Page 1 of 1

கண்ணாடி soap தயாரிக்கும் முறை

Posted: Sat May 30, 2020 1:17 pm
by Madhumathi Bharath
ஹாய் மக்களே,

நான் சில நாட்களுக்கு முன் வீட்டிலேயே pears போல கண்ணாடி சோப் செய்து என்னுடைய fb பேஜ்ல போட்டோ போட்ட பொழுது நிறைய பேர் செய்முறை கேட்டு இருந்தீங்க... அவங்களுக்காக தான் இந்த பதிவு.. செய்முறையை அப்படியே பின்பற்றி செய்யவும்.
Image
soap base amazon ல கிடைக்கும். இதுல நிறைய வகைகள் உண்டு... உங்களுக்கு பிடித்ததை ஆர்டர் செய்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.(ஆட்டுப்பால், தேங்காய்ப்பால்,கற்றாளை,தேன்... இப்படி)
1.முதலில் ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடு செய்யவும்.(சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரம் இல்லாமல் தனிப் பாத்திரங்கள் பயன்படுத்துவது நல்லது)
2. ஒரு சிறிய பாத்திரத்தில் soap base வேண்டிய அளவு வெட்டி எடுத்து அந்த சின்ன பாத்திரத்தில் வைத்து... சுடுதண்ணீர் உள்ள பாத்திரத்தில் வைக்கவும்.(சுடு தண்ணீரில் மூழ்காத அளவுக்கு வைக்க வேண்டும்)
3.soap base கொஞ்சம் கொஞ்சமாக உருகத் தொடங்கும்.(கலக்குவதற்கு சுத்தமான ஸ்பூன் பயன்படுத்தலாம்)
4.முற்றிலுமாக உருகியதும் சின்ன பாத்திரத்தை தனியே எடுத்து அதில் உங்களுக்கு பிடித்த essential oil சேர்க்கவும்.(சந்தனம், ரோஸ்,மல்லிகை)
5.இந்த கலவை பார்ப்பதற்கு தண்ணீர் போல இருக்கும்... எனவே உங்களுக்கு பிடித்த நிறத்தை நீங்கள் சேர்த்து கொள்ளலாம்.
6.உங்களுக்கு பிடித்தமான பொருட்களான கடலை மாவு, பயத்தம் மாவு, கரித்தூள்... இன்னும் எதை சேர்ப்பதாக இருந்தாலும் கலவையின் சூடு குறைவதற்கு முன் சேர்த்து விடுதல் நலம்.மேலும் இந்த பொடிகள் எந்த அளவுக்கு குறைவாக பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.அதிகம் சேர்த்தால் கண்ணாடி போல தோன்றாது.(ஒரு சோப்பிற்கு அரை சிட்டிகை அளவு போதும்)
7.நன்றாக கலந்ததும் soap மோல்டுகளில் ஊற்றி குறைந்தபட்சம் 6 மணி நேரம் கழிந்த பிறகு எடுத்தால் soap ரெடி... இவற்றை உடனடியாக பயன்படுத்தலாம்.

செஞ்சு பார்த்துட்டு ரிசல்ட் எப்படி இருக்குனு சொல்லுங்க மக்கா.