தாய்மையிலும் விஷமுண்டு 6

Post Reply
User avatar
Madhumathi Bharath
Site Admin
Posts: 124
Joined: Mon May 11, 2020 9:11 am
Location: Tamilnadu
Has thanked: 117 times
Been thanked: 31 times

தாய்மையிலும் விஷமுண்டு 6

Post by Madhumathi Bharath »

நாராயணன் என்ற ஒரு மனிதர் அந்த வீட்டில் இருப்பதையே அனைவரும் மறந்திருந்தார்கள்.
அவரும் போட்டதை தின்று விட்டு எனக்கென்ன வந்தது என்று ஒரு ஓரமாக இருந்தார். மாமியார் வீட்டிற்கு போன ஒரு வாரத்தில், அங்கே சமாளிக்க முடியாமல் தனிகுடித்தனத்தை பத்தி கணவன் ரத்தினத்திடம் பேசினாள் காவ்யா.

"இங்க பாரு எங்க அப்பா அம்மாவை விட்டு என்னால வரமுடியாது, நீ அவங்க பேச்சை கேட்டு அனுசருச்சு போ" என்று சொல்லி விட்டுச் சென்றவனை, வெறிக்க பார்ததுக் கொண்டிருந்தாள் காவ்யா.
அனுவும் மதுபாலனும் கிளம்பி வெளியில் வந்தவர்கள், "அம்மா மாமியார் வீட்டுக்குப் போய்ட்டு வறேன்" என்றான்.
"அவ போகட்டும் நீ இரு உங்கிட்ட கொஞ்சம் பேசனும்" என்றாள் மங்களம், மருமளைப் பார்த்து முறைத்துக் கொண்டே.
" டைம் இல்லை அம்மா ஊருக்கு போய்ட்டு வந்துட்டு பேசிக்கலாம்" என்றவன், "வா அனு லேட்டாச்சு" என்று சொல்லி விட்டு முன்னே சென்றான், மாமியாரைச் சின்ன சிரிப்புடன் பார்த்துக்கொண்டே சென்றாள் அனு.
அனுவை அவளுடைய அம்மா வீட்டில் விட்டு விட்டு கடைக்குச் சென்றான் மதுபாலன்.
அன்று இரவு மலர் வீட்டுக்குப் போய் தங்கிக் கொண்டான். "மலர் என்ன சமையல் பண்ணியிருக்க" என்று ஆசுவாசமாக கேட்டு விட்டு வந்து அமர்ந்தான்.
" எல்லாம் உங்களுக்குப் பிடிச்சதா தான் பண்ணியிருக்கேன், எடுத்து வைக்கட்டுமா? உங்களுக்கு லேட்டாகி விடும், அத்தை வேறு திட்டுவாங்க" என்றாள்.
அவளின் மேல் பார்வையை ஓட்டியவன், "இன்னும் இரண்டு நாளைக்கு இங்க தான் இருக்கப்போறேன்" என்றதும், "உண்மையாவா?" என்றாள் சந்தோஷத்துடன்,
"ஆமாம்" என்று தலையாட்டவும், முகம் கொள்ளாப் புன்னகையுடன் அவனுக்கு இரவு உணவை எடுத்துவர சென்றாள்.
இருவரும் பேசிக்கொண்டே உணவருந்தினார்கள். "எங்கம்மா உங்களை எவ்வளவு பெருமையா சொன்னாங்க தெரியுமா?, என் தங்கச்சி மாமா எனக்கு கொழுசு வாங்கி கொடுத்திருக்காங்கன்னு ஊர் முழுவதும் சொல்லிட்டிருக்கா, எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சுங்க" என்று அவள் ஊருக்கு போனதிலிருந்து வந்தது வரை வாய் ஒயாமல் பேசிக் கொண்டிருக்க, மதுபாலன் புன்னகையுடன் கேட்டுக் கொண்டான்.

அவன் அங்கிருந்த இரண்டு நாளும் அவன் பின்னாடியே சுத்திக் கொண்டிருநதாள். அவனுக்கு அது விததியாசமான உணர்வை கொடுத்திருந்தது.
பாத்ரும் போனால் கூடப் பின்னாடியே வந்தவளை சிரிப்புடன், "பாத்ரூம் போகக் கூட விடமாட்டியா?" என்றான்.
அவள் வெக்கத்துடன் உள்ளே சென்றாள். இத்தனை நாள் இவள் அவனிடம் இப்படி எல்லாம் நடந்து கொண்டதில்லை, அதாவது அம்மாவும் காவ்யாவும் விட்டதில்லை என்று நினைத்தவனுக்கு, வேதனையாக இருந்தது.
எத்தனை சந்தோஷத்தை இழந்திருக்கோம், இப்ப இவ என்னையே சுத்தி வரது எனக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்குது. அப்போ அம்மாவும் தங்கச்சியும் என் சந்தோஷத்தையும் சேர்த்து தான் குழைத்திருக்காங்க, என்ற கோபமும் வந்தது.
மதுபாலன் இங்கிருந்த நாட்களெல்லாம், மறக்க முடியாததாக ஆக்கி இருந்தாள் மலர்விழி. அன்று அவன் வீட்டிற்கு கிளம்ப, முகம் சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.
அவள் அருதில் வந்து அமர்ந்தவன், "இன்னும் ஒரு வாரம் பொருமா இந்தப் பிரச்சனையை முடித்து விட்டு உன்னோடவே நான் வந்து விடுகிறேன்" என்றான்.
சரி என்பதைப் போல தலையாட்டி அனுப்பி வைத்தாள். அந்த வீட்டிலிருந்து மதுபாலன் வெளியில் வந்ததை இருவிழிகள் பார்த்துக் கொண்டிருந்தது.
ஒரு வேலையாக வந்தவன் கண்ணில் இந்த காட்ச்சிப் பட, இவ தான் நம்ம வீட்டுக்கு சரியான ஆள், அனுவைத் துரத்தி விட்டுட்டு இவளை கூட்டிப் போனால், காவ்யாவும் அம்மா வீட்டில் இருப்பாள், நமக்கும் பிரச்சனை இல்லை என்ற முடிவை எடுத்தவன், அந்த வீட்டை நோக்கிச்சென்றான்.
மதுபாலன் அனுவை அழைத்துக் கொண்டு தன் வீடு வந்லு சேர வெகு நேரம் ஆகியிருந்தது.
அனுவைப் பாரத்துமே மங்களம் முகம் வெறுப்பை கக்கியது. அவள் மாமியார் என்ற ஒரு உருவம் அங்கே நிற்பதைக் கூட கண்டு கொள்ளாமல், உள்ளே சென்றாள்.
அவள் பின்னே மதுபாலனும் சென்றான், "டேய் இங்க நான் ஒரு மனுஷி நிற்கறேன், நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம், இப்படி எல்லாம் இருக்கச் சொல்லி உன் பொண்டாட்டி சொல்லி கொடுத்தாளா?" என்றார் ஆத்திரத்துடன்.
அவன் பதில் சொல்வதற்குள் அனு வந்து அவனை உள்ளே இழுத்துச் சென்று விட்டாள். மங்களம் தலையில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.
அடுத்த நாள் ரத்தினம் காவ்யாவுடனும் மலர்விழியுடனும் மாமியார் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
மலரைப் பார்த்தும் மங்களம் மனம் நிறைய சந்தோஷத்துடன், "வாம்மா உன் அருமை தெரியாம தப்பு பண்ணிட்டேன்" என்று புலம்பினாள்.
சத்தம் கேட்டு அனுவும் மதுபாலனும் வர, இன்னொரு பெண்ணோடு ஒரே அறையிலிருந்து வரும் கணவனை, வேதனையோடு பாரத்தாள் மலர்விழி.
சுதாரித்த மதுபாலன் சுகாசினிக்கு மெஸேஜ் அனுப்பி விட்டு, "மலர் நீ எப்படி இங்கே வந்த, உன்னை இவங்களா அழைத்து வந்தது" என்றான்.
" ஆமாம் அண்ணா இவங்க தான் என் அண்ணி, இனிமேல் இங்கதான் இருப்பாங்க" என்றாள்.
" ஒ இவ்வளவு நாளா இவங்க உங்க கண்ணுக்கு மனுஷியாக் கூடத் தெரியலை, இப்ப அண்ணியா தெரியறாங்களா?, அவங்க சரியில்லன்னு தானே என்னக் கொண்டு வந்தீங்க, அவங்களை மாதிரி நீங்க சொன்னதும் போயிருவேன்னு நினைச்சீங்களா?, உங்களை எல்லாம் ஜெயில்ல கம்பி என்ன வைக்காம போக மாட்டேன்" என்றாள் அனு.
"ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லை மலர்தான் எங்க வீட்டு மருமகள்" என்றாள் மங்களம்.
அப்போது சுகாசினியும் வந்தாள். அவளைப் பாரத்தும், "அக்கா" என்று ஓடி வந்து கட்டிககொண்டு அழுதாள் மலர்.

அவளை அணைத்துக் கொண்ட சுகாசினி அவள் காதில், "இதெல்லாம நாடகம் தான், அனு நல்ல பொண்ணு" என்பதை மட்டும் சொல்ல, விலகி வியப்புடன் சுகாசினி முகத்தை பார்த்தாள் மலர்.
அவள் ஆமாம் என்பது போல் கண் திறந்து மூட, அப்போது தான் போன உயிர் திரும்பி வந்த மாதிரி இருந்தது மலருக்கு.
மதுபாலனையும் மலரையும் ஒரு சேரப் பார்த்த ரத்தினம் அந்த வீட்டிற்குச் சென்றான்
வரவேற்காமல் முகத்தை திருப்பிக் கொண்ட மலரிடம், "மலர் என்னை மன்னிச்சிரு அன்னைக்கு ஏதோ புத்தி பிசகி அப்படி செய்து விட்டேன், அதை நினைத்து கலங்காத நாள் இல்லை" என்று கண்ணீர் வடித்து விட்டு,
"உன் நல்லதிற்குத் தான் வந்திருக்கேன், உன் புருஷன் இன்னொரு கல்யாணம் பண்ணி கொண்டான்" என்று சொன்னதும், "பொய் சொல்றீங்க" என்று அவன் பேச்சை நம்பாமல் ஆத்திரத்துடன் வெளியில் போகச் சொல்லி விட்டாள் மலர்.
இன்று காலையில் நேரத்திலேயே மனைவியுடன் சென்று, மலரிடம் சொல்லி அழைத்து வந்திருந்தான் ரத்தினம்.
"அவளுக்கு குழந்தை இல்லைன்னு தானே எனக்கு அனுவைக் கட்டி வெச்சீங்க, இப்பவும் மலருக்கு குழந்தை இல்லை தானே, அனு கற்பமாகக் கூட இருக்கலாம், நீங்க எப்படி அவளைத் துரத்த முடியும்.
உங்களுக்கு குழந்தை தானே முக்கியம், அனு கூட அனுசருச்சு இருந்துக்கோங்க, மலர் அதே வீட்டில் இருக்கட்டும். இரண்டு பொண்டாட்டி இருக்கறது நம்ம நாட்டில் வழக்கம் தானே" என்றான் இடக்காக மதுபாலன்.
"சரிடா நீ சொல்வது சரிதான் அப்படி இருந்தாலும், மலரை இங்கே விட்டுவிட்டு அனுவை அந்த வீட்டுக்கு கூட்டிட்டுப் போ" என்றார் பிடிவாதமாக மங்களம்.
ரத்தினம் வாயே பேசாமல் நம்ம வேலை முடிந்தது என்பது போல் இருந்தான். அப்போது சுமதியும் ஒரு பையனுடன் வந்தார். சுகாசினி தான் போன் பண்ணிச் சொல்லிவிட்டு வந்திருந்தாள்.

"என்ன எல்லாரும் துரத்தி விட்ட இந்தப் பெண்ணை கூப்பிட்டு வந்து நடு வீட்டில் வெச்சு பேசிட்டு இருக்கீங்க, முதல்ல அந்த பெண்ணை வெளியே அனுப்புங்க" என்றார் கோபமாக.
" அதை நீ சொல்லாதே அவ தான் முதல்ல வந்த மருமகள்" என்று காவியாவும் மங்களமும் அவளுக்குச் சப்போர்ட் பண்ணிக் கொண்டு முன்னே வந்தார்கள்.
"அப்போ என் பொண்ணு யாரு என்ன ரத்தினம் இதெல்லாம், எப்படியோ என் பொண்ணு வாழ்க்கைய கெடுத்துடீங்கள்ள, உன் பேச்சை நம்பி தானே பெண்ணைக் கொடுத்தேன்" என்று திட்டி தீர்த்தாள்.
" என்ன பண்ணச் சொல்றீங்க உங்க பொண்ணு நல்ல முறையில் நடந்துகிட்டா பரவாயில்லை, யாரையும் மதிப்பதில்லை" என்று சொல்லி விட்டு தப்பித்துக் கொண்டான்.
காவ்யாவும் மங்களமும் பிடிவாதமாக அனு இங்கே இருக்கக் கூடாது என்று சொல்ல, "நிச்சயமா இருக்க மாட்டா என் பொண்டாட்டி எப்படி உங்க வீட்டில் இருப்பா" என்று சொன்னான் சுமதியோடு வந்த அர்ஜுன்.
மதுபாலனைப் பார்த்து, "இனி உங்க பிரச்சனையை நீங்க பார்த்துக்குங்க, என் பொண்டாட்டிய இவங்க கேள்வி கேட்பது எனக்குப் பிடிக்கவில்லை" என்று சொல்லிவிட்டு அனுவையும் சுமதியையும் அழைத்துச் சென்று விட்டான்.
அங்கிருந்த மதுபாலன் சுகாசினி தவிர, மற்றவர்கள் அதிரச்சியுடன் என்னடா நடக்குது இங்க என்பதைப் போல பாரத்துக் கொண்டிருக்க, மது பாலன், "அம்மா அனு என் மனைவி இல்லை மலரின் குணத்தை உங்களுக்கு புரிய வைக்க வந்தவள், நீங்க புருஞ்சுகிட்டீங்களோ இல்லையோ என் பொண்டாட்டிய பத்தி நான் நல்லா புரிந்து கொண்டேன்.
என் சந்தோஷத்தையே உங்க பொண்ணோட சேர்ந்து கெடுத்துட்டீங்களே, உங்க பொண்ணு நல்லா இருக்கனும்னு நினைச்சீங்க, என்னைப் பத்தி யோசிச்சீங்களா?" என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டான் மதுபாலன்.
" இனி அப்படி நடக்காது டா இந்த ஒரு முறை மன்னிச்சிருடா" என்று மங்களம் இறங்கி வர, "இல்லை நீங்க உங்க பொண்ணோடவே இருங்க" என்றவன், தன் அறைக்குள் சென்று துணிகளை எல்லாம் பேக் பண்ணிக் கொண்டு வெளியில் வந்தவன், "வா மலர்" என்று அழைத்துக் கொண்டு சென்றவனின் பின்னாடியே அழுது கொண்டு வந்தார்கள்.
அவன் திரும்பி கூட பார்க்கவில்லை, மலர் திரும்பி பாரத்து ஏதோ சொல்ல வந்தவளை, "வாயை மூடிடடு வா" என்றான் இறுக்கமான குரலில், அதில் மலர் அமைதியாகி விட்டாள்.
சுகாசினி வீட்டிற்கு வந்தவர்கள், அங்கே அனு, அர்ஜுன், சுமதி மூன்று பேரும் சாரதாமாவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இவர்களைப் பார்த்ததும், "பிரச்சனை முடுஞ்சுதா?" என்றார்கள். "நான் வெளியில் வந்துடேன்" என்ற மதுபாலன் சுமதியிடம், "உங்க உதவி இல்லைனா எங்க அம்மாவும் தங்தச்சியும் இவள் வாழக்கையே கெடுத்திருப்பாங்க, எங்க அம்மா பேச்சை மீற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
எங்க அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு எங்களை காப்பாத்தினாங்க, அவங்களை எதிர்த்து பேசி பழக்கமில்லை. அது சரியாக இருந்தாலும், எப்ப ஒரு பொண்ணு என்னை நம்பி வந்ததோ அப்போ நான் இரண்டு பக்கமும் பார்த்திருக்க வேண்டும்.
அதில் நான் தவறி விட்டேன் பாதிபடைந்தது என் மனைவி தான்" என்றான் வேதனையுடன்.
" விடுங்க மதுபாலன் எல்லாருக்குமே அம்மான்னா ஒரு ஒரு படி மேல வெச்சுப் பார்க்கத்தான் தோனும், இப்ப புருஞ்சு கிட்டீங்கள்ள" என்றான் அர்ஜுன்.
"எல்லாருக்கும் நன்றி சொன்னான் மதுபாலன். சுகாசினி, சுமதி அனு இருவரிடமும், "இந்த மாதிரி உதவி யாரும் பண்ண மாட்டாங்க, உங்க பொண்ணால ஒரு பொண்ணு வாழ்க்கை காப்பாற்ற பட்டிருக்கு" என்றாள்.
மலர்விழியும் சாரதாவும் ஒன்றும் புரியாமல் பார்க்க, சுகாசினி, "அத்தை நீங்க அன்னைக்கு மலர்விழிய கூட்டிகிட்டு மாடிக்கு போய்ட்டீங்கள்ள, அப்போ நானும் கவிதாவும் மதுபாலனும் இதை தான் பேசிக்கொண்டிருந்தோம்.
நாங்க மூனு பேரும் சேர்ந்து இவங்க வீட்டுக்கு போய் நிலமைய சொல்லி கேட்கவும் சரி என்றார்கள், அனுவும் அர்ஜூனும் விரும்புவது தெரியாமல் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லியிருக்காங்க.
"அதுவும் மலருக்கு வியாதி குழந்தை பிறக்காது என்று சொல்லி தான் ரத்தினம் பெண் கேட்டிருக்கான், நாங்க சொன்னதும் பதறி போய்ட்டாங்க. ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்க பார்த்தேனே, என்று ரொம்ப வருத்தப் பட்டவங்க, எங்களால முடுஞ்ச உதவிய செய்யறோம் என்று முன் வந்தார்கள்.
திருமணத்தின் போது ரத்தினத்தையும் காவ்யாவையும் திசைதிருப்பி விட்டு, அர்ஜூன் தான் அனுவுக்குத் தாலி கட்டினான். அதை அவங்க இரண்டு பேருக்கும் தெரயாது", என்று நடந்ததை சொன்னாள்.
சாரதா, "பரவாயில்லையே எல்லாரும் சேர்ந்து ஒரு நல்ல காரியம் பண்ணி இருக்கீங்க" என்றவர், "அர்ஜூன் உன்னை நினைத்தால் பெருமையா இருக்கு" என்றார்.
" ஒரு பொண்ணு வாழ்க்கைகாக என்ற போது மறுக்க தோணலை அம்மா, பாவம் அவளும் என் தங்கச்சி மாதிரி தான், எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக்காள்" என்றான் அர்ஜூன்.
இதை எல்லாம் கண்கலங்க பார்த்துக்கொண்டிருந்தாள் மலர்விழி.
"அது தான் திருந்திட்டாங்களே இங்கயே இருக்க வேண்டியது தானே" என்றார் சாரதா. "இல்லை அம்மா எனக்கு அதில் விருப்பம் இல்லை. இவளோட நான் சந்தோஷமா வாழனும்னா தனியாக இருப்பது தான் சரி, எனக்காக இவ்வளவு தூரம் உதவி செய்த உங்களை மறக்கமாட்டேன், கவிதா சிஸ்டருக்கும் போன் பண்ணி பேசனும்" என்று மேலும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அங்கிருந்து கிளம்பும் போது சாரதாவையும் சுகாசினியையும் கட்டிக்கொண்டு அழுதாள் மலர்விழி. "நீ எப்பவும் இந்த வீட்டுப் பொண்ணுமா அழாதே அடிக்கடி வந்து பார்கறோம்" என்றார்கள்.
அனுவின் கையை பிடித்துக்கொண்டவள், எதுவும் பேசமுடியாமல் திணறினாள். "மலர்விழி அழாதீங்க இனிமேல் உங்க வாழ்க்கையில் கண்ணீருக்கே இடமில்லை" என்று துடைத்து விட்டு மதுபாலன் அருகில் கொண்டு போய் நிற்க்க வைத்தாள்.
அனுவை கையெடுத்து கும்பிட்ட மதுபாலனின் கண்கலங்கி விட்டது. "தங்கச்சி நீ எங்க இருந்தாலும் நல்லாருப்ப" என்று அவள் தலையில் கைவைத்துச் சொன்னான்.
பின் அனைவரிடமும் விடை பெற்று சுதந்திரப் பறவை போல தங்கள் இல்லம் நோக்கிப் பறந்தார்கள். இருவருக்கும் தேனைப் போல வாழ்க்கை தித்திப்பாகச் சென்றது.
ஆறு மாதம் ஓடியதே தெரியவில்லை. அன்று காலையில் எழுந்திருக்கும் போதே தலை சுற்றுவது போல் இருக்க, அப்படியே படுத்து விட்டாள்.
மதுபாலன், "என்னமா" என்று பதறினான். "எனக்கு தலை சுத்தற மாதிரி இருக்குங்க" என்றாள் மலர்.
" பசியா இருக்கும் இரு" என்று சமையலறைக்குச் சென்றவன், பாலை காய்ச்சி எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்.
அதை வாங்கி இரண்டு வாய் அருந்தியவள் குமட்டிக்கொண்டு வர பயந்து போனார்கள். மதுபாலன் ஆஸ்பிட்டலுக்கு அழைத்துச்செல்ல, அங்கே டாக்டர் செக் பண்ணி விட்டு "நீ அம்மாவாக போற மா" என்றார்.
இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை, வீட்டிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் போன் மண்ணி சொல்லி தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்கள். இனி அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே நிலைத்திருக்க நாமும் வாழ்த்துவோம்.

அன்புடனும் நட்புடனும்
கவிஅன்பு



Post Reply

Return to “தாய்மையிலும் விஷமுண்டு”