"அத்தை... சமையல் முடிஞ்சுதா... நான் போய் குளிச்சிட்டு வந்திடறேன். சித்தார்த்க்கு நான் அப்படி இருந்தா தான் பிடிக்கும்"என்று வியர்வை வழிந்த முகத்தை துடைத்து கொண்டே அனுமதி கேட்டார்.
" நீ போய்ட்டு வா கௌரி... எல்லா வேலையும் தான் முடிச்சுட்டியே... "
"இன்னும் ஆரத்தி கரைச்சு வைக்கலை அத்தை..."என்றார் தயக்கமாக...
"அதனால என்னம்மா... நம்ம ஆனந்தியை விட்டு தயார் பண்ண சொல்றேன்"
"அத்தை... சீதா..."என்று இழுத்தார்.
"அந்த தரித்திரம் பிடிச்ச கழுதையை அவுட் ஹவுஸை விட்டு வெளியே வர கூடாது னு நேத்தே சொல்லிட்டேன்... "
"அத்தை அவ பாவம்..."
"அவ கழுத்தில் தாலி கட்டி முடிச்சதும் கோவிச்சுக்கிட்டு போன என் பேரன் இன்னிக்கு தான் வர்றான்... வந்ததும் அவ முகத்தில் முழிச்சா... மறுபடியும் கிளம்பி வெளிநாட்டுக்கே ஓடிடுவான்"
"ஒருவேளை சித்து வி... விவாகரத்து கேட்டா"
"யோசிக்காம உடனே வாங்கி கொடுத்துட வேண்டியது தான்"
"...."
கண்களில் அதிர்ச்சியுடன் தன்னைப் பார்த்த மருமகளை இரக்கத்துடன் பார்த்தார் மங்களம்.
"நிலைமையை புரிஞ்சுக்க கௌரி... அவளுக்கு பாவம் பார்க்கிற சூழ்நிலையில் நான் இல்லை... எனக்கு என் பேரன் தான் முக்கியம். உனக்கும் உன் மகன் மட்டும் தான் முக்கியமா இருக்கணும்"என்றார் அழுத்தம் திருத்தமாகவே.

"சரிங்கத்தை..." என்றவர் அமைதியாக சென்று விட... மங்களம் பெருமூச்செறிந்தார்.
'அவ தலையில் என்ன எழுதி இருக்கோ'
அதே நேரம் அவுட் ஹௌஸில் தனியாக அமர்ந்திருந்த சீதா புடவை நுனியை விரல்களால் கோர்ப்பதும் பிரிப்பதுமாக இருந்தாள்.
'அடுத்து என்ன செய்யப்போகிறேன்' என்ற தவிப்பு அவள் முகத்தில் அப்பட்டமாக வழிந்தது.
வீட்டிற்குள் செல்ல கால்கள் பரபரத்தாலும் முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கேயே அமர்ந்து இருந்தாள்.
காரின் ஹாரன் ஒலி கேட்டதும் தூக்கிவாரிப் போட... வேகமாக எழுந்தவள் யாரும் தன்னை சட்டென கண்டுகொள்ள முடியாத வண்ணம் ஜன்னலுக்கு அருகில் ஒளிந்து நின்று வாசலை எட்டிப் பார்த்தாள்.
ஷூ அணிந்த அவனது கால்களை பார்த்ததும் பயத்தில் உடல் வெடவெடவென்று நடுங்க... வீட்டினுள் ஓடிப்போய் கதவை பூட்டிக் கொண்டாள்.

அவளது இதயத்தின் ஓசையே இடியோசை போல கேட்டு அவளை மிரட்டியது.

ஜஸ்ட் இப்போ தோணின கதை... தலைப்பு கூட இன்னும் வைக்கலை... எப்போ வரும்னு தெரியல...

******

டீசர் 2

கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தனது அருமை கணவன் சித்தார்த்தின் முகத்தை தான்.

சித்தார்த்தின் கண்களோ அவள் முகத்தை விட்டு இம்மியும் நகரவில்லை.

தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்தவனின் வியர்வை ஆறாகப் பெருகி ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தால் அவன் வெகுநேரமாக இப்படி இதே நிலையில் தான் பயிற்சி செய்து கொண்டிருக்கிறான் என்பதை சொல்லாமல் சொல்ல பயத்தில் உதடுகள் இரண்டும் ஒட்டிக்கொண்டது அவளுக்கு .

அவன் நெற்றியில் வழிந்த வியர்வை தன் முகத்தில் பட்டதாலே தான் விழித்திருக்கிறோம் என்ற உண்மை புரிய என்ன பேசுவது என்று கூட புரியாமல் பிரமை பிடித்தவள் போல படுத்திருந்தவள் அவனையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"குட் மார்னிங் பொண்டாட்டி ...என்ன காலைல அஞ்சு மணிக்கு எழுந்திட்ட" என்று சாதாரணம் போல கேட்டாலும் அவனது கண்களும் இறுக்க மூடிய உதடுகளின் ஓரத்தில் வெளியே தெரியாத சிரிப்பும் அவனின் கள்ளத்தனத்தை காட்டிக் கொடுத்து விட்டது.

பதில் பேசாமல் அவனையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சீதா.

"நீயும் வாயேன்... இரண்டு பேரும் சேர்ந்து தண்டால் எடுக்கலாம்" என்று சொன்னவனின் விழிகளில் இருந்த அசாத்திய பளபளப்பில் அரண்டு போனவள் வேகமாக எழ முயன்றாள்.

அதன் பின்னரே அவன் மனது வைக்காமல் தான் அசையக் கூட முடியாது என்று புரிய பாவமாக அவனைப் பார்த்தாள்.

'அடேய்... கடோத்கஜா... பீமசேனா... எழும்பித் தொலை டா'

"முடியாது பொண்டாட்டி"அவன் கண்கள் சிரித்துக் கொண்டிருந்தது.

'சத்தமா எதுவும் சொல்லிட்டோமா'

"ஹா ஹா... எங்கே உன் புருசனுக்கு நேத்து நான் சொல்லித் தந்த மாதிரி குட் மார்னிங் சொல்லு பார்ப்போம்" என்று சொன்னவன் தண்டால் எடுப்பதை நிறுத்தி விட்டு கைகளை அவளின் இருபுறமும் ஊணி அவளது முகத்தை கண்களால் மேய்ந்தான்.

'ஆத்தி... மறுபடியும் முதல்ல இருந்தா' என்று எண்ணியவளுக்கு நேற்றைய தினம் நடந்ததை எண்ணி உடலில் நடுக்கம் பரவ...அதற்கு மேல் தாங்காது மெல்ல தைரியத்தை வரவழைத்து கொண்டு பேசி விட்டாள்.

"வ...வழி விடுங்க... நான் போகணும்" குரல் கிச்சு கிச்சு மூட்டியது அவளுக்கு.

"நேத்து உன்னை பெட்டில் தானே படுக்க சொல்லிட்டு போனேன். ஏன் கீழே வந்து தூங்கின?" அவன் பார்வை அவளது கண் வழியே அவளது உள்ளத்தை ஊடுருவியது.அதன் வேகம் தாளாமல் நடுக்கத்துடன் பார்வையை திருப்பிக் கொண்டாள் சீதா.

அவளது முகத்தை மீண்டும் தன் பக்கமாய் திருப்பியவனின் முகம் ஊர் எல்லையில் இருக்கும் அய்யனாரை நினைவுறுத்த... பயத்தில் உடல் நடுங்கத் தொடங்கியது சீதாவுக்கு.

Re: டீஸர் 1 & 2

Posted: Tue Apr 04, 2023 1:44 pm
by saru
💖💖💖

Re: டீஸர் 1 & 2

Posted: Thu Apr 13, 2023 4:35 pm
by Madhumathi Bharath
😍😍😍

Re: டீஸர் 1 & 2

Posted: Sat Oct 12, 2024 7:44 pm
by Honey tha
Update epo poduvenha sis

Re: டீஸர் 1 & 2

Posted: Sun Oct 13, 2024 6:25 pm
by Madhumathi Bharath
Honey tha wrote:
Sat Oct 12, 2024 7:44 pm
Update epo poduvenha sis
ippa than da start panni iruken. atleast oru epiyavathu eluthi mudichutu poda arambicha than sariya irukum