போற போக்கில் ஒரு காதல் 4

Post Reply
Kirthika
Moderators
Posts: 18
Joined: Fri Jul 17, 2020 5:18 pm
Has thanked: 2 times
Been thanked: 4 times

போற போக்கில் ஒரு காதல் 4

Post by Kirthika »

அத்தியாயம் 4

தாக்ஷி ஜெய்மியை சேர்த்து மொத்தமாக பதினோரு பேர் தேர்வாகிருந்தனர். அதில் ஜெய்மி, தாக்ஷி மற்றும் அவர்களின் நண்பர்களான வருண், நித்யாவிற்கும் கைய்ட் மற்றும் ட்ரைனராக வந்தவள் மேகனா ராவ்.

மேகனா ராவ் - நல்ல அறிவாளி, எழிலகி, திறனான நவீன யுவதி, மிகவும் அமைதியானவள். அவளின் தெளிவான அணுகுமுறையிலும், பொறுமையாக புரியவைப்பதிலும், அமைதியான பேச்சிலும் அவளுக்கு நிரந்தர தீவிர ரசிகர்களாகவே மாறிவிட்டனர் தாக்ஷி அண்ட் கோ..

பெண்கள் மூவர்க்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது, மேகனாவிற்கு முதல் நாளிலே “பார்பிமேக்” என பெயரும் வைத்துவிட்டனர் அந்த நல்லவர் பட்டாளம், அது விரிந்து மீதம் உள்ள ஏழு பேருக்கும் சென்றடைந்தது.

இதில் தாட்சாயினி மோகனாவிடம் சீக்கிரமாகவே ஓட்டிக்கொண்டாள், மேகனாவிற்கும் இயல்பாகவே கூடுதல் ஓட்டுதல் வந்துவிட்டது தாட்சாயினிடம்.

சாரீ டே வில் அசத்தாலாக வந்த பார்பிமேக்யே பார்த்து கொண்டிருந்த தாக்ஷியை "மானிட்டர பாக்க சொன்னா என் பேஸ்ல என்ன இருக்கு " என அவளின் தலையை மானிட்டர் பக்கம் திருப்பினாள், தாக்ஷி குவித்து வைத்த எரர்களை குறைத்து கொண்டிருந்த மேகனா.

"யோசிச்சுட்டுருக்கேன் மேக், யோசிச்சுட்டு வருத்தப்பட்டுட்டு இருக்கேன்" என பெருமூச்சு விட்டாள் கையை கண்ணத்திற்கு கொடுத்து டேபிளில் சாய்ந்து திரும்பி மேகனாவை பார்த்துக்கொண்டிருந்த தாக்ஷி.

மேகனாவோ "என்ன அவ்வளவு பெரியயய வருத்தம் இந்த சின்ன மூளைக்குள்ள" என்றாள்.

"வேற என்ன எனக்கு ஒரு அண்ணண் இல்லையேன்னு தான் ஓவர் கவலை மேக் "

"என்னது.... அண்ணண் வேணுமா, என்ன திடிர்னு, எதுக்காம் ? " என வியந்தாள் மேகனா

"எதுக்கா….., எனக்கு மட்டும் ஒரு அண்ணண் இருந்தா, உங்கள அண்ணியாக்கி என் கூடவே என் வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவேன்ல" என தாட்சாயினி கூறவும் அவளின் யோசனையில் அசந்தே விட்டாள் மேகனா.

" ஹே.. இது ஓவரா இல்ல"

"இதுல எங்க ஓவர் வருது மேக், ஜெய்மிக்கு அடுத்து எனக்கு உங்கள தான் பிடிச்சுருக்கு, ஜெய்மி ஸ் மை டியர் தோழின்னா யு ஆர் மை டியர் பார்பி டால், பட் இதுல பாருங்க ஜெய்மியை கூட நான் அண்ணியா யோசிக்கல " என தாக்ஷி கூறவும்

"ரொம்ப பயங்கரமான யோசனை தான் போ " என பக்கேன சிரித்துவிட்டாள் மேகனா.

அதிகமாக யாரிடமும் ஒட்டாத மோகனவும் தாக்ஷியிடம் ஓட்டிக்கொண்டாள். லைக்கிங் அண்ட் லவ்விங் வித் இன் ஷார்ட் பீரியட் என்பது போல் இவருக்கும் மற்றவிடம் குறுகிய காலத்திலே அதிக பற்றுதல் வந்துவிட்டது. மேகனாவிற்க்கு ஆரம்பம் முதலே தாக்ஷியிடம் ஒரு தனி பிரியம்.
மேகனாவை பொருத்த வரை தங்கையை இல்லாத அவளுக்கு தாக்ஷி ஒரு தங்கையாயே, ப்ரொஜெக்ட்டில் தாக்ஷி செய்யும் சின்ன சின்ன(??) தப்பு செய்துவிட்டு பாவமாக தன் முன் நிற்பதாகட்டும், தன்னிடம் கள்ளமில்லா அன்பு காட்டுவதாகட்டும், பட படவென அவளின் நண்பர்கள் வட்டாரத்தை இலகுவாக வைப்பதாகட்டும், அதையும் விட ஏதோவொன்று தாக்ஷியின் மேல் பெரிதாக ஈர்த்துவிட்டது மேகனாவிற்கு. தாக்ஷிக்கோ சொல்ல தேவையில்லை மோகனா அவளுக்கு எப்போதும் ஸ்பெஷல் பார்பிமேக் தான்.

***********************

சென்னையில் கல்லூரியின் இரண்டாம் வருடம் படிக்கும் போதே லஞ்ச் சரியில்லை, ப்ரேக்ஃபாஸ்ட் சரியில்லை, மொத்தத்தில் சாப்பாடே சரியில்லை ஏன் சாப்பாடே போடமாற்றாங்க என ஆள் ஆளுக்கு ஒரு காரணங்கள் அவர்கள் வீட்டில் சொல்லி கண்னை கசக்கி தோழிகள் அனைவரும் சேர்ந்து வீடு எடுத்து தங்குவதாக ஏக மனதாக அவர்களின் பெற்றோர்களால் பல பல மறுபரிசலனைகள் பிறகே செயலாக்கப்பட்டது.

வீடு, நண்பர்கள், எப்பவாச்சும் காலேஜ், அப்போ அப்போ ப்ராஜெக்ட், ஆஃபிஸ்ல பஃன் என இனிமையாக நகர்ந்தது தாக்ஷியின் நாட்கள். ஒன்றை தவிர அவளின் கொள்கை தான் வெறும் ஆரம்ப கட்ட நிலையிலே இருந்தது, இளமதியனிடம் அவளாக பேச முயற்சித்தாலும் அவளின் படிப்பு மற்றும் ப்ராஜெக்ட் பத்தியே வந்து நிற்கும், அதிலும் ப்ராஜெக்ட் ப்ரோக்ராம்மிங் பற்றிய கேள்விகள் நிறையாகவே இருந்ததில் பயந்தே விட்டாள். நம்ம லைஃப் பூரா ப்ரோக்ராம் சுத்தியே இருக்குமோ என நொந்து கொள்ள தான் முடிந்தது ஜெய்மியிடம்.

இந்நிலையில் அவள் காதலில் இல்லை காதலாக நம்பிக்கொண்டிருந்த எண்ணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியோ இல்லை ஆரம்பபுள்ளியயோ நோக்கி நகர்ந்து அவளுக்கு அதிர்ச்சியையோ ஆச்சிரியாத்தையோ தர காத்திருந்தது.

*************************

பினிக்ஸ் மாலின் அருகில் பார்பிஃகியூவில் தட்டு சேவைக்காக ( பஃபட்) குழுமியிருந்தது அந்த நண்பர்கள் பட்டாளம், வேறு என்ன அந்த வராம் செவ்வாயன்று வந்த வருணின் பிறந்த நாளுக்காகத்தான். வாரநாட்களில் யாருக்கு பிறந்த நாள் வந்தாலும் வார கடைசியில் நண்பர்களின் “போஸ்ட் பிறந்த நாளான” தனி கொண்டாட்டத்தை வைத்து கொள்வார்கள். இதோ வெள்ளி மாலையன்று வருணின் ட்ரீட் முடிவாகி அளப்பறித்துகொண்டிருந்தனர்.

ஹோட்டலில் ஸ்பான்ஸர் செய்த அந்த சின்ன கேக்கயும் வருணை சாப்பிட விடாமல் செய்து இனிதே ஆரம்பித்தது அந்த “போஸ்ட் பிறந்த நாள்” கொண்டாட்டம்.

கொண்டாட்டத்திற்கு நடுவில் தாக்ஷிக்கு இரண்டு அழைப்புகள் வந்தது, முதல் அழைப்பு அவளின் வேணும்மாவிடம் இருந்து. இந்நேரம் வெளியில் இருப்பதை அவளின் சித்தி மட்டும் அறிந்தால் அவ்வளவு தான், முதல் வேலையாக சென்னை வந்து அவளை புதுக்கோட்டைக்கு பேக் செய்து அவரே டெலிவரியும் வாங்கிக்கொள்வார்.

தன் நண்பர்களின் பட்டாளத்தின் சத்தத்தை குறைக்க செய்து மொபைலை காதிற்கு கொடுத்தாள்.

“சொல்லு வேணும்மா”

"என்ன தங்கம் செய்ற"

"நா ... நான் ஆஃபீஸ்ல இருக்கேன் வேணும்மா"

"மணி எட்டாக்கப்போகுதே இவ்வளவு நேரமாகவா"

"ஹான், ப்ராஜெக்ட் முடிச்சு கொடுக்கனுமா அதான்.. நான் மட்டும் இல்ல எல்லாரும் இங்க தான் இருக்கோம்"

"நேரங்கழிச்சு எப்படி வீட்டுக்கு போவீங்க, ஏன் அத நாளைக்கு சிக்கீரமே வந்து பாத்து கொடுக்கக்கூடாதா"

"அது வந்து வேணும்மா நாளைக்கே ப்ராஜெக்ட் முடிச்சு கொடுக்கணுமா, அதான்.. ஆஃபீஸ் கேப்ல அனுப்பிச்சு விடுவாங்க, இங்க ஜெய்மியும் கூட இருக்கா, ஒன்னும் பிரச்சனையில்ல, இதோ இப்ப கிளம்பிடுவோம்"

" அப்ப சாப்பாடுலாம்" அவர்க்கு அவர் கவலை.

"அது நாங்க இங்க ஆஃபீஸ்க்கே ஆர்டர் பண்ணிட்டோம், இப்ப சாப்பிட்டு தான் இருக்கோம் வேணும்மா"

"சாப்பிட்டா இருக்க, முதல அத சொல்லக்கூடாது, போன வச்சிட்டு போய் சாப்பிடு போ " என்று மகள் சாப்பாடு தடை பட்டுவிட்டதே என கூறிக்கொண்டிருந்தவரிடம் இருந்து போனை வாங்கிய பிரபு தம்கையிடம் அளவளாவி கொண்டே வெளியே வந்தான்.

"எனக்கு வொய்ட் மஸ்க் மிஸ்ட் (பெர்ஃப்யூம் ) வாங்கி, அத அப்படியே என் பிரெண்ட்ட கொடுத்து விட்டுடு மை டியர் சிஸ்டர்"

"ஹேய் அமுலியா என்ன விளையாடுறியா நான் ஆஃபீஸ்ல இருந்து கிளம்பவே லேட் ஆகிடும், இப்ப போய் எங்க வாங்க முடியும்"

"ஹலோ சிஸ்டர் உங்க வேணும்மாட்ட விட்ட ரீல என்கிட்டயும் விடாத, நீங்க எல்லாரும் அந்த வளந்த வருண் பர்த்டே ட்ரீட்ல தான இருக்கீங்க?!, ஆல் டீடெயில்ஸ் ஐ க்நோ, அதான் எஃ.பி’ல போஸ்ட்டா போட்டு தள்ளுறாங்களே உன் பிரெண்ட்ஸ்,

அத விடு ஐயாம் ஆல்சோ குட் பாய்க்கா உன்ன என்ன இப்பவேவா போக சொல்றேன், நல்லா கொட்டிக்கிட்டு அப்புறம் பினிக்ஸ் போய் வாங்கி கொடுத்திரு, என் பிரெண்ட் அங்க தான் இருக்கான், டீல் ஓகேவா இல்ல எஃ.பி போஸ்ட்டா அம்மாட்ட காட்டவா ???"

இப்ப தம்பிகலாம் ஓவர் விஷமா இருக்குதுங்களே என தனக்குளே நொந்து கொண்டிருந்தாள். அந்த பக்கம் பதிலே இல்லாதால்

"ஹலோ சிஸ்டர் என்ன சத்தத்தையே காணோம்"

"ஹி ஹி ஒண்ணுமில்ல பிரதர் ஒண்ணு வாங்கலாமா இல்ல இரண்டா வாங்கலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்"

" பாசம் ஓவரா டபுளா இருக்கு, கொஞ்சம் ஒண்ணாவே குறைச்சுக்கோ, அப்புறம் ஒரு நியூஸ் சொல்றேன் வேணும்னா கேட்டுக்கோ என் பிரெண்ட்னு சொன்னது மாமாவ தான்.. மதி மாமா, அமிழ் மாமா ரெண்டு பேரும் சென்னை வந்திருக்காங்க இப்போ பினிக்ஸ்ல தான் இருக்காங்க, உன் கொள்கைக்கு இந்த நியூஸ் நல்லா யூஸ் ஆகும்னு நினைக்கிறேன்"

அதில் மகிழ்ந்தவள் "ஹே அமுலியா நிஜமாவா..." என சந்தோஷத்தில் குதித்தாள் "இதைதானா பர்ஸ்ட் சொல்லிருக்கணும் நீ, ஆனாலும் சோ ஸ்வீட்டா அமுலியா, லவ் யூ "

"சரி சரி என்ன லவ் பண்ணுனது போதும் போய் மாமாவ லவ் பண்ணிக்கோ போ " என வைத்து விட்டு போனை தன் அம்மாவிடம் கொடுக்க சென்றான்.

அங்கு அவரோ மகளோ சாப்பிடாமல் தூங்காமல் வேலை செய்வதாகவும் ஏற்கனவே துரும்பாக (??) இருக்கும் மகள் மிகவும் இளைத்து விட போகிறாள் என்றும், அது எல்லாம் இந்த கம்ப்யூட்டர் படிப்பினால் வந்தது என்றும், அத படிக்க ஊக்குவித்த தன் கணவரே இந்நிலைக்கு காரணம் என்றும் என வருத்தத்தில் ஆர்மபித்த வேணுவிசாலாட்சி கோபத்தில் முடித்தார்.

தந்தை ஒண்ணும் புரியா நிலையில் அன்னையிடம் விழித்து கொண்டிருந்ததை கண்டு " அங்க அது ட்ரீட்ங்கற பேர்ல நாலு நாளைக்கும் சேத்து சாப்பிட்டுட்டு இருக்கு இங்க அப்பா சாப்பிட நாலு இட்டிலியும் சேமிக்க வச்சுட்டாங்களே அம்மா" என தனக்குள் வருத்தப்பட்டவன்,

அன்னையை திசை திருப்பும் பொருட்டு " அம்மா பாவம் அப்பாவ விடுங்க அதான் தாக்ஷிக்கும் சேத்து வெளியே போகாம நான் புதுக்கோட்டையிலே படிக்கிறேன்ல. "

அங்கு சம்மந்தம் இல்லாமல் இடையிட்ட அவனின் அப்பவோ " அடேய் நீ வாங்குன மார்க்கு இங்க இன்ஜினியரிங் சீட் கிடைச்சதே பெருசு டா, தாக்ஷி வாங்குன மார்க் அப்ப்டிடா!! பாரு புள்ள படிச்சு முடிக்கிறதுக்கு முன்னாடியே வேலைக்கு போகுது" என பெருமைப்பட்டுக்கொண்டார்.

காண்டான பிரபு உள்ளே சென்று விட்ட தன் அம்மாவை உறுதி படுத்தி கொண்டவன் "மிஸ்டர் சிவசு உங்க அரும மக அதோட ப்ரொஜெக்ட்க்காக தான் ஆஃபீஸ் போகுது, அத என்னமோ ஆஃபீஸ் ப்ராஜெக்ட் மாதிரியும் கிளைன்ட்கிட்ட நாளைக்கே சப்மிட் பண்ண போறது மாதிரி அம்மாட்ட சொல்லிக்கிட்டு வெளியே ஜாலியா ஊர் சுத்திட்டு இருக்கு, அத நம்பி உங்கள கரிச்சு கொட்டிட்டுன அம்மாட்ட இருந்து உங்கள காப்பாத்த ட்ரை பண்ணுனா நீங்க எனக்கே ரிவீட் அடிக்கிறீங்க "

அவனின் தந்தையோ " டே என்னடா சொல்ற அக்கா வெளியவா இருக்கா " அதயே அங்கு வந்த அவனின் பெரியதந்தையும் கேக்க.. "ஹையோ பெரியப்பா வந்தத கவனிக்கலையே," என நொந்து கொண்டான். ஞானமூர்த்தியோ மனைவியின் இறப்புக்கு பின் மகளின் வளர்ப்பை முழுவவதுமாக வேணுவிசாலாட்சியிடம் ஒப்படைத்துவிட்டார், தாட்சாயினி சம்பந்தமாக எதுனாலும் வேணுவிசாலாட்சியின் மூலம் தான்.

இப்போது தாக்ஷி விஷயம் தெரிந்தால் முதல் வேலையாக வேணுவிசாலாட்சிக்கு விஷயம் போய் விடும். அதை விட அன்னையிடம் மறைக்கும் படி என்ன இருக்கிறது என்றே தன் பெரியப்பா தன்னை நோக்குவது புரிந்து " ஹி ஹி அது ஒண்ணுமில்ல பெரியப்பா அக்கா ஆஃபீஸ் முடிச்சு மாமாவ பாக்க போயிருக்கா"


"டே இது என்னடா புது பழக்கம், இந்நேரத்துக்கு எதுக்கு தனியா வெளியே போய் பாக்கணும், அதுவும் கல்யாண முடிவாகிற சமயத்துல, அம்மா அப்பத்தாக்குலாம் தெரிஞ்சா என்னவாகிறது" என நடுவில் வந்த தந்தையிடம்

"அதான் அம்மாட்ட சொல்லல, கல்யாணம் முடிவாகிருச்சுல பேசி புரிஞ்சுக்க வேணாமா ஒன்னும் தெரிஞ்சுக்காமா எப்படி அக்கா கல்யாணம் பண்ணிக்கும், நான் தான் மாமா அங்க வந்திருக்காங்கனு சொல்லி போய் பாருனு அக்காட்ட சொன்னேன், அக்கா தனியாலாம் போகல ஜெய்மி அக்கா கூடதான் போயிருக்கா, மாமாவும் தனியாயில்லை மதி மாமா அமிழ் மாமா ரெண்டு பேரும் அவங்க பிரண்ட்ஸ் கூட தான் அங்க இருக்காங்க, அப்புறம் அது நம்ம புதுக்கோட்டையா அங்க இந்நேரத்துக்கு தான் மக்கள் நடமாட்டமே அதிகம் இருக்கும், சும்மா ஜஸ்ட் ஒரு டாக் அவ்வளவு தான்.. என் அக்கா கல்யாணத்துல கடைசி முடிவு அக்காவோடத்தான் இருக்கும், மாமா அக்காக்கு பெஸ்ட் சாய்ஸ் தான், ஆனா அக்காக்கு பிடிச்சா மட்டும் தான் கல்யாணம்," என தன் அக்காக்காக பேசியவனை வியந்து பார்த்தனர் அவன் தந்தையினர் இருவரும்.. அவனது பொறுப்பில் மனதிற்குள் மகிழ்ந்து அப்போதைக்கு பேச்சை முற்றுப்படுத்தி சென்றனர்.

*************************************

இங்கு தாக்ஷிக்கு அடுத்ததாக வந்த அழைப்போ மேகனாவிடம் இருந்து

"தாக்ஷி எங்க இருக்க "

"ஹாய் மேக் வருண் பர்த்டே ட்ரீட் இன்னைக்கு, எல்லாரும் கோல் பார்பிஃகியூல இருக்கோம்"

"யெஸ் யெஸ் தெரியும் அங்க தான இருக்க, இன்னும் கிளம்பலேல "

"ஆமாம் மேக், இன்னும் ட்ரீட் போயிட்டுத்தான் இருக்கு"

"சரி அப்போ முடிச்சுட்டு பினிக்ஸ் வரியா, நான் அங்க தான் இருக்கேன், லெட் மீ ஹாவ் டைம் வித் யு"

வேகமாக தலையாட்டி இன்னைக்கு என்ன டபுள் டமாக்கவா, மதி மாமவ மேக்க்கு இன்ட்ரோ பண்ணிடுவோம் என சாப்பிட்டு முடிக்காத ஜெய்மியை இழுத்துக்கொண்டு சென்றாள்.. அங்கயோ வேறு அறிமுகம் நடந்தது முற்றிலும் எதிர்பாராத விதமாக….




Kirthika
Moderators
Posts: 18
Joined: Fri Jul 17, 2020 5:18 pm
Has thanked: 2 times
Been thanked: 4 times

Re: போற போக்கில் ஒரு காதல் 4

Post by Kirthika »

surprise nu solla mudiyathu madhu, anga ava expect pannatha visayangaal nadanthathu... 5th epi updated panniyachu madhu



Post Reply

Return to “போற போக்கில் ஒரு காதல்”