தேடி களைக்கிறேனடி கண்ணம்மா

Post Reply
yaazhistories
Moderators
Posts: 10
Joined: Mon May 25, 2020 3:05 pm
Been thanked: 1 time

தேடி களைக்கிறேனடி கண்ணம்மா

Post by yaazhistories »

தேடி களைக்கிறேனடி கண்ணம்மா...

விடியாத இரவுகளையும்
நடந்த சாலைகளையும்
சண்டையிட்ட நொடிகளையும்
சிரித்து மகிழ்ந்த நிமிடங்களையும்
அழுது புலம்பிய நாட்களையும்

தேடி களைக்கிறேனடி கண்ணம்மா...

ஒற்றை நிமிடத்தில்
ஓர்நூறாண்டு வாழ்க்கையினை
ரசித்து பேசிய பேச்சுக்களை
தேடி களைக்கிறேனடி கண்ணம்மா...

விரல் கோர்த்து
வீதியெங்கும் நடந்து
முடியாத சாலையிலே
முற்றுப்பெறாமல் திரும்பி
வந்த நடையினை
தேடி களைக்கிறேனடி கண்ணம்மா...

சிறு விசயமொன்று
சட்டென்று பேசி
சண்டையிட்டு இருவரும் தோற்க
சமாதானமாய் கூறிய
காதல் மொழிகளையும்
கண்கள் கூறிய வார்த்தையிலும்
கடந்த நொடிகளை
தேடி களைக்கிறேனடி...

மூச்சுக்கு முன்னூறு முறை
முடிக்க இயலாத சொற்களை
நித்தமும் சொல்ல
நிமிடங்கள் அனைத்திலும்
சிரித்திட்ட வாழ்க்கையினை
தேடி களைக்கிறேனடி...

யாருக்கும் கேட்காமல்
உன்னுடன் மட்டும்
போர்வைக்குள் பேசி
தொலைதூரம் அனுப்பிய
குறுஞ்செய்தி ஒலிகளை
தேடி களைக்கிறேனடி...

இரவுகளின் நீட்சியிலே
இமைகள் மூடாமல்
மணிக்கணக்கில் பேசி
மதியை ரசித்து
உயிரோடு செதுக்கிய காதலை
தேடி களைக்கிறேனடி...

தேடி களைக்கிறேனடி கண்ணம்மா...

நாம் வாழ்ந்த நாட்களில்
நடந்த நிகழ்வுகளில்
நான் மறந்தவிட்ட
ஏதாவது நினைவுகளை
தேடி களைக்கிறேனடி....

இன்றும் மாறாத
உந்தன் நினைவுகளோடு
ஊரே சிரிக்கும் பைத்தியக்காரனாய்....

- சேதுபதி விசுவநாதன்



Post Reply

Return to “Sethupathi Viswanathan”